Sunday, January 6, 2013

விஸ்வரூபம் பாடல்களில் எத்தனை ஓகே ? பாடல் விமர்சனம்

மிக அதிக எதிர்பார்ப்புகள் மற்றும் சர்ச்சைகளுடன் இவ்வாரம் வெளியாகிறது கமலின் விஸ்வரூபம். ஐந்து பாடல்கள் ஆல்பத்தில் இருந்தாலும் ஒரு பாடல் ரிபீட் ஆகிறது ; ஆக, நான்கே பாடல்கள் தான். ஷங்கர்- இசான்- லாய் இசை ! 

பாடல்கள் எப்படி ? வாங்க பார்க்கலாம் !யாரென்று புரிகிறதா 

பாடியவர் : சூரஜ் ஜகன் 
பாடல் இயற்றியவர் : வைரமுத்து 

கமலின் (பாத்திர) அருமை பெருமைகளை சொல்வதாக வருகிறது இப்பாட்டு

யாரென்று புரிகிறதா இவன் தீ என்று தெரிகிறதா
தடைகளை தகர்த்தே சரித்திரம் படைப்பவன் நியாபகம் வருகிறதா

யாருக்கும் அடிமை இல்லை; இவன் யாருக்கும் அரசன் இல்லை
எவன் என்று நினைத்தாய் எதை கண்டு சிரித்தாய்
விதை ஒன்று முளைக்கையில் வெளிப்படும் புது ரூபம்

நெருப்புக்கு பிறந்தான் ....நித்தம் நித்தம் வளர்ந்தான்
வேளை வந்து சேரும்போது வெளிப்படும் சுயரூபம்

கமல் ரசிகர்களுக்கு நிச்சயம் இப்பாட்டு பிடிக்கும் !மற்றவர்களை பொறுத்த வரை பாடல் இப்போதைக்கு மிக சிறிதளவே கவர்கிறது. 


இப்பாடலை பொறுத்த வரை படம் நன்றாக இருந்தால், கதையுடன் ஒன்றி இருந்தால் ரசிக்க முடியும். இல்லாவிடில் நிச்சயம் இப்பாடலை மறந்து கடந்து விடுவோம்.

துப்பாக்கி எங்கள் தோழனே

பாடியவர்கள் : கமல் ஹாசன், பென்னி தயாள்
பாடல் இயற்றியவர் : வைரமுத்து

மிக வேகமான ஒரு பாட்டு. ஆங்கில வரிகள் இடையிடையே கலந்து வருகிறது

"துப்பாக்கி எங்கள் தோழனே " என்று துவங்கும் இப்பாடல் முழுக்க முழுக்க போர் பற்றியே பேசு(பாடு)கிறது.கமல் கோரஸ் உடன் பாடும் இப்பாடலின் வரிகள் இப்படி உள்ளது:

போர்களை நாங்கள் தேர்ந்தெடுக்க வில்லை.
போர் தான் எம்மை தேர்ந்தெடுத்து கொண்டது
எங்களின் கையில் ஆயதங்கள் இல்லை
ஆயுதங்கள் கையில் எங்கள் உடல் உள்ளது

ஊரை காக்கும் போருக்கு ஒத்திகை செய்கின்றோம்
சாவே எங்கள் வாழ்வென்று சத்தியம் செய்கின்றோம்

துப்பாக்கியை தலையணையாய் வைக்கிறோம் என்றும் டாலர் உலகத்தில் சமதர்மம் கிடையாது என்றும் செல்லும் பாடலில், வரிகள் முழுதும் புரியாமல் இசை மிக அதிகம் டாமினேட் செய்வது வருத்தமே !

அணு விதைத்த பூமியிலே 

பாடியவர்கள் : கமல் ஹாசன்  & நிகில் டிசோசா 
பாடல் இயற்றியவர் : கமல் ஹாசன் 

இந்த பாட்டும் கூட சண்டை மற்றும் போர் பற்றித்தான் ! குறிப்பாய் சொல்லணும் என்றால் அணுகுண்டு பற்றி !.


யார் யார் சிவம் மாதிரி மெதுவான பாட்டு. கமல் பாடியிருக்கார். பெரிதளவில் ஈர்க்க வில்லை.

போர் செல்லும் வீரன் ஒரு தாய் மகன்தான்
நம்மில் யார் இறந்தாலும் ஒரு தாய் அழுவாள்

என்று செல்லும் பாடலில் "நம் நோய்க்கு அன்பன்றி வேறு மதம் இல்லை " என்ற வரிகள் யோசிக்க வைக்கிறது

உன்னை காணாத நானும் நானல்ல

பாடியவர்கள் : ஷங்கர் மகாதேவன், கமல் ஹாசன்
பாடல் இயற்றியவர் : கமல் ஹாசன்

                  

கமலின் குரலுடன் வடக்கத்திய பாடல் போல துவங்குகிறது. சில பல புரியாத வரிகள் பாடிய பின், மறுபடி மறுபடி "ஆயர் தம்மாயா நீ வா " என்று கமல் சொல்ல, கோரஸ், மாயா மாயா என்கிறது.

மிக மெதுவாக " உன்னை காணாத நானும் நானல்ல" என துவங்குகிறது ஷங்கர் மகாதேவன் குரல். ஆங்காங்கு கமலும் கோரசும் வந்து இணைந்து கொள்கிறார்கள். இப்போதைக்கு ஆல்பத்தில் பிடித்த பாட்டு என்றால் இது தான் ! இசையில் பெரிய ஞானம் இல்லாவிடினும், இப்பாடலில் எதோ ஒன்று ஈர்ப்பதாகவே உள்ளது


டான்ஸ் மாஸ்டராக வரும் கமல் வெள்ளை உடையுடன் ஆடுவதாக டிரைலரில் காட்டுகிறார்களே.. அது இப்பாடலே !
****
மொத்தத்தில்: தற்போதைக்கு ஈர்ப்பது உன்னை காணாத நானும் பாடல் மட்டும் தான். மற்ற பாடல்கள் படம் வெளியாகி வெற்றி பெற்றால் மட்டுமே, படத்துடன் சேர்த்து ரசிப்போம் என்று நினைக்கிறேன் !

20 comments:

 1. Shankar, Ehsaan and Loy ஆகியோரின் இசையில் நிறைய ஹிந்தி பாடல்கள் பிரமாதமாக இருக்கும். உதா: Dil Chahta Hai, Kal Ho Naa Ho, Don, Don 2, Taare Zameen Par etc.

  விஸ்வரூபம் அந்தளவிற்கு ஈர்க்கவில்லை. பார்ப்போம், பிஜிஎம் எப்படி இருக்கிறதென்று.

  ReplyDelete
 2. Replies
  1. நன்றி தமிழ் செல்வி

   Delete
 3. //நெருப்புக்கு பிறந்தான் ....நித்தம் நித்தம் வளர்ந்தான்
  வேளை வந்து சேரும்போது வெளிப்படும் சுயரூபம்// படமும் பாடலும் ஹிட் ஆகிறதோ இல்லையோ இந்தப் பாடலும் வரிகளும் என்னை வெகுவாய் ஈர்த்துவிட்டன,,, நான் தின்னும் பல முறை கேட்கும் பாடல் இது சார்

  ReplyDelete
  Replies
  1. அப்படியா சீனு நன்றி

   Delete
 4. இன்னும் ஒரு பாடலும் கேக்கலே.

  ReplyDelete
  Replies
  1. கேட்டு பாருங்க பூந்தளிர் எப்படியும் படம் இவ்வாரம் ரிலீஸ் ஆகுது

   Delete
 5. // இப்போதைக்கு ஆல்பத்தில் பிடித்த பாட்டு என்றால் இது தான் ! இசையில் பெரிய ஞானம் இல்லாவிடினும், இப்பாடலில் எதோ ஒன்று ஈர்ப்பதாகவே உள்ளது //

  உங்களை ஈர்ப்பதற்கு காரணம் கர்னாடக இசையில் சோகம், கருணை, வாத்சல்யம், ப்ரேமை ஆகியவைகளைப்
  பிரதிபலிக்கும் ராகமான த்விஜாவந்தி என்னும் ராகத்தின் அடிப்படையில் இந்தப் பாட்டு அமைந்திருப்பதே.

  இந்த ராகத்தில் இதுவரை நான் சினிமா பாடல்கள் அதிகம் அமைக்கப்பட்டு நான் கேட்டதில்லை. இசை ஞானி
  இந்த ராகத்தில் ஏதேனும் கண்டிப்பாக இட்டிருக்கக்கூடும், ஏதேனும் ரசிகர்களுக்குத் தெரிந்திருந்தால் , சொல்லவும்.

  மற்றபடி, அனேகமாக, நீங்கள் சொல்லியபடி, மற்ற எந்த பாடலுமே ஒரு தடவைக்குமேல் கேட்கமுடியும் என்று
  தோன்றவில்லை. எப்படியும் அவை இசை ரசிகர்கள் மனதிலே நிலைத்து நிற்கும் என்று தோன்றவில்லை.

  சுப்பு தாத்தா.
  பி.கு: கர்னாடக இசையின் அடிப்படையில் அமைந்துள்ள பாடல்களை நீங்கள் கேட்க விரும்பினால், நீங்கள்
  எனது வலைப்பக்கம் வாருங்கள்.
  www.movieraghas.blogspot.com

  ReplyDelete
  Replies
  1. நன்றி சுப்பு தாத்தா; மிக அருமையாய் விளக்கி விட்டீர்கள்

   Delete
 6. உன்னைக் காணாத... விஸ்வரூபம் பாடல்.

  மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் என்னும் படத்தில் எம்.எஸ்.விஸ்வனாதன் இசை அமைத்த பாடல்

  அமுத தமிழில் எழுதும் கவிதை.

  கேட்டு பாருங்கள். இதுவும் அதே த்விஜாவந்தி ராகம்தான்.  சுப்பு தாத்தா.

  ReplyDelete
  Replies
  1. நான் இந்தப் பாடல் சஹானா-வில் அமைந்தது என்று நினைத்தேன்.

   [கமலுக்கு சஹானா-வில் இருக்கும் ஈர்ப்பு அவ்வை சண்முகி-யின் ருக்கு ருக்கு மற்றும் அன்பே சிவம் படத்தில் மௌனமே பார்வையாய்ப் பார்த்துக் கொண்டோம் ஆகிய பாடல்களில் பார்த்ததால்.]

   ஓரளவு ராகத்தை ஊகித்துச் சொன்னதுதான் மற்றபடி கர்நாடக இசை தெரியாது என்பதால் தவறு இருந்தால் மன்னிக்கவும்.

   Delete
 7. vazhakkam pola vairamuthu kalakitaru nna

  ReplyDelete
 8. விஸ்வரூபம் பாடல்களை தலைக்கவச போனுடன் ( சூப்பர் சிங்கர் நடுவர்கள் துல்லியமா கேட்கிற மாதிரி) கேட்டேன்.பாடல்கள்,வரிகள் சிறப்பாக இருக்கின்றன.கொஞ்சம் ஆங்கில கலவை,பக்க வாத்தியங்கள் என கொஞ்சம் டமாரம் செய்கிற மாதிரி இருந்தாலும் படத்தோடு ஒன்றிப் போகும் போது சிறப்பாக இருக்குமென நினைக்கின்றேன்.

  ReplyDelete
  Replies
  1. இருக்கலாம்; பார்ப்போம்; நன்றி ராஜ நடராஜன்

   Delete
 9. All songs in Vishwaroopam are story oriented, no seperate dream songs or duet songs.....

  based on the screenplay and song mixture, it should be so good. if screenplay is bad, songs will also go worst.. lets see

  ReplyDelete
  Replies
  1. உண்மை தான் வடிவேல் ; நான் சொன்னதும் அதுதான் நன்றி

   Delete
 10. Replies
  1. வாங்க மாதேவி வணக்கம்

   Delete

Related Posts Plugin for WordPress, Blogger...