Monday, April 23, 2012

ஓகே ஓகே வெற்றி பெற்றது எப்படி ?


வாங்க சார் வாங்க ; இது ஒரு கல் ஒரு கண்ணாடி பட விமர்சனம் தான். ஆனா அப்புடி சொன்னா நீங்க பாட்டுக்கு போய் கிட்டே இருப்பீங்கன்னு தெரியும். அதான் ஏதோ பெரிய ஆராய்ச்சி பண்ணி கண்டு பிடிச்ச மாதிரி " ஓகே ஓகே வெற்றி பெற்றது எப்படி?"ன்னு தலைப்பு வச்சா, கப்புன்னு நீங்க சிக்கிடீங்க. சரி வந்தது வந்துட்டீங்க விமர்சனத்தை படிச்சுட்டு செய்ய வேண்டிய முறையை (பின்னூட்டம், ஓட்டு,etc ) செஞ்சுட்டு போங்க ஓகே?

தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லப்படாத கதைங்க. ஹீரோயினை பாத்தவுடன் ஹீரோவுக்கு லவ் வந்துடுது. அப்புறம் அவர் பின்னாடியே அலையிறார். ஹீரோவுக்கு ஒரு திக் பிரண்டு ! ஹீரோயின்,  ஹீரோ லவ்வை ஒத்துக்காம செமையா அலைய விடுறாரு. அப்புறம் லவ் பண்றாரு. திடீர்னு ரெண்டு பேருக்கும் சண்டை வந்துட, அப்பா பார்த்த மாப்பிள்ளையை கல்யாணம் பண்ண ஹீரோயின் ஒத்துக்கிறாரு . கட்டிக்க போறவன் கிட்டேயிருந்து ஹீரோ அவளை எப்படி அபேஸ் பண்ணார் அப்படிங்கறது தான் இது வரை சொல்ல படாத கதை !
*******
ஒரு படத்துக்கு கதை முக்கியமில்லை. ஹீரோ ஹீரோயின் அது கூட சுமாராவோ, கொடுமையாவோ இருந்தாலும் பரவாயில்லை. நல்ல திரைக்கதை, அட்டகாசமான காமெடி இவை இருந்தாலே மக்கள் மனம் விட்டு சிரித்து படத்தை ஓட வைத்து விடுவார்கள் எனபதற்கு இன்னொரு உதாரணம் ஓகே ஓகே.

ஹீரோ முதல் ஷாட்டில் தூக்கத்திலிருந்து எழுப்பப்படுகிறார். முதல் காட்சியில் சரி. அப்புறம் நிறைய காட்சியில் அப்படியே இருக்காரே ? ஏன் சார்? வித விதமான விலை உயர்ந்த கூலிங் கிளாஸ் போட்டு எப்போதும் கண்ணை மறைத்து கொள்கிறார் சத்யமில் டிக்கெட் கிழிக்கும் வேலை பார்க்கும் இந்த ஹீரோ. (தனது கண் சின்னதாய் இருக்கு என உதயநிதிக்கு ஏதும் காம்பிலக்சா தெரியவில்லை).


இந்த பாத்திரத்தில் ஜீவா அல்லது ஆர்யா (அதாவது இயக்குனர் ராஜேஷின் முதல் இரு பட ஹீரோக்கள்) நடித்திருந்தால் படம் இன்னும் ஹிட் ஆகியிருக்கும் என இதுவரை பல நண்பர்கள் சொல்லி விட்டனர். உண்மை தான். ஆனால் ஏறக்குறைய அதே மாதிரி பாத்திரத்தை மறுபடி அவர்கள் நடித்தால், backfire ஆக சான்ஸ் உண்டு. இந்த பாத்திரத்துக்கு எனது சாய்ஸ் கார்த்தி தான் ! சிறுத்தையில் சந்தானத்துடன் அடித்த லூட்டி போல இதில் இன்னொரு களத்தில் பின்னியிருப்பார்.

நிற்க. உதயநிதி அவ்வளவு மோசமாக நடிக்க வில்லை என்றும் சொல்ல தான் வேண்டும். விஜய் மற்றும் சூர்யா தங்கள் முதல் சில படங்களில் நடித்ததை விட நன்றாகவே நடித்துள்ளார். இன்னொரு விஷயம் இந்த படமே உதயநிதி ஹீரோ ஆக மட்டுமே எடுக்கப்பட்டது. இன்னொரு பெரிய ஹீரோ வைத்து எடுத்தால் இன்னும் சில கோடி அதிகம் கூட தயாரிப்பாளராக அவருக்கு கிடைத்திருக்கலாம். ஆனால் இங்கு முக்கியம் உதயநிதி அறிமுகம் தான். அது இப்போது ஒரு வெற்றி படத்தில் நிகழ்ந்து விட்டது. இனி ஆன்  ஸ்க்ரீனில் தன் தவறுகளை பார்த்து தெரிந்து கொண்டு மாற்றி கொண்டால் உதயநிதி நிச்சயம் ஒரு ரவுண்ட் வரலாம் (தொடர்ந்து நடிப்பதானால் அவர் உடனே டான்ஸ் கிளாஸ் போவது அவசியம். ஜிம்மில் செய்யும் எக்சர்சைஸ் மாதிரி கையை தூக்கி தூக்கி அவர் ஆடும் ஸ்டெப்சுக்கு தியேட்டர் செமையாக கை தட்டி சிரித்து மகிழ்கிறது !)

அடுத்து சந்தானம் ! "ஹாய் டூட்" என சந்தானம் குரல் தொலைபேசியில் ஒலிக்க துவங்குவது முதல் கடைசி காட்சி வரை சந்தானத்துக்கு கிடைக்கும் கை தட்டலையும் சிரிப்பொலியும் சமீபத்தில் எந்த படத்திலும் காண வில்லை. இந்த படம் இந்த அளவு ஓட இவரும் இயக்குனர் ராஜேஷும் தான் மிக முக்கிய காரணங்கள் ! இவருக்கு கிடைத்த டயலாக்ஸ், அதை அவர் பேசும் வாய்ஸ் மாடுலேஷன், அவரது முக பாவங்கள் என அவர் வரும் எந்த காட்சியிலும் நாங்கள் சிரிக்காமல் இருக்க வில்லை. நான் தான் இப்படி சிரிக்கிறேன் என நினைத்தால், மனைவியும் மகளும் முன் சீட்டில் விழுந்து எழுந்து சிரித்து கொண்டிருந்தனர். சான்சே இல்லை ! உள்ளத்தை அள்ளி தா படத்தில் கவுண்டர் அசத்தியது போல் இப்படத்தில் அசத்தியிருக்கிறார் சந்தானம் ( இந்த படமும் அந்த பட Genre தான் .. நோ கதை ஒன்லி காமெடி)

துவக்கத்தில் சந்தானம் வர போகிறார் என சொல்லிவிட்டு ரோடில் வரும் BMW காரை காட்டுகிறார்கள். அட சந்தானம் இதிலா வருகிறார் என நினைத்தால் சில நொடிகள் கழித்து அந்த BMW கார் ஸ்க்ரீனின் ஒரு புறமாக செல்ல, அதன் பின்னே வரும் சந்தானத்தின் ஜானவாச கார் தெரிகிறது. சிரிப்பில் தியேட்டர் குலுங்குகிறது ! இது மாதிரி காட்சிகளை visualize செய்த இயக்குனரை பாராட்டியே தீர வேண்டும் !

ஹீரோ சந்தானம் காசில் கோட் வாங்க, அப்போது சந்தானம் தரும் முக பாவங்கள் செம ! அது போல நான்ஸ்டாப்பாக சிரிக்க வைக்கும் சில காட்சிகள்.... ஏரோபிளேனில் ஏறி விட்டு ஹீரோ மற்றும் சந்தானம் அடிக்கும் லூட்டி, போலிஸ் ஸ்டேஷன் மற்றும் சாமியார் காட்சிகள் ஹீரோயின் வீட்டுக்கு போய் அவர் அம்மாவிடம் " நீங்க அருமையா வயலின் வாசிப்பீங்களே அதுக்கு நான் ரசிகன்" என சந்தானம் பேசுவது இப்படி அடுக்கி கொண்டே போகலாம்...

ஒரு காட்சியில் சந்தானமும் உதயநிதியும் காரில் செல்ல, சந்தானம் " ஒன்னை அவள் நிறைய அவமான படுத்திட்டா; இன்னும் நீயெல்லாம் எதுக்கு வாழறேன்னே தெரியல" என்று சொல்ல, ஹீரோ காரை நிறுத்த சொல்லி விட்டு மறுபுறம் இருக்கும் பீச்சை நோக்கி ஓடுகிறார். சந்தானமும் பின்னால் " டேய் ஓடாதே. தற்கொலை பண்ணிக்காதே" என்று கத்தி கொண்டே ஓட, "யாருடா தற்கொலை பண்ணிக்க போறா? நான் ஒன்னுக்கு அடிக்க போறேன் " என ஹீரோ கத்தி கொண்டே ஓட, சந்தானமும் இரு நானும் வர்ரேன் என சொல்லி கொண்டு ஓட இன்டர்வெல் ப்ளாக் விடுகிறார்கள் ! படம் முழுக்க இது மாதிரி சின்ன சின்ன காமெடிகள் தான்.

இங்கே நாமும் ஒரு இன்டர்வெல் விடுகிறோம் !

*****************
தியேட்டர் நொறுக்ஸ்

ஐநாக்ஸில் சனி காலை ஒன்பதரை மணி காட்சி பார்த்தோம். நான்கு நாள் முன்னர் ஆன்லைனில் பார்த்த போது மற்ற காட்சிக்கு ஐநாக்ஸில் டிக்கெட் இல்லை !

ஐநாக்ஸில் இன்டர்வெல் மிக கொஞ்ச நேரமே விடுகிறார்கள். பாத் ரூம் போய் விட்டு அதிக கூட்டம் இல்லாத கடையில் ஏதேனும் ஒரு பொருள் வாங்கி கொண்டு உள்ளே வந்தால் அதற்குள் படம் போட்டுடுறாங்க !

சந்தானம் பேசும் பல இடங்களில், ஜோக் முடித்ததும் நிஜ விசில் வைத்து ஊதி கொண்டிருந்தனர். ஆனால் அது தொந்தரவாக இல்லாமல் ஜாலி ஆக தான் இருந்தது. "வேணாம் மச்சான் வேணாம் இந்த பொம்பளை காதலு" பாட்டுக்கு இருந்த சத்தத்தையும் விசிலையும் பார்த்தால் "நாம் பார்ப்பது ஐநாக்ஸ் தானா ? லோக்கல் தியேட்டரா? " என சந்தேகம் வந்து விட்டது !

ஷூட்டிங்கின் போது நடந்த சொதப்பல்களை,படம் முடிந்த பின் காண்பிக்கிறார்கள். பொதுவாய் படம் முடியும் முன் பலரும் எழுந்து வெளியே போய் விடுவார்கள். இங்கு படம் முடிந்து அந்த குட்டி குட்டி Blooper சீன்கள் முடியும் வரை ஒருத்தர் கூட எழுந்து போகலை ! ஒரு நல்ல காமெடி படத்தை மக்கள் எப்படி கொண்டாடுகிறார்கள் பாருங்கள் ! *****************
ஹீரோயின் சந்தானம் சொல்ற மாதிரி "வெறும் பச்சை மைதா மாவு " தான் ! இன்னொரு காட்சியில் ஒருவர் அவரை ஆண்டி என்கிறார். ஹன்சிகா பேசாமல் இருந்தால் அழகு ! பேச ஆரம்பித்தால் அவர் பேசும் வசனத்துக்கும் முக பாவத்துக்கும் சம்பந்தமே இல்லை. இத்தனைக்கும் சின்ன வயசிலிருந்து நடிக்கிறாராம் ! மொழி புரியாமல் நடிப்பதன் அவஸ்தை இது ! குண்டாக இருப்பது தெரிய கூடாது என பெரும்பாலும் முழு கை அல்லது முக்கால் கை சட்டை போடுகிறார். (பாடல்களில் வழக்கம் போல் தாராளம்) குஷுபுவுடன் இவரை ஒப்பிடுவது சரியல்ல. குஷ்பூ துவக்கத்திலிருந்தே ஓரளவு நடிக்க தான் செய்தார்.

ஸ்னேஹா ஒரு காட்சியில் ஏர் ஹோஸ்டஸ்சாக வருகிறார். அப்போது அவரை பார்த்து ஜொள்ளு விடுவது ஹீரோவும் சந்தானமும் மட்டும் அல்ல, நாமும் தான். படம் முழுக்க இவரே ஹீரோயினா நடிச்சிருக்கலாம் என தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை !

படத்தில் ஹீரோவுக்கு தண்ணி பாட்டிலின் ஸ்மெல் பார்த்தாலே செம கிக் ஏறி விடுவதாக காண்பித்திருப்பது செம ! நிஜத்தில் நாம் அவ்வப்போது அத்தகைய நண்பர்களை பார்த்திருப்போம் ! இந்த பார்ட் குறிப்பாய் பதிவர் கார்க்கியின் ஏழு பாத்திரத்தை நினைவூட்டுகிறது !

வசனங்கள் பல இடத்தில் சிரிக்க வைக்கிறது. "பெண்கள் ரோடில் ஏன் எப்போதும் முகத்தை மூடி கொண்டு தீவிர வாதி மாதிரி போறாங்க?" என்ற கேள்வியும் அதற்கான பதிலும் இளைஞர்களை செமையாக குஷிப்படுத்துகிறது !

படத்தின் ஆச்சரியங்களில் ஒன்று அந்த காமெடி ஹீரோயின் ! அழகாய் தெரிய கூடாது என அவருக்கு பல்லில் கிளிப் மாட்டி விட்டுள்ளனர். இளைய காமெடி நடிகை என ஆர்த்தி மட்டுமே உள்ள நிலையில் நிச்சயம் இவர் ஹிட் ஆகி விடுவார். நடிப்பில் முதல் படம் மாதிரியே தெரிய வில்லை. குட் !

பின்னணி இசையில் காமெடி சீனுக்கு ஹாரிஸ் செம சீரியஸ் பின்னணி இசை தருவது நன்கு எடுபடுகிறது. பாடல்கள் அவசியமே இல்லை எனினும் கேட்க கேட்க ஓகே ஆகி விடும் ! டிரைய்லரில் கேட்டு கேட்டே பாடல்கள் நமக்கு பழகியவை ஆகி விட்டன !

அகிலா அகிலா பாட்டில் அனைவரும் ஒரு மாதிரி ஆட, ஸ்க்ரீன் ஓரமாய் ஒரு டான்சர், தனியாய் தான் பாட்டுக்கு கூத்து அடித்து கொண்டே இருப்பது கியூட் !

சென்னை பிரியர்களுக்கு இந்த படம் நல்ல ட்ரீட். டைடல் பார்க் Overbridge, மயிலாப்பூர், மெரீனா பீச் என சென்னையின் பல இடங்களை திரையில் காண மகிழ்வாய் உள்ளது.

சண்டை ஏதும் இல்லை என்பது பெரிய ஆறுதல் ! நெளிய வைக்காமல் குடும்பத்துடன் பார்க்கிற மாதிரி இருப்பது படத்தின் நல்ல விஷயம்.

படத்தின் மைய கதை, காதலர்கள் சேர்வார்களா என்பது பற்றியெல்லாம் எந்த கவலையும் இன்றி அடுத்து எப்ப சிரிக்கலாம் என்கிற ஒரே எண்ணத்தோடு தான் படம் பார்க்கிறோம்.

இயக்குனர் ராஜேஷ், ஒரே கதையை வைத்து கொண்டு, ஒவ்வொரு படத்திலும் தன் முந்தைய பட வெற்றியை தாண்டி விடுகிறார் என்பது ஆச்சரியமான விஷயம் ! இப்படம் கோடையில் வெளியானதால் முதல் இரண்டு படங்களை நிச்சயம் பீட் செய்யும். சந்தானம் இன்றி இவர் படம் எடுப்பாரா, எடுத்தால் எப்படி இருக்கும் என்பது முக்கியமான கேள்வி !

சீரியசாக யோசிக்காமல் கொடுத்த காசுக்கு சிரிக்கணும் என்கிற முடிவோடு போனால் நிச்சயம் சிரித்து ரசிக்கலாம் !

ஓகே ஓகே சென்று ....வென்று வாருங்கள் !

27 comments:

  1. ok...ok... படிச்சாச் . ஓட்டும் போட்டாச்.

    ReplyDelete
  2. சுவாரஸ்யமான விமர்சனம். ஓகே ஓகேன்னு பதிவுக்குள்ளே அழைத்த விதம் அருமை:)!

    ReplyDelete
  3. வோட்டுப் போட்டுட்டேன்...! படம் பார்க்கவில்லை...இப்போதைக்குப் பார்க்கும் எண்ணமும் இல்லை!! ஆனால் வேணாம் மச்சான் வேணாம் பாடல் கேட்டவுடன் ஏன் மனதில் நிழலாடிய இரண்டு பாடல்கள் பற்றி சொல்லி விட வேண்டும்.... (எப்படியும் எனக்கு அப்படித் தோன்றவில்லை என்றுதான் நீங்கள் சொல்வீர்கள்!)
    1) 'அங்கமுத்து த்ங்கமுத்து தண்ணிக்குப் போனாளாம்....' பாடல்.

    2) ''வீட்டை மட்டும் ஓட்டயின்னு குத்தம் சொன்னானாம்...' என்று சரணத்தை முடித்து 'பூம் பூம் மாட்டுக் காரன் தெருவில் வந்தாண்டி' பாடல்!.

    ReplyDelete
  4. குடும்பத்தோடு பார்க்க கூடிய படம்தான் குழந்தைகளுக்கு பிடித்திருக்கிறது....நல்ல விமர்சனம்.....

    ReplyDelete
  5. நானும் படம் பார்த்தேன்.... நன்றாக சிரித்தேன். படம் ஆரம்பம் முதல் முடிவு வரை சிரிக்கவைத்துக்கொண்டே இருக்கிறது... ஒரு இடத்தில் கூட போர் அடிப்பதாக தோன்றவே இல்லை... இதுவே பெரிய விசயம்... அப்புறம்..
    வித விதமான விலை உயர்ந்த கூலிங் கிளாஸ் போட்டு எப்போதும் கண்ணை மறைத்து கொள்கிறார் சத்யமில் டிக்கெட் கிழிக்கும் வேலை பார்க்கும் இந்த ஹீரோ. (தனது கண் சின்னதாய் இருக்கு என உதயநிதிக்கு ஏதும் காம்பிலக்சா தெரியவில்லை). - இது அவங்க தாத்த ஸ்டைல் ப்பா.... haha..

    ReplyDelete
  6. படித்தேன்..

    வாக்களித்தேன்...

    படம் பார்க்கலாம் - டிவியில் போடும்போது....

    ReplyDelete
  7. // வெற்றி பெற்றது எப்படி ?"//

    Just 3 steps..
    1) கல்யாணம் பண்ணிக்கணும்..
    2) கொளந்த பெத்துக்கணும். .
    3) அந்த கொளந்தைக்கு 'வெற்றி' எனத் துவங்கும் வார்த்தையுடன்
    ஆணாக இருந்தால் 'செல்வன்' என்ற வார்த்தையையும்
    பெண்ணாக இருந்தால் 'செல்வி' என்ற வார்த்தையையும் சேர்த்து பெயரிட்டால் நீங்கள் 'வெற்றி' பெற்றவர் ஆகிவிடுவீர்கள்..

    ReplyDelete
  8. இன்னும் பார்க்கவில்லை...இந்த வாரத்திற்குள் பார்த்துவிடுவேன் என்று நினைக்கிறேன். வேலைப்பளு....முடியல! :)

    ReplyDelete
  9. Anonymous1:51:00 AM

    சந்தானம் இன்றி ராஜேஷ் ஒரு ஹிட் குடுத்து தனது தனித்தன்மையை நிரூபிக்க வேண்டிய காலம் வந்து விட்டது.

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. ராகவன் சார்: வாங்க வாங்க. ரொம்ப நாள் கழிச்சு உங்க கமன்ட் பார்க்க மிக மகிழ்ச்சி

    ReplyDelete
  12. ராமலட்சுமி நன்றி மேடம்

    ReplyDelete
  13. ஸ்ரீராம் அண்ணே: என்ன வயசுன்னே உங்களுக்கு? எப்படி இந்த பாட்டெல்லாம் ஞாபகம் வச்சிக்கிறீங்க?

    ReplyDelete
  14. வீடு சுரேஷ்: உண்மை தான் சின்ன பசங்க கூட படம் ரொம்ப என்ஜாய் பண்றாங்க

    ReplyDelete
  15. லதாராணி: முதல் வருகைக்கு நன்றி தாத்தா-பேரன் ஒப்பீடு ரசித்தேன்

    ReplyDelete
  16. வெங்கட்: ரைட்டு நன்றி

    ReplyDelete
  17. மாதவா: எப்புடி? உன்னால் மட்டும் தான் இப்படி யோசிக்க முடியும்

    ReplyDelete
  18. ரகு: நல்ல பிரிண்டில் DVD கூட வந்துடுச்சுன்னு சொல்றாங்க நீங்க தியேட்டரில் தான் பார்ப்பீங்கன்னு நினைக்கிறேன்

    ReplyDelete
  19. சிவா: ஆம் ராஜேஷ் சந்தானம் இன்றி ஒரு படம் எடுத்து காட்ட வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளார்

    ReplyDelete
  20. \\வித விதமான விலை உயர்ந்த கூலிங் கிளாஸ் போட்டு எப்போதும் கண்ணை மறைத்து கொள்கிறார் ... (தனது கண் சின்னதாய் இருக்கு என உதயநிதிக்கு ஏதும் காம்பிலக்சா தெரியவில்லை).\\ அட இதை நான் நோட் பண்ணலியே!! இவரு போட்டது மட்டுமில்லாமல் போற வர பாய்கள் எல்லாத்துக்கும் மாட்டிவிட்டிருக்காரே. பாக்கியராஜ் தான் இந்த மாதிரி வேலையெல்லாம் செய்வார். இவரு போட்டிருக்கிரமாதிரியே முகத்தில் பாதியை ஆக்கிரமித்துக் கொள்ளும் கண்ணாடியை இவரது மகன், மனைவி, ஆபிசில் வேலை செய்யும் பெண் ரோட்டில் போகும் எருமை மாடு என்று அத்தனை பேருக்கும் மாட்டிவிட்டுவிடுவார்... ஹா...ஹா...ஹா...

    ReplyDelete
  21. \\ஸ்னேஹா ஒரு காட்சியில் ஏர் ஹோஸ்டஸ்சாக வருகிறார். அப்போது அவரை பார்த்து ஜொள்ளு விடுவது ஹீரோவும் சந்தானமும் மட்டும் அல்ல, நாமும் தான். படம் முழுக்க இவரே ஹீரோயினா நடிச்சிருக்கலாம் என தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை ! \\அப்படியா..?? ஸ்னேஹா, இதற்க்கு முன்னர் பார்த்தீபன் கனவு, ஏய்... நீ ரொம்ப அழகா இருக்கே! போன்ற படங்களில் இன்னமும் அஹ்சகாய் நடித்திருந்தாரே. அந்த அளவுக்கு இந்தப் படத்தில் அவர் அழகாய்த் தோன்றவில்லையே!!

    ReplyDelete
  22. \\சந்தானம் இன்றி இவர் படம் எடுப்பாரா, எடுத்தால் எப்படி இருக்கும் என்பது முக்கியமான கேள்வி !\\படம் பார்ப்பவர்கள், விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள், தயாரிப்பாளர் எல்லோரும் ஹேப்பி ஆக இருந்தால் யாரை வைத்து வேண்டுமானாலும் படத்தை எடுக்கட்டுமே!!

    ReplyDelete
  23. தாஸ்: ஸ்னேஹா அழகு முன்பு அளவு இல்லை தான். ஆனால் ஹன்சிகாவை விட அவர்
    அழகாகவும் இருப்பார். நன்கும் நடித்திருப்பார். அவர் வந்த இரு நிமிடம் கூட எவ்வளவு அழகாய் நடித்திருந்தார்; ஓவர் முக பாவனை அல்லது சம்பந்தம் இல்லாத முக பாவம் காட்டும் ஹன்சிகாவை பார்ப்பதை விட சினேகாவை ரெண்டரை மணி நேரம் பார்க்கலாம் என தோன்றியது

    சந்தானம் விஷயத்தில் நீங்கள் சொல்வதும் சரி தான் !

    அனைத்து திரட்டிகளிலும் தாங்கள் அளித்த வாக்குகளுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ் :))

    ReplyDelete
  24. ஹீரோவின் ட்ரஸ் எல்லாம் நல்லா இருந்தது.(டிசைனர் நளினி ஸ்ரீராம்) சந்தானம் ஜோக்ஸ்,அவர் தமிழ் ஸ்லாங்கில் பேசும் இங்கிலிஷ் நல்லா இருந்தது.ஹன்சிகா பொண்ணு நல்லாதானே இருக்கு.

    ReplyDelete
  25. விமர்சனம் படித்தேன். வாக்களித்தேன். உலக தொலைக்காட்சிகளில் முதல் முறையாக வரும் போது பார்த்துக்கலாம்.

    ReplyDelete
  26. // மாதவா: எப்புடி? உன்னால் மட்டும் தான் இப்படி யோசிக்க முடியும் //

    மைன்ட்வாய்ஸ் : மாதவா, உன்னாலமட்டும் எப்படிடா இந்த மாதிரிலாம் யோசிக்க முடியுது..... என்னவோ போடா..!!

    ReplyDelete
  27. படத்தின் மைய கதை, காதலர்கள் சேர்வார்களா என்பது பற்றியெல்லாம் எந்த கவலையும் இன்றி அடுத்து எப்ப சிரிக்கலாம் என்கிற ஒரே எண்ணத்தோடு தான் படம் பார்க்கிறோம்.//

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...