Sunday, May 19, 2013

அன்னக்கொடியும் கொடி வீரனும் - பாடல்கள் தேறுமா?

2008- இறுதியில் வெளியான பொம்மலாட்டதுக்கு பிறகு - 4 வருடம் கழித்து இன்னொரு பாரதி ராஜா படம் ! இம்முறை அவருக்கு நெருக்கமான கிராமத்து களன். கதையில் பார்த்திபன்- அமீர் போன்றோர் உள்ளே வந்தது- வெளியேறியது துவங்கி ஏகப்பட்ட சர்ச்சைகள். அவற்றுக்குள் செல்லாமல் பாடல்கள் எப்படி என்று பார்ப்போம்

விஜய் டிவி சூப்பர் சிங்கரில் வந்த பலரும் இந்த ஆல்பத்தில் பாடியிருக்கிறார்கள். சத்ய பிரகாஷ், சந்தோஷ், பூஜா.... இது ஒரு பக்கம்.

இன்னொரு பக்கம் வைரமுத்து மட்டுமன்றி அவரோடு - அறிவுமதி, கங்கை அமரன், ஏகாதசி என பல கவிஞர்கள் பாடல்கள் எழுதியுள்ளனர் (வைரமுத்து எப்பவும் தானே எல்லா பாட்டும் எழுதணும் என்ற கொள்கை உள்ளவர்; இம்முறை தன் நண்பரிடமே அது பலிக்க வில்லை )



ஆவாரங் கூட்டுக்குள்ளே

பாடகர்கள்: சத்திய பிரகாஷ், சின்மயி
இயற்றியவர்: வைரமுத்து

டிபிக்கல் கிராமத்து பாட்டு - கிழக்கு சீமையிலே, கருத்தம்மா என எத்தனையோ படங்களில் இத்தககைய பாட்டுகளை கேட்டிருக்கோம். இது பாரதிராஜா பட பாட்டு என சொல்லிடலாம்.

கேட்டதும் ஓரளவு பிடிக்கிற மாதிரி இருந்தாலும், அப்புறம் பெரிதாய் ஈர்க்காமல் அப்படியே நின்னுடுது. ப்ளூட் இசை மட்டுமே கவர்கிறது

பாடலின் பெரிய குறை - பெண் குரல் - கிராமத்து சாயல் சிறிதும் இல்லை !

அன்னமே

பாடியவர்கள் : ஜி வி பிரகாஷ் குமார்,பூஜா
எழுதியவர்: ஏகாதசி

நம்ம விஜய் டிவி சூப்பர் சிங்கர் பூஜா பாடியிருக்கார் !

மிக மிக மெதுவாக நகர்கிற பாட்டு. தைரியமாக இப்படி ஒரு ஸ்லோ சாங்க் எப்படி வைத்துள்ளனரோ தெரிய வில்லை. ரொம்ப செண்டிமெண்ட்டலாக திரையில் நிச்சயம் க்ளிசரினுக்கு வேலை வைக்கிற பாட்டு. ப்ச் .....

புத்தி வச்ச

பாடியவர்கள் : ஜி வி பிரகாஷ் குமார், பிரசாந்தினி
எழுதியவர்: அறிவுமதி

ஆல்பத்தில் பாரதி ராஜா ஸ்டைல் இல்லாமல் - ஜி வி பிரகாஷ் குமார் ஸ்டைலில் அமைந்த பாட்டு இது. அதனாலேயே கேட்க நன்றாக இருக்கிறது.

துவக்க இசை - அருமை. மிக மெலடியஸ் பாடல். ஓரிரு முறை கேட்ட பின் பிடிக்கிறது. பாடல் வரிகள் புரியாமல் இசை டாமினேட் செய்வதை தடுத்திருக்கலாம்

நரிக உறங்க

பாடகர்கள்: சந்தோஷ், ஹரிணி சுதாகர், பூஜா
இயற்றியவர்: வைரமுத்து

மீண்டும் இசை மட்டுமே ஈர்க்கிறது. பரதேசி படத்தின் சில பாட்டுகளை இப்பாடல் நினைவு படுத்துவது பெரிய மைனஸ்

போறாளே போறாளே

பாடியவர்: S. P. சரண்
இயற்றியவர்: கங்கை அமரன்

கடலோர கவிதைகளில் " போகுதே போகுதே.. என் பைங்கிளி வானிலே " கேட்டிருக்கிறீர்களா? அதே மாதிரி சூழலில் காதலி பிரியும் போது காதலன் சோகத்தில் பாடுகிற பாடல்

மெட்டு, பாடல் வரிகள் இரண்டுமே அதிகம் கவரவில்லை. ஒரு இடத்தில் "ஓ...ஓ " என வரிகளே இன்றி ஜவ்வு மாதிரி திரும்ப திரும்ப பாட வைத்துள்ளது எரிச்சலூட்டுகிறது

அன்னமே

பாடியவர்கள் : மாயா, படையப்பா ஸ்ரீராம், ரைஹானா
எழுதியவர்: ஏகாதசி

ஆல்பத்தின் ஒரே செம ஸ்பீட் பாட்டு. கோவில் திருவிழா அல்லது சாமி பூஜையின் போது நடக்கும் பாட்டாக வருகிறது. கிராமத்து வாத்தியங்கள் ஒலிப்பது ஈர்க்கிறது. மற்றபடி பெரிதாய் சொல்லி கொள்ள ஏதுமில்லை
*****
மொத்தத்தில் -

சோகம் பிழியும் பாடல்களும், மிக மெதுவான - சுவாரஸ்யம் இல்லாத பாடல்களும் ரசிகர்களுக்கு பிடிக்காமல் தான் போகும்.

ஓரிரு பாடல்கள் மட்டும் தான் ரசிக்க முடிகிறது ..பல முறை கேட்ட பின்னும் !

5 comments:

  1. Anonymous3:06:00 PM

    barathirajalam ilaignargalukku vaaippu koduthuvittu othungum neram vanthuvittathu..avar oru legend but not for this trend..

    ReplyDelete
  2. பாரதி ராஜா காலம் முடிந்து விட்டதோ? பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  3. write about mariyaan songs. im waitng for ur views

    ReplyDelete
  4. Sir,
    ஒரு சந்தேகம். நான் பள்ளிநாட்களில் கேட்க தொடங்கிய போது, odviously நான் ஏ ஏ. ஆர். ரகுமான் விரும்புகிறேன். அவரால், நான் இளையராஜா திறமையை பற்றி தெரிந்து, அவரை நேசித்தேன். அவர்களுக்கு பிறகு, நான் ஒரு நல்ல சினி இசையமைப்பாளர் என யாரையும் ஏற்று கொள்ள முடியவில்லை. நான் எப்படி இந்த பிரச்சினை இருந்து வெளியே வரலாம்.?
    (i have sent two mails only to you regarding your blogger's meeting. i think u know me)
    Best Wishes

    ReplyDelete
  5. கேட்டு பார்த்து சொல்றேன் சகோ!

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...