Tuesday, July 10, 2012

அற்புத ஆக்ரா கோட்டை-படம்/வீடியோ-தகவல்கள்

க்ரா கோட்டை முதலில் அக்பரால் கட்ட ஆரம்பிக்க பட்டது. பின் ஷா ஜகான் மற்றும் ஒளரங்கசீப்பால் கட்டி முடிக்கப்பட்டது. அப்போது இதை கட்ட ஆன செலவு 25 லட்சம் என கூறப்படுகிறது

ஆக்ராவில் வீடுகள் பலவும் இன்றும் வெளியே சிமென்ட் பூசப்படாமல் செங்கற்களாய் உள்ளது. இதற்கு காரணமாக நண்பன் தேவா சொன்னது : முன்பு பல முறை படை எடுக்கப்பட்ட ஊர் இது. அப்போது வீடுகள் நாசமாகி விடும். மீண்டும் கட்ட வேண்டும். இதனால் வீடுகளை வெளிப்புறம் பூசாமலே வைத்து பழகி விட்டனர். பழைய பழக்கத்தை இன்றும் தொடர்கின்றனர்.

கோட்டை பற்றி நுழைந்தவுடன் இருக்கும் தகவல் பலகைஆக்ரா கோட்டையில் தான் தன் தந்தை ஷாஜகானை சிறைப்பிடித்தார். ஔரங்கசீப். கோட்டையில் அவர் சிறை பிடிக்கப்பட்ட இடத்திலிருந்து தாஜ் மஹால் தெரியும்.
அங்கிருந்து எப்போதும் தாஜ் மகாலை பார்த்தவாறே இறக்கும் வரை இருந்தாராம் ஷாஜஹான்.

கோட்டை எனும்போது அதன் கதவுகளும் பெரியதாய் தானே இருக்கும். ஆக்ரா கோட்டையின் கதவை பாருங்கள்


கதவை திறக்க உதவும் உருளை

அந்த காலத்தில் ஏ.சி இல்லை அல்லவா? இதனால் மாடியில் உஷ்ணமாக இருக்கும் என்பதால், குறிப்பிட்ட இடத்தில் தண்ணீர் ஓடி வந்து குளிர்விக்கிற மாதிரி செய்து வைத்துள்ளனர்.


இங்கு இவ்வளவு வெய்யிலிலும் மிக அழகான தோட்டம், புல்வெளி பராமரிக்கபடுகிறது.
கோட்டையின் ஒரு புறம் நுழைந்து மறுபுறம் வழியே குதிரையில் சென்றார் ஒருவர். கோட்டைக்குள் குதிரை ஓட்டி செல்வதை பார்க்க ஆச்சரியமாக இருந்தது


ஆக்ரா கோட்டை மிக மிக பெரியது. தற்போது காட்டுவது ஒரு பகுதி ( 20 % ) மட்டுமே. மீதம் 80 % பகுதியை இந்தியன் ஆர்மி எடுத்து கொண்டது. அதன் வீரர்கள் அங்கு தங்கி பயிற்சி எடுக்கின்றனர்.
கலை வண்ணத்தை பாருங்கள்

ஏராள தூண்களுடன் Corridor
கோட்டைக்குள் ஜகான்கீர் பாலஸ் மற்றும் அக்பர் பாலஸ் ஆகியவையும் உண்டு.

நண்பன் தேவாவுடன்
***********
திவான் ஹால் என்பது ராஜா மக்களை சந்திக்கும் இடம். இந்த இடத்தில் அமர்ந்து அனைவரும் போட்டோ எடுத்து கொள்ள விரும்புகிறார்கள்

இந்த இடம் குறித்த தகவல் இதோ :ராஜா அமர்ந்து மக்களை பார்க்கும் இடம்

இந்த இடத்தில் ஏராளமான படங்கள் ஷூட்டிங் நடந்துள்ளது. ரித்திக் ரோஷன் மற்றும் ஐஸ்வர்யா ராய் நடித்த ஜோதா அக்பர் படம் இங்கு தான் படமாக்கப்பட்டது
***
நம்மை அழைத்து செல்லும் கைடுகளும் இந்தியில் மட்டுமே பேசுகிறார்கள். ஹிந்தி தெரியாவிடில் பல விஷயங்கள் புரியாமல் ஊமை படம் பார்க்க வேண்டியது தான்.


இங்கு அணில் வைத்து ஒருவர் வித்தை காட்டி கொண்டிருந்தார். தானியம் நம் கையில் வைத்தால் அணில் தானாகவே ஓடி வந்து சாப்பிடுகிறது.நம் உள்ளங்கையிலிருக்கும் தானியத்தை அணில் நக்கி சாப்பிடும் போது நன்கு கூசுகிறது. ஆனால் அணில் நம்மை சிறிதும் கடிப்பதில்லை. இது ஒரு வித்தியாச அனுபவம் ஆக இருந்ததுஆக்ரா கோட்டைக்கு இரு தளங்கள் உள்ளன. பெரும்பாலான இடங்கள் கீழ் தளத்தில் இருந்தாலும் மேலே ஏறியும் பார்க்கிற மாதிரி சில இடங்கள் உள்ளன. இங்கு கலை அம்சத்துடன் கூடிய வேலைப்பாடுகள் உள்ளன.

***********
ஆக்ரா கோட்டை பார்த்து முடித்ததும் அதற்கு அருகில் உள்ள ஒரு கடைக்கு அழைத்து சென்றனர். இங்கு குட்டி தாஜ்மஹால் போன்ற நினைவு பரிசுகள் விற்க படுகிறது. இருநூறு ரூபாய் முதல் இரண்டாயிரம் வரை விலையுள்ள தாஜ்மஹால் உள்ளது. மார்பிளில் இதனை செதுக்கி செய்வது எத்தனை கடினம் என நமக்கு விளக்கி சொல்கிறார்கள். இந்த வீடியோவில் குட்டி தாஜ்மஹால் எப்படி செய்கிறார்கள் என விளக்கம் கேட்கலாம்*********
டிஸ்கி: டில்லியில் செங்கோட்டை மட்டும் நாம் கவர் செய்யலை. இந்த தொடர் ஓரிரு மாதம் நிச்சயம் போகும். எனவே ஆகஸ்ட் 15-ஐ ஒட்டி செங்கோட்டை குறித்த பதிவை வெளியிட திட்டம்...
 
***
அடுத்த பதிவில்: கிருஷ்ணர் பிறந்த மதுரா ..மற்றும் பனிக்கர் டிராவல்ஸ் ஒரு பார்வை

33 comments:

 1. அருமையான படங்களும் தகவல்களும்!

  நன்றிகள்.

  இந்த ஆக்ரா கோட்டைதான் நேரில் எனக்குப் பார்க்கக் கிடைக்கலை,ரெண்டு முறை ஆக்ரா போயும்கூட :(

  முதல்முறை கடுமையான வெய்யில் 51 டிகிரி. மகளுக்கு நடக்க முடியலை. நானும் மகளும் கோட்டை முகப்புவாசல் நிழலில் காவற்காரருடன் பேசிக்கொண்டு இருந்தோம்.கோபால் மட்டும் உள்ளே போய் எல்லாத்தையும் வீடியோவா எடுத்து வந்தார்.

  ரெண்டாம் தடவை போனபோது நேரப்பற்றாக்குறை.

  செங்கோட்டைப்பதிவு ஒன்னு துளசிதளத்தில் இருக்கு:-)

  ReplyDelete
 2. துளசி கோபால் அவர்கள் குறிப்பிட்டிருப்பதைப்போல
  நானும் இரண்டு முறை டெல்லி சென்றும் கூட இந்த
  கோட்டையை மட்டும் பார்க்க முடியவில்லை
  இதன் முக்கியத்துவம் தங்கள் பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன்
  நேரடியாகப் போனால் கூட இத்தனை அருமையாகப்
  பார்க்க முடியுமா எனத்தெரியவில்லை
  படங்களுடன் பதிவு மிக மிக அருமை
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. மீண்டும் ஒரு முறை போய் வந்த உணர்வு.ஏப்ரல்,மே,ஜூன் மாதங்களில் இங்கே போகவே கூடாது.

  ReplyDelete
 4. நான் பார்த்ததில்லை. உங்கள் மூலம் பார்த்ததில் மகிழ்ச்சி. அந்த அணில் சாப்பிடும் அனுபவம் படிக்கவே நன்றாக இருந்தது. படங்கள் அனைத்தும் சூப்பர். வீடியோவை என்னால் பார்க்க முடியவில்லை என்பதுதான் ஒரே குறை. நல்ல பகிர்விற்கு நன்றிகள் பல.

  ReplyDelete
 5. நேரம் கிடைக்கும்போது "வந்தார்கள் வென்றார்கள்" வாசிச்சு பாருங்க மோகன். அக்பர், ஷாஜஹான், ஒளரங்கசீப் ஆகியோரை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் நிறைய கிடைக்கும்.

  ReplyDelete
 6. ஆக்ராவை நேர்ல ஒரு முறை பார்த்திருக்கேன்.. ரொம்ப நாள் கழிச்சு புகைப்படத்தில இப்போ...

  நீங்க கலக்குங்க தலைவா..!

  ReplyDelete
 7. அருமையாகத் தொகுத்திருக்கிறீர்கள். படங்களும் தகவல்களும் நன்று. வீடியோவும் பார்க்கிறேன்.

  ReplyDelete
 8. சில இடங்கள் நேரில் பார்ப்பதை விட படத்தில் அருமையாக இருக்கும்; அதில் ஆக்ராவும் ஒன்று. நேரில் பார்ப்பதில் கஷ்டம் என்னவென்றால் அது tiresome. வெய்யில் வேறு சேர்ந்துவிட்டால் அவ்வளவுதான்.

  படங்கள் அருமையாக இருக்கின்றன.

  நல்ல தொகுப்பு.

  திவான் என்றால் அரசு கணக்கர்; அரசவை என்று பல பொருள்கள் உள்ளன. இது திவான்-ஏ-ஆம். ஆம் என்றால் சாதாரண அல்லது பொதுவான (ஆங்கிலத்தில் general) இது பொதுமக்களைச் சந்திக்கும் சபை அதனால் திவான்-ஏ-ஆம். செங்கோட்டையிலும் இது உள்ளது.

  ReplyDelete
 9. பதிவும் போட்டோகளும் அருமை

  ReplyDelete
 10. துளசி டீச்சர்: அடடா.. நீங்க கிட்டத்தில் போய் பார்க்கலையா? விடுங்க. கிட்ட தட்ட செங்கோட்டை மாதிரி தான் இருக்கும்

  ReplyDelete
 11. ரமணி சார்: தங்கள் வார்த்தைகளுக்கு மிக நன்றி நம் சந்திப்பு நேற்று இனிமையாய் அமைந்தது

  ReplyDelete
 12. அமுதா கிருஷ்ணா
  //ஏப்ரல்,மே,ஜூன் மாதங்களில் இங்கே போகவே கூடாது.//

  உண்மை தான் ! Thanks !

  ReplyDelete
 13. பால கணேஷ் said...

  அந்த அணில் சாப்பிடும் அனுபவம் படிக்கவே நன்றாக இருந்தது.

  ****
  சார் அதனை வீடியோ எடுத்தேன். எங்கோ மிஸ் ஆகிடுச்சு. மறுபடி கிடைத்தால் பகிர்கிறேன்; நாம் நேற்று சந்தித்தது பற்றி ஒரு பதிவு எழுதி விரைவில் வெளியிட எண்ணம் :)

  ReplyDelete
 14. ர‌கு said...

  நேரம் கிடைக்கும்போது "வந்தார்கள் வென்றார்கள்" வாசிச்சு பாருங்க மோகன்.

  ****
  எச்சூஸ் மீ. நீங்க அந்த புக் வச்சிருக்கீங்களா? :-)

  ReplyDelete
 15. வரலாற்று சுவடுகள்: வலை சர ஆசிரியர் இங்கு வந்ததில் மகிழ்ச்சி

  ReplyDelete
 16. நன்றி ராமலட்சுமி மேடம்

  ReplyDelete
 17. வெங்கட ஸ்ரீநிவாசன் said...

  சில இடங்கள் நேரில் பார்ப்பதை விட படத்தில் அருமையாக இருக்கும்;

  ****
  செம போடா போட்டீங்க !

  திவான் பற்றிய தகவல்களுக்கு நன்றி ! டில்லி பற்றிய பதிவுகளை உங்களுக்கும், வெங்கட்டுக்கும் ஒரு முறை அனுப்பி விட்டு வெளியிடலாம் போல !

  ReplyDelete
 18. இரவு வானம்: நன்றி

  ReplyDelete
 19. Anonymous5:44:00 PM

  ஆக்ரா கோட்டை... தாஜ்மஹால் போலவே நிறைய இடங்களில் நான் ரசித்த ஒன்று...கட்டடங்களின் சிறு பாகங்கள் கூட SYMMETRICAL ஆக கட்டப்பட்டுள்ளது தான்...
  நீங்கள் கவனித்தீர்களா மோகன்...

  ReplyDelete
 20. Anonymous5:45:00 PM

  என்ன வெயில் பின்னியது...கோடையில்...

  ReplyDelete
 21. படங்கள் அருமையா இருக்கு மோகன் சார்
  வந்தார்கள் வென்றார்கள் புக் படித்து கொண்டிருக்கிறேன்

  ReplyDelete
 22. நேரமிருக்கும் போது என் தளத்திற்கும் வருகை தாருங்கள்

  kudanthaiyur.blogspot.in

  ReplyDelete
 23. அருமையான படங்களுடன் அழகான பயணவிவரிப்பு! சூப்பர்!

  ReplyDelete
 24. ஆக்ராவினைப் பொறுத்த வரை அழுக்குதான் பிரதானம்.... சுற்றுலா வருபவர்கள் தாஜ்மஹாலையும், கோட்டையையும் பார்த்து சந்தோஷமாய் திரும்பினாலும் பல இடங்கள் அசிங்கமாய்த் தான் இருக்கும் மோகன்.

  சீனு [வெங்கட ஸ்ரீனிவாசன்] சொன்னது போல, பல இடங்கள் படங்களில் மட்டுமே அழகு. ஒரு காலத்தில் கோடையிலிருந்து தாஜ்மஹால் பார்க்கும்போது யமுனாவில் தண்ணீரோடு நன்றாக இருக்கும்.... இப்போது இருக்கும் யமுனாவோ வெறும் சாக்கடை.

  கோட்டையின் பல இடங்கள் - உள்ளே இருக்கும் பூங்கா, ராணிகளுக்கென பிரத்யேகமாய் கட்டப்பட்ட ஸ்விம்மிங் பூல், வாசலில் இருக்கும் பெரிய கோப்பை [அதில் இறங்கிக் குளிப்பாராம் ராஜா!] என நிறைய இருக்கிறது. பொறுமையாய் பார்க்க விடாமல் வெய்யில் தடுக்கும்!

  ReplyDelete
 25. அருமையான தொகுப்பு!நன்றி மோகன்!
  ஆக்ரா போகவில்லை. போகவேண்டும் என்ற ஆவல் எழுந்துள்ளது.

  ரகு, நானும் வந்தார்கள் வென்றார்கள் வாசித்துள்ளேன். முகலாய மன்னர்களைப் ப்ற்றி சுவைபட எழுதியுள்ளார் மதன். வீட்டில் வாங்கி வைத்துக்கொள்ள தகுதியான புத்தகம்.

  ReplyDelete
 26. ரெவெரி said...
  கட்டடங்களின் சிறு பாகங்கள் கூட SYMMETRICAL ஆக கட்டப்பட்டுள்ளது தான்.

  நான் கவனிக்க வில்லை ரெவரி; தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி

  ReplyDelete
 27. சரவணன் சார்: மிக நன்றி

  ReplyDelete
 28. சுரேஷ்: நன்றி

  ReplyDelete
 29. வெங்கட்: டில்லி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் பற்றி இங்கு எழுதும் போதெல்லாம் நிறைய தகவல் சொல்வதற்கு சென்னை வரும்போது ஒரு டிரீட் தரணும் !யாரா? நீங்க தான் ! :-)

  ReplyDelete
 30. நன்றி உமா மேடம். வந்தார்கள் வென்றார்கள் பலரும் வாசிப்பதாய் சொல்வது எனக்கும் வாசிக்கும் எண்ணம் தருகிறது

  ReplyDelete
 31. அன்று வாழ்ந்த மன்னர்கள், இந்திய செல்வத்தை, இந்தியாவின், தலைநகரில் சேர்த்து, இந்தியாவிற்கு என்றும் அழியாத புகழ், சேர்க்க, கூடிய குத்ப் மினார் ,ஆக்ராகோட்டை, டெல்லி செங்கோட்டை, டெல்லி ஜூம்மா மஸ்ஜித் உலகமே வியர்ந்து போற்ற கூடிய தாஜ்மகலை கட்டிய மாமனிதர்களை தான் இன்று சுவிஸ் பேங்கில் இந்திய செல்வத்தை பதுக்கி வைத்துள்ள கூட்டம் மத வெறியர்கள் என்று தூற்றி கொண்டு உள்ளது .உண்மை புதைத்தாலும் வெளி வந்தே தீரும் ,

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...