Friday, July 6, 2012

அண்ணனை மிரட்டும் தம்பி: சட்ட ஆலோசனை

 
கேள்வி: சுந்தர்ராஜன், சீர்காழி

புறம்போக்கு நிலத்தில் 5 ஆண்டுகளாகக் குடியிருப்போருக்கு அந்த நிலம் அரசுக்குத் தேவையில்லை என்றால், அவர்களுக்கே சொந்தமாக அளிக்கப்படும் என முந்தைய தி.மு.க. ஆட்சியில் அறிவித்தார்கள். இந்த அறிவிப்பு, புறம்போக்கு நிலத்தில் குடியேறுவதற்கு மக்களை ஊக்குவித்தது போல் ஆகாதா? இதன் மூலம் அரசின் சொத்துகள், அதிகமாக ஆக்கிரமிக்கப்படும் அல்லவா? இந்த அறிவிப்பு, சட்டப்படி சரியானதுதானா?

பதில் :

 புறம்போக்கு நிலங்களில் பல வகை உண்டு. அதில் வீடுகள் கட்டக் கூடிய இடம் என்கிற வகையில் வந்தால், அந்த புறம்போக்கில் ஒருவர் ஐந்து வருடம் இருந்தால் மட்டுமே, நீங்கள் சொன்னது போல் கேட்க முடியும்.

அரசுக்கு எந்த பயன்பாடும் இல்லாமல் இருக்கும் நிலங்களை அரசாங்கமே “கிராமத்து புறம்போக்கு” என்று அறிவிக்கிறது. அத்தகைய இடங்களில் இருப்போருக்கு அந்த நிலத்தை அளிக்கிறது. அந்த இடத்தில் குறிப்பிட்ட நபர் நெடுங்காலமாய் இருந்ததை ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும். அப்போது தான் அவருக்கு இடம் கிடைக்கும்.

இது போன்ற அறிவிப்புகள் காலம் காலமாக ஒவ்வொரு அரசாங்கத்தாலும் அறிவிக்கப்படுகிறது. எனவே இதனை ஒரு வழக்காக எடுத்துச் சென்றால், கோர்ட் கூட இந்த அறிவிப்புகளை சட்டத்துக்கு புறம்பானது என சொல்லாது என்றே நினைக்கிறேன்.

கேள்வி: செந்தில் குமார்


நான் அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். திருமணமாகி சுமார் ஒரு வருடம் வரை, தாய் தந்தையுடன் வசித்தோம். கருத்து வேறுபாடு காரணமாக ஒரு வருடம் கழித்து நானும், என் மனைவியும் தனிக்குடித்தனம் சென்றோம். பெற்ற தாய் தந்தைக்கு மாதந்தோறும் ரூ.3500 தவறாமல் கொடுத்து வருகிறேன்.

வீட்டிலிருந்து வரும் போது எந்த சொத்தையும் நான் எடுத்து வரவில்லை. ஆனால் என் தம்பி ரூ.50000 கேட்டு என்னை தொடர்ந்து மிரட்டுகிறான். இதனை நான் எதிர் கொள்ள என்ன வழக்கு தொடர வேண்டும்?

பதில்

நீங்கள் உங்கள் பெற்றோரின் சொத்து எதையும் எடுத்துக் கொள்ள வில்லை. தற்போது அவர்களின் சொத்தில் தங்கியிருக்கவும் இல்லை இந்நிலையில் உங்கள் தம்பி உங்களை மிரட்ட என்ன காரணம் ? அவர் நல்ல வேலையில் இல்லாததால், உங்களிடம் பணம் பெறும் ஒரே நோக்கோடு மட்டுமே இப்படி மிரட்டுகிறார் என நினைக்கிறேன்.

நீதிமன்றத்தில் உங்கள் தம்பி மேல் உங்களை மிரட்டுகிறார் என வழக்கு தொடர உங்களுக்கு உரிமை உண்டு. ஆனால் அதற்கு முன் உங்கள் எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்தில் இது குறித்து ஒரு புகார் தாருங்கள். காவல் துறையினர் உங்கள் தம்பியை கூட்டி மிரட்டினாலே அவர் உங்களிடம் பின்னர் பணம் கேட்பது நின்று விட வாய்ப்பு உண்டு.

அதற்கு பின்னும் அவர் இதே நடவடிக்கையை தொடர்ந்தால், காவல் துறையினரிடம் சொல்லி, முன்னர் தந்த புகாரின் அடிப்படையில் அவரை கைது செய்து வழக்கும் தொடரலாம்.

உங்களுக்கு வழக்கறிஞர் யாரும் தெரியாவிடில் எனக்கு எழுதுங்கள். நீதிமன்றம் செல்லும் நண்பர்கள் சிலரை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்.

*********
ஜூன் 29  தேதியிட்ட வல்லமையில் வெளியானது  !
*********
சட்டம் குறித்த உங்கள் கேள்விகளை பின்னூட்டத்திலோ snehamohankumar@yahoo.co.in என்கிற மெயில் முகவரிக்கோ அனுப்பலாம்

17 comments:

 1. Intha valainjan entha bloglayum comment podaama irukkum. Athukku enna pannalaam :D

  ReplyDelete
 2. Anonymous11:16:00 AM

  @ மௌனகுரு
  நாம ப்ளாக் எழுதாம இருக்கணும். :)

  ReplyDelete
 3. பயனுள்ள பதிவு
  பிரச்சனைகளையும் அதற்கான சட்டத் தீர்வுகளையும்
  தெரிந்து கொள்ள ஆவலாக உள்ள என்போன்றோருக்கு
  பயன்படும் அருமையான பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. உண்மையாகவே இது மக்களுக்கு தேவைப்படும் பதிவு. நன்றி.

  ReplyDelete
 5. Anonymous6:03:00 PM

  உங்களுக்கு வழக்கறிஞர் யாரும் தெரியாவிடில் எனக்கு எழுதுங்கள். நீதிமன்றம் செல்லும் நண்பர்கள் சிலரை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்.
  //
  கொஞ்சம் பொறுங்க மோகன்...எதிலாவது மொதல்ல மாட்டிக்கிறேன்...ஹாஹாஹா...

  ReplyDelete
 6. பயனுள்ள தகவல்கள்! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 7. ரெவெரி said...
  ///
  உங்களுக்கு வழக்கறிஞர் யாரும் தெரியாவிடில் எனக்கு எழுதுங்கள். நீதிமன்றம் செல்லும் நண்பர்கள் சிலரை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்.
  ----
  கொஞ்சம் பொறுங்க மோகன்...எதிலாவது மொதல்ல மாட்டிக்கிறேன்...ஹாஹாஹா...
  /////////////

  இருந்தாலும் உங்களுக்கு கொஞ்சம் நக்கல் அதிகம் தான் :D

  ReplyDelete
 8. அருமையான பதிவு.
  வாழ்த்துகள்.

  ReplyDelete
 9. மௌன குரு: சில நேரம் யாருமே போணி செய்யாத போது கமண்ட்ஸ் - 0 என இருக்கும். அப்போது இவர்கள் தான் வந்து முதல் போணி செய்வார்கள். காமெடியான ஆட்கள். இருந்து விட்டு போகட்டும்

  ReplyDelete
 10. ரமணி சார்: மகிழ்ச்சியும் நன்றியும்

  ReplyDelete
 11. மிக நன்றி மென் பொருள் பிரபு

  ReplyDelete
 12. ரெவரி: ஏஏன் ? :-)

  ReplyDelete
 13. நன்றி சுரேஷ்

  ReplyDelete
 14. நன்றி வரலாற்று சுவடுகள்

  ReplyDelete
 15. ரத்னவேல் ஐயா: நன்றி

  ReplyDelete
 16. Anonymous7:51:00 PM

  அன்புள்ள மோகன் குமார்,

  அருமையான விமர்சனம். இவர் தொடர்பான மற்றும் சில பதிவுகள்:

  http://balhanuman.wordpress.com/category/manohar-devadas/

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...