Tuesday, July 30, 2013

வானவில்- கனகா பேட்டி - பூங்காத்து திரும்புமா - சென்னை IIT

கனகா பேட்டி

இன்று  முழுக்க கனகா மரணம் என செய்தி கசிய, கனகா ஜம்மென்று வந்து கான்சரும் இல்லை ; ஒன்றும் இல்லை ; உயிருடன் தான் இருக்கேன் என தந்த பேட்டி இது. அவரின் வெடி சிரிப்பு அவருக்கு ஒரு பிரச்னையும் இல்லை எனபதை தெளிவாய் சொல்கிறது  !

(இந்த லிங்கை க்ளிக் செய்தால் - Watch on Youtube என்று வரும் ; அதை மறுபடி க்ளிக் செய்து அவரது பேட்டி காணவும் )


முக நூல் கிறுக்கல்கள்

அந்த ஆளு "நன்றி"ன்னு சொல்லிட்டு அடுத்த நொடி "தப்பா சொல்லிட்டேன் - ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன்"னு சொல்லிட்டார் . வார்த்தை தவறுவது சகஜம் தான்."ஒரு நிலையில் இருந்தாரோ ; வழக்கம் போல புல்லா இருந்தாரோ"- அடுத்த நொடி தப்பை புரிஞ்சிகிட்டு மாத்திட்டார். ஆனா நம்ம மக்கள் அதை எம்புட்டு ஓட்டிட்டாங்க ! அடுத்த நொடி அவர் சரியா சொன்னார்னு ஒரு இடத்திலும் சொல்லலை !

For Every action, there is an equal and Opposite reaction; In social media, it is over reaction"- ன்னு ஓரிடத்தில் படித்தேன். அது சரியா தான் இருக்கு !

************
பெண்கள் காட்டும் அன்பு என்பது நம்மை பித்தனாக்கி அலைய வைப்பது ..........

## என்னமா எழுதிருக்காருய்யா கண்ண தாசன் சான்சே இல்லை !
************
சென்னை மேற்கு ஸ்டடி சர்க்கிள் ( ICSI - SIRC ) சார்பாக கிண்டியில் நடந்த "செக்ஸூவல் ஹராஸ்மென்ட் தடுப்பு சட்டம் " பற்றிய செய்தி தொகுப்பு தந்தி டிவியில் செய்திகளிடையே ஒளி பரப்பாகிறது. பல முக்கிய பேச்சாளர்களும் எங்கள் குழுவின் கன்வீனர் (ரெங்கராஜன் ) மற்றும் துணை கன்வீனர் (மோகன் குமார்) பேசியுள்ளோம் காலை 6 மணி முதல் வரும் பல ஒரு மணி நேர செய்திகளின் இடையே இந்த நிகழ்ச்சி 5 நிமிடம் ஒளி பரப்பாகும்.

ஏதாவது ஒரு செய்தியில் பார்த்து விடுங்கள் நண்பர்களே ! தவறினால் யூ டியூபில் வலையேற்றி உங்களை பார்க்க சொல்லி கொலையாய் கொல்லுவார் வீடுதிரும்பல் ஓனர் ! ஜாக்கிரதை !
************
அழகு கார்னர்என்னா பாட்டுடே

முதல் மரியாதையில் பல பாடல்கள் அற்புதம் என்றாலும் - அதில் நம்பர் ஒன் - "பூங்காற்று திரும்புமா" தான் ! படம் வெளிவந்த புதிதில் எல்லா டீ கடைகளிலும், ரேடியோவிலும் இப்பாடலே ஒலிக்கும் ஆனாலும் அலுக்கவே இல்லை !

" உள்ளே அழுகுறேன் வெளியே சிரிக்குறேன் ; நல்ல வேஷம் தான் வெளுத்து வாங்குறேன் "

" மெத்தை வாங்குனேன் - தூக்கத்தை வாங்கலை "

போன்ற வரிகள் பல மத்திய வயது ஆண்களுக்கு பொருந்த கூடியவை வைரமுத்துவுக்கு இப்படத்துக்கு தேசிய விருது கிடைத்த நினைவு. பாடலில் ஆண் - குரல் காலம் சென்ற மலேசியா வாசுதேவன். மலேசியா சிவாஜிக்கென குரலை மாற்றி பாடுவார். 

பாடலை படமாக்குவதில் பாரதிராஜா ஸ்பெஷல் பல இடத்தில் தெரியும். ராஜாவின் ப்ளூட் பிட்டுக்கு - அழகாய் குட்டிகுட்டி ஷாட் வைத்து நம்மோடு சேர்ந்து ராஜாவை ரசிப்பார் 

" பாடலை சிவாஜி எங்கோ பாடுறார் ராதா இன்னொரு மூளையில். ஒருவர் பாடுவது எப்படி இன்னொருத்தருக்கு கேட்கும்?" என படம் பார்த்த பள்ளி வயதில் லாஜிக் பேசினேன் :)

பாடலில் இருவர் நடிப்புமே அழகு ; சிவாஜி இறுதியில் பாட்டை பாடியது யார் என்று தெரிந்ததும் ஒரு ரீலிப் -உடன் கடைசி வரிகளை பாடுவார். பாட்டு முழுதுமே ராதாவின் நடிப்பு இப்போது தான் பிடிக்கிறது 

பாரதிராஜா- வைரமுத்து- ராஜா என்னா காம்பினேஷன் சாரே !
படித்ததில் பிடித்தது

வேலையில் இருக்கும் நபர்களுக்கு ஐ ஐ. டி போன்ற அருமையான நிறுவனத்தில் படிக்க முடிய வில்லையே - படித்திருந்தால் இன்னும் நல்ல நிலைக்கு சென்றிருக்கலாமே என சற்று ஏக்கம் இருக்க கூடும்; அத்தகைய மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் " வேலை செய்யும் Executives -க்காகவே சென்னை ஐ ஐ. டி நிறுவனம் மிக விரைவில் ஆன்லைன் கோர்ஸ்கள் சில துவங்க உள்ளது. முதலில் ஆட்டோமொபைலில் மேற்படிப்பு மிக விரைவில் துவங்குகிறது பின் மற்ற துறைகளுக்கும் இது பரவலாம்

செய்தி வாசித்தது : இங்கு

செப்டம்பர் 1- பதிவர் திருவிழா அப்டேட் 

செப்டம்பர் 1 பதிவர் திருவிழாவுக்கான ஏற்பாடுகள் நேர்த்தியாக நடந்து வருகின்றன

வெளியூர் பதிவர்கள் வருகையையை யார் யார் கவனிக்கிறார்கள் என்பதை இந்த பதிவில் வாசிக்கலாம்

உங்கள் வருகையை விரைவில் மெயில் மூலம் உறுதிபடுத்துங்கள். உணவு, தங்குமிடம் போன்ற பல்வேறு விஷயங்களை திட்டமிட அது உதவும் !

அய்யாசாமி கார்னர்

அய்யாசாமி ஆபிசில் அநியாயத்துக்கு சீன் போடும் நபர் ஒருவர் இருக்கிறார். பகல் ஷிப்டில் வேலை பார்த்தாலும் இவர் நள்ளிரவு 12 மணி அதிகாலை 3 மணிக்கெல்லாம் எல்லாருக்கும் மெயில் அனுப்பி கிலியூட்டுவார்.

ஒரு குழுவாக அமர்ந்து சாப்பிடும்போது மேற்படி நபர் இப்படி சொன்னார் :

" நம்ம ஆடிட்டர் ரவியை பகல் நேரத்தில் பிடிக்கவே முடியலை. எப்ப பார்த்தாலும் இன்கம் டேக்ஸ் ஹியரிங்லே இருக்கேன்னு சொல்றார். அதனால இனிமே தினம் நைட்டு 11 மணிக்கு ரெண்டு பேரும் போனில் பேசிக்கறதா முடிவு பண்ணிருக்கோம் "

இதை கேட்டதும் அய்யாசாமி ஷாக் ஆகி சாப்பிடுறதை சிறிது நேரம் நிறுத்தி விட்டார். பின் நிதானமாக சொன்னார்

"நைட்டு 11 மணிக்கு தினம் பேசிக்குவீங்களா? அது பீக் ப்ரொடக்ஷன் டைம் ஆச்சே ! என்னையெல்லாம் தப்பி தவறி அந்த நேரத்தில் டிஸ்டப் பண்ணிடாதீங்க !"

சுற்றி இருந்த 10 பேரும் இதற்கு சிரிக்க துவங்க ஒரு பெண் குரல் இப்படி எழுந்தது

" நான் ஒருத்தி இருக்கேன்னு நினைப்பே இல்லாம பாய்ஸ் சமாசாரம் பேசுறீங்களா ?"

இதை கேட்டதும் பயந்து போன அய்யாசாமி " தினம் அந்த நேரத்தில் நான் ப்ளாக் எழுதுவேங்க; அதை தான் சொன்னேன் ; வேற ஒண்ணும் இல்லை " என்று முழுசாய் யூ டர்ன் அடித்து எஸ் ஆனார் !

**********
அண்மை பதிவுகள் :

மனதை உலுக்கிய தூக்கு மர நிழலில் 

தொல்லை காட்சி - கேடி பாய்ஸ் - அல் கேட்ஸ் - சில்லுன்னு ஒரு காதல்

22 comments:

 1. பொண்ணுங்க வந்து படிக்குறாங்கன்ற நினைப்பே இல்லாம இப்படியா பதிவு போடுறது?!

  ReplyDelete
 2. முதல் மரியாதை பாட்டு எப்போது கேட்டாலும் பிடிக்கும் பாடல்......

  மீண்டும் ஒரு முறை கேட்டு ரசித்தேன்....

  த.ம. 4

  ReplyDelete
  Replies
  1. நன்றி வெங்கட்

   Delete
 3. Replies
  1. வாங்க முரளி நன்றி

   Delete
 4. அய்யாசாமி கார்னரை படித்து நினைத்து நினைத்து சிரிக்கிறேன்..... இந்த நாளை சிரிப்புடன் ஆரம்பிக்கிறேன் ! நன்றி மோகன்- ஜி !

  ReplyDelete
 5. மோகன் சார், நான் ப்ளாக் படிக்கமட்டும் செய்வேன், பதிவு எழுதுறதில்ல. எப்பயாவது கமெண்ட்ஸ் போடறதுண்டு. உங்க எல்லாரையும் பார்க்கணும்னு ஆசை தான். நானும் பதிவர் சந்திப்புக்கு வரலாமா?

  ReplyDelete
 6. அடடா ராகவாச்சாரி என்ன இப்படி சொல்லிட்டீங்க ! அவசியம் நீங்க வரலாம்; உங்களை போல பதிவை வாசித்துவிட்டு ஊக்குவிக்கும் நண்பர்கள் தான் மிக பெரிய பலம் சென்ற முறையும் அப்படி பல நண்பர்கள் வந்தனர் அவர்களில் சிலர் அதன் பின் ஒரு மோடிவேஷன் கிடைத்து தனி வலை பதிவும் துவங்கி விட்டார்கள் ; நீங்கள் அவசியம் வர்றீங்க உங்கள் பெயரை வரும் நண்பர்கள் பட்டியலில் இணைக்க சொல்லி நான் சொல்லிடுறேன் !

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சார். நிச்சயம் நான் வர்றேன். என்னோட பெயரையும் பட்டியலில் சேர்த்திடுங்க சார்.

   Delete
 7. நன்றி சுரேஷ் குமார் ; உங்கள் மனம் திறந்த பாராட்டு எனது இன்றைய நாளின் துவக்கத்தை இனிமையாக்கியது :)

  ReplyDelete
 8. முதல் மரியாதை அந்த பாடலை பாடிய மலேசியா வாசுதேவன் அவரையும் இந்த பாடல் நினைவு படுத்தும்

  ReplyDelete
  Replies

  1. ஆம் தம்பி; செப் 1 பதிவர் திருவிழாவுக்கு வர்றீங்களா? எனில் உறுதி படுத்துங்கள்

   Delete
 9. ப்ளாக் எழுதறதும் ஒரு ப்ரொடக்டிவ் ஆக்டிவிட்டிதானே அதத்தான் அப்படி சொல்லியிருக்கீங்க? ஆனால் சிலருக்கு எப்பவுமே one track mind ஒரே சிந்தனைதான். அதான் அப்படி சொல்லியிருக்காங்க:))

  ReplyDelete
  Replies
  1. சார் :))

   அய்யாசாமி சொன்னது வேற அர்த்தத்தில் தான் :)

   Delete
 10. கனகா இவ்ளோ போல்டா பேசி இருக்காங்க... இவங்கள பத்தி வந்த செய்தி எல்லாமே வதந்தி தானா.. அதுவரையில் ரொம்ப மகிழ்ச்சி!!!

  ReplyDelete
  Replies
  1. சமீரா : ஆம் நன்றி

   Delete
 11. கனகா பற்றிய வதந்தியை உண்மை என்றே நினைத்துவிட்டேன்! அய்யாசாமி கார்னர் உட்பட அனைத்தும் சிறப்பு! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. சுரேஷ் வாங்க ! ப்ரொபைல் படம் மாத்தீடீன்களா ? ரைட்டு

   Delete
 12. கனகா பற்றிய செய்தி உண்மையில் மனதிற்கு நிம்மதியைக் கொடுத்தது. வதந்தி பரப்புகிறவர்களுக்கு மனமே கிடையாதா?
  பதிவர் விழாவுக்கு வருகிறேன். இங்கு சொன்னால் போதுமா?

  ReplyDelete
  Replies
  1. நன்றி மேடம் தங்கள் வருகையை குழுவிற்கு தெரிய படுத்தி விட்டேன்

   Delete
 13. இன்னுமா உங்க ஆபீஸ்ல ப்ரொடக்ஷன் வொர்க்கெல்லாம் நடக்குது :)

  ReplyDelete
  Replies
  1. தம்பி ,,,,,அய்யாசாமி சொன்னது வீட்டு ப்ரொடக்ஷன் பத்தி தானே? அதுக்கென்ன குறை :)

   Delete

Related Posts Plugin for WordPress, Blogger...