Friday, February 24, 2012

முப்பொழுதும் உன் கற்பனைகள் -விமர்சனம்


முப்பொழுதும் உன் கற்பனைகள்- " பாக்காதீங்க; பாக்காதீங்க"ன்னு அனைத்து பதிவர்களும் கதறிய போதும் பார்த்தேன்.


கதை :  ஹீரோயினுடன் கற்பனையில் குடும்பம் நடத்துகிறார் ஹீரோ. அதை உண்மையாக்க சொல்கிறார் ஒரு டாக்டர். அப்படி நடிக்க ஆரம்பித்து ஹீரோவை பிடித்து போய், அவரையே கரம் பிடிக்கிறார் ஹீரோயின். (இந்த பட கதையை இவ்வளவு எளிதாய் சொன்னது எனக்கே ஆச்சரியமா இருக்கு !)

நல்ல விஷயங்கள் 

அதர்வா நடிப்பு மிக இயல்பா இருக்கு; ஜீவா மாதிரி நடிக்கிறதே தெரியாத வகையில் உள்ளது இவர் நடிப்பு. நல்ல பாத்திரங்கள் கிடைத்தால் தமிழில் ஒரு நல்ல நடிகராக வலம் வருவார்.

GV பிரகாஷின் பாடல்கள் மூன்று மிக இதமாய் ரசிக்கும் படி இருந்தது. இவ்வளவு சின்ன வயசில் GV. பிரகாஷின் திறமை வியக்க வைக்கிறது. பாடல்கள் பல இனிமை எனினும் பின்னணி இசையில் நிச்சயம் improvement தேவை ! படத்தில் பாடல் வரும் இடங்கள் தான் கொஞ்சமும் ஒட்டாமல், மக்களை கேண்டின் போக வைக்குது .

அமலா பால் உடல் ஒல்லியாக இருந்தாலும் கன்னம் உப்பலாக இருப்பது ரசிக்கும் படி உள்ளது. (ஹவுஸ் பாஸ் இதை படிப்பாரா? ஓ காட் !)

படத்தில் சந்தானம் ஆங்காங்கே வரும் காட்சிகள் + வசனம் மட்டும் தான் துருத்தி கொண்டு தெரிகிறது மற்றபடி அனாவசிய காட்சிகள் இன்றி கதையை ஒட்டியே படம் நகர்கிறது.

இத்தகைய " காதல் கொண்டேன்" டைப் கதை நிச்சயம் சோகமாய் தான் முடியும் என நினைத்தால், பாசிடிவ் ஆக, மகிழ்ச்சியாக முடித்தது ஆச்சரியம் !

சந்தானம் " நேத்து பெய்த மழையில் இன்னிக்கு முளைச்ச சாப்ட்வேர் மக்களே " என அழைக்கிறார். சந்தானம் சொல்வதால் பொறுத்து கொள்கிறார்கள் என நினைக்கிறேன்.
***
இனி சொதப்பல்கள் லிஸ்ட் :

அதர்வா ஆபிஸ் வந்ததுமே உடன் வேலை செய்யும் ஒரு பெண் அவரிடம் " நீ கிஸ் குடு; அப்ப தான் நீ சொன்ன வேலை செய்வேன்" என்கிறார். நானும் பல ஆபிசில் வேலை பார்த்துட்டேன். என் நண்பர்கள் மூலம் நிறைய கதை கேட்டுருக்கேன். இப்படி ஒரு சீன் கேட்டதே இல்லீங்க. பொண்ணுங்களை இப்படியா அவமான படுத்தனும்?

த்ரில்லர் படம் என்று சொல்கிறார்கள் ! ஆனால் படம் மிக மெதுவ்வ்வ்வாய் நகர்கிறது.

அதர்வா அம்மா குறித்த கதை மிக மிக நீளம். அதர்வா அம்மாவை "ஒட்டுண்ணி போல் சார்ந்திருந்தார்" என சொல்ல, இவ்ளோ நீட்டி முழக்கணுமா?

அமலா பால் சில காட்சிகளில் மிக அழகு; சில காட்சிகளில் சகிக்கலை. ஏன் இப்படி என்று தெரியலை.

இன்னும் எத்தனை தமிழ் படங்களில் தான் கல்யாணம் நிச்சயம் ஆன ஹீரோயின், நிச்சயம் செய்த மாப்பிள்ளையை விட்டுட்டு ஹீரோவை மணப்பார்னு தெரியலை . ஹும்

சந்தானம் காமெடி பெரிய லெட் டவுன். சிரிப்பே வரலை

அதர்வா பத்தி டாக்டர் ஒரு டயலாக் சொல்றார் பாருங்க: " நீ அவன் கூட இருக்கிறது தாயோட கர்ப்ப பையில் இருக்கிறதை விட பாது காப்பானது " !!இவரு டாக்டரா இல்லை அங்கிளா? (அங்கிளை தமிழில் சொன்னால் அசிங்கமா இருக்கும்!) முடியல !

கொலை குறித்த காட்சிகள் அனைத்திலும் லாஜிக் மீறல்கள் சொல்லி கிட்டே போகலாம். இயக்குனர் பெரிய அளவில் சொதப்பிய காட்சிகள் இவை .

***
மொத்தத்தில்:

அதர்வா, அமலா பால், சந்தானம் இசை அமைப்பாளர் GV பிரகாஷ் என நல்ல டீம் இருந்தும், தயாரிப்பாளர் Aggressive மார்கெட்டிங் செய்தும், திரைக்கதை சொதப்பலால், படம் தோற்று விடுகிறது !

பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் அதர்வா & இயக்குனர் எல்ராட்குமார் !

15 comments:

 1. படம் பார்க்கலாமா? வேண்டாமா?

  ReplyDelete
 2. ராம்வி: நீங்க ஒருத்தராவது நம்மை மதிச்சு கமன்ட் போட்டீங்களே அதனால் உண்மையை சொல்றேன்: படம் டிவியில் போடும் போது பார்த்தால் போதும் ! செலவு பண்ணி தியேட்டரில் பார்க்கும் அளவு வொர்த் இல்லை !

  ReplyDelete
 3. //அதர்வா பத்தி டாக்டர் ஒரு டயலாக் சொல்றார் பாருங்க: " நீ அவன் கூட இருக்கிறது தாயோட கர்ப்ப பையில் இருக்கிறதை விட பாது காப்பானது " !!இவரு டாக்டரா இல்லை அங்கிளா? (அங்கிளை தமிழில் சொன்னால் அசிங்கமா இருக்கும்!) முடியல !//

  செம ஃபார்ம்ல இருக்கீங்க :))

  ReplyDelete
 4. hihihihi

  hahahahahaha

  hohohohoho

  same blood

  ReplyDelete
 5. அருமையான ஒழுக்கமான மென்மையாக கண்டிக்கும் விமர்சனம்...

  இனிப்பு தடவி கசப்பு மருந்தைக் கொடுத்திருக்கீங்க

  ReplyDelete
 6. //அமலா பால் உடல் ஒல்லியாக இருந்தாலும் கன்னம் உப்பலாக இருப்பது ரசிக்கும் படி உள்ளது. (ஹவுஸ் பாஸ் இதை படிப்பாரா? ஓ காட் !)// எழுதிய பிறகு எதற்கு இந்த பயம்! :)))

  மொத்தமாய் சொதப்பி இருக்காங்க போல.... தலைப்பைப் பார்த்தவுடன் இரண்டு படங்களின் விமர்சனம் என நினைத்தேன் [முப்பொழுதும் உன் கற்பனைகள் + காதலில் சொதப்புவது எப்படி?]....

  ReplyDelete
 7. டிவில பார்க்கிற அளவுக்கு கூட ஒர்த் இல்லைன்னு நண்பன் சொன்னான். வசமா மாட்டிக்கிட்டீங்களா:)))))

  ReplyDelete
 8. நன்றி ரகு :))

  ReplyDelete
 9. கார்க்கி : நன்றி

  ReplyDelete
 10. ஒரு வாசகன் said...
  அருமையான ஒழுக்கமான மென்மையாக கண்டிக்கும் விமர்சனம்...

  **
  நன்றி வாசகன்

  ReplyDelete
 11. வெங்கட் நாகராஜ் said...
  தலைப்பைப் பார்த்தவுடன் இரண்டு படங்களின் விமர்சனம் என நினைத்தேன் [முப்பொழுதும் உன் கற்பனைகள் + காதலில் சொதப்புவது எப்படி?....

  **
  ஆம் வெங்கட் மக்களை உள்ளே வர வைக்க என்னென்ன எல்லாம் செய்ய வேண்டி இருக்கு !!

  ReplyDelete
 12. வித்யா said...
  டிவில பார்க்கிற அளவுக்கு கூட ஒர்த் இல்லைன்னு நண்பன் சொன்னான். வசமா மாட்டிக்கிட்டீங்களா:)))))

  **

  ரொம்ப போர் அடிக்கும் ஞாயிறு மாலை டிவியில் போட்டா பார்க்கலாம். அவ்ளோ தான் !

  ReplyDelete
 13. சம்பத்குமார் said...
  உங்களை பல்சுவை பதிவர்கள் என வலைசரத்தில் பெருமைப்படுத்தியுள்ளேன்

  ***
  மகிழ்ச்சியும் நன்றியும் சம்பத் குமார் !

  ReplyDelete
 14. திண்டுக்கல் தனபாலன் said...
  அசத்தல் பகிர்வு !

  **

  நன்றி தனபாலன் சார்

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...