Saturday, July 21, 2012

உணவகம் அறிமுகம் -சிட்டி சென்டர்- சட்டே மலேசியா

சிட்டி சென்டரில் காலை காட்சி சினிமா சென்று விட்டு மதியம் அங்கு சாப்பிடுகிற அனுபவம் கிடைத்தது. விலை சற்று கூட தான் இருக்கும். ஆனால் காலை சினிமா, பின் சாப்பாடு அப்புறம் அங்குள்ள லைப் ஸ்டைலில் பர்ச்சேஸ் என மிகபெரிய சதி திட்டத்துடன் குடும்பத்தினர் வந்ததால், வேறு வழி இல்லை. அன்று சிட்டி சென்டரில் தான் சாப்பிடுகிற நிலைமை.

சிட்டி சென்டர் மாடியில் புட் கோர்ட் ( Food Court ) தனியே உள்ளது. நிறையவே கடைகள் இருந்தன. ஒவ்வொன்றாக பார்வையிட்டு விட்டு, சட்டே மலேசியா என்கிற இந்த கடையை தேர்ந்தெடுத்தேன்.பர்மா உணவு என்று போட்டிருந்ததால் சற்று வித்யாசமாய் முயலலாமே என்பது எண்ணம்.

மூன்று பேருக்கும் ஆளுக்கு ஒரு ஐட்டம் ஆர்டர் செய்தோம். பரோட்டாவுடன் நூடுல்ஸ் போன்ற ஐட்டம்  சேர்த்து   ஒரு காம்போ பேக். 

                            

அடுத்தது ரெகுலர் மீல்ஸ். இதில் சிக்கன் குழம்புடன் ஒரு காம்போவும், மீன் குழம்புடன் இன்னொரு காம்போவும் வாங்கினோம். 

அனைவரும் எல்லாவற்றையும் டேஸ்ட் செய்யவே செய்தோம். மீல்ஸ் 

எங்கள் உணவு வரும் வரை காத்திருந்த போது, இன்னொருவர் முட்டை கொத்து பரோட்டா ஆர்டர் செய்திருந்தார். போட்டோ மட்டும் எடுத்தேன் 
முட்டை கொத்து பரோட்டா 
நம்ம உணவு தயார் ஆகுது :


விலை எல்லாம் சற்று அதிகம் தான். ஒவ்வொரு காம்போ பேக்கும் 130  அல்லது 140 ரூபாய். மூவருக்கு நானூறு ரூபாய்க்கு மேல் ஆகி விட்டது 

கணினி வைத்து இரு இளம் பெண்கள் பில் போட்டு தருகிறார்கள் 
விலை பட்டியல். படங்கள் எல்லாம்  நம்ம மொபைலில் எடுத்தது. எப்படி நம்ம மொபைல் ...பரவால்லியா? 


உணவின் சுவைக்கு வருவோம். 

பர்மா பரோட்டா சுவை மட்டுமே நன்றாய், நம் பரோட்டாவை விட மிக மெத்தென்று வித்யாசமாய் இருந்தது.   அதற்கான சைட் டிஷும் ஓகே. 

வறுத்த மீன் குட். குழம்புகள் இரண்டும் சுமார் தான். கீரை என்ற பெயரில் ஒன்று வைத்து கொடுமை செய்திருந்தனர்.

உண்மையில் போர்டில் தான் மலேசியா மற்றும் பர்மா எல்லாம் உள்ளதே தவிர நிஜத்தில் இரண்டு வகை உணவும் இல்லை. புரோட்டா மட்டுமே மலேசிய வகை என்று நினைக்கிறேன். சாப்பாடு எல்லாம் இந்தியன் வகை உணவு தான் !

நல்ல பசியில் சாப்பிட்டதால் உள்ளே இறங்கி விட்டது. உணவு என் பெண் உட்பட யாருக்கும் எந்த தொந்தரவும் செய்யவில்லை என்பது ஆறுதல். 

வீடுதிரும்பல் பரிந்துரை: இங்கு Food Court இருப்பதால், பர்மா பரோட்டா மட்டுமே இங்கு வாங்கி கொள்ளுங்கள். மற்ற உணவுகள் அருகிலுள்ள வேறு கடையில் வாங்கி கொண்டு அனைத்தையும் சேர்த்து சாப்பிடலாம்.   பர்மா பரோட்டா நிச்சயம் உங்களுக்கு ஒரு வித்தியாச அனுபவம் தரும் !

39 comments:

 1. Satay Malaysia என்பதை பெயர்ப்பலகையில்
  " சாத்தே மலேசியா" என்று இருக்க வேண்டும்.

  ReplyDelete
 2. சென்று பார்க்கிறேன் தோழர்..தகவலுக்கு நன்றி.

  ReplyDelete
 3. பர்மீய உணவகத்துக்கு மலேசியான்னு பேரு. புரியலியே!

  ReplyDelete
 4. This comment has been removed by the author.

  ReplyDelete
 5. Thanks for the Nice share....

  ReplyDelete
 6. எனக்கு பசிக்குதே?

  ReplyDelete
 7. படங்களுடன் நல்ல அறிமுகம்
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 8. படங்கள் அருமை... (மொபைலில் எடுத்ததா..? சூப்பர்)
  வாழ்த்துக்கள் ! (த.ம. 10)

  ReplyDelete
 9. இப்போ படங்களை பார்த்தவுடன் எனக்கு பசிக்காஆரம்பிசிட்டுதே. ..

  ReplyDelete
 10. அங்குள்ள லைப் ஸ்டைலில் பர்ச்சேஸ் என மிகபெரிய சதி திட்டத்துடன் குடும்பத்தினர் வந்ததால்,

  ha....ha....


  சென்று சாப்பிட்டு பார்க்கிறேன் தகவலுக்கு நன்றி

  ReplyDelete
 11. மீங்கொரைங்,முர்தபா மிஸ் பண்ணி விட்டீர்களே மோகன் குமார் சார்:)

  ReplyDelete
 12. மொபைல் போட்டோக்கள்னு நீங்க சொன்னாத்தான் தெரியுது. அருமையா வந்துருக்குது படங்கள்.

  சாப்பாடு நல்லாருந்துருக்கும்ன்னு படங்களைப் பார்க்கையிலேயே தோணுது :-)

  ReplyDelete
 13. இதுவரை ஒரு முறைதான் சிட்டி சென்டர் போயிருக்கிறேன். அதுவும் ஐநாக்ஸில் படம் பார்ப்பதற்காக. புட் கோர்ட் பக்கமெல்லாம் போகவேயில்லை. எப்படியும், எறும்புக்கு மேக்கப் போட்டு டைனோசர் விலை விற்பார்கள் என்று தெரியும் :)

  நம்ம ஏரியாவிலேயே இப்போ 'செலப்ரேஷன்ஸ்'ன்னு புது ரெஸ்டாரன்ட் ஆரம்பிச்சிருக்காங்க. புஃபே இருக்கு. ரெடியா இருங்க :)

  ReplyDelete
 14. Mohan,

  Good coverage about the restaurant.

  Like your writing style and keep going :-)

  Did Aiiyasamy liked the food?

  Restaurant name is confusing.. Satay is from Indonesasia but partnered with Malaysia yet serving Burmese food. Really funny... :-)

  Satay is a famous dish in southeast asian countries..

  It's kind of grilled meat skewered in wooden sticks and serveed with peanut sause. Something like bbq meat but tastes different & yummy.

  Refer the original satay image

  https://www.google.com.sg/search?q=satay&hl=en&prmd=imvnse&tbm=isch&tbo=u&source=univ&sa=X&ei=HYsKUPu5AcPWrQeipJHICA&ved=0CGQQsAQ&biw=1658&bih=822

  dhana

  ReplyDelete
 15. சிறப்பான அறிமுகம்! போட்டோ எடுத்தா யாரும் சண்டைக்கு வரலியா?

  ReplyDelete
 16. பார்க்க கலர்ஃபுல்லா நல்லாத்தான் இருக்கு....!

  ReplyDelete
 17. படத்தைப் பார்க்கவே நன்றாக இருக்கின்றது.

  ReplyDelete
 18. சாகிர் ஹுசைன்: நன்றி

  ReplyDelete
 19. மதுமதி: மிக நன்றி TNPSC தேர்வுகள் குறித்து மக்களுக்கு பயன் தரும் வகையில் எழுதுபவர் நீங்கள்.

  ReplyDelete
 20. Gujaal said...
  பர்மீய உணவகத்துக்கு மலேசியான்னு பேரு. புரியலியே!

  ஆமாம் ! நானும் சொல்லிருக்கேன் ; பர்மாவும் இல்லை; மலேசியா உணவும் இங்கு இல்லை என :(

  ReplyDelete
 21. நன்றி ராஜ்

  ReplyDelete
 22. நன்றி வரலாற்று சுவடுகள் நண்பரே

  ReplyDelete
 23. நன்றி ரமணி சார். தமிழ் மண வேலைக்கு நடுவிலும் வந்தது மகிழ்ச்சி

  ReplyDelete
 24. நன்றி தனபாலன் சார்

  ReplyDelete
 25. நன்றி உமா மேடம்

  ReplyDelete
 26. வலங்கை சரவணன் : செல்லும் அளவு வொர்த் இல்லை. இனி நல்ல ஹோட்டல்கள் பற்றி மட்டுமே பகிரனும் என நினைக்கிறேன் நன்றி

  ReplyDelete
 27. ஸாதிகா said...
  மீங்கொரைங்,முர்தபா மிஸ் பண்ணி விட்டீர்களே மோகன் குமார் சார்:)
  ஸாதிகா : நீங்க சொன்ன ரெண்டும் என்ன என்று புரிய வில்லீங்க !

  ReplyDelete
 28. அமைதிச்சாரல் said...
  மொபைல் போட்டோக்கள்னு நீங்க சொன்னாத்தான் தெரியுது. அருமையா வந்துருக்குது படங்கள்.
  நன்றி அமைதி சாரல்

  ReplyDelete
 29. ர‌கு said...
  நம்ம ஏரியாவிலேயே இப்போ 'செலப்ரேஷன்ஸ்'ன்னு புது ரெஸ்டாரன்ட் ஆரம்பிச்சிருக்காங்க. புஃபே இருக்கு. ரெடியா இருங்க :)

  ஓகே ரகு. டன் !

  ReplyDelete
 30. S. Dhanasekaran said...

  Restaurant name is confusing.. Satay is from Indonesasia but partnered with Malaysia yet serving Burmese food. Really funny... :-)

  ஆம். இரண்டு வகை உணவும் இல்லை. பரோட்டா மட்டும் தான் ஓகே நன்றி தனசேகரன்

  ReplyDelete
 31. s suresh said...
  போட்டோ எடுத்தா யாரும் சண்டைக்கு வரலியா?

  மொபைலில் எடுப்பதால் எடுக்கிற மாதிரியே தெரியாது நன்றி

  ReplyDelete
 32. நன்றி ஸ்ரீராம்

  ReplyDelete
 33. நன்றி மாதேவி மேடம்

  ReplyDelete
 34. //ஸாதிகா : நீங்க சொன்ன ரெண்டும் என்ன என்று புரிய வில்லீங்க !// இவை இரண்டும் அந்த ரெஸ்டாரெண்டின் பேமசான மெனுக்கள்.

  ReplyDelete
 35. சிட்டி சென்டர் , மலேசியா அப்படின்னு பார்த்ததும்.. எங்க சாப்பிட மலேசியா போய்டீங்களோன்னு நினைச்சேன்..அப்புறம் பார்த்தா சென்னை சிட்டி சென்டர்...
  ஹி ஹி ஹி

  ReplyDelete
 36. நல்ல பகிர்வு... படமெல்லாம் நல்லாத்தான் எடுக்கறீங்க! :)

  த.ம. 22.

  தாமதமான வருகைக்கு மாப்பு கேட்டுக்கறேன் நண்பரே...

  ReplyDelete
 37. அது சட்டே மலேசியா இல்லை , சாத்தே மலேசியா

  ReplyDelete
 38. நல்ல பசியில் சாப்பிட்டதால் உள்ளே இறங்கி விட்டது. உணவு என் பெண் உட்பட யாருக்கும் எந்த தொந்தரவும் செய்யவில்லை என்பது ஆறுதல்//
  -:)

  I GUESS THIS IS NOT AUTHENTIC...

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...