Monday, July 29, 2013

தொல்லை காட்சி - கேடி பாய்ஸ் -அல் கேட்ஸ் - சில்லுன்னு ஒரு காதல்

கேடி பாய்ஸ் கில்லாடி கேர்ள்ஸ்

விஜய் டிவி சூப்பர் சிங்கர் ஜூனியரில் முதல் 10 இடங்களை பிடித்த குட்டீஸ் - இன்று ((சற்று வளர்ந்து ) பாடுகிறார்கள்

ஆண்கள் பக்கம் - ஷ்ரவன், ரோஷன் ஸ்ரீ காந்த் போன்றோர் ; பெண்களில் பிரியங்கா ஸ்ரீ நிஷா, சுகன்யா, யாழினி, அனு போன்றோர். பெயர்களை பார்க்கும் போது பெண்கள் அணி தான் சற்று பலமாய் இருக்கு !துவக்க நிகழ்ச்சியில் பெண்கள் அணி தான் மொத்தத்தில் மட்டுமல்ல பெரும்பாலான ஒன் ஆன் ஒன் னிலும் வென்றனர்.

ஒவ்வொரு ஞாயிறும் காலை 10.30 க்கு விஜய் டிவி யில் ஒளிபரப்பாகிறது. முழுதாய் பார்க்கா விட்டாலும் இயலும்போது பார்க்கலாம். யார் ஜெயிக்கிறார்கள் என்பதற்காகவோ, விஜய் டிவி போடும் சீன்களுக்காகவோ அல்ல - நிகழ்ச்சியில் மிக நன்றாக பாடும் சிலருக்காக

விண் டிவி யில் பங்குகள் பற்றிய நிகழ்ச்சி 

நிஜந்தன் அவர்கள் விண் டிவி யில் பங்கு சந்தை குறித்து ஒரு எக்ஸ்பர்ட் உடன் பேசிய நிகழ்ச்சி ஒரு நாள் கண்டேன்

கிட்டத்தட்ட 10 பங்குகள் பெயரை குறிப்பிட்டு - "இவற்றை வாங்குங்கள் ; இவை விலை நிச்சயம் ஏறும் " என்று கருத்து சொல்லி கொண்டிருந்தார் அந்த நபர்.

கிட்டத்தட்ட ஜாதகம் மற்றும் ராசி பலன் சொல்வது போல் தான் இதுவும் ! நான் ஒரு நிறுவனத்தில் கம்பனி செகரட்டரி ஆக உள்ளேன். எங்கள் நிறுவன பங்கு எப்போது ஏறும் இறங்கும் என்பதை - உள்ளே என்ன நடக்கிறது என்று அறிந்த என்னால் கூட சொல்ல முடியாது என்பதே உண்மை !

இவர்கள் சொல்வதை கேட்டு யாரும் இன்வெஸ்ட் செய்கிறார்களா - அதனால் பலனடைந்தார்களா என தெரிய வில்லை !

தமிழ் பேச்சு எங்கள் மூச்சு 

அருமையான இந்த நிகழ்ச்சி மீண்டும் விஜய் டிவி யில் துவங்கி உள்ளனர். அடடா பசங்க என்னமா பேசுகிறார்கள் ! அட்டகாசம் ! இந்த தலை முறை இளைஞர்கள் இவ்வளவு சுத்தமாய் தமிழ் பேசுவார்களா என்று ஆச்சரியமாய் உள்ளது !

சென்ற வாரம் 3 பேர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினர். மூவரும் நடுவர்களில் ஒருவரான நெல்லை கண்ணன் மீது எவ்வளவு மதிப்பு வைத்துள்ளனர் என்பது வெளியேறி செல்லும்போது பேசியதில் தெரிந்தது. அவர்கள் பேசிய வரிகளில் நெல்லை கண்ணன் நெகிழ்ந்து கண் கலங்கி விட்டார்.

நிகழ்ச்சியில் ஒரு வார்த்தை கூட ஆங்கிலம் உபயோகிக்காமல் பேச்சாளர்களும், நடுவர்களும் பேசுகிறார்கள்.. நல்ல விஷயம் ஆனால் விஜய் டிவி காம்பியர்கள் தான் " தமிழ் பேச்சு எங்கள் மூச்சு " Powered By என்று சொல்லி விளம்பர தாரர் பெயர் சொல்கிறார்கள் எல்லோரையும் திருத்தும் நடுவர்கள் காம்பியர்களிடம் " Powered By என்று சொல்லாமல் " நிகழ்ச்சியை வழங்குபவர்கள் என்று சொல்ல சொல்லலாமே !

சூப்பர் சிங்கர் கார்னர் - அல் கேட்ஸ்
அழகேசன் என்ற 61 வயது பெரியவர் சூப்பர் சிங்கரில் பாடி வருகிறார். இவர் பேரை அல் கேட்ஸ் என்று மாற்றியதில் துவங்கி இவரை செமையாக கிண்டல் செய்கிறார்கள் அது புரியாமல் தலையை தலையை ஆடுகிறார் இந்த பெரியவர்பழைய பாடல்கள் என்றால் ஓரளவு நன்கு பாடினாலும் முறையான பயிற்சி இல்லாமை மற்றும் புதிய பாடல்களில் ரொம்ப சுமாராக பாடுவதால் முதல் 20 க்கு முன்பே வெளியாகும் நபராக இவர் இருக்க கூடும்
கிரிக்கெட் கார்னர்
இந்தியா பல ஆண்டுகளுக்கு பின் ஜிம்பாப்வே சென்று ஆடி வருகிறது. தோனி, அஷ்வின், மற்றும் முக்கிய வேக பந்து வீச்சாளர்கள் இல்லாமல் இந்தியா - A போன்ற ஒரு அணி தான் சென்றாலும், ஜிம்பாப்வே மிக வீக் ஆக இருப்பதால் இந்தியா எளிதில் வென்று வருகிறது

புஜாராவிற்கு வாய்ப்பு தராமல் ராயுடுவுக்கு தருவது ஏன் என்று புரிய வில்லை. ஆஸ்திரேலியா தென் ஆப்ரிக்க போன்ற வெளிநாடுகளில் உள்ள கடினமான பிட்ச்களில் நன்கு விளையாட கூடிய புஜாராவிற்கு ஒரு நாள் கிரிக்கெட்டில் வாய்ப்பு தருவது அவசியம். போலவே ரசூல் மற்றும் மோஹித் ஷர்மா ஆகியோருக்கும் அடுத்த 2 போட்டிகளிலாவது வாய்ப்பு தர வேண்டும் !

பார்த்த படம் - சில்லுன்னு ஒரு காதல்

முணுக்குன்னா இந்த படத்தை கலைஞர் டிவியில் போட்டுடுறாங்க. எப்ப போட்டாலும் நம்ம வீட்டம்மணி உட்கார்ந்து முடிஞ்சவரை பார்ப்பார். பார்ப்பது மட்டுமல்ல ஜோதிகா மாதிரி தன்னை மனதில் நினைத்து கொண்டு அநியாயத்துக்கு பீலிங்க்ஸ் + கமண்ட் விடுவார்

கதைப்படி சூர்யா - பூமிகாவை கல்லூரி காலத்தில் லவ் பண்ணிட்டு அப்புறம் ஜோதிகாவை கல்யாணம் பண்ணிக்குறார். ஆனா அவரு (நம்மளை மாதிரி ) மனைவியிடம் தன் பழைய காதலை சொல்லலை; ஒரு நாள் ஜோதிகா அம்மணி டயரி எடுத்து படிக்க, மாட்டிக்கிறார். " ஒரு நாள் கூட அவளோட வாழலை " என பீலிங்க்ஸ் பார்த்துட்டு ஜோதிகா - பழைய காதலியை தேடி சென்று கூட்டி வருகிறார்..

படம் ஓடும்போது எங்களுக்குள் நடந்த டயலாக்

" நான் கூட காலேஜ் டேஸ் முழுக்க டயரி எழுதினேன் எல்லாம் - மேலே புக் ஷெல்பில் தான் இருக்கு "

" லவ் மேட்டரெல்லாம் எழுதிருக்கீங்களா ? நான் படிச்சதே இல்லியே !"

"சூர்யா மாதிரி முழுக்க யாராவது எழுதுவாங்களா ? அப்படியே லைட்டா எதோ இருக்கும் நீயா படிச்சு புரிஞ்சிக்க வேண்டியது தான் "

" அட பாவி "

" நம்ம லவ்வர்சில் யாரையாவது இப்படி பேசி கூட்டிட்டு வாயேன் "

" ம்ம்? நான் ஏன் போய் கூப்பிடனும் ?"

" சினிமாவில் ஜோதிகா தானே போயி கூட்டிட்டு வந்தார்; அது மாதிரி நீ தான் போயி சொல்லணும் இந்த மாதிரி இந்த மாதிரி .. . அவரு உன்னையே நினைச்சு உருகுறாருன்னு "

படம் பார்த்த சுவாரஸ்யத்தில் குண்டு ஏதும் வெடிக்கலை; பின்னாளில் வேறு ஏதாவது ஒரு சண்டையின் போது இதற்கான பலன் தெரிய வரும் :))

*********
அண்மை பதிவு

உணவகம் அறிமுகம் - -ஆதம்பாக்கம் சுவாமீஸ் கபே

6 comments:

 1. // சினிமாவில் ஜோதிகா தானே போயி கூட்டிட்டு வந்தார்; அது மாதிரி நீ தான் போயி சொல்லணும் இந்த மாதிரி இந்த மாதிரி .. . அவரு உன்னையே நினைச்சு உருகுறாருன்னு "//

  ஹா ஹா செம

  ReplyDelete
 2. //கேடி பாய்ஸ் கில்லாடி கேர்ள்ஸ்// சன் சிங்கருக்கு ஆப்பு வைக்கவே இந்த ஏற்பாடு 10.30 அல்ல 11 மணி

  ReplyDelete
 3. //படம் பார்த்த சுவாரஸ்யத்தில் குண்டு ஏதும் வெடிக்கலை; பின்னாளில் வேறு ஏதாவது ஒரு சண்டையின் போது இதற்கான பலன் தெரிய வரும் :))//

  சொந்த செலவில் சூன்யம்..... :))))

  த.ம. 3

  ReplyDelete
 4. "படம் பார்த்த சுவாரஸ்யத்தில் குண்டு ஏதும் வெடிக்கலை; பின்னாளில் வேறு ஏதாவது ஒரு சண்டையின் போது இதற்கான பலன் தெரிய வரும் :))"
  இத படிக்கிறப்போ ஆபீஸ்ல வாய் விட்டு சிரிச்சுட்டேன் சார். செம காமடி. Be Careful !!!!

  ReplyDelete
 5. சில்லுன்னு ஒரு காதல் மட்டும் எப்பவோ பார்த்தது. மத்தபடி நீங்க சொன்ன எந்த நிகழ்ச்சியையும் பார்க்கலை.

  ReplyDelete
 6. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...