Wednesday, January 6, 2010

ஹவுஸ் பாசும் நானும் உயிர் தப்பிய கதை

ஒரு தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறார் சின்ன அம்மணி. சாலைகளில் நமக்கு கிடைத்த அனுபவங்கள் அதன் மூலம் கற்றவை இவை பற்றி பகிர...

5 வருடங்களுக்கு முன் தாம்பரத்தில் உள்ள மாமனார் வீட்டுக்கு சென்று விட்டு மோட்டார் பைக்கில் நான், ஹவுஸ் பாஸ் மற்றும் என் பெண் வந்து கொண்டிருந்தோம். ஏர் போர்ட் தாண்டி சிகப்பு சிக்னல் போட்டு விட்டனர். சிக்னலுக்கு சற்று முன் என்பதால் எங்கள் வண்டி சிக்னலை நோக்கி சென்று கொண்டிருந்தது. திடிரென பின்னாலிருந்து வந்து ஒரு பைக் எங்க வண்டியை மோதி தள்ளி விட்டு சிக்னலில் நிற்காமல் பறந்து விட்டது. வண்டியோடு நான் கீழே விழ மனைவியும் , குழந்தையும் தள்ளி போய் விழுந்தனர். சற்று தள்ளி நடை பதை மேடை. அதில் தலை பட்டிருந்தால் உடனே உயிர் போயிருக்கும். ஞாயிறு மாலை நேரம் என்பதால் பின்னால் பெரும் வாகனங்கள் வரா வில்லை. இல்லா விடில் பஸ் போன்ற பெரும் வாகனங்கள் மேலே ஏறி இருக்கலாம்.

அப்படி என்ன அவசரம் அந்த பைக் மனிதருக்கு? என் பெண் அப்போது சிறியவள்.. அடுத்த சில நாள் அந்த பயம் அவளை ஆட்டியது.. இந்த விஷயத்தில் என் மேல் உள்ள தவறு எனில் கணவன், மனைவி, சிறு குழந்தை என மூவராக போனது தான்..

எனக்கு தெரிந்த ஒரு புரோகிதர் எப்போதும் பைக்கில் செல்வார். ஜாதகம், கடவுள் என பல விஷயங்கள் ஆக பேசுவார். அவரிடம் ஓர் முறை வண்டிகளில் செல்லும் போது நிகழும் விபத்துகள் பற்றி கேட்ட போது அவர் எப்படி சொன்னார்:

" நாம பார்த்து ஜாக்கிரதையா போகணும்; நாம வேகமாவோ, தப்பாவோ வண்டி ஓட்ட கூடாது. அது மட்டும் தான் நம்ம கையில்.. மத்த ஏதும் நம்ம கையில் இல்லை"

உண்மை தான் !!

********

குறிப்பாய் நாங்கள் வாழும் சென்னை போன்ற நகரங்களில் ரோட் சென்ஸ் மிக குறைவு. உதாரணத்துக்கு சில :

• எதிர் திசையில் (wrong side ) மிக வேகமாய் டூ வீலர் அல்லது ஆட்டோ வரும்.
• மழை பெய்தால் மனிதர்கள் நடு ரோட்டில் நடக்க ஆரம்பித்து விடுவார்கள்..
• குழந்தைகள் பள்ளிக்கு ஏற்றி செல்லும் ஆட்டோக்கள் ஓவர் crowded ஆக இருக்கும்
• அரசியல்வாதிகள் கார்களுக்காய் பல மணி நேரம் நடு ரோட்டில் நிற்க நேரும்!

இத்தனையும் இருந்தாலும் வண்ண நிலவன் ஒரு கவிதையில் சொன்னாரே

இந்த உலகை
நான் பெரிதும் நேசிக்கிறேன்
அதன் அழகோடும்
குரூரத்தோடும்


என.. அவ்வாறே நானும் சென்னையை அதன் அழகோடும் குரூரத்தோடும் நேசிக்கிறேன்..

*********
நானும் ஹவுஸ் பாசும் சேர்ந்து தான் கார் ஓட்ட கற்று கொண்டோம். சென்ற கம்பெனியில் கார் இருந்தால் அதனால் ஒரு Tax benefit இருந்தது. அதற்காக நண்பன் தந்தையின் பழைய மாருதி வாங்கி கற்று கொண்டோம். ஒரு முறை வெளியே சென்று விட்டு இரவு திரும்பும் போது ஆள் அரவமற்ற சாலையில் வண்டி பழுதாகி விட்டது. நானோ வண்டி ஓட்டுவதில் அப்போது கற்று குட்டி. அன்று இரவு வீடு வந்து சேருவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது. அதன் பின் காரை எடுக்கவே இல்லை. பின் வேறு ஓர் நண்பனுக்கு காரை தந்து விட்டேன். இப்போது நாங்கள் மூவர் சென்றாலோ, guests வந்தாலோ வீட்டுக்கு அருகிலிருக்கும் வாடகை கார் எடுக்கிறோம். இது எனக்கு மிக சௌகரியமாக இருக்கிறது. Travel-ஐ முழுதாக என்ஜாய் செய்ய முடிகிறது. பார்கிங் தொந்தரவு, maintenance செலவுகள் இல்லை. நான் கார் ஓட்டாததால் சென்னையில் இரண்டு கால் மற்றும் நான்கு கால் ஜீவன்கள் பலர் தப்பித்தனர் :))


*********

என் அனுபவத்தில் தெரிந்த சில சாலை பாது காப்பு டிப்ஸ்:

1 . வேகமாக வண்டி ஓட்டுவதை நாம் தவிர்க்க வேண்டும். மெதுவாக வண்டி ஒட்டுவதால் விபத்து நடக்க வாய்ப்பு குறைவு. மேலும் அவ்வாறு நடந்தாலும் அதன் impact சற்று குறைவாக இருக்கும்.

2. செல் போன் பேசியவாறு எக்காரணம் கொண்டும் வண்டி ஓட்ட வேண்டாம். மனம் ஒரு நேரத்தில் ஒன்று தான் யோசிக்கும். ரெண்டு சிந்தனைகள் வர முடியாது. மறு முனையில் இருப்பவருக்கு நீங்கள் வண்டி ஓட்டுவது தெரியாது. நீங்கள் சொன்னால் தான் தெரியும். ஒன்று அந்த call எடுக்காமல் இருக்க வேண்டும் அல்லது எடுத்தவுடன் வண்டி ஓட்டுவதை சொல்லி பின் பேசுவதாக சொல்ல வேண்டும்.

3. நெடுந்தூர பயணங்களில் டிரைவர் வைத்து செல்தல் நல்லது. முக்கியமாக இரவில் நீங்களே டிரைவ் செய்வதை தவிர்க்கவும் (நண்பர் ஈரோடு கதிர் குடும்பத்துடன் சமீபத்தில் இவ்வாறு அவதிப்பட்டதை எழுதி இருந்தார். முடிந்தால் வாசிக்க)

4. குழந்தைகள் முன் புறம் அமர்ந்து வண்டி ஓட்டுபவருக்கு தொந்தரவாக பேசாமல் பார்த்து கொள்ளுதல் நலம்.

5 . குழந்தைகள் ஜன்னல் ஓரம் அமர்ந்தால் டோர் (door ) நன்றாக சாத்த பட்டுள்ளதா என பார்க்கவும். சில வருடங்களுக்கு முன் ஒரு சிறு குழந்தை door சரியே மூடாமல் விழுந்து இறந்து போனது.

6. முடியும் பொழுது ரயில் மற்றும் பஸ்சில் செல்லலாம். சாதாரண மனிதர்களை நாம் பார்க்க இது ஒரு நல்ல வாய்ப்பும் கூட.

பொதுவாக கவனமான driving மிக முக்கியம். ஒரு நிமிடத்தில், சில நேரங்களில் ஒரு நொடியில் வாழ்க்கை மாறி போகலாம். முடிவுக்கும் வரலாம். You might have already heard this: “It is better to be late than Late Mr.”

உங்களுக்கு ஏதும் வேறு பாய்ண்டுகள் தோன்றினால் பின்னூட்டத்தில் பகிருங்கள்..

Be safe.. There is a family waiting for you at home!!

24 comments:

  1. நல்ல பகிர்வு நண்பரே...:)

    ReplyDelete
  2. "வேகமாக வண்டி ஓட்டுவதை நாம் தவிர்க்க வேண்டும். மெதுவாக வண்டி ஒட்டுவதால் விபத்து நடக்க வாய்ப்பு குறைவு. மேலும் அவ்வாறு நடந்தாலும் அதன் impact சற்று குறைவாக இருக்கும்".


    Dear Sri.Mohan sir,
    Rightly sais. Very True.
    I am a new blogger, http://madhavan73.blogspot.com & share ur opinions on my posts. thanks.

    ReplyDelete
  3. //நெடுந்தூர பயணங்களில் டிரைவர் வைத்து செல்தல் நல்லது//

    சரியா சொன்னிங்க அண்ணே...

    ReplyDelete
  4. நிறைய நல்ல விஷயங்களை சொல்லிருக்கீங்க.


    கார் கதவுல child lock இருந்தா கண்டிப்பா போடணும்.

    சீட் பெல்ட் போடணும்.

    ரோடு சென்ஸ் ஹைதராபாத்துடன் ஒப்பிட்டால் சென்னை மேல். (சே..தலைவரோட அறிக்கையை படிச்சு..படிச்சு..இந்த மாதிரி தான் தோணுது.)

    ReplyDelete
  5. பாதுகாப்பு டிப்ஸ் தேவையானதுதான். ஓட்டுனர்கள், தங்கள் கவனத்தை - மனதை- சாலைகளின் மேல் வைக்காமல், தங்கள் பிரச்சனைகள் மேல் வைத்த படி ஓட்டுவதாலும் விபத்துக்கள் நிறைய நடக்கின்றன.

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. /மோட்டார் பைக்கில் நான், ஹவுஸ் பாஸ் மற்றும் என் பெண் வந்து கொண்டிருந்தோம்//.

    As you know the motor bike is for 2 people only........

    ReplyDelete
  8. //நான் கார் ஓட்டாததால் சென்னையில் இரண்டு கால் மற்றும் நான்கு கால் ஜீவன்கள் பலர் தப்பித்தனர் :))//

    ஹஹாஹா.. சூப்பர் மோகன்குமார்.

    உங்க நேர்மைய பாராட்டுறேன்.

    ஹவுஸ் பாஸ்னு சொன்னத்துக்கும் சேர்த்து..

    ReplyDelete
  9. Anonymous3:11:00 AM

    //அவ்வாறே நானும் சென்னையை அதன் அழகோடும் குரூரத்தோடும் நேசிக்கிறேன்.. //

    போக்குவரத்தைப்பொறுத்தவரை கோவையை விட சென்னை கொஞ்சம் பயம்தான் எனக்கு. சென்னையில் பஸ்ஸில் தோழியோடு போய் போதும்போதுமென்றாகி விட்டது.

    தொடர்ந்ததற்கு நன்றிகள் பல மோகன்

    ReplyDelete
  10. மோகன் சென்னை எவ்வளவோ மேல். தில்லி வந்து பாருங்கள். "டிராபிக் சென்ஸ்" என்றால் "கிலோ என்ன விலை?" என்று கேட்பார்கள் இங்கு உள்ளவர்கள்.

    வெங்கட் நாகராஜ்
    புது தில்லி

    ReplyDelete
  11. அவசியமான எச்சரிக்கைகள்.உங்கள் ஹவுஸ் பாஸுக்கு நீங்கள் அவர்களைப் பற்றி எழுதுவது தெரியுமா?அனுமதி வாங்கி விட்டீர்களா?

    ReplyDelete
  12. நன்றி பலா பட்டறை. போட்டோவில் ஹீரோ மாதிரி இருக்கீங்க நண்பா.நடிக்கும் ஐடியா இருக்கா?

    மேடி: நன்றி. வாசித்தேன். பின்னூட்டமும் இட்டு விட்டேன்.

    ஜெட் லி: நன்றி. தொடர்ந்து வாசித்து கமெண்ட் தருவதற்கு

    பின்னோக்கி: ரொம்ப சரி; சீட் பெல்ட்/ ஹெல்மட் மிக அவசியமே

    ReplyDelete
  13. சித்ரா: மிக சரி நீங்க சொன்னது. பல முறை வண்டி ஓட்டும் போது சொந்த பிரச்னையை நினைச்சுட்டு ஓட்டுறோம்

    அனானி: சரி தான் நண்பா நீங்க சொன்னது. இப்போது முடிந்த வரை தவிர்க்கிறேன். அப்போது பெண் மிக சிறியவள்

    சுசி: நன்றி. நீங்க பழைய இடுகைகள் படிச்சதில்லைன்னு நினைக்கிறேன். அவங்களை எப்பவும் ஹவுஸ் பாஸ்ன்னு தான் சொல்லுவேன். ஹவுஸ் பாஸ்ன்னு லேபில் கூட இருக்கு பாருங்க

    ReplyDelete
  14. சின்ன அம்மணி: என்னை நினைவு வச்சு எழுத சொன்னதுக்கு நான் தான் நன்றி சொல்லணும்.

    வெங்கட் : டில்லி இன்னும் மோசமா? டில்லி Airport வரை மட்டுமே வந்துள்ளேன் .. City உள்ளே வந்ததில்லை

    வித்யா: நன்றி

    அட அப்துல்லா அண்ணே வாங்க வாங்க

    ReplyDelete
  15. ஷண்முகப்ரியன் சார் : நிஜமாவே ரொம்ப சந்தோசம் நீங்க எனது எழுத்தை படிப்பதும் பின்னூட்டம் எழுதுவதும். ஒருவர் வாழும் ஆலயம் என்ற தங்கள் அற்புத படத்தை நான் பார்த்தது இன்னும் நினைவில் இருக்கு (வந்து 20 வருடங்கள் இருக்குமா சார்?)நல்ல கதை சார் அது . பாடல்கள் அற்புதம்.

    ஹவுஸ் பாஸ் ப்ளாக் படிப்பதில்லை. அவ்வபோது எழுதியதை சொல்வேன். ..அனைத்தையும் அல்ல :)) நன்றிகள் மீண்டும்..

    ReplyDelete
  16. ந‌ல்ல‌ ப‌திவு. எல்லாமே ஓகே சார், இது ஒன்றைத் த‌விர‌

    //மழை பெய்தால் மனிதர்கள் நடு ரோட்டில் நடக்க ஆரம்பித்து விடுவார்கள்//

    ரோட்டோர‌த்தில் தேங்கியிருக்கும் த‌ண்ணியும், சேறும்தான் அவ‌ர்க‌ளை ந‌டுரோட்டில் ந‌ட‌க்க‌வைக்கிற‌து. த‌வ‌று அவ‌ர்க‌ள் மேல் அல்ல‌. ம‌ழைக்கால‌த்தில், "ஆய்வு செய்தார்" என்று போட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டுபோவ‌துட‌ன் அமைச்ச‌ர்க‌ளின் க‌ட‌மை முடிந்துவிடுகிற‌து. இதுபோன்ற‌ பிர‌ச்னைக‌ளை ச‌ந்திக்காத‌ அமைச்ச‌ர்க‌ள் இருக்கும்வ‌ரை, எல்லோரும் ந‌டுரோட்டில்தான் ந‌ட‌க்க‌ வேண்டியிருக்கும்

    ReplyDelete
  17. குறிப்பாக பெரும் வாகன மற்றும் வாடகை கார் ஓட்டுனர்களுக்கு டிரைவிங் சென்ஸ் மற்றும் லேன் டிசிபிளின் பற்றி கற்று கொடுக்க வேண்டும்.

    இபோதெல்லாம் நல்ல சாலைகள் (Highways) இருந்தும் பயமில்லாமல் ஓட்ட முடியாமைக்கு இவர்களின் தொல்லை ஒரு காரணம்.

    ReplyDelete
  18. நல்ல டிப்ஸ் மோகன்.

    ReplyDelete
  19. அருமையா எழுதி கலக்கியிருக்கீங்க... பதிவையும், நடந்து போறவங்க வயித்தையும்!!
    நானும் இது பற்றி எழுதியிருக்கேன்.. ஆனா, உங்க அளவுக்கு இல்லிங்கண்ணா..

    ReplyDelete
  20. குறும்பன்: ரைட்டு. நடப்பதை தான் சொன்னேன் நண்பா குறையாய் இல்லை

    ஆதி மனிதன்: நன்றி நீங்கள் சொல்வது சரி தான்; பல விபத்துகளுக்கு இவர்கள் காரணமாகின்றனர்.

    நன்றி விக்கி. அவ்வபோதாவது நம்ம பக்கம் எட்டி பாருங்க

    நன்றி கலை தங்களின் பதிவும் பார்த்தேன். ஜனவரி 7 உடன் சாலை பாது காப்பு வாரம் முடிவதால் நான் யாரையும் அழைக்கலை

    ReplyDelete
  21. பயனுள்ள டிப்ஸ் மோகன் சார்.

    ReplyDelete
  22. சரியாகச் சொன்னீர்கள். பூட்டி வைத்திருக்கும்
    கார் நம்மை ங்கே..என்று பார்க்கும்போது
    மனதை சங்கடம் செய்கிறது. சிட்டி ட்ராபிக்கை
    பார்க்கும்போது கார் எடுக்கவே பயமாக உள்ளது. மொத்தத்தில், புலி வாலைப் பிடித்த
    கதை தான்!

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...