Friday, May 3, 2013

தங்க மீன்கள் - மனதை நெகிழ்த்தும் 2 பாடல்கள் - ஒரு பார்வை

ங்க மீன்கள் - கற்றது தமிழ் இயக்குனர் ராமின் நடிப்பு மற்றும் இயக்கத்தில் வெளிவர உள்ள படம் - கெளதம் மேனன் தயாரிப்பு- இசை - யுவன் சங்கர் ராஜா- பாடல்கள்- நா முத்து குமார்.

2011-ல் ஷூட்டிங் முழுதும் முடித்து விட்டாலும் - பல காரணங்களால் தாமதமாகி,  சமீபத்தில் பாடல்கள் வெளியாகி உள்ளது. விரைவில் படமும் வெளியாகி விடும் என்று நம்புவோம் !**********
அப்பா- மகள் என்கிற உறவு தான் எத்தனை அற்புதமானது ! இப்பட பாடல்கள் முழுக்க முழுக்க இந்த உறவை பற்றி பேசுவதாலேயே - இயல்பான ஈர்ப்பு வந்து விடுகிறது.

ஆனந்த யாழை மீட்டுகிறாய்

மிக அழகான மெலடி !

ஒவ்வொரு பாடலிலும் இயக்குனர் ராம் அப்பா- மகள் உறவு குறித்து கவிதை கலந்த வரிகள் சில பேசுகிறார். இப்பாடலுக்கு முன் அவர் சொல்வது :

"மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும். முத்தம் காமத்தில் சேர்த்ததில்லை என்று.. " ..

என்னை போல - பெண்ணை பெற்ற தகப்பன்கள் - பல தருணத்தில் இதனை உணர்ந்திருக்க கூடும்.

மனதை வருடும் மெல்லிய இசையுடன் பாடல் துவங்குகிறது.

ஆனந்த யாழை மீட்டுகிறாய் - அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்
அன்பெனும் குடையை நீட்டுகிறாய் "

" இளம் காத்தாய் வீசிய " ஸ்ரீராம் பார்த்தசாரதியின் குரல் மெலடிக்கென்றே உருவானது ...

மெட்டு- அழகிய வரிகள் - பாடல நம்மை வேறு எங்கோ ஒரு வெளிக்கு இட்டு செல்கிறதுஇரு நெஞ்சம் இணைந்து பேசிட உலகில் பாஷைகள் எதுவும் தேவையில்லை

உந்தன் கைகள் பிடித்து போகும் வழி அது போதவில்லை.. இன்னும் வேண்டுமடி

சில மாதங்களே ஆன ஒரு பெண் குழந்தை- அவளுக்கு நடை பயில சொல்லி தரும் தந்தை என்கிற சித்திரம் இந்த வரிகள் கேட்கும்போதே மனதில் விரிகிறது. கூடவே எனது பெண்ணுக்கு நான் நடக்க சொல்லி தந்த தருணங்களும்...


அபியும் நானுமில் - வைரமுத்து என்றால் இங்கு நா. முத்துகுமார் !

அடி கோவில் எதற்கு தெய்வங்கள் எதற்கு
உனது புன்னகை போதுமடி
இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே எங்கும் வாழவில்லை
என்று தோன்றுதடி

இந்த ஆல்பத்தில் மிக அற்புத பாடல்களில் ஒன்று. கேட்டு பாருங்கள்
****
நதி வெள்ளம் மேலே

மனதை கவ்வும் பாட்டு "நதிவெள்ளம் மேலே ".

பணம் சம்பாதிக்கும் பொருட்டு குடும்பத்தை பிரிந்து வாழும் ஆண்கள் எத்தனை எத்தனை பேர் ! அந்த தந்தைகளின் மன நிலையை சொல்லும் பாட்டு இது.

Thanga Meengal Movie New Stills


நதி வெள்ளம் மேலே என் மீனே மீனே
நீ நீந்திய -
பொன் நினைவுகள்
நெஞ்சில் நிழலாடும்

முன்னந்தி நிலவில்
நீ ஓடிய
மென் சுவடுகள் மீண்டும் உனை கேட்கும்

என் கண்ணின் இரு கருவிழிகள் உன் முகத்தை தேடுதடி
கண்ணீர் துளிகள் காட்சியை மறைக்குதடி

ராகுல் நம்பியாரின் குரலில் முத்துகுமாரின் பாடல் வரிகள் - மனதை என்னவோ செய்கிறது.

அலைந்திடும் மேகம் அதை போல இந்த வாழ்க்கையே ............
காற்றின் வழியில் போகின்றோம்
கலைந்திடும் கோலம் என்ற போதிலும்
அதிகாலையில்
வாசலில் வண்ணம் விதைக்கின்றோம்

உயிரே உன்னை பிரிந்தேன்... உடனே நானும் இறந்தேன்
உடல் ...நானங்கு வாழும் நீ தானே
எந்தன் உயிரே ...

ஒவ்வொரு பல்லவிக்கும் இடையிலும் ப்ளூட் மனதை பிசைகிறது. சரணத்தை விட பல்லவி தான் அற்புதமாய் உள்ளது

மலர் ஒன்று வீழ்ந்தால் அதை ஏந்த பலர் ஓடுவார்
இலை வீழ்ந்தால் சருகாகும்
வறியவன் வாழ்க்கை இலை போல
என்றபோதிலும்
சருகுகள் ஒரு நாள் உரமாகும்


பாடலின் முன்பு இயக்குனர் ராமின் குரல் இப்படி சொல்கிறது

"அப்பாக்களை பிரியா மகள்கள் அதிர்ஷ்டசாலிகள்
மகள்களை பிரியா அப்பாக்கள் பாக்கியவான்கள்
ஆனால் அப்படியெல்லாம் தந்துவிட
வாழ்க்கை ஒன்றும் தோழன் இல்லை "*****************

இவை தவிர இன்னும் இரு பாடல்களும் இருக்கின்றன துரதிர்ஷ்டவசமாக அவை பெரிய அளவில் கவரவில்லை

"பஸ்ட் - லாஸ்ட் - பாஸ் - பெயில் யாரு கண்டுபிடிச்சா ? " என்கிற பாட்டு ரொம்ப நாள் கழித்து ஒரு குழந்தை பாட்டாக வந்துள்ளது. ஆனால் முழுதும் கோரஸ் பாடுவதாலும், இரைச்சல் இசையாலும் அதிகம் ஈர்ப்பின்றி போகிறது.

Thanga Meengal Movie Stills

யாருக்கும் தோழன் இல்லை என்கிற இன்னொரு பாடல் மிக சிறிய ஒன்று - அதுவும் மகளை பிரிந்து வாடும் தந்தை குறித்தது தான். மிக ஸ்பீட் ஆன பாட்டில் அற்புதமான பாடல் வரிகள் அடிபட்டு போவது வருத்தமே !

***
நதி வெள்ளம் மேலே மற்றும் ஆனந்த யாழை மீட்டுகிறாய் - இரு பாட்டுகளும் போதும் இந்த படத்திற்கு.. !

படம் குறித்து நிச்சயம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டன இந்த இரு பாடல்களும் !

******
அண்மை பதிவுகள்:

சூது கவ்வும்- நிச்சயம் வெல்லும் - விமர்சனம்  

மூணு பேர் மூணு காதல் = ஜவ்வு மிட்டாய் விமர்சனம்  

5 comments:

 1. THANKS FOR SHARING A NICE ALBUM.

  CAN U GIVE ME THE MP-3 AUDIO LINK...?

  ReplyDelete
 2. நதி வெள்ளம் பாடல் எழுதி பின்னர் இசை அமைத்தது போல் தோன்றுகிறது.

  ReplyDelete
 3. நானும் இதே தலைப்பில் ஒரு பதிவு எழுதலாம் என்று இருந்தேன்..உங்களை வழிமொழிகிறேன்

  ReplyDelete
 4. பின்னூட்டம் இட்ட நண்பர்களே....நன்றி !

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...