Saturday, November 7, 2015

காணாமல் போன ஹீரோக்கள்

சினிமாவை பற்றி சுஜாதா  " ஒவ்வொரு வருடமும் வெளியாகும் 100 படங்களை பற்றி நீங்கள் பேசுகிறீர்கள். நான் வெளியாகாத 200 படங்களை பற்றி சிந்திக்கிறேன்" என்பார்..

எல்லா துறையிலும் ரிஸ்க் உண்டு எனினும் - சினிமா துறையில் நிச்சயம் அதிகம் ! ஏறக்குறைய வாழ்க்கையை  பணயம் வைத்து தான் - இறங்கவேண்டும்..

ஜெயிப்போமா என்பது சிறிதும் தெரியாத நிலையில் - தனது ஆர்வம் ஒன்று மட்டுமே அடிப்படையாய் கொண்ட எத்தனை பேர் ஜெயிக்கிறார்கள்?

உங்கள் அனைவருக்கும் தெரிந்த சிலரின் நிலை என்ன .. பார்ப்போம்..

பிரசன்னா

திருச்சியை சேர்ந்த பிரசன்னா - பைவ் ஸ்டார் மூலம் அறிமுகமாகி - அழகிய தீயே உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர்.. கடந்த 13 வருடங்களில் 20க்கும் குறைவான படங்கள் தான் நடித்துள்ளார்.. இதில் அழகிய தீயே, கண்ட நாள் முதல் போன்ற ஒரு சில படங்கள் மட்டுமே வெற்றி கண்டன. அஞ்சாதேயில் வித்தியாச வில்லனாய் பாராட்டு பெற்றார். வாய்ப்புகள் குறைவாக இருந்த போது கல்யாண சமையல் சாதம் என்று ஒரு படம் இயக்கியும் பார்த்தார்.



கடந்த ஒரு வருடத்தில் பிரசன்னாவின் படம் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை.. 2014ல் கூட புலிவாலில் வில்லன் பாத்திரம்.. மற்றும் நேற்று இன்று ஒரு படம் ரிலீஸ் ஆனதாம் (அப்படியா என்ன??)

தற்சமயம் என்ன படம் நடிக்கிறார் என்றே தெரியவில்லை !

மாதவன்



அலை பாயுதே வந்த போது - பெண்கள் மனம் கவர்ந்தவர்.. மின்னலே, ரன், அன்பே சிவம், ஆயுத எழுத்து, தம்பி, யாவரும் நலம், 3 இடியட்ஸ் என்று பல நல்ல படங்கள் செய்தவர்.. கடந்த சில வருடங்களாக என்ன ஆனார்.. ஹிந்திக்கு சென்று விட்டார் என்று பொதுவாய் சொல்ல வேண்டாம். தனு வெட்ஸ் மனு தவிர மற்றபடி ஹிந்தியிலும் அதிக படங்கள் இல்லை..

சில விளம்பரங்கள் மட்டும் தொடர்ந்து  டிவியில் வந்த வண்ணம் உள்ளது.. பட வாய்ப்புகள்???

கரண்

சிறு வயது முதலே நடித்து வரும் கரண் - இளைஞர் ஆன பின் நம்மவரில் கமலுக்கு எதிராய் நடித்து கவனம் ஈர்த்தார்..



தொடர்ந்து வில்லன் மற்றும் காரக்டர் பாத்திரங்களில் நடித்திருந்தால் இன்று கரண் - நாசர், பிரகாஷ் ராஜ் ரேஞ்சில் இருந்திருக்கலாம்.. ஆசை யாரை விட்டது? "நடிச்சா ஹீரோ தான் சார் " என்று 90 % தோல்வி படமாக தந்தவரை கடைசியாக எந்த படத்தில் பார்த்தோம் என்றால் நிரம்ப யோசிக்க வேண்டியிருக்கிறது..

ப்ரஷாந்த் 

என் கல்லூரி காலத்தில் ப்ரஷாந்த் நடித்த சில படங்கள் சூப்பர் ஹிட் அடித்தன. முதல் படமான வைகாசி பொறந்தாச்சு மற்றும் கவர்ச்சியை நம்பி ஹிட் ஆன செம்பருத்தி (இப்படத்திற்கு எங்க கல்லூரி பசங்க - படம் ஓடும்போது வெளியில் வந்து உட்கார்ந்திருப்பார்.. பாட்டு வரும் சத்தம் கேட்டால் மட்டும் - தியேட்டர் உள்ளே செல்வர்.. ). விஜய், அஜீத்க்கு கொஞ்சம் சீனியர்.. அவர்கள் அளவுக்கு செல்வார் என எதிர்பார்த்தவருக்கு இன்றைக்கு என்ன நிலை???



அழகு, நடிப்பு, நடனம் மூன்றும் இருந்தும் - இவர் பெரிதாய் ஜெயிக்காமல் போனது ஏன் என்பது விடை தெரியாத கேள்வி..

2007 துவங்கி கடந்த 8 வருடங்களில் இவர் நடித்து வெளியானவை  2 படங்கள்.. பொன்னர் சங்கர் மற்றும் மம்பட்டியான். 8 வருடங்களில் 2 படம் என்பது எத்தனை வலியான விஷயம் !! தற்போது சாகசம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

பி. வாசுவின் மகன் சக்தி ;
பாக்யராஜ் மகன் சாந்தனு,
பாண்டியராஜ் புதல்வன் - ப்ரிதிவி,
ஷாலினியின் அண்ணன் ரிச்சர்ட்

என இந்த பட்டியலில் எத்தனையோ பேர் பற்றி எழுதலாம்..

சரி.. இப்படி வாய்ப்புகள் குறைந்த இந்நடிகர்கள் என்ன செய்திருக்கலாம்?

ஆர்வத்தால் மட்டுமே உள்ளே நுழையும் பலர் - தங்களின் Capacity, likeability இரண்டும் என்ன என்பதை அடுத்த சில ஆண்டுகளில் புரிந்து கொண்டு ஹீரோ என்று இல்லாமல். கதைக்கு தேவையான காரக்டர் ஆர்டிஸ்ட் ஆக - பயணித்திருக்க வேண்டும்..  அது இவர்கள் திரை வாழ்க்கையை நீடித்திருக்கும் என்பதோடு - இவர்களை எப்போதும் occupied ஆக இருக்க வைத்திருக்கும் (அவர்களை கேட்டால் - சினிமாவில் குறிப்பிட்ட ரோல் நடித்தால் அப்புறம் அதே மாதிரி ரோல் தான் கிடைக்கும் என நியாயம் சொல்ல கூடும் )

இக்கட்டுரையில் சொன்னது நடிகர்கள் என்கிற ஒரு பிரிவை பற்றி தான்.. முதல் பட வாய்ப்பு கிடைக்காமல் திண்டாடும் உதவி இயக்குனர்கள் தொடங்கி, முதல் படத்தோடு காணாமல் போன இயக்குனர்கள் வரை ஒரு லிஸ்ட் போட்டால் - அது இன்னும் பெரிதாய் நீளும்..

சினிமா என்கிற மாய வலை இன்னும் எத்தனை பேரை இப்படி தன் பக்கம் இழுக்க காத்திருக்கிறதோ தெரிய வில்லை !

8 comments:

  1. உண்மைதான்! ஹீரோவாகவே நடிக்காமல் வேறு வேடங்களில் நடித்திருக்கலாம் சிலர்! இந்த பட்டியல் மிக நீளமானது. பிரசாந்த், மாதவன், கரண், திறமையிருந்தும் புறக்கணிக்கப்படுவது வேதனைதான்!

    ReplyDelete
  2. ஆம், திரைப்படத்துறையில் கதாநாயகனாக நுழைந்துவிட்டு, வேலையில்லாப் பட்டதாரிகளாக எவ்வளவோ திறமைசாலிகள் கிடப்பது மனதை என்னவோ செய்கிறது. வலிமையானவருக்கே வாய்ப்பு என்றார் சார்ல்ஸ் டார்வின். அதுதான் நடக்கிறதோ? - இராய செல்லப்பா

    ReplyDelete
  3. in one way these people have to blame themselves nowadays all thesons of richmen are entering into films after bribing director mostly their fathers produce the picture even surya karti sons of sivakumar have to start their own productions arun vijay jeyam ravi also have their cine family background the same condition prevails in the PLAYBACK SINGERS INDUSTRY > EVEN harish ragavendra an excellent singer hardly sings one song in one month

    ReplyDelete
  4. in one way these people have to blame themselves nowadays all thesons of richmen are entering into films after bribing director mostly their fathers produce the picture even surya karti sons of sivakumar have to start their own productions arun vijay jeyam ravi also have their cine family background the same condition prevails in the PLAYBACK SINGERS INDUSTRY > EVEN harish ragavendra an excellent singer hardly sings one song in one month

    ReplyDelete
  5. பிரஷாந்த் மற்றும் மாதவன் நிலைமை ரொம்ப பாவம். 'கல்யாண சமையல் சாதம்' படத்தின் இயக்குனர் எழுத்தாளர் R.S . பிரசன்னா , நடிகர் பிரசன்னா அல்ல. நல்ல பதிவு !!!

    ReplyDelete
  6. இந்த பட்டியல் இன்னும் நீளம்தான் ஐயா! பிரசாந்த்,மாதவன், கரண், பிரசன்னா மட்டுமல்ல கிருஸ்ணா, சத்ரியன் ஜீவன் என்று தொடரே எழுத முடியும்.

    ReplyDelete
  7. அருமை யான அலசல் அண்ணா

    ReplyDelete
  8. அருமை யான அலசல் அண்ணா

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...