Monday, February 20, 2012

சுஜாதாவின் விரும்பி சொன்ன பொய்கள்

விரும்பி சொன்ன பொய்கள் - என்ன அழகான தலைப்பு ! பொய்மையும் வாய்மையிடத்த என்கிற மாதிரி இருக்கிறது இந்த தலைப்பு. சுஜாதாவின் க்ரைம் த்ரில்லர் இந்த நாவல்.

கதை

ராதாகிருஷ்ணன் என்பவன் மதுரைக்கு வரும் தன் முதலாளி மனைவியை வரவேற்க விமான நிலையத்தில் காத்திருக்கிறான். சுருக்கமாக அவன் பிளாஸ் பேக் விரிகிறது. இதற்கு முன் சர்க்கஸில் வேலை பார்த்து தான் காதலித்த பெண் மீது வேண்டுமென்றே அம்பு எய்து காயப்படுத்தியதால் ஜெயிலுக்கு போய் திரும்பியவன். அவனது பழைய கதை தெரிந்து யாரும் வேலை தராத போது இந்த நிறுவனத்தில் தான் வேலை கிடைக்கிறது.

"மதுரை வரும் தன் மனைவியை பார்த்து கொள்" என சொல்கிறார் முதலாளி. வரும் மனைவியோ புயல் மாதிரி இருக்கிறாள். அலை பாயும் மனம் கொண்ட அவளின் செயல்கள் புதிராய் இருக்கின்றன. அவள் செல்லும் இடமெல்லாம் கூட செல்ல வேண்டும் என்ற பாஸின் கட்டளையால் அப்படியே செய்கிறான் ராதாகிருஷ்ணன். ஒரு இரவில் தனிமையான பீச்சில் இருவருக்கும் உறவும் நடக்கிறது. இதன் பின் மறு நாள் அவள் சென்னை சென்று விடுகிறாள். ராதா கிருஷ்ணனோ அவள் நினைவாக பித்து பிடித்து அலைகிறான்

அவளை காண சென்னை செல்கிறான். சந்திக்கவும் செய்கிறான். சந்தித்த அன்று இரவே அவள் இறக்கிறாள். அது தற்கொலையா கொலையா என ஆராயும் போலிஸ் சொல்லும் கதை ராதா கிருஷ்ணனை மட்டுமல்ல நம்மையும் தூக்கி வாரி போடுகிறது.

ராதா கிருஷ்ணனை வந்து சந்தித்தது வேறு பெண். அவர் முதலாளி மனைவி அல்ல. ராதா கிருஷ்ணனின் past-ஐ வைத்து அவனை இந்த வலையில் விழ வைப்பதுடன் கொலை பழியும் வருகிற மாதிரி செய்தது அந்த முதலாளி தான் என்கிற ரீதியில் கேள்வி குறி மட்டும் எழுப்பி கதையை நிறைவு செய்கிறார்.

***
முடிவில் இறந்த பெண் அவர் மனைவி தானா இல்லையா? இந்த கேள்விக்கு ஆம் என்பதா இல்லை என்பதா என்று கேட்டு விட்டு, அதனை வாசகர்களே நீங்களே சொல்லுங்கள் என முடிக்கும் போது நமக்கு ஏமாற்றம் ஆகி விடுவது நிஜம்.

சர்க்கஸ் வாழ்க்கை பற்றி சுவாரஸ்யமாக முதல் சில பக்கங்களில் சொல்கிறார். ராதா கிருஷ்ணனின் ஜெயில் வாழ்க்கை பற்றி நீண்டு செல்லும் ஒரே வரியில் வலியை நமக்கு உணர வைப்பது டிபிகல் சுஜாதா !

கதையில் வரும் பாத்திரங்கள் பலவும் " கல்யாணம் பண்ணிக்காதே " என்கிறார்கள். (அவ்வப்போது சுஜாதாவின் பாத்திரங்கள் பிற கதைகளிலும் இந்த வரியை சொல்வதுண்டு")

சிவகங்கை அருகில் இரவு சென்று தங்கினார்கள் என கூறிவிட்டு பீச் சென்று குளிப்பதாக சொல்வது இடிக்கிறது. சிவகங்கை அருகே எங்கே பீச்?

முன்னுரையில் சுஜாதாவே " வாசகரிடம் முடிவை ஊகிக்க சொல்வது எனக்கு மிக பிடித்த உத்தி" என்கிறார்.ஆனால் இந்த கதையில் முடிவு தெரியாமல் நமக்கு சற்று என்னவோ போல் தான் உள்ளது !

விரும்பி சொன்ன பொய்கள் : Diehard Sujatha fans-க்கு மட்டும் பிடிக்கும்!

திண்ணை பிப்ரவரி 12, 2012  இதழில் வெளியான கட்டுரை

33 comments:

 1. நல்ல விமர்சனம் மோகன். திண்ணையில் வெளிவந்தமைக்கு வாழ்த்துகள்....

  ReplyDelete
 2. நன்று...

  வாழத்துக்கள்...

  ReplyDelete
 3. எனக்கு ரொம்ப பிடிக்கும்.

  ReplyDelete
 4. சுஜாதா கதையிலேயே ஒரு தப்பு கண்டு பிடித்துள்ளீர்களே...சபாஷ்.

  ReplyDelete
 5. I too felt disappointed with the climax .

  Good review !

  ReplyDelete
 6. விமர்சனம் நன்றாக இருக்கு.
  வாழ்த்துக்கள்.
  இன்னும் நாவல் படிக்கவில்லை.சீக்கிரம் படித்துவிடுகிறேன்.

  ReplyDelete
 7. படித்ததில்லை. அறிமுகத்துக்கு நன்றி. (உங்கள் விமர்சனம் சுவையாக இருக்கிறது.)

  ReplyDelete
 8. சுஜாதா எழுதியதில் 'ரொம்ப பிடித்த' லிஸ்ட்டில் இந்த கதையை என்னால் சேர்க்க முடியவில்லை. ஆனால் கதையின் ஃப்ளோவுக்காகவே ஒரு முறை வாசிக்கலாம்.

  ReplyDelete
 9. This comment has been removed by the author.

  ReplyDelete
 10. வெங்கட் நாகராஜ் said...

  நல்ல விமர்சனம் மோகன். திண்ணையில் வெளிவந்தமைக்கு வாழ்த்துகள்....
  **
  நன்றி வெங்கட்

  ReplyDelete
 11. செல்வராஜ் ஜெகதீசன் said...

  Nice Review.

  **
  நன்றி செல்வராஜ் அதிசயமாய் நம்ம ப்ளாக் பக்கம் வந்திருக்கீங்க !

  ReplyDelete
 12. கவிதை வீதி... // சௌந்தர் // said...

  நன்று...வாழத்துக்கள்...
  **
  அட ! வாங்க சௌந்தர். நன்றி !

  ReplyDelete
 13. RVS said...

  எனக்கு ரொம்ப பிடிக்கும்.
  **
  நீங்க Diehard சுஜாதா விசிறி என சொல்றீங்களா RVS ? ரைட்டு !

  ReplyDelete
 14. ஸ்ரீராம். said...


  சுஜாதா கதையிலேயே ஒரு தப்பு கண்டு பிடித்துள்ளீர்களே...சபாஷ்.

  **
  நன்றி ஸ்ரீராம். இதற்கு முன் எழுதிய விமர்சங்களில் கூட அவ்வப்போது சில தவறுகளை சுட்டியுள்ளேன்

  ReplyDelete
 15. umesh said...

  I too felt disappointed with the climax .
  **
  ஆம் உமேஷ். நன்றி

  ReplyDelete
 16. RAMVI said...

  விமர்சனம் நன்றாக இருக்கு.
  வாழ்த்துக்கள்.
  இன்னும் நாவல் படிக்கவில்லை.சீக்கிரம் படித்துவிடுகிறேன்.

  **
  படியுங்கள் ராம்வி. நன்றி

  ReplyDelete
 17. அப்பாதுரை said...

  படித்ததில்லை. அறிமுகத்துக்கு நன்றி. (உங்கள் விமர்சனம் சுவையாக இருக்கிறது.)

  **

  மகிழ்ச்சி அப்பாதுரை

  ReplyDelete
 18. ர‌கு said...


  சுஜாதா எழுதியதில் 'ரொம்ப பிடித்த' லிஸ்ட்டில் இந்த கதையை என்னால் சேர்க்க முடியவில்லை. ஆனால் கதையின் ஃப்ளோவுக்காகவே ஒரு முறை வாசிக்கலாம்.

  ***
  சரியா சொன்னீங்க ரகு நன்றி

  ReplyDelete
 19. தமிழ் மணம் சூடான இடுகையில் 3-ஆம் இடத்தில் இந்த இடுகை :

  வாசகர்களால் அதிகம் பார்வையிடப்பட்ட இடுகைகள்
  சூடான இடுகைகள் இன்று

  சிங்கிளாய் நின்று ஜெயித்த நாஞ்சில் சிங்கமே வருக !வருக!

  koodal bala


  ரியல் எஸ்டேட் / கன்ஸ்ட்ரக்சன் துறையினர் கவனத்துக்கு

  Senthazal Ravi


  சுஜாதாவின் விரும்பி சொன்ன பொய்கள்

  மோகன் குமார்

  ReplyDelete
 20. மதுரையில் ஏது பீச்ன்னு படிச்சுக்கிட்டே வந்து பார்த்தால்.......

  பொய் புலப்பட்டுருச்சு:-)

  ReplyDelete
 21. அம்மா எப்படி இருக்காங்க?

  ReplyDelete
 22. விமர்சனம் அருமை. பெரும்பாலும் வார இதழ்களில் தொடராக வந்த கதைகளை வாசித்திருக்கிறேன். இந்தக் கதை வாசித்ததில்லை.

  ReplyDelete
 23. ஆஹா செம ( சுஜாதா ரசிகன் )

  ReplyDelete
 24. எனக்கும் ஆவலுடன் படித்து விட்டு முடிவு தெரியாத போது ஒரு மாதிரியாகத் தான் இருந்தது.. நல்ல விமர்சனம். நானும் die hard சுஜாதா ஃபான் தான்.. 

  ReplyDelete
 25. nalla review but climax thaan disappointing

  ReplyDelete
 26. நல்ல விமர்சனம். திண்ணையில் வெளிவந்ததற்கு வாழ்த்துகள் சார்.

  ReplyDelete
 27. //துளசி கோபால் said...

  மதுரையில் ஏது பீச்ன்னு படிச்சுக்கிட்டே வந்து பார்த்தால்.......
  பொய் புலப்பட்டுருச்சு:-)

  **
  நன்றி துளசி மேடம்

  ReplyDelete
 28. ராமலக்ஷ்மி said...

  விமர்சனம் அருமை. பெரும்பாலும் வார இதழ்களில் தொடராக வந்த கதைகளை வாசித்திருக்கிறேன். இந்தக் கதை வாசித்ததில்லை.

  ***
  நன்றி ராமலட்சுமி

  ReplyDelete
 29. சி.பி.செந்தில்குமார் said...

  ஆஹா செம ( சுஜாதா ரசிகன் )

  ***

  நன்றி சிபி

  ReplyDelete
 30. ஷர்மி said...

  எனக்கும் ஆவலுடன் படித்து விட்டு முடிவு தெரியாத போது ஒரு மாதிரியாகத் தான் இருந்தது.. நல்ல விமர்சனம். நானும் die hard சுஜாதா ஃபான் தான்..

  ****
  ஆம் ஷர்மி; முடிவு disappointing தான்

  ReplyDelete
 31. rathinamuthu said...

  nalla review but climax thaan disappointing

  ****
  முதல் வருகைக்கு நன்றி இரத்தின முத்து சார். முடிவு பலருக்கும் பிடிக்காதது தெரிகிறது

  ReplyDelete
 32. கோவை2தில்லி said...
  நல்ல விமர்சனம். திண்ணையில் வெளிவந்ததற்கு வாழ்த்துகள் சார்.
  ****
  நன்றி கோவை டு தில்லி மேடம்

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...