Thursday, July 11, 2013

ஜிவாஜி கணேசனும் இன்றைய எழுத்தாளர்களும் - திருப்பூர் கிருஷ்ணன் பேட்டி

த்திரிக்கையாளர்/ எழுத்தாளர் திருப்பூர் கிருஷ்ணன் அண்மையில் டிவி நிகழ்ச்சி ஒன்றில் பேசியதன் சுருக்கம் இது.
************
தினமணி பத்திரிக்கையில் பணி புரிந்த போது - சினிமா விமர்சனங்கள் எழுத வேண்டியிருந்தது. அப்போது லாரி டிரைவர் ராஜா கண்ணு என்ற சிவாஜி நடித்த படம் வெளியானது. சிவாஜி பல படங்களில் அற்புதமாக நடித்தவர் என்றாலும் இந்த படம் இதுவரை தமிழில் வெளி வந்த படங்களிலேயே மிக மோசமான ஒரு படம்



இந்த படத்தின் விமர்சனத்தில் நான் இப்படி எழுதியிருந்தேன் :

" சிவாஜி இப்படத்தில் நடித்திருக்கிறார் என்று சொல்ல முடியாது ; தடித்திருக்கிறார் என்று தான் சொல்ல முடியும் ; கதை இருக்கிறது என்று சொல்ல முடியாது ; சதை இருக்கிறது என்று தான் சொல்ல முடியும் "

சிவாஜிக்கு விஷயம் சென்று, அந்த விமர்சனத்தை எழுதியது யார் என கோபமாக போன் செய்தார். என்னிடம் பேசிவிட்டு யார் என்று கேட்டபோது அவருக்கு நான் ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்தேன். அதை கேட்டதும் அவரது கோபம் முழுவதும் மறைந்த போனது

எங்கள் ஊரான திருப்பூரில் சுதந்திர போராட்ட தியாகியான திருப்பூர் குமரன் அவர்களின் மனைவி வசித்தார். 12 வயதில் கைம்பெண் ஆனவர் அவர். அவ்வப்போது அந்த தாயை சந்தித்தும் பேட்டி எடுத்தும் வெளியிட்டுள்ளேன்

ராஜபார்ட் ரங்கதுரை படத்தில் ஒரு நாடக காட்சியில் சிவாஜி அவர்கள் திருப்பூர் குமரனாக நடித்திருந்தார். இதை கேள்விப்பட்ட அந்த அம்மையார் அப்படத்தை பார்க்க வேண்டும் என்று விரும்பினார். அவரை அப்படத்துக்கு அழைத்து சென்றிருந்தோம்

குறிப்பிட்ட காட்சி படத்தில் வந்து முடியும் போது அவர் மயக்கமடைந்து விழுந்து விட்டார். மருத்துவமனையில் சேர்த்து அவர் விழித்த பின் காரணம் கேட்க " எனக்கு என் கணவர் எப்படி இருப்பார் என்பதே மறந்து விட்டது அப்போது நான் சின்ன பெண் தானே? கணவரை மறுபடி பார்ப்பது போல் இருந்தது. எனக்கு என்ன ஆனது என்றே தெரியவில்லை " என்று சொன்னார் இது பற்றி அப்போது பத்திரிக்கையில் நான் எழுதியிருந்தேன். அதை சிவாஜி போன் செய்தபோது நினைவு கூற, அவர் தனது வருத்தத்தை லேசாக சொல்லி விட்டு வைத்து விட்டார்

சினிமா விமர்சனம் எழுதும்போது பிறர் மனம் புண்படாத வகையில் எழுதணும் என்று அந்த சம்பவத்தின் மூலம் உணர்ந்து கொண்டேன்
*************
தீபம் நா. பார்த்தசாரதி எனது குரு. ஒருமுறை பார்த்தசாரதி அவர்கள் பழந்தமிழ் இலக்கியம் பற்றி ரேடியோவில் பேச ஒப்பு கொண்டார் ; 1 மணி நேரம் ரிக்கார்ட் செய்தோம். கடைசியில் பார்த்தால் அவர் பேசிய எதுவும் எதுவும் ரிக்கார்ட் ஆகலை ; ரிக்கார்டிங் செய்கிறவர் - புதிய ஆள்- தவறு செய்து விட்டார் !

தீபம் நா. பார்த்தசாரதி இரவு இன்னொரு கூட்டத்தில் பேசணும்; நீண்ட நேரம் பேசினால் தொண்டை பிரச்சனை ஆகிடுமே என தயங்கினோம் மறு நாள் அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பியாகனும் என்பதால் உடனே மறுபடி 1 மணி நேரம் பேசினார் ; முதலில் பேசிய 1 மணி நேரத்தில் சொன்ன ஒரு கருத்தை கூட ரிபீட் செய்யலை. முழுதம் புதிதான கருத்துக்கள் ! மேலும் முதலில் ரிக்கார்ட் செய்த பையனையே மீண்டும் " இம்முறை சரியாக செய் தம்பி" என்று சொல்லிவிட்டு பேசினார். அவனுக்கு இதனால் தாழ்வு மனப்பான்மையோ பிரச்சனையோ வந்து விட கூடாது என்று நினைத்தார்

தீபம். நா. பார்த்தசாரதியின் குறிஞ்சி மலர் நாவலில் திரு ஸ்டாலின் அவர்கள் நடித்தார். நடித்து முடித்ததும் அவர் சொன்னது " இந்த அரவிந்தன் பாத்திரம் என்னை பெரிதும் பாதித்து விட்டது. இந்த பாத்திரத்தில் உள்ள மென்மை நடித்து முடித்த பின் என்னிடம் இயல்பாக கொஞ்சம் ஒட்டி கொண்டது "

தீபம் பார்த்த சாரதி அவர்கள் முனைவர் பட்டம் வாங்க விரும்பி - அதற்கான அனைத்து ஆய்வும், பிற வேலைகளும் செய்து முடித்து விட்டார். ஆனால் கடைசி கட்டமாக வைவா இருந்த அன்று - துரதிர்ஷ்ட வசமாக அவர் இறந்து விட்டார்;

பின் அவர் சிஷ்யனான நான் முனைவர் பட்டதுக்கான ஆய்வில் ஈடுபட்டேன்.

நான் ஆய்வுக்காக எடுத்து கொண்டது - இந்திரா பார்த்தசாரதி - நாடகங்கள். நாடகங்களை நான் பல முறை வாசித்தேன் ; ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு அர்த்தம் புரிய வரும் ! தமிழில் மட்டுமல்ல உலகின் சிறந்த நாடக ஆசிரியர்களில் அவரும் ஒருவர்

சில ஆண்டுகளில் - நான் ஆய்வு கட்டுரை சமர்ப்பித்து - பின் முனைவர் பட்டமும் வாங்கினேன்.

இது பற்றி தீபம் பார்த்த சாரதி - மனைவி " அவரால் தான் வாங்க முடியலை நீயாவது வாங்கினாயே " என சற்று ஆறுதல் அடைந்தார்
**************
இன்றைய எழுத்தாளர்கள் தங்களை தாங்களே பெரிதாக சொல்லி கொள்கிறார்கள் பெரிய எழுத்தாளர்கள் நிஜமாய் அப்படி சொல்லி கொள்ள மாட்டார்கள். அன்றைய எழுத்தாளர்களுக்கு ஒரு சமூக அங்கீகாரம் இருந்தது ; கல்கி, நா, பார்த்தசாரதி போன்றோரை சமூகம் பெரிதும் மதித்தது ; இன்றைய எழுத்தாளர்கள் யாராவது தங்களுக்கு அப்படி ஒரு சமூக அங்கீகாரம் இருக்கிறது என்று சொல்ல முடியுமா? பின் எப்படி இவர்கள் தங்களை தாங்களே பெரிய எழுத்தாளர் என்று கூறி கொள்கிறார்கள் ?
***************
சிறுகதை, நாவல், தொடர் கட்டுரை உள்ளிட்டவற்றில் சிறுகதை தான் சவாலானது சுருங்க சொல்லி - தாக்கம் ஏற்படுத்துவது எப்போதும் கடினம் !

இப்போது நமக்கு தேவை சுருங்க சொல்லி தாக்கம் ஏற்படுத்தும் வள்ளுவர் தான் ! விரிவாய் விளக்கி சொல்லும் கம்பர் அல்ல !
***************xxxxxxxxxxxxxxx******************************xxxxxxxxxxxxxxx**********

தொல்லை காட்சி என்ற பெயரில் டிவி நிகழ்ச்சிகள் பற்றி வாரம் ஒரு பதிவு திங்களன்று எழுதுகிறேன். டிவி யில் பார்த்த இந்த நிகழ்ச்சியை அதிலேயே எழுதிருக்கலாம் தான் ! ஆனால் அவர் பேசியதில் நிறைய விஷயங்கள் சொல்ல விரும்பியதால் தனி பதிவாக வெளி வருகிறது பொருத்தருள்க !

8 comments:

  1. இப்போது நமக்கு தேவை சுருங்க சொல்லி தாக்கம் ஏற்படுத்தும் வள்ளுவர் தான் ! விரிவாய் விளக்கி சொல்லும் கம்பர் அல்ல !

    சரியான பார்வை ..!

    ReplyDelete
  2. அருமையான பேட்டி...

    ReplyDelete
  3. புதிய விஷயங்கள் தெரிந்து கொண்டேன்.

    ReplyDelete
  4. சிறப்பான பகிர்வு! நன்றி!

    ReplyDelete
  5. திருப்பூர் கிருஷ்ணன் சிறந்த எழுத்தாளர். ‘அமுதசுரபி’யை இலக்கிய ஏடாக மாற்றிக்கொண்டிருப்பவர். சென்னை தொலைக்காட்சிக்காக அவரும் நானும் இணைந்து ‘நூல் விமரசனம்’ நிகழ்ச்சியில் பங்கு பெற்றது நினைவுக்கு வருகிறது.-நியூஜெர்சியிலிருந்து கவிஞர் இராய.செல்லப்பா

    ReplyDelete
  6. நல்ல பகிர்வு

    ReplyDelete
  7. Mohan,Why there is Tiruchi Siva's photo here? Quite confusing..

    Stanley, USA

    ReplyDelete
  8. திருப்பூர் கிருஷ்ணன் மிகச்சிறந்த எழுத்தாளர். அவரது இந்த பேட்டி நானும் கேட்டேன். எத்தனை அடக்கம் அவரது பேச்சில்!மேன்மக்கள் மேன்மக்களே!
    இதை ஒளிபரப்பியது தொல்லைக்காட்சி அல்ல; அதனால் இதை நீங்கள் தனிப் பதிவை போட்டதுதான் பொருத்தம்.சரியாகத்தான் செய்திருக்கிறீர்கள்.

    பாராட்டுக்கள்!

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...