Saturday, February 11, 2012

காஞ்சிபுரம் : பட்டுபுடவை நெய்யும் காட்சி படங்கள் & வீடியோ

நண்பர்களே சென்ற பதிவில் சொன்னது போல் இது காஞ்சிபுரம் குறித்த நிறைவு பகுதி அல்ல. மீதம் இருக்கும் கோயில்கள் மற்றும் பட்டு புடவை நெய்யும் காட்சிகள் ஒரே பதிவில் அடக்கினால், மிக மிக நீளமாக போவதால் இந்த பதிவை தவிர இன்னும் ஒரு பதிவு இருக்கும். நிச்சயம் அது நிறைவு பகுதியாக இருக்கும் !

பட்டுபுடவை நெய்யும் காட்சி   காணும் முன் புகழ் பெற்ற  இரு கோயில்களை குறித்து வாசித்து விடுவோம் !

***
பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் 15-க்கும் மேல் காஞ்சிபுரத்திலேயே உள்ளது !! அதில் முதன்மையான கோயிலில் ஒன்று உலகளந்த பெருமாள் கோயில் ! இந்த கோயிலுக்கு வந்தால் 108-ல் மூன்று பேரை தரிசித்து விடலாம் ..திருக்காரகம், திருநீரகம், திரு கார்வண்ண பெருமாள் என மூன்று பெருமாள்கள் இங்கு உள்ளனர்.

பள்ளியில் படித்த போதே கேள்வி பட்ட கதை தான்: ஒரு அரசன் மக்களை மிகுந்த கொடுமை படுத்த பெருமாள் துறவி வடிவில் வந்து யாகம் செய்கிறார். அரசன் பெருமாளிடம் வந்து " தங்களுக்கு என்ன வேண்டும்?" என கேட்க, "மூன்றடி நிலம் வேண்டும்.. யாகம் செய்ய " என்கிறார் பெருமாள். "" மூன்றடி தானே எடுத்து கொள்ளுங்கள்" என்று சொல்ல, பெருமாள் முதலடியில் உலகையும், அடுத்த அடியில் வானத்தையும் தாண்டி விட்டு, மூன்றாவது அடி எங்கு வைப்பது என கேட்க, அரசன் தன் தலையில் அந்த காலை வைக்குமாறு பணிகிறான். இந்த வரலாற்று சிறப்பு மிக்க கோயில் தான் இது !!

இந்த கதையை நினைவு படுத்தும் விதமாக பெருமாள் ஒரு காலில் நின்ற வண்ணம் இருக்கிறார். தரையில் ஊன்றிய காலின் கீழே அந்த அரசனின் தலை உள்ளது. ஒரு கால் அந்தரத்தில் நிற்கிறது. ஒரு கை விண்ணையும், மண்ணையும் தாண்டியதை குறிக்கும் வண்ணம் இரண்டு விரல்களை காட்டுகிறது. மற்றொரு கை ஒரு விரல் மட்டும் காண்பிக்கிறது.
மிக பெரும் உயரத்தில் இருக்கும் இந்த பெருமாளுக்கு தினம் அபிஷேகம் செய்ய மாட்டார்களாம். குறிப்பிட்ட ஒரு தைலம் தான் சிலை மீது பூசுவார்களாம். மேலே எந்த வஸ்திரமும் போடுவதில்லை.

இதே கோயிலில் திருக்குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகர் அர்ச்சகராக பணியாற்றி இருக்கிறார் என அங்கிருக்கும் சுவரில் எழுத பட்டிருக்கிறது.

ஒரு செட்டியார் குடும்பம் வசம் இந்த நிலம் இருந்ததாகவும் 1899 ஆம் ஆண்டில் அவர்கள் இதனை கோயில் நிர்வாகத்துக்கு தந்துள்ளார்கள் என்பதை அறிய முடிகிறது.

இவ்வளவு புகழ் பெற்ற ஸ்தலத்தில் இருக்கிறோம் என்கிற உணர்வே மனதை என்னவோ செய்தது.
 கோயிலின் உள்ளே உள்ள பிரகாரம்
எங்கே உள்ளது: இக்கோயில் காஞ்சிபுரம் பஸ் நிலையம் மற்றும் ரயில் நிலையத்துக்கு அருகிலேயே உள்ளது. இக்கோயிலுக்கு அடுத்த தெருவில் புகழ் பெற்ற காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயம், ஓரிரு நிமிடத்தில் நடந்து போகும் தொலைவில் உள்ளது

**********

அடுத்து சொல்ல போவது : வைகுண்ட பெருமாள் கோயில். மிக அற்புதமான சிற்ப வேலை பாடுகளுடன் கூடியது. அற்புதமான தோட்டம், புல்வெளி இங்கு மிக நன்றாக பராமரிக்க படுகிறது.

பொதுவாக கோயில் உள்ளே அல்லது வெளியே எங்காவது ஒரு இடத்தில் தான் புல்வெளி இருக்கும். இங்கு உள்ளே, வெளியே இரு இடத்திலும் புல்வெளி மிக அழகு
வெளியிலிருந்து கோயிலின் தோற்றம்

கொடி மரம் அருகிலிருந்து எடுத்த படம்

அருமையான சிற்ப வேலைகள் 
இந்த கோயில் எவ்வளவு பெரியது, இங்கு சிற்ப வேலைகள் எவ்வளவு அழகு என்பதை இந்த வீடியோவில் நீங்கள் பார்க்கலாம் 


கோயில் வெளி சுவரில் அமர்ந்திருக்கும் புறாக்கள் 

கோயிலுக்கு மிக அருகில் இருக்கும் தர்க்கா 
                                                    ****

பட்டு புடவை சமாசாரத்துக்கு வருவோம் !

காஞ்சிபுரத்தில் ஆட்டோவில் ஏறும் போதெல்லாம் ஆட்டோ ஓட்டுனர்கள் உங்களை பட்டு புடவை நெய்யும் இடத்துக்கும், கடைக்கும் கூட்டி செல்வதில் மிக ஆர்வமாய் இருப்பார்கள். " சார் இருபது ரூபா குடுங்க போதும்; கோயில் பாத்துட்டு புடவை கடைக்கு போகலாம்" என்கிறார்கள். கஸ்டமர் கொண்டு வந்தால் அவர்களுக்கு கமிஷன் உண்டு போலும் !! ஆனால் அவர்கள் கூட்டி செல்லும் கடைகளில் பட்டு நன்றாக இல்லை என்பது கவனத்துக்குரியது. தனியார் தறிகளுக்கு தான் அழைத்து போகிறார்கள். அரசாங்கம் நடத்தும் கடைகள் சில நம்பிக்கையானவை என தெரிந்தவர்கள் சொல்லியிருந்தார்கள். அங்கு கூட்டி செல்வதே இல்லை.

நாங்கள் ஒரு தனியார் கடையில் புடவை நெய்யும் விதத்தை பார்த்தோம் அங்கு எடுத்த படங்கள் இதோ :

நெய்து முடித்த புடவையை எப்படி மடிக்கிறார்கள் பாருங்கள். கையாலேயே மடித்து இரு கம்பிகள் இடையே புடவையை வைத்து நூல் போட்டு கட்டி விடுகிறார்கள்.


புடவை நெய்யும் விதத்தை நான் விவரிப்பதை விட இந்த வீடியோவில் நீங்களே பார்த்து மகிழலாம் !
இந்த வீடியோவும் பட்டு புடவை நெய்வது தான். அந்த பேனா மாதிரி சமாசாரத்தை (இதன் பெயர் "நாடா" ) போட்டு போட்டு எடுப்பதை மட்டும் முக்கியமாக எடுத்துள்ளேன் ********
தொடர்புடைய பதிவுகள் :


பகுதி 1: காஞ்சி பயணக்கட்டுரை மினி டிரைலர்


பகுதி 2 : காஞ்சி: ஏகாம்பரேஸ்வர் கோவிலும் ஒரு நல்ல துணிக்கடையும்

பகுதி 3 : காஞ்சி காமாட்சி அம்மனும், காஞ்சியில் தங்க நல்ல இடமும்


அடுத்த (நிறைவு) பகுதியில் :


வரதராஜ பெருமாள் கோவில்

புகழ் பெற்ற தங்க பல்லி மற்றும் வெள்ளி பல்லி

காஞ்சிபுரம் எளிதில் செல்வது எப்படி?

33 comments:

 1. //நண்பர்களே சென்ற பதிவில் சொன்னது போல் இது காஞ்சிபுரம் குறித்த நிறைவு பகுதி அல்ல. //

  மகிழ்ச்சி தொடருங்கள்...!

  ReplyDelete
 2. காஞ்சிபுரம் எளிதாகச் செல்வது எப்படி என்று தெரிந்து கொள்ள அடுத்த பகுதியை எதிர்பார்த்திருக்கிறேன்...

  காணொளியில் பார்த்த சிற்பங்களின் அழகு என்னையும் விரைவில் காஞ்சி செல்லும்படி அழைக்கிறது....

  ReplyDelete
 3. பதிவை படிக்கும் போது காஞ்சிபுரம் போய் வந்த திருப்தி...

  ReplyDelete
 4. நேரில் பார்த்த திருப்தி மிக்க நன்றி....!!!

  ReplyDelete
 5. இரண்டு கோயில்களுக்கும் சென்றிருக்கிறேன். சிவனுக்கும், பெருமாளுக்கும் எந்த பிரச்னையும் வரவேண்டாம் என்றெண்ணி முடிவெடுத்தார்களோ என்னமோ தெரியவில்லை :)...... கைலாசநாதர் கோயிலுக்கு அடுத்து, வைகுண்ட பெருமாள் கோயில்தான் இந்திய தொல்பொருள் ஆய்வு துறையின் பராமரிப்பில் இருக்கிறது.

  பேருந்து நிலையத்திலும் சில ப்ரோக்கர்கள் இருப்பார்கள்.

  நீங்கள் சொன்னது போல, கடந்த சில வருடங்களில் பட்டு சேலையின் தரம் குறைந்திருப்பது உண்மைதான். கடைகளில் எடுப்பதை விட சொசைட்டிகளில் எடுத்தால், காசுக்கேற்ற தர கிடைக்கும்.

  //அந்த பேனா மாதிரி சமாசாரத்தை போட்டு போட்டு எடுப்பதை மட்டும் முக்கியமாக எடுத்துள்ளேன்//

  அதன் பெயர் "நாடா"

  ReplyDelete
 6. நல்ல பகிர்வு. சிறு வயதில் திருக்கோவிலூரில் உலகளந்த பெருமாளை தரிசித்திருக்கிறேன்.

  அடுத்த பகுதிக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்....

  ReplyDelete
 7. காஞ்சிபுரம் கோவில்கள் பற்றிய தகவல்கள் சிறப்பு.

  காணொளிகள் அருமையாக இருக்கு.

  ReplyDelete
 8. காஞ்சிபுரம் எளிதாகச் செல்வது எப்படி என்று தெரிந்து கொள்ள அடுத்த பகுதியை எதிர்பார்த்திருக்கிறேன்...மகிழ்ச்சி தொடருங்கள்...!

  ReplyDelete
 9. நல்ல பதிவு.
  தேவையான விபரங்களைக் கொடுத்திருக்கிறீர்கள்.
  நன்றி.

  ReplyDelete
 10. அன்புள்ள மோகன் குமார்,

  உலகளந்த பெருமாளை நீங்கள் விவரித்த விதம் அருமை.

  ஒரு சிறிய திருத்தம்...
  >>மேலே எந்த அஸ்திரமும் போடுவதில்லை.
  மேலே எந்த வஸ்திரமும் போடவில்லை என்பது தானே சரியாக இருக்கும் ?

  ஒரு சிறிய சந்தேகம்...
  கோயில் வெளி சுவரில் அமர்ந்திருப்பவை குருவிகளா அல்லது புறாக்களா ?

  நிறைவுப் பகுதியை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்...

  ReplyDelete
 11. ஏழு வருஷம் நான் இருந்த ஊரின் கோவில்களைப் பற்றியும், சிறப்புகளைப் பற்றியும், அருமையான ஒரு தொகுப்பாக இருக்கிறது இந்த தொடர். பகிர்விற்கு நன்றி மோகன்.

  ReplyDelete
 12. தகவல்கள் படங்கள் வீடியோ என சிரத்தையுடன் தொகுத்த விதம் சிறப்பு. பிரகாரத்திலிருக்கும் சிற்பங்கள் யாவும் அருமை. கர்நாடகாவின் பெல்லூர், ஹலிபேடு சிற்பங்களை நினைவுபடுத்தின.

  நாடாவைப் இலாவகமாகப் போட்டுப் போட்டு எடுக்கிறார் தறி நெய்பவர்.

  ReplyDelete
 13. ஒரு முறை மட்டும் காஞ்சிவரம் சென்றுள்ளேன். அறியாத பல தகவல்களை தந்தமைக்கு நன்றி.

  ReplyDelete
 14. உங்களுக்கு ஒரு விருது காத்திருக்கிறது என் வலைப்பூவில்....

  http://kovai2delhi.blogspot.in/2012/02/blog-post.html

  ReplyDelete
 15. //"மேலே எந்த அஸ்திரமும் போடுவதில்லை"//

  அஸ்திரமா வஸ்திரமா? :))

  கோவில் பற்றிய விவரங்கள் பிரமாதம். குறிப்பாக வீடியோ பங்களிப்புகளைப் பாராட்ட வேண்டும். நல்ல ஐடியா. நெயவதையும் வீடியோ...

  அட...!

  ReplyDelete
 16. அமைதி அப்பா said...

  மகிழ்ச்சி தொடருங்கள்...!

  *****
  நன்றி அமைதி அப்பா.

  ReplyDelete
 17. வெங்கட் நாகராஜ் said...

  காணொளியில் பார்த்த சிற்பங்களின் அழகு என்னையும் விரைவில் காஞ்சி செல்லும்படி அழைக்கிறது....

  ***

  இயலும் போது செல்லுங்கள் வெங்கட்

  ReplyDelete
 18. சங்கவி said...

  பதிவை படிக்கும் போது காஞ்சிபுரம் போய் வந்த திருப்தி...

  ***
  நன்றி சங்கவி

  ReplyDelete
 19. MANO நாஞ்சில் மனோ said...

  நேரில் பார்த்த திருப்தி மிக்க நன்றி....!!!

  ***
  நன்றி மனோ ! மகிழ்ச்சி
  ***

  ReplyDelete
 20. விவரமான தகவல்களுக்கு மிக நன்றி ரகு !

  ReplyDelete
 21. கோவை2தில்லி said...

  நல்ல பகிர்வு.

  ***
  நன்றி மேடம் !

  ReplyDelete
 22. RAMVI said...


  காஞ்சிபுரம் கோவில்கள் பற்றிய தகவல்கள் சிறப்பு.

  காணொளிகள் அருமையாக இருக்கு.

  ***
  மகிழ்ச்சி ! நன்றி ராம்வி

  ReplyDelete
 23. மாலதி said...

  காஞ்சிபுரம் எளிதாகச் செல்வது எப்படி என்று தெரிந்து கொள்ள அடுத்த பகுதியை எதிர்பார்த்திருக்கிறேன்...மகிழ்ச்சி தொடருங்கள்...!

  **
  நன்றி; விரைவில் எழுதுகிறேன்

  ReplyDelete
 24. Rathnavel Natarajan said...

  நல்ல பதிவு.
  தேவையான விபரங்களைக் கொடுத்திருக்கிறீர்கள்.
  நன்றி.

  ***

  நன்றி ஐயா !

  ReplyDelete
 25. வித்யா said...


  ஏழு வருஷம் நான் இருந்த ஊரின் கோவில்களைப் பற்றியும், சிறப்புகளைப் பற்றியும், அருமையான ஒரு தொகுப்பாக இருக்கிறது இந்த தொடர். பகிர்விற்கு நன்றி மோகன்.

  **

  உங்கள் ஊர் குறித்த தொடர் மகிழ்ச்சி தந்தது அறிந்து நானும் மகிழ்கிறேன்

  ReplyDelete
 26. BalHanuman said...


  ஒரு சிறிய திருத்தம்...
  >>மேலே எந்த அஸ்திரமும் போடுவதில்லை.
  மேலே எந்த வஸ்திரமும் போடவில்லை என்பது தானே சரியாக இருக்கும் ?

  ஒரு சிறிய சந்தேகம்...
  கோயில் வெளி சுவரில் அமர்ந்திருப்பவை குருவிகளா அல்லது புறாக்களா ?
  **

  அது வஸ்திரம் தான். போலவே அந்த பறவைகள் புறாக்கள் தான் . நீங்கள் சொன்னது சரியே பாலஹனுமான் ! திருத்தி விடுகிறேன் ! நன்றி !

  ReplyDelete
 27. This comment has been removed by the author.

  ReplyDelete
 28. ! சிவகுமார் ! said...

  ஒரு முறை மட்டும் காஞ்சிவரம் சென்றுள்ளேன். அறியாத பல தகவல்களை தந்தமைக்கு நன்றி.

  **
  நன்றி சிவா !

  ReplyDelete
 29. ராமலக்ஷ்மி said...

  பிரகாரத்திலிருக்கும் சிற்பங்கள் யாவும் அருமை. கர்நாடகாவின் பெல்லூர், ஹலிபேடு சிற்பங்களை நினைவுபடுத்தின.
  ****
  நன்றி ராமலட்சுமி. நீங்கள் சொன்ன இடங்களை இதுவரை நான் பார்த்ததில்லை

  ReplyDelete
 30. கோவை2தில்லி said...

  உங்களுக்கு ஒரு விருது காத்திருக்கிறது என் வலைப்பூவில்....
  ****

  மிகுந்த மகிழ்ச்சி ! நெஞ்சார்ந்த நன்றி

  ReplyDelete
 31. ஸ்ரீராம். said...

  //"மேலே எந்த அஸ்திரமும் போடுவதில்லை"//

  அஸ்திரமா வஸ்திரமா? :))

  கோவில் பற்றிய விவரங்கள் பிரமாதம். குறிப்பாக வீடியோ பங்களிப்புகளைப் பாராட்ட வேண்டும். நல்ல ஐடியா.

  **

  நன்றி ஸ்ரீராம். வஸ்திரம் தான்.

  மகிழ்ச்சி

  ReplyDelete
 32. அருமை.

  காமாட்சியையும் ஏகாம்பரேசரையும் ஒருதடவை தர்சிக்கும் பாக்கியம் சில காலத்துக்கு முன் கிடைத்தது.

  ReplyDelete
 33. தறி நெய்யும் காட்சிகளாஇ ஆசைதீரப் பார்த்தேன். சிறு வயதில், என் ஊரில் நெசவுதான் தொழில் என்பதால், பெரும்பாலான வீடுகளில் தறி இருக்கும். எங்க வீட்டில் இல்லை என்பதால், இருக்கும் வீடுகளில் அதைப் போய் வேடிக்கை பார்ப்பேன். அந்த ஞாபகம்... :-)))))

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...