Tuesday, July 2, 2013

இரு விபத்துகள்... சில எண்ணங்கள்

சாலையில் செல்லும்போது எத்தனை எத்தனை விபத்துகளை பார்க்கிறோம் ! வாரம் ஒரு விபத்தாவது பார்க்காமல் இருப்பதில்லை ! இத்தனைக்கும் தினம் ஆபிஸ் சென்று திரும்ப - 10 கிலோ மீட்டருக்கும் குறைவாக பயணிப்பவன் !

சைதாப்பேட்டை - அண்ணா ஆர்ச் அருகே அந்த சம்பவம் பார்த்தேன்.

50 வயது மதிக்கத்தக்க அந்த பெண்மணி சாலையை க்ராஸ் செய்து கொண்டிருக்க, வேகமாக வந்த ஒரு டூ வீலர் - அவர் மீது மோதி விட்டது. பெண்மணி ஒரு பக்கம் விழ, கண்ட்ரோல் இழந்து  பைக் ஓட்டியவர் தள்ளி போய் விழுந்தார்.  தலையில் பெரிய அடி இல்லை. முழங்கை அருகே சரியான அடி. கையில் சுண்டு விரல் பாதி அறுந்து விட்டது 

அடிபட்ட பெண்மணியை கைத்தாங்கலாக சில பெண்கள் அருகிலிருந்த நடைமேடையில் அமர வைத்தனர்

அருகே காவல் பணியிலிருந்த - டிராபிக் கான்ஸ்டபிள் உடனே அங்கு ஆஜரானார். முதல் வேலையாய் - மோதியவர் பைக்கை பூட்டி சாவியை எடுத்து கொண்டார்.

கான்ஸ்டபிள் இவனை வைத்து காசு பார்த்து விடுவார் என - அனைத்தையும் பார்த்து கொண்டிருந்த எனக்கு தோன்றியது

பெண்மணி அருகே கூட்டம் கூடி விட்டது. அவர் எழுந்து நிற்க பார்க்கிறார். முடிய வில்லை. அமர்ந்து விடுகிறார். பெருமூச்சு வந்து கொண்டே இருக்க, கண்கள் கலங்கியிருக்கிறது. காலில் - குறிப்பாக - முட்டியில் தான் அடி பலமாய் இருக்க வேண்டும். அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல்  விழித்தார். மீண்டும் மீண்டும் எழ பார்ப்பதும் - நிற்க முடியாமல் தரையில் அமர்வதுமாக இருந்தார். 

கான்ஸ்டபிள், பெண்மணி அருகே வந்து " என்னம்மா .. பக்கத்திலே கவர்மெண்ட் ஆஸ்பத்திரி இருக்கு .. வாங்க போகலாம் " என்றார் " வேண்டாம் " என்று தலையசைத்தார் அந்த பெண்மணி.

சுற்றியிருந்தோர் வண்டி ஓட்டிய நபரை வார்த்தைகளால் அர்ச்சித்து கொண்டிருந்தனர்.

சிவப்பு விளக்கு மாறி மஞ்சள் விழுந்ததும் - சாலையில் வாகனம் ஏதும் இல்லையென அந்த அம்மணி க்ராஸ் செய்ய- மிக வேகமாக வந்த - அந்த டூ வீலர் நபர் - அம்மா மீது மோதி விட்டார்

மஞ்சள் விளக்கு - சற்று டேஞ்சர் தான். இரண்டு பக்கமும் - அது தனக்கு சாதகமாய் எடுத்து கொண்டு சாலையை கடக்க பார்க்கிறார்கள் !

பைக் ஓட்டிய நபர் இப்போது பெண்மணி மற்றும் போலிஸ் அருகே வந்து நின்றார். பெண்மணி பெருமூச்சு வாங்கிய படி அந்த நபரை பார்த்தார். அவரது முழங்கை மற்றும் சுண்டுவிரலில் ரத்தம் வழிந்து கொண்டிருந்தது

 படம் : இணையத்திலிருந்து 

போலிஸ் - "எந்த ஊருய்யா நீ?"

"உத்தர பிரதேஷ் "

இதை கேட்டதும் போலிசுக்கு இன்னும் கோபம் வந்தது " அங்கேந்து வந்துடுங்கய்யா - லைசன்சும் இருக்காது ; ஒண்ணும் இருக்காதே !"

போலிஸ் பார்வை இப்போது என் மீது விழுந்தது. என்ன நினைத்தாரோ தெரிய வில்லை. " என்னா சார் ..." என்றவாறு நமக்கு ஒரு சல்யூட் வைத்தார். அந்த நிலையிலும் எனக்கு சிரிப்பு வர சற்று கஷ்டப்பட்டு அடக்கி கொண்டேன் ( நம் தொப்பையை  பார்த்தா - மப்டியில் இருக்க போலிஸ் மாதிரியா தெரியுது !!)

" அம்மா - வாங்க ஆஸ்பத்திரி போகலாம்; இந்த ஆளை வச்சே செலவு பண்ண வைக்கலாம் "

" வேண்டாம்.அவரை போக சொல்லுங்க " - முதன்முறையாய் அம்மணி பேசினார்

போலீஸ்க்கு அவர் சொன்னது சற்று ஆச்சரியமாய் இருந்தது. உறுதி படுத்தி கொண்டு அந்த நபரை லேசாய் எச்சரித்து சாவியை கையில் தந்தார்

சாவியை கையில் பெற்றதும் - வளைந்து கிடந்த வண்டியை எப்படியோ கிளப்பி கொண்டு அந்த இடத்தை விட்டு அவசரமாய் அகன்றார் வண்டி ஓட்டி!

அம்மணி மிகுந்த சிரமப்பட்டு எழுந்து நின்றார்.

மீண்டும் - பாதசாரிகள் கடப்பதற்கான- சிக்னல் வந்திருந்தது. கான்ஸ்டபிள் சில பெண்கள் உதவியுடன் இரண்டு பக்க சாலையையும் - கீழே விழுந்த பெண்மணியை கடக்க வைத்தார்

அந்த அம்மணி மற்றும் போலிஸ் நிச்சயம் - பைக் காரரிடம் பணம் கறந்திருக்க முடியும்.

போலிஸ் சற்று சவுண்ட் விட்டாலும் அவனிடம் பணம் வாங்காமல் அனுப்பியது - மட்டுமல்ல, மிக அக்கறையுடன் அந்த வயதான பெண்மணியை சாலையை கடக்க வைத்தது ஆச்சரியமாய் இருந்தது.

இப்படி எல்லா போலிசும் இருந்து விட்டால் "காவல் துறை - எங்கள் நண்பன் " என நாமும் சொல்லலாம் !
****
காமாட்சி மெமோரியல் ஆஸ்பத்திரி அருகில் - ஒரு விபத்து நடக்க இருந்து நொடி பொழுதில் தப்பி போனது .

ஐ டி கம்பனி பேருந்தொன்று வலப்புறமாக திரும்பி கொண்டிருக்க அதே நேரம் - தனது தாயாரை பின்னே வைத்த படி டூ வீலரில் திரும்பி கொண்டிருந்தார் ஒரு இளைஞர். பஸ்சின் பின்புறம் - அந்த பைக்கை -நெருக்கி அழுத்த துவங்க, சுற்றி இருந்த மக்கள் சத்தம் போட்டதும் பேருந்தை நிறுத்தினார் டிரைவர். ஓரிரு நொடி இருந்தால் அம்மாவின் கால் பஸ்சால் நசுக்கப்பட்டிருக்கும் !

இது போன்ற சம்பவங்கள் பார்க்கும்போது தான் காரில் செல்வதே பாதுகாப்பு என்று தோன்றுகிறது ! அடிபட்டால் காருக்கு தானே அடிபடும் !

இதெல்லாம் நொடி பொழுது சிந்தனை தான் ! வழக்கம் போல - பைக் தான் நம் வாகனமாய் இருந்து வருகிறது ...

பார்த்து வண்டி ஓட்டுங்க பாஸ்.. வீட்டில் மனைவி அல்லது தாய் உங்களுக்காக காத்திருக்கிறார் !

18 comments:

  1. விபத்து...நாள் தோறும் கவனக்குறைவினாலே ஏற்படுகிறது.வண்டி வச்சிருக்கவன் எல்லாம் ரோட்டுல ஃபிளைட் ஓட்டுறதா நினைப்பு...

    ReplyDelete
  2. கவனமாக இருக்கணும் எப்பவும் !

    அது எப்படி சிகப்பு விளக்குக்கு அப்புறம் மஞ்சள்?

    பச்சை முடிஞ்சு கொஞ்சம் ஆரஞ்சு வந்து அப்புறம்தானே சிகப்பு?

    சிகப்பு முடிஞ்சது பச்சை வந்துறாதா?

    ReplyDelete
  3. Anonymous8:43:00 AM

    வாகன சாரதிகள் மட்டுமில்லை, நடப்பவர்கள் கூட சாலை விதிகளை மதிக்க வேண்டும். குறுக்கும் நெடுக்குமாய் சாலையை கடக்க முயல்வது ஆபத்து. வாகன சாரதிகளும் சுற்றும் முற்றும் அவதானமாய் வாகனம் செலுத்த வேண்டும்.. காவல் துறையினர் அனைவரும் மோசமில்லை, பல நல்ல உள்ளங்கள் உள்ளன என்பது வியப்பான உண்மை.

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. சாப்பாட்டுக்கடை, விளிம்புநிலை மனிதர்கள் பேட்டி, தொலைக்காட்சி, கிரிக்கெட் - பற்றி எதுவும் இல்லாமல் நீண்டநாள் கழித்து மோகன் எழுதிய ஒரு பதிவு. வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. பயண கட்டுரை மற்றும் சினிமா விமர்சன பதிவுகளை மிஸ் பண்ணிட்டீங்க உலக்ஸ் :)

      Delete
  6. அந்த புகைப்படமே நம் மக்களை, போலிஸை பற்றி புட்டுபுட்டு வைக்கிறதே. ஒரு போலிஸ்காரர் மட்டுமே உதவிக்கு நகர்கிறார். இன்னொருவர் மாடு மாதிரி நிற்கிறார். பொதுமக்களிலும் யாரும் போய் குழந்தையை எடுக்க பாயவில்லை. விளங்கீறுமைய்யா நம்மநாடு!

    ReplyDelete
  7. நடக்குறவங்க முதல் லாரி ஓட்டுபவர் வரை சாலையிலதான் சைட் அடிக்குறது முதற்கொண்டு குடும்ப கதை வரை ஓடுது..., அப்புறம் ஏன் விபத்து நடக்காது?!

    ReplyDelete
  8. எல்லாமே நொடிப்பொழுதில் நிகழ்த்து விடுகிற கொடூரம்...ஒருவேளை கார் வைத்திருந்தால் நாம் தப்பி விடலாம்...ஆனால் முன்பைவிட இன்னும் கவனமாக இருக்க வேண்டும். காரணம் விபத்துகள் நம்மால் நிகழ்ந்துவிடக்கூடாது .

    ReplyDelete
  9. கவனம் எப்போதும் தேவை. படத்தில் குழந்தை இருக்கும் நிலையைப் பார்த்தாலே மனம் பதறுகிறது.

    ReplyDelete
  10. நல்லதொரு விழிப்புணர்வு பதிவு

    ReplyDelete
  11. Most of the vehicles and pedestrians are not respecting signals . In fact some times i feel that there should be a board at each signal stating red means stop , most of the signals are violated . AFAIK most violated signals are 1. signal opp to MIOT 2. signal which comes after MIOT - coovam bridge 3. signal next to lamech school - virugambakkam 4. gurunanak college - 100 ft road signal . Why dont people have patience for 60/75 secs ? 2 years back while waiting for red signal @ Gurunanak a tempo hit me and driver scolded me for stopping my bike , after that im stopping my bike either at the extreme left or extreme right while waiting for signal. You are crossing the road on seeing green ,assume if someone suddenly comes from the opposite side who has red unexpectedly , dont u want to scold that guy with all bad words. You are not only risking your life but others life by not obeying the signal. We are not doing any favor to others by stopping at signals,it is law . Hope atleast the ones who read this blog will change their mind .

    ReplyDelete
  12. நாம் ஒழுங்காய் சென்றாலும் எதிரே வருபவர்கள் தாறுமாறாக வருகிறார்கள்! ஒரு முறை இப்படித்தான் திடீர் என நடைபாதையில் இருந்து கிராஸ் செய்து என்னை தடுமாறச்செய்தார் ஒருவர். மழைபெய்து தரை வேறு ஈரமாக இருந்தது. படுத்துக்கொள்ள இருந்த வண்டி ஒரு நொடியில் நேராகி நின்றது. குறுக்கே வந்தவரை முறைத்தால் சிரித்துக் கொண்டு ஒரு சாரி கூட சொல்லாமல் சென்றுவிட்டார்! வாகனம் ஓட்டுவதே மிக சிரமமான சூழல் ஆகிவிட்டது! நன்றி!

    ReplyDelete
  13. தெருவுக்கு இறங்கினாலே .....திக்...திக்தான். ....

    ReplyDelete
  14. விபத்தைப் பற்றி நினைக்கவே அலர்ஜி எனக்கு. அந்தப் போலீஸ்காரர் போல சிட்டியில் ஒரு 50 பேர்கள் தேறுவார்களா?!

    ReplyDelete
  15. பின்னூட்டம் இட்ட நண்பர்களுக்கு நன்றி !

    துளசி டீச்சர் : பல சிக்னல்களில் மஞ்சள் வந்து தான் அப்புறம் பச்சை எரியும்

    கைலாஷ் : உங்கள் ஆதங்கம் மிக உண்மையே !

    ReplyDelete
  16. //பல சிக்னல்களில் மஞ்சள் வந்து தான் அப்புறம் பச்சை எரியும்//

    எங்கூர்ல சில இடங்களில் ஆரஞ்சோ மஞ்சளோ எதுவுமில்லாமல் சிவப்பிலிருந்து பச்சையும், பச்சையிலிருந்து சிவப்பும் மாறுவதைப் பார்த்திருக்கேன். டிஜிட்டலாயிருந்தா அப்டி ஆகும்ன்னு நினைக்கிறேன்.

    படம் பதற வைக்குது. வெளியே போனா வீட்டுக்கு வர்ற உத்தரவாதமில்லை. எங்களுக்கே போன வாரம் மட்டும் ரெண்டு சம்பவங்கள் ஆகிப்போச்சு. எழுதணும்ன்னு இருக்கேன்.

    ReplyDelete
  17. துளசி,
    இங்கெல்லாம் ஒரு முறை தான் மஞ்சள் வரும்; சிகப்பிலிருந்து நேராக பச்சை தான். (சிகப்பிலிருந்து மஞ்சள் வந்தால்...வண்டியை எடுத்து பரப்பவர்களை தடுக்க இப்படி....நேராக சிகப்பிலிருந்து உடனே பச்சை...ஒரு முறை சென்னையில் ஒரு அதிகாரியிடம் சொன்னேன்; அவர் அமெரிக்காவிலே எது செய்தாலும் சரியா என்றார். சரி..எக்ககேடோ கெட்டுப்போங்க...என்று விட்டு விட்டேன்.

    இந்தியாவில் இருமுறையும் மஞ்சள் வரும்; சிகப்பு+மஞ்சள்; அப்புறம் பச்சை.
    பச்சை+மஞ்சள்; அப்புறம் சிகப்பு. இந்தியாவில் கொஞ்சம் மூளையை அதிகம் உபயோகிக்கனும்...!
    ________________________
    துளசி கோபால்7:51:00 AM

    கவனமாக இருக்கணும் எப்பவும் !

    அது எப்படி சிகப்பு விளக்குக்கு அப்புறம் மஞ்சள்?

    பச்சை முடிஞ்சு கொஞ்சம் ஆரஞ்சு வந்து அப்புறம்தானே சிகப்பு?

    சிகப்பு முடிஞ்சது பச்சை வந்துறாதா?

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...