Tuesday, January 5, 2010

வெளிநாடு வாழ் இந்தியர்களின் துன்பங்கள்

வெளி நாடுகளில் வாழும் இந்தியர்கள் படும் துன்பங்கள் தான் எத்தனை? எத்தனை?

எனது நெருங்கிய நண்பன் வெளி நாட்டில் வசிக்கிறான். லீவுக்கு இங்கு வரும் போது ஒவ்வொரு முறையும் இன்னும் மிச்சம் எத்தனை நாள் இருக்கு என எண்ணி கொண்டே இருப்பான். "இங்கே இருக்கும் போதாவது இந்த சந்தோசத்தை என்ஜாய் பண்ணு"ன்னா, "அப்படி தோணுதுடா .. சொல்றேன்..என்ன பண்ண சொல்றே" என்பான். "மச்சி.. கூட பொறந்ததுங்க இவன் என்ன வாங்கிட்டு வருவான்னு தான் பாக்குதுங்க. சொந்த காரனுங்களும் கேமரா, செண்டு இப்படி ஏதாவது லிஸ்ட் குடுதுடுறாங்க. நான் அங்க இருக்கிறதில் என்ன தவிர மத்தவங்க ரொம்ப ஹாப்பிடா" என்பான். " டேய்.. எல்லாரும் நான் கொண்டு வர காசை தான் பாக்குறாங்க; அதுக்கு நான் படுற அவஸ்தையை யாரும் பாக்கல. நான் பேருக்கு தாண்டா இஞ்சினீர். என்ன கேவலமான வேலையெல்லாம் செய்ரேன்னு வெளியே சொல்ல முடியாதுடா " என புலம்புவான்.

இந்த கஷ்டங்கள் வெளி நாட்டில் குடும்பத்தை விட்டு வாழும் அனைவரும் உணர்வார்கள் என நினைக்கிறேன்.

இதை விட கொடுமையான சில நிகழ்வுகள் வெளி நாடு வாழ் இந்தியருக்கு நடந்தேறுகின்றன.

சமீபத்தில் உ. பி யை சேர்ந்த ஹபிப் ஹுசைன் எனும் தொழிலாளி விமான கழிப்பறையில் ஒளிந்து சவூதியிலிருந்து தப்பி வந்த கதை வாசித்தீர்களா?

தனக்கு இருந்த கொஞ்ச நிலத்தையும் விற்று ஒரு லட்சம் ருபாய் தந்து வெளி நாடு சென்றிருக்கிறார் இவர். மாத சம்பளம் 10000 முதல் 15000 ருபாய் என்று பேச்சு..ஆனால் நடந்தது வேறு.. இவரது passport -ஐ வாங்கி வைத்து கொண்டு அடிமை போல் நடத்தியிருக்கிறார்கள். மிக மிக குறைவான அளவே சாப்பாடு தந்துள்ளனர். பணம் தந்த பாடில்லை. ஊருக்கு phone பேசி அவர்கள் எப்படி உள்ளனர் என்று கூட தெரிய முடியாத சூழல்..



விமான டாய்லட்டில் ஒளிந்து தப்பி வந்த ஹபிப் ஹுசைன்

இவர் தனது passport தந்து விடும் படி பல முறை கெஞ்சியிருக்கிறார். ஆனால் இவரை ஒருவர் மற்றவருக்கு விற்பது தொடர்ந்தவாறு இருந்திருக்கிறது. கடைசியாய் சவுதி ஏர் போர்ட்டில் வேலை செய்தவர், திருட்டு தனமாக விமானத்தில் ஏறி ஒளிந்து கொண்டுள்ளார். பறக்க ஆரம்பித்து அரை மணி ஆன பின் இது தெரிய வர, அவருக்கு சீட் தந்து உணவும் தந்துள்ளனர். ஆனால் இந்தியாவிற்கு தகவல் தரப்பட்டு இறங்கியதும் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளார்.

தன்னை போல் ஆயிரக்கணக்கானோர் உ. பி மற்றும் பீகாரில் இருந்து இவ்வாறு அடிமை வாழ்க்கை வாழ்வதாக கூறியுள்ளார் இவர்.

இவ்வாறு கொத்தடிமை வாழ்க்கை வாழ்வோரை விடுவிக்க இந்திய அரசாங்கம் ஏதும் செய்ய முடியுமா என தெரிய வில்லை. சென்றவர்கள் தங்கள் சொந்த விருப்பத்தில் சென்றனர். ஆனாலும் அவர்கள் தற்போது படும் துயரம் நிஜம். அரசாங்கம் தலையிட்டு ஏதேனும் நல்லது நடந்தால் அந்த குடும்பங்கள் பெருமூச்சு விடும்.

இது ஒரு புறமிருக்க ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் தாக்கப்படும் சம்பவம் தொடர்ந்து நடக்கிறது. தற்போது நிதின் கார்க் எனும் 21 வயது மாணவர் கொல்ல பட்டுள்ளார்.



சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் கொல்ல பட்ட நிதின் கார்க்


பல முறை இந்திய மாணவர்கள் மீது தாக்குதல் நடந்தும் இந்திய அரசு போதுமான நடவடிக்கை எடுக்க வில்லை. ஆஸ்திரேலியாவிற்கு பெரும் நெருக்கடி கொடுத்திருக்க வேண்டும். இந்தியா உடனான கிரிக்கட் மேட்சை நிறுத்துவது உட்பட.. ஆனால் இவை ஏதும் செய்ய பட வில்லை. வழக்கம் தயாராக இருக்கும் கண்டன அறிக்கை மட்டுமே அரசாங்க தரப்பிலிருந்து வரும் ஒரே நடவடிக்கை.

வெளி நாட்டு இந்தியர்கள் அனுப்பும் அந்நிய செலவாணி மட்டும் இந்திய அரசுக்கு வேண்டும். ஆனால் அவர்கள் என்ன ஆனால் என்ன என்ற மனோ பாவம் வருத்தமளிக்கிறது.

இந்த துயரங்கள் தீர என்ன செய்யலாம்? உங்களுக்கு ஏதும் தோன்றினால் நீங்களே சொல்லுங்கள்..

17 comments:

  1. //இவ்வாறு கொத்தடிமை வாழ்க்கை வாழ்வோரை விடுவிக்க இந்திய அரசாங்கம் ஏதும் செய்ய முடியுமா என தெரிய வில்லை//

    வெளிநாடு இந்திய தூதரகங்களின் ஒரே நன்மை இந்தியாவைப் போல் நீண்ட............. வரிசையில் ஒரு முத்திரைக்காக நிற்க தேவையில்லை.ஒரே நாளில் புதுப்பித்தல்,முத்திரை வேலைகளை செய்து முடித்து விடலாம்.மற்றபடி வெளிநாடுகளில் இந்திய அரசாங்கம் பல் பிடுங்கப்பட்ட....... அது எந்த அரசாங்கமாகட்டும்.வம்பில் மாட்டிக்கொள்ளாத வரை எந்தப் பிரச்சினையுமில்லை.மாட்டிகிட்டா அந்த நொள்ளை இந்த சட்ட நொள்ளைன்னு தூதரகம் காலை வாரி விட்டு விடும்.அப்படியும் அவர்களின் நோஞ்சான் சக்திக்குள் இயன்ற உதவிகளை சிலருக்கு செய்யவே செய்கிறார்கள்.முக்கியமாக வீடுகளில் பணிபுரியும் பெண்களுக்கு.

    சேரன் வெற்றிக்கொடி கட்டியும், அடிப்படைத் தகுதியில்லா அல்லது தகுதியிருந்தும் எது கிடைத்தாலும் செய்து பிழைக்கலாம் என்ற மனப்பான்மையும்,இடைத் தரகர்கள் மூலம் பணமிழப்பது போன்ற துயரங்களும் வெளிநாடு வாழ் இந்தியர்களின் துன்பங்களுக்கு காரணம்.

    உழைப்புச் சுரண்டல் என்பதை விட மனித உரிமை மீறல்கள் வளைகுடா நாடுகளில் அதிகம்.அதில் சவுதிக்கு தங்கப் பதக்கம்.

    இந்தியாவில் இருந்தால் உழைப்பின் கௌரவம் அதற்கான ஊதியம் மதிக்கப் படுவதில்லை.

    ReplyDelete
  2. //கொடுமையான சில நிகழ்வுகள் வெளி நாடு வாழ் இந்தியருக்கு நடந்தேறுகின்றன.//


    முற்றிலும் உண்மைதான்..ஆனால் எல்லோருக்கும் அல்ல,இந்தியாவில் கிளம்பும்முன் சரியாக விசாரிக்காமல், படிப்பறிவு குறைந்த நம் இளைஞர்கள் பலர் நிறைய சம்பளம் கிடைக்கும் என்கிற ஆசையில் வெளிநாடு வந்து ஏமாறு கிறார்கள்.அவர்களை குறைசொல்லி பயனில்லை.ஏனெனில் இந்தியாவில் இருக்கும் நிறைய போலி ஏஜண்டுகள் இவர்களை குறிவைத்து ஏமாற்றுவதில் வல்லவர்கள்.அந்த மாயவலையில் சிக்கும்அப்பாவி
    இளைஞர்கள் தான் இப்படி ஏமாற்றப்படுகின்றனர்.
    இந்த போலி ஏஜண்டுகள் சட்டப்பிடியில் சிக்குவதில்லை; சிக்கினாலும் வெளிவருவதில் எந்த சிரமமும் இருப்பதில்லை..
    நாடு திருந்தாது நண்பா;நாமும் திருந்த மாட்டோம்; நல்ல பதிவிற்கு வாழ்த்து.

    ReplyDelete
  3. நிதின் கார்க் கொல்லப்பட்டது வேறு காரணங்களால் என சொல்லப்படுகிறது.

    இந்திய தூதரகத்திற்கு ஒரு நாட்டில் எத்தனை இந்தியர்கள் இருக்கிறார்கள் என்பதே தெரியாது.

    u.K வில் ஒருவரின் முகவரிக்கு எவ்வளவு கேட்டும் தூதரகத்தால் தர இயலவில்லை :(

    ReplyDelete
  4. //உழைப்புச் சுரண்டல் என்பதை விட மனித உரிமை மீறல்கள் வளைகுடா நாடுகளில் அதிகம்.அதில் சவுதிக்கு தங்கப் பதக்கம்.//
    நண்பரின் இந்தக் கருத்து முற்றிலும் உண்மை.

    நல்ல பகிர்வுக்கு நன்றி மோகன் சார்.

    ReplyDelete
  5. பூங்குன்றன் சொல்லவது போல " இந்தியாவில் கிளம்பும்முன் சரியாக விசாரிக்காமல், படிப்பறிவு குறைந்த நம் இளைஞர்கள் பலர் நிறைய சம்பளம் கிடைக்கும் என்கிற ஆசையில் வெளிநாடு வந்து ஏமாறு கிறார்கள் "

    கடன் வாங்கி,இருக்கும் சொத்தை விற்று வளைகுடா நாட்டிற்கு சென்று வேலைதேடுவது லாபகரமான விசயமாக இருப்பதில்லை என்பதுதான் சமீபகாலமாக அங்கு சென்றுவருபவர்களின் அனுபவமாக இருக்கிறது.

    தேவையான பதிவு மோகன் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. நல்ல பதிவு
    வாழ்த்துகள்

    ReplyDelete
  7. நல்ல பதிவு...ஏன் வெளிநாட்டுக்கு போனும்...
    எதுக்கு அங்கே போய் கஷ்டபடனும்....

    ReplyDelete
  8. பேராசை மற்றும் பொறுமை இன்மையே வெளிநாட்டு வேலைக்கும், படிப்பிற்கும் மூல காரணம்.

    இனிமேலாவது துபாய், சிங்கப்பூர் , மல்ய்சிய மோகம் வேண்டாம், தினத் தந்தியில் தமிழர்கள் சித்ரவதை செய்தியும் பார்க்க வேண்டாம்

    ReplyDelete
  9. தெளிவான நீண்ட கருத்துக்களுக்கு நன்றி ராஜ நடராஜன்

    தங்கள் analysis சரியே. நன்றி பூங்குன்றன்

    பின்னூக்கி, சரவணா குமார், ஜெய மார்த்தாண்டன், தியாவின் பேனா நன்றிகள்

    ஜெட் லி: வெளி நாடு போக ஒவ்வொருத்தருக்கும் பல தனிப்பட்ட காரணம் இருக்கும். ஏன் போகணும் என நாம் general-ஆக கேட்க முடியாது தம்பி.

    குப்பன் முதல் வருகை என நினைக்கிறேன். நன்றி

    ReplyDelete
  10. கண்டன அறிக்கை மட்டுமே அரசாங்க தரப்பிலிருந்து வரும் ஒரே நடவடிக்கை.

    வெளி நாட்டு இந்தியர்கள் அனுப்பும் அந்நிய செலவாணி மட்டும் இந்திய அரசுக்கு வேண்டும். ஆனால் அவர்கள் என்ன ஆனால் என்ன என்ற மனோ பாவம் வருத்தமளிக்கிறது..............மனதுக்கு கஷ்டமாக இருக்கும் இந்த விஷயங்கள், இந்தியா அரசாங்கத்துக்கு மட்டும் வெறும் செய்தியாக இருப்பது ஏனோ? இவ்வளவு கஷ்டப் படுகிறவர்கள், அரசியல் வாதிகளின் பிள்ளைகளாய் இருந்தால், நிலைமை வேறு; பிரச்சினைகளை அணுகும் விதமும் வேறு.

    ReplyDelete
  11. then what do you say for people molesting/raping foreign tourists,
    robbing and scamming?
    do those countries THREATEN India?
    so the basic problem is in India as Poonkundran said. Indians are cheated by Indians that is why all these are happening

    ReplyDelete
  12. வெளி நாடுகளில் இருக்கும் இந்திய தூதரகமா...

    என்னோட அனுபவத்தைச் சொல்றேன். இங்கு வந்தவுடன் ரிஜிஸ்ட்ரேஷன் செய்யலாம் என்றுப் போனேன். வாசலில் செக்யூரிட்டி கேட்டு கிட்டேயே நிக்க வச்சு, செக்யூரிட்டி கைல ஒரு சின்ன பேப்பரில் தூதரகத்தின் வெப் அட்ரஸ் எழுதி கொடுத்து ஆன் லைன்ல பண்ணனும், இங்க வரவேண்டிய அவசியமில்லை அப்படின்னு சொன்னாங்க. இதுதான் இவங்க லட்சணம்.

    இவங்க சுதந்திர தினம், குடியரசு தினம் எல்லாம் கொண்டாடுவாங்க. அழைப்பு எல்லாம் ஒரு சிலருக்கும், தூதரகத்தில் வேலை பார்க்கும் அலுவலர்கள், அவர்கள் குடும்பத்தினருக்கு மட்டும் தான். இன்று வரை ஒரு இன்விடேஷன் வந்தது கிடையாதுங்க.

    எங்க வீட்டுகாரரும் கச்சேரிக்கு போறார் அப்படின்னு சொல்வதில்லையா அது மாதிரித்தான் இந்திய தூதரகமும்.

    ReplyDelete
  13. Anonymous3:18:00 AM

    நிதின் கத்திக்குத்தால் இறந்துபோயிருக்கிறார். மோடிவ் இன்னும் தெரியவில்லை. ஆனால் ஒன்று நன்றாகத்தெரிகிறது. இந்திய மாணவர்கள் தாக்கப்படுவது அவர்கள் இரவு நேரங்களில் வெளியே தனியாக செல்லும்போது மட்டும்தான். அந்த நேரம்தான் Alcohol related incidents நிறைய நடக்கின்றன.

    ReplyDelete
  14. Anonymous9:43:00 AM

    உங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன்.

    http://chinnaammini.blogspot.com/2010/01/blog-post.html

    ReplyDelete
  15. நன்றி சித்ரா தங்கள் விடுமுறை நன்கு இருந்ததா?

    வெத்து வெட்டு: நன்றி தங்கள் கருத்துகளுக்கு

    ராகவன்: தங்கள் அனுபவம் பகிர்ந்தமைக்கு நன்றி

    சின்ன அம்மணி & சங்கவி : நன்றி.

    ReplyDelete
  16. இந்தியர்கள் மட்டுமின்றீ பல நாட்டவரும் இது போன்றா துன்பம்கலை அனுபவிக்கின்ரனர் இதை எல்லா நாடும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு விடயம்

    ReplyDelete
  17. அயல்நாட்டில் கொத்தடிமையாய் வாழ்வதை விட சொந்தநாட்டில் சிறைக் கைதியாக வாழ்வது எவ்வளவோ மேல் என்று டாய்லெட்டில் ஒழிந்து வந்தவர் கூறுகிறாரோ

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...