Wednesday, February 8, 2012

வானவில் - 75; பதிவுகள் :300 !

மனதை வருத்திய மரணம் - 1

பதிவர் ராஜேஷ் (மாய உலகம்) இளம் வயதில் மரணம் அடைந்தது மிகவருத்தம் தந்தது. என்ன ஆனது, எப்படி இறந்தார் என்கிற தகவல் இது வரை எனக்கு புரிய வில்லை. இவர் மறைவை ஒட்டி, நேற்று துக்க தினமாக அனுசரித்து ஏராளமான பதிவர்கள் பதிவுகளை வெளியிடாமல் இருந்தனர். இந்த தகவல் சரியாக சென்று சேராததாலோ என்னவோ, ஒரு சிலர் பதிவுகள் வெளியிட்டாலும், பெரும்பான்மை பதிவர்கள் நேற்று பதிவு வெளியிடாமல் இருந்தது நெகிழ்வாக இருந்தது.


மனதை வருத்திய மரணம் - 2

 என் பெண்ணின் வகுப்பு தோழியின் தந்தை இந்த வாரம் இறந்து விட்டார்.நாற்பத்தைந்து வயது தான் இருக்கும். மாசிவ் ஹார்ட் அட்டாக் ! துக்கத்துக்கு சென்ற போது கேள்விப்பட்ட சில விஷயங்கள் மனதை சங்கடபடுத்தியது. அவருக்கு உயர் ரத்த அழுத்தம் இருந்திருக்கிறது. அதற்கு எந்த மருந்தும் உட்கொள்ள வில்லை. டாக்டரிடம் செல்வதென்றாலே அவர் ஒத்துக்கொள்ள மாட்டாராம்.

குறிப்பிட்ட தினத்தன்று இரவு இடதுகை வலி என்று கூறியிருக்கிறார். சில நாட்களுக்கு முன் அந்த கையில் அடி பட்டிருக்க, அதனால் தான் வலி என தைலம் தேய்த்துள்ளனர். "தரையில் படுக்க முடியலை" என சொல்லியிருகிறார் பின் பெட்டில் படுத்த பின் நிறைய வேர்த்து கொட்டியிருக்கிறது. டாக்டரிடம் செல்லலாம் என்றால் அவர் ஒத்து கொள்ள வில்லை. மிக வற்புறுத்தி அழைத்து செல்ல, வழியிலேயே உயிர் பிரிந்து விட்டது. + 1 மற்றும் 8th படிக்கும் இரு குழந்தைகளையும், ஹவுஸ் வைப் ஆன மனைவியையும் விட்டு விட்டு போய் விட்டார் !

இதனை விதி என்று சொல்வதை மனம் ஏற்க மறுக்கிறது. உடல்நலன் மேல் உரிய அக்கறை காட்டாதது தான் இந்த மரணத்துக்கு காரணம் !

ரத்த அழுத்தத்துக்கு உரிய மருந்து சாப்பிட்டு தொடர்ந்து மருத்துவர் ஆலோசனை பெற்றிருந்தால் இந்த உயிர் சேதம் ஏற்பட்டிருக்காது !

நம் உடலுக்கு சின்ன பிரச்சனை என்றாலும் டாக்டரிடம் காண்பித்து உரிய சிகிச்சை எடுப்பது எவ்வளவு முக்கியம் ! இதனை நாம் ஒவ்வொருவரும் உணர வேண்டும் !

மறைந்த இருவருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள் ! அவர்தம் குடும்பத்தார் இதிலிருந்து மீண்டு வரும் வலிமையை இறைவன் அளிக்கட்டும் !

ரேஷன் கடையில் ஒரு அனுபவம்

நாங்கள் ரேஷன் கார்டு வைத்திருப்பது அது ஒரு அடையாள அட்டை என்கிற காரணத்துக்காக தான். அதில் பொருட்கள் அவ்வப்போது வாங்கா விடில்- அட்டை invalid ஆகிவிடும் என்பதால் மூன்று மாதத்துக்கொரு முறை சர்க்கரை மட்டும் வாங்குவோம். இப்போது இந்த வருடத்துக்கு ரேஷன் அட்டை புதுப்பிக்கும் பணி நடக்கிறது. அதற்காக சென்றபோது " நீங்கள் ரெண்டு மாசமா ஏதும் வாங்கலை; அதனால் உங்களுக்கு renew பண்ண முடியாது; உங்க கார்ட் invalid-என அரசுக்கு சொல்லிட்டோம் " என்றனர்.

" அதெப்படி முடியும்? கடந்த பத்து வருஷமாக 2,3 மாதத்துக்கு ஒரு முறை தான் வாங்கி வருகிறேன். நீங்க தரும் நாலரை கிலோ சர்க்கரையை மாசா மாசம் வாங்கி நான் என்ன செய்வது?" என சற்று வாக்குவாதம் செய்ததும் உடன் ரேஷன் கார்ட் renew-செய்து தந்தனர். (அப்படினா என் கார்ட் invalid-என அரசுக்கு தகவல் அனுப்பியதா சொன்னது பொய் !) அப்புறம் சொல்றாங்க " நீங்க மாசா மாசம் வராட்டி கூட பரவாயில்லை; வர மாட்டோம்னு எங்க கிட்டே சொல்லிடுங்க" அட ! நாம முன்னாடியே சொல்லிட்டா அந்த பொருளை மத்தவங்களுக்கு வெளி மார்கெட்டில் வித்துடலாம் பாருங்க !

ஒரு அடையாள அட்டையாக ரேஷன் கார்டை வைத்து கொள்ள இப்படி போராட வேண்டியிருக்கு ! நீங்க இதுவரை ரேஷன் கார்ட் புதுப்பிக்காட்டி, உடன் செஞ்சுடுங்க !

வானவில் - 75 ! பதிவுகள் :300 !


நண்பர்களே, இது எனது 300-வது பதிவு. இதையொட்டி மிக சின்ன பிளாஷ்பாக்.

2008-ல் ப்ளாக் துவக்கினாலும் அப்போதெல்லாம் ஓரிரு மாதங்களுக்கு ஒரு பதிவு எழுதி விட்டு, எனது நண்பர்களுக்கு மெயில் மூலம் தகவல் தருவதோடு சரி. திரட்டிகள் பற்றி நவம்பர் 2009-ல் தான் தெரிய வந்தது. Follower gadget இணைத்தது, தமிழ் மணம் மற்றும் இன்ட்லியில் இணைத்தது எல்லாமே நவம்பர் 2009-ல் தான் ! என்னை பொறுத்த வரை நவம்பர் 2009- ஐ தான் ப்ளாக் உலகிற்கு வந்த நேரமாக கருதுகிறேன். (அதற்கு முன் எழுதியவை 12 பதிவுகளே !) இந்த இரண்டரை வருடத்தில் 300 பதிவுகள் என்பது வேகமான ஒன்றல்ல. மிதமான வேகத்தில் தான் செல்கிறது பதிவுலக பயணம்.

கடந்த சில மாதங்களாக வீடு திரும்பலில் பதிவுகள் நிறையவே வெளியானாலும் இணையத்தில் உலவும் நேரத்தை முடிந்த அளவு
குறைத்துள்ளேன். நெருங்கிய நண்பர்கள் பதிவுகள் வாசிக்க , தேவைப்படும் போது பின்னூட்டம் இட தவறுவதில்லை. ஆயினும் முன்பை விட இணையத்தில்  செலவிடும் நேரம் நிச்சயம் குறைத்தாயிற்று.
வானவில்லுக்கு இது 75-ஆவது பதிவு !! இதுவரை 300-பதிவுகள் எழுதியது ஆச்சரியமாக இல்லை. ஆனால் வானவில் 75 பதிவுகள் என்பது ஆச்சரியமாக தான் உள்ளது. இனி எத்தனையாவது வானவில் என்கிற எண்ணுடன் ( 76 / 77 என ) பிரசுரிக்க எண்ணம். இந்த வாரம் முதல் வானவில் வாரா வாரம் புதன் கிழமையில் வெளியாகும் !

தொடர்ந்து உங்கள் ஆதரவை வழங்குங்கள் !

சென்னை குறித்த பாடல் 

சென்னை குறித்தே ஒரு அழகான பாடல் !  நல்ல வரிகள் மற்றும் ரசிக்க வைக்கும் pictuarization ! சசிகுமார், விமல், ஸ்னேஹா ஆகியோர் வருகிற சில இடங்கள் எனக்கு மிக பிடித்தது. நா. முத்து குமார் பாடல் வரிகளில் நிறையவே ரசிக்கும் படி இருந்தது. இதுவரை பார்த்திராவிடில் பார்த்து மகிழுங்கள்.
போட்டோ கார்னர்

பக்கத்து வீட்டில் வளரும் நாய் "மில்க்கி" ! செம பயந்தாங்கொல்லி !! பயத்தாலேயே யாரை பார்த்தாலும் கன்னா பின்னாவென்று குலைக்கும். இங்கு சாதுவாக சேர் மேல் தாடை வைத்தவாறு உட்கார்ந்திருக்கிறது.


Zoom செய்து எடுத்த போட்டோ இது ! கிட்டே போனால் பயத்தில் கத்தி கொண்டு எழுந்திருக்கும். இந்த போஸ் கிடைத்திருக்காது !

Mrs.அய்யாசாமியும் மொபைல் போனும்
Mrs.அய்யாசாமி ஒரு நாள் அலுவலகத்திலிருந்து பதட்டமாக போன் செய்து தன் மொபைல் தொலைந்து போய் விட்டது என்றார். அய்யாசாமி எப்படி இதற்கு ரீ-ஆக்ட் செய்வது என்று புரியாமல் " தேடி பாரு கிடைக்கும்" என்றார். " எல்லா இடமும் தேடியாச்சு. டீ குடிக்க போனேன். நீங்க போன் பண்ணுவீங்கன்னு தான் எடுத்துட்டு போனேன்; காணா போச்சு; எல்லாம் உங்களால தான் !" என்றார் தடாலடியாக !

" கவலை படாதே. வீட்டுலே வந்து தேடி பார். இருக்கும்" என்றார்.. கம்பியூட்டரிலிருந்து கண்ணை எடுக்காமல் ! " டீ குடிக்க எடுத்துட்டு போனேன். காணா போச்சுங்கரேன்; வீட்டுல வந்து தேடி பாக்க சொல்றீங்க; உங்க கிட்டே போய் சொன்னேன் பாருங்க " என அடி பலமாக விழவே, அத்தோடு பேச்சு முடிந்தது. வீட்டுக்கு போனபின்னும் இந்த வாக்குவாதம் (!!) தொடர , " நாளை காலை ஆபீஸ்போகும் முன்னே ஒரு புது போன் வாங்கி இவளை அசத்திடனும்" என முடிவெடுத்தார் அய்யாசாமி. அப்படியே மறுநாள் புது போனும் வாங்கி விட்டார்.

அலுவலகம் வந்தவுடன் அவருக்கு போன். " என்னங்க என் போன் கிடைச்சிடுச்சு !" " எப்புடி?"

" அட்மினில் டீ கார பையங்க, அட்டெண்டர் இவங்களை எல்லாம் கூட்டி வச்சு பேசிருக்காங்க. அந்த அம்மாவோட வீட்டுக்காரர் " பயங்கரமான" வக்கீல். போலிசை கூட்டிட்டு வந்துடுவார். ஒழுங்கா எடுத்தவங்க அதே இடத்தில் வச்சிடுங்க" அப்படின்னு பயமுருதிறுக்காங்க. அதான் எடுத்த ஆள் போனை வச்சிட்டான். நீங்க வக்கீல் படிச்சதுக்கும் எதோ கொஞ்சம் யூஸ் இருக்கு " என்று சொல்ல,

கையிலிருந்த புது போனையே பார்த்தவாறு "இதை வாங்கினதுக்கு சாயந்திரம் என்னென்ன திட்டு விழுமோ !" என பயந்து நடுங்கி கொண்டிருந்தார் " படு பயங்கர" வக்கீலான அய்யாசாமி!

45 comments:

 1. வாவ். 300க்கும் 75க்கும் வாழ்த்துகள்...

  சுவாரஸ்யமான எழுத்து உங்களுடையது. தொடர்ந்து பயணியுங்கள்...

  ReplyDelete
 2. /மறைந்த இருவருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள் ! அவர்தம் குடும்பத்தார் இதிலிருந்து மீண்டு வரும் வலிமையை இறைவன் அளிக்கட்டும் !/

  எனது பிரார்த்தனைகளும்.

  வானவில்லுக்கும் முன்னூறுக்கும் நல்வாழ்த்துகள்! தொடருங்கள்!

  ReplyDelete
 3. 300க்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. ....300 .........இனி 300000000 .........infinitive ஆக வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. //பதிவர் ராஜேஷ் (மாய உலகம்) இளம் வயதில் மரணம் அடைந்தது//
  மிகவும் அதிர்ச்சியான சம்பவம். என்ன நேர்ந்தது - விபத்தா, உடல்நல்க்குறைவா?


  //வகுப்பு தோழியின் தந்தை... டாக்டரிடம் செல்வதென்றாலே அவர் ஒத்துக்கொள்ள மாட்டாராம். //

  என் வாப்பா தனக்குச் சின்னதாக எதுவும் உடல்நலக்குறைவு என்றாலும் உடனே டாக்டரிடம் ஓடுகிற டைப். முன்பெல்லாம் எனக்கும், என் அம்மாவுக்கும் எரிச்சலாக வரும். ’ஒண்ணுமில்லாததுக்கெல்லாம் டாக்டடர்ட்ட போய் நேரத்தையும், காசையும் வேஸ்ட் பண்ணனுமா? ஊருல உள்ள டாக்டர்லாம் பிழைக்கீறதே உங்களை வச்சுத்தான்’ என்று கிண்டல் பண்ணுவோம். ஆனால், நாளாக, நாளாக, இதுபோல சம்பவங்களைப் கேள்விப்படும்போதுதான் வாப்பா செய்வதுதான் சரி என்று புரிய ஆரம்பித்தது. தன் உடம்பைப் பொறுப்பாகக் கவனிப்பதை அவரே சரியாகச் செய்வதால்தான் நாங்கள் நிம்மதியாக இருக்க முடிகிறது.

  ReplyDelete
 6. 300க்கும் 75க்கும் வாழ்த்துக்கள் அண்ணா...

  சென்னை பாடல் சூப்பர்....

  ReplyDelete
 7. //மூன்று மாதத்துக்கொரு முறை சர்க்கரை மட்டும் வாங்குவோம்.//

  ஏங்க இப்படி? ரேஷனில் வரும் சில பொருட்கள் (மட்டுமாவது) தரமாகத்தானே இருக்கின்றன? அவற்றை வாங்கலாமே? என் அம்மா ரேஷன் கோதுமையில்தான் கோதுமை மாவு அரைப்பார். அரிசியும் எப்போதாவது ஒருசமயம் பழுதில்லை என்பார். (தரம் பொறுத்து இட்லிக்கு அல்லது புட்டு மாவுக்குப் பயன்படுத்துவதுண்டு)

  அட்லீஸ்ட் வாங்கி அருகில் உள்ள இயலாதவர்களுக்காவது கொடுக்கலாமே?

  ReplyDelete
 8. //நீங்க போன் பண்ணுவீங்கன்னு தான் எடுத்துட்டு போனேன்; காணா போச்சு; எல்லாம் உங்களால தான் !"//
  //நீங்க வக்கீல் படிச்சதுக்கும் எதோ கொஞ்சம் யூஸ் இருக்கு//

  ஐ லைக் இட், மிஸஸ். அய்யாசாமி!! கீப் இட் அப்!! ;-)))

  /கையிலிருந்த புது போனையே பார்த்தவாறு ... பயந்து நடுங்கி கொண்டிருந்தார் " படு பயங்கர" வக்கீலான அய்யாசாமி!//

  ப்ளீஸ், கண்டிப்பா நீங்க இந்த கார்னரை புக்காப் போடணும்; அத வாங்கி நான் என்னவர்கிட்ட கொடுக்கணும். அவர் அத வாசிச்சுட்டு ”I am not alone in this world"னு ஆறுதல்படுத்திக்கணும்!!

  ReplyDelete
 9. 300 - 3000ஆக வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 10. இருவரின் மரணம் மனதை மிகவும் பாதித்துவிட்டது.

  *****************

  75/300 நான்கில் ஒன்று வானவில்.
  வீடுதிரும்பலின் கதாநாயகன் வானவில்தான். வாழ்த்துகள்!

  **************

  //ரேஷன் கடையில் ஒரு அனுபவம்//

  ஹுஸைனம்மா யோசனையைப் பின் பற்றலாம் அல்லது பொருள் வேண்டாம் என்று எழுதிக் கொடுத்துவிடலாம்.

  **************

  //அந்த அம்மாவோட வீட்டுக்காரர் " பயங்கரமான" வக்கீல்.//

  வக்கிலோட அப்பாவுக்கும் எல்லோரும் இப்படித்தான் பயப்படுறாங்க:-)))))!

  ReplyDelete
 11. வாழ்த்துகள்.

  ReplyDelete
 12. 300 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் பாஸ்

  ReplyDelete
 13. 300க்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 14. 300க்கும் 75க்கும் வாழ்த்துகள் சார்....
  மேலும் இது போல் நல்ல படைப்புக்களை தந்து எங்களை மகிழ்விக்க வேண்டும்...

  ReplyDelete
 15. // உடல்நலன் மேல் உரிய அக்கறை காட்டாதது தான் இந்த மரணத்துக்கு காரணம்//

  பரிதாபப்படுவதா கோபப்படுவதா என்றே தெரியவில்லை :(

  //அட்லீஸ்ட் வாங்கி அருகில் உள்ள இயலாதவர்களுக்காவது கொடுக்கலாமே?//

  வழிமொழிகிறேன்.

  வானவில் 75 - வாழ்த்துகள் மோகன்.

  அய்யாசாமி - அந்த மொபைல் வாங்கின விஷயத்தை சொல்லாம இருந்தீங்கன்னா, அப்படியே வெச்சுக்கோங்க. ஏதாவது ஒரு ஸ்பெஷலான தினத்தில், பரிசு கொடுத்து அசத்த வசதியாயிருக்கும். ஆனா, ஏற்கனவே சொல்லிருப்பீங்கன்னு தோணுது :))

  ReplyDelete
 16. 75க்கும்,300க்கும் வாழ்த்துக்கள்..

  இன்றைய வானவிலலில் முதலில் குறிப்பிட்டுள்ள மரணங்கள் ம்னதுக்கு மிகுந்த துயரை கொடுக்கிறது. என்னுடைய அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.ராஜேஷின் மரணம் இன்னும் நம்ப முடியாமல் இருக்கு.

  ரேஷன் கடை பொருட்களை ஹுஸைனம்மா அவர்கள் சொன்ன மாதிரி வேறு யாருக்காவது கொடுத்தால் நல்லது.

  அப்பறம் அய்யாசாமி அந்த போனை என்ன பண்ணினார்?

  ReplyDelete
 17. வித்யா said...

  சுவாரஸ்யமான எழுத்து உங்களுடையது. தொடர்ந்து பயணியுங்கள்...

  **

  தங்கள் வார்த்தைகள் நிஜமாகவே மகிழ்ச்சி தருகிறது ! நன்றி !

  ReplyDelete
 18. ராமலக்ஷ்மி said...

  வானவில்லுக்கும் முன்னூறுக்கும் நல்வாழ்த்துகள்! தொடருங்கள்!

  **

  நன்றி ராமலட்சுமி மேடம் !

  ReplyDelete
 19. புதுகைத் தென்றல் said...

  300க்கு வாழ்த்துக்கள்.

  ****

  நன்றி புதுகை தென்றல் மேடம் !

  ReplyDelete
 20. கோவை நேரம் said...

  ....300 .........இனி 300000000 .........infinitive ஆக வாழ்த்துக்கள்

  **
  வாழ்த்துக்கு நன்றி கோவை நேரம் !

  ReplyDelete
 21. சங்கவி said...


  300க்கும் 75க்கும் வாழ்த்துக்கள் அண்ணா...

  சென்னை பாடல் சூப்பர்....

  **

  மகிழ்ச்சி நன்றி சங்கவி

  ReplyDelete
 22. ஹுசைனம்மா: உங்கள் வாப்பா பற்றி நீங்கள் சொன்னது சரியே ! என் அப்பா கூட தன் உடலை நன்கு பார்த்து கொள்வார். எந்த பிரச்சனை என்றாலும் உடனே பார்த்து சரி செய்வார். அதனால் தான் 80-வயதிலும் நலமுடன் உள்ளார்


  ஹுசைனம்மா said.


  ஐ லைக் இட், மிஸஸ். அய்யாசாமி!! கீப் இட் அப்!! ;-))) //


  க்கும் ! இப்படி என்கரேஜ் பண்ணா நாங்க என்ன ஆவது? :)) உங்க கமன்ட் நிச்சயம் மிஸஸ். அய்யாசாமி படிப்பாங்க !

  ***

  அய்யாசாமி special புக்கு போடுங்கன்னு ரொம்ப சொல்றீங்களேன்னு பார்த்தா, அதை உங்க வீட்டு காரரிடம் காட்ட தானா? ரைட்டு ! பார்க்கலாம். நடந்தால் மகிழ்ச்சி தான். ஆனால் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கு !

  உங்கள் விரிவான கமன்ட் வழக்கம் போல் மகிழ்ச்சியும் நிறைவும் தந்தது !

  ReplyDelete
 23. இந்திரா said...

  300 - 3000ஆக வாழ்த்துக்கள்..

  **

  நன்றி இந்திரா மேடம் !

  ReplyDelete
 24. அமைதி அப்பா: ரேஷன் மேட்டர்: எனக்கு அங்கு கடைக்கு போய் கியூவில் நிற்பது பெரும் அலர்ஜி. மேலும் எங்களிடம் உள்ளது சர்க்கரை கார்ட் என்பதால் சர்க்கரை மட்டும் தான் வாங்க முடியும். அரிசி வாங்க முடியாது. கோதுமை வாங்கினோம். ஹவுஸ் பாசுக்கு பிடிக்கலை. சில நேரம் சர்க்கரை வாங்கி வீட்டில் வேலை செய்போருக்கு தருவதும் உண்டு.


  //வக்கிலோட அப்பாவுக்கும் எல்லோரும் இப்படித்தான் பயப்படுறாங்க:-)))))! //


  அப்படியா ? மிக ரசித்தேன் :))

  ReplyDelete
 25. சங்கர் நாராயண் @ Cable Sankar said...

  வாழ்த்துகள்.

  ***
  நன்றி தல !

  ReplyDelete
 26. K.s.s.Rajh said...
  300 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் பாஸ்

  ***

  நன்றி ராஜா !

  ReplyDelete
 27. சமுத்ரா said...
  300க்கு வாழ்த்துக்கள்
  ****
  மிக்க நன்றி மதிப்பிற்குரிய சமுத்ரா !

  ReplyDelete
 28. கோவை2தில்லி said...

  300க்கும் 75க்கும் வாழ்த்துகள் சார்....
  மேலும் இது போல் நல்ல படைப்புக்களை தந்து எங்களை மகிழ்விக்க வேண்டும்...

  **

  தங்கள் வாழ்த்துக்கு மிக நன்றி மேடம் !

  ReplyDelete
 29. RAMVI said...


  //அப்பறம் அய்யாசாமி அந்த போனை என்ன பண்ணினார்?//


  ரகு said


  //அய்யாசாமி - அந்த மொபைல் வாங்கின விஷயத்தை சொல்லாம இருந்தீங்கன்னா, அப்படியே வெச்சுக்கோங்க. ஏதாவது ஒரு ஸ்பெஷலான தினத்தில், பரிசு கொடுத்து அசத்த வசதியாயிருக்கும். ஆனா, ஏற்கனவே சொல்லிருப்பீங்கன்னு தோணுது :))


  ***

  ராம்வி மேடம். ரகு ஒரு முறை தான் அய்யா சாமியை நேரில்
  பார்த்திருக்கார். அதிலேயே அவரை பத்தி சரியா கண்டு பிடிச்சுட்டார்.

  (ரகு: நீங்க அய்யா சாமி கூட இருந்த போது ஹவுஸ் பாசிடமிருந்து ஏதும் போன் வந்து பம்மினாரா என்ன?)

  இதெல்லாம் ஹவுஸ் பாஸிடம் அப்போதே சொல்லி " வாங்கி கட்டி " கொண்டால் தான் அவருக்கு நிம்மதி ! சொல்ல போனால் போனை வைக்கும் முன்பே சொல்லிட்டார் ! சுவாரஸ்யத்துக்காக பதிவில் அதற்கு முன்பே நிறுத்திட்டேன் !


  நன்றி ராம்வி ! நன்றி ரகு !

  ReplyDelete
 30. // நண்பர்களே, இது எனது 300-வது பதிவு. இதையொட்டி மிக சின்ன பிளாஷ்பாக்.

  2008-ல் ப்ளாக் துவக்கினாலும் அப்போதெல்லாம் ஓரிரு மாதங்களுக்கு ஒரு பதிவு எழுதி விட்டு,
  எனது நண்பர்களுக்கு மெயில் மூலம் தகவல் தருவதோடு சரி.//

  நண்பரே வீடு திரும்பல் ஒரு சின்ன பிளாஷ்பாக்.......
  2011 இல் கிரிக்கட் மூலம் அறிமுகமானாலும் அப்போதேல்லாம் ஒரிரு பதிவுகள் படித்து ரசித்து விடுவதோடு சரி.

  //Follower gadget இணைத்தது, தமிழ் மணம் மற்றும் இன்ட்லியில் இணைத்தது எல்லாமே நவம்பர் 2009-ல் தான் !
  என்னை பொறுத்த வரை நவம்பர் 2009- ஐ தான் ப்ளாக் உலகிற்கு வந்த நேரமாக கருதுகிறேன்.//

  பின்னூட்டம் இட ஆரப்மித்தது எல்லாம் செப்டம்பருக்கு பின்தான் எனவே என்னை பொறுத்த வரை செப்டம்பர்தான் வீடு திரும்பலுக்கு வந்த நேரமாக கருதுகிறேன்.

  இந்த இரண்டரை வருடத்தில் 300 பதிவுகள் என்பது வேகமான ஒன்றல்ல. மிதமான வேகத்தில் தான் செல்கிறது பதிவுலக பயணம்.

  //It is the quality of our work which will please God and not the quantity.
  Mahatma Gandhi//

  jokeச் apart......
  வாசகர்களை மதிக்கும் உங்கள் பண்பு (பின்னூட்டங்களுக்கு பதில் அளிப்பது - நானறிந்த இன்னுருவர் உண்மைதமிழன்) என்றென்றும் தொடரட்டும். சிலவேளைகளில்
  சில பதிவர்களின் பதிவுகளில் பின்னூட்டமாக எதாவது சந்தேகம் கேட்டுவிட்டு பதிலுக்காக காத்திருந்து காத்திருந்து காத்திருந்து காத்திருந்து ...............
  சிலவேளைகளில் அபபடிப்பட்ட பின்னூட்டங்களுக்கு தனி மெயிலில் நீங்கள் பதில் அளித்துள்ளீர்கள்,மேலும் எனக்கு எதிலாவது சந்தேகம் வந்தால் மின்னஞ்சல் அனுப்பும் முதல் நபராக நீங்கள் உள்ளீர்கள். நீங்களும் உடன் பதில் அனுப்புகின்றீர்கள், நன்றி.

  300க்கு வாழ்த்துக்கள்.... தொடரட்டும் உங்கள் பணி.....

  ReplyDelete
 31. வானவில் - 75; பதிவுகள் - 300! வாழ்த்துகள் மோகன்.....

  மரணம் - 2 - இம்சித்தது... நிறைய பேர் தன் உடல்நிலை குறித்துக் கவலைப்படுவதே இல்லை - என்னையும் சேர்த்து....

  சென்னைப் பாடல்.... இப்போது அடிக்கடி போடுகிறார்கள் தொலைக்காட்சியில்.... நன்றாகத்தான் இருக்கிறது.

  அலைபேசியும் அய்யாசாமியும் - நன்றாகத்தான் இருக்கிறது - கொஞ்சம் அவசரப் பட்டு விட்டாரோ அய்யாசாமி... :))))

  ReplyDelete
 32. Anonymous2:41:00 AM

  300 அடித்ததற்கு வாழ்த்துகள். விரைவில் 100 வது பதிவு போடவும்.

  ReplyDelete
 33. மறைந்த இருவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். மருத்துவம் எவ்வளவோ முன்னேறியிருக்கிறது. சிலர் இப்படித் தான் இருக்கிறார்கள்.
  300வது பதிவிற்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 34. முன்னூறுக்கும் 75ற்கும் இனிய வாழ்த்துக்கள்!!

  சக பதிவரின் மரணமும் நண்பரின் மறைவும் வருத்தம் கொடுத்தது. அதிலும் இரண்டாவதில் நடந்த உடல்நலத்தைப்பற்றிய அலட்சியமும் கவனமின்மையும் தொடர்ச்சியாக நிறைய குடும்பங்களில் நடக்கிறது. கடைசி நிமிடத்தில் அவர்கள் துடிக்கும் துடிப்பும் கண்ணீரும் மனதைப்பிசைகிற அதே நேரத்தில் கோபமும் மனதினுள் எழாமலில்லை.

  ReplyDelete
 35. 300 மற்றும் வானவில் 75 இரண்டுக்கும் என இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 36. /மறைந்த இருவருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள் ! அவர்தம் குடும்பத்தார் இதிலிருந்து மீண்டு வரும் வலிமையை இறைவன் அளிக்கட்டும்/

  என்னுடைய பிரார்த்தனைகளும்

  வானவில் - 75
  பதிவுகள் - 300

  ம்ம்ம்ம். வாழ்த்துக்கள்

  ReplyDelete
 37. வாசகன்: பதிவின் வரிகளை எடுத்து அதே Style பின்னூட்டம் எழுதியதை ரசித்தேன். தங்கள் கனிவான வார்த்தைகளுக்கு நன்றி

  ReplyDelete
 38. வெங்கட்: நன்றி ஏன் உடல் நிலையில் நீங்கள் அக்கறை எடுப்பதில்லை என்கிறீர்கள் ? Take care of your health Friend !

  ReplyDelete
 39. ***
  சிவகுமார் ! said...

  300 அடித்ததற்கு வாழ்த்துகள். விரைவில் 100 வது பதிவு போடவும்.

  **

  நன்றிங்கண்ணா !

  ReplyDelete
 40. Rathnavel Natarajan said...

  மறைந்த இருவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். மருத்துவம் எவ்வளவோ முன்னேறியிருக்கிறது. சிலர் இப்படித் தான் இருக்கிறார்கள்.
  300வது பதிவிற்கு வாழ்த்துகள்.

  **

  நன்றி ஐயா !

  ReplyDelete
 41. மனோ சாமிநாதன் said...


  முன்னூறுக்கும் 75ற்கும் இனிய வாழ்த்துக்கள்!!
  **

  நன்றி மனோ மேடம்

  ReplyDelete
 42. கணேஷ் said...


  300 மற்றும் வானவில் 75 இரண்டுக்கும் என இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.
  ***

  மகிழ்ச்சி நன்றி கணேஷ்

  ReplyDelete
 43. வரதராஜலு .பூ said...
  வானவில் - 75
  பதிவுகள் - 300

  ம்ம்ம்ம். வாழ்த்துக்கள்

  **

  ப்ளாக் துவங்கிய பொழுது நிறைய ஊக்குவித்தவர்களுள் நீங்களும் ஒருவர். தங்கள் வாழ்த்துக்கு நன்றி மகிழ்ச்சி !

  ReplyDelete
 44. வணக்கம் மோகன்குமார் அவர்களுக்கு அது நான் 9ம் தேதி போட்ட பதிவு வலைசரத்தில் இருந்ததால் ஒரு வாரம் பதிவிடவில்லை சில சமயம் தேதி இவ்வாறு காட்டுகிறது இது என்ன பிரச்சனையென்று தெரியவில்லை நீங்கள் தவறாக நினைக்க வேண்டாம் நன்றி!

  ReplyDelete
 45. மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் சார் !

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...