Sunday, July 22, 2012

சொல்லுங்கண்ணே சொல்லுங்க - ஒரு பார்வை

டிவியில் தற்சமயம் வெளிவருபவற்றில்  ஒரு மிக சிறந்த நிகழ்ச்சி ஆதித்யா டிவியில் வெளிவரும் " சொல்லுங்கண்ணே சொல்லுங்க".

சனி மற்றும் ஞாயிறு மதியம் ஒன்று முதல் இரண்டு வரை இது ஒளிபரப்பாகும். வார நாட்களில் இரவு ஒன்பது முதல் பத்து வரை ஏற்கனவே வந்தவை மறு ஒலிபரப்பு செய்யப்படுகிறது. நாங்கள் அநேகமாய் இதனை பார்க்க தவறுவதே இல்லை.

ஆண்கள், பெண்கள், சிறு குழந்தைகள் என அனைவரையும் சிரிக்க வைத்து விடும் இந்நிகழ்ச்சி.

இதனை நடத்தும் இமான் சற்று பருமனாக, கருப்பாக இருப்பார். திருநெல்வேலி தமிழ். கேட்கவே மிக இனிமையாக இருக்கும். வெள்ளை வேஷ்டியுடன் இவர் போடும் கலர் கலரான சட்டை ஜூப்பரு...!

சில வார்த்தைகளை இவர் உச்சரிப்பது இன்னும் காமெடியாய் இருக்கும். உதாரணமாய் பிரதமரை "Biரதமர் " என்பார். (நம்ம கேப்டன் மாதிரி!)

பொது அறிவு கேள்விகளை சாலைகளில் உள்ள மக்க்களை பிடித்து கேட்கிறார் இமான். அவர்கள் சொல்லும் பதிலும், அதற்கு இமான் கொடுக்கும் கவுண்டரும் சிரிச்சு மாளாது.

உதாரணத்துக்கு :

" சில தலைவர்களோட அடைமொழி சொல்றேன் அவங்க யாருன்னு கண்டுபிடிங்க" என சொல்லிவிட்டு இமான் கேட்ட கேள்விகளும் பதிலும்.

"புரட்சி கவிஞர்னா யாரும்மா?" - இமான்

" வைரமுத்து "

"எலேய் .. வைரமுத்து புரட்சி கவிஞரா? நல்லா தெரியுமா?"

"ம்ம்"

" சரி. வைக்கம் வீரர்னா யாரு"

"காமராஜர்"

" அவரு வைக்கம் வீரரா? பாப்பா.. நீ நல்லா வருவே"
***
இன்னொருவரிடம் " புரட்சி கவிஞர் யாருங்க?"

" பாரதியார்"

"பெருந்தலைவர்னா அது யாரு?"

"கலைஞர்"

"அட. கலைஞரை தான் பெருந்தலைவர்னு சொல்லுவோமா? சரி வைக்கம் வீரர் யாரு "

" காந்தி"

"வைக்கம் வீரர் காந்தியா? நீ எம். ஏ படிச்சிருக்க இல்ல? நீ சொன்னா சரியா தான் இருக்கும்."

****
இன்னொரு நபரிடம் அதே கேள்விகள் " "புரட்சி கவிஞர் என்று யாரை சொல்லுவோம்?"

" கண்ணதாசன்"

"வைக்கம் வீரர் யாரு?

"வைகோ "

"எல்லாரும் நல்லா கேட்டுகிடுங்க வைக்கம் வீரருன்னா அது வைகோ"

****
ஒவ்வொரு பதிலும் சொன்ன பின் இமான் கொடுக்கிற கமன்ட் மற்றும் முகபாவம் அங்கு சுற்றி நிற்கும் அனைவரையும், டிவியில் பார்க்கும் நம்மையும் சிரிக்க வைத்து விடுகிறது. இந்த பிரோக்ராமின் வீடியோ ஒன்றை பாருங்கள் :
பெரும்பாலும் பொது அறிவு கேள்விகள் தான் என்றாலும் சில நேரம் கணவன்- மனைவிகளாய் பார்த்து அவர்களிடம் " உங்க ரெண்டு பேரில் யார் பயந்தாங்கொள்ளி? யார் தைரியசாலி? " என்றெல்லாம் கேள்வி கேட்டு கலாட்டா செய்வார்.

நிகழ்ச்சியின் வெற்றிக்கு ஒரே காரணம்- நிகழ்ச்சி நடத்தும் இமான். செம நகைச்சுவை உணர்வு மனுஷனுக்கு ! பின்னி எடுத்துடுறார் !
சில கேள்விகள் மிக எளிதாக, இதற்கு போய் மக்களுக்கு பதில் தெரியலையா என்கிற ரீதியில் இருக்கும். இன்னும் சில கடினமாய் இருக்கும்.

ஒவ்வொரு நாள் நிகழ்ச்சி முடிவில் Bloopers போல நிகழ்ச்சி படமாக்கும் போது நிகழ்ந்த சுவாரஸ்ய சம்பவங்கள் காட்டுவார்கள்.

நாள் முழுதும் எவ்வளவோ டென்ஷன் இருக்க, இரவில் ( 9 to 10) இந்நிகழ்ச்சி பார்த்து மனம் விட்டு சிரிப்பது நல்ல relaxation-ஆய் உள்ளது !

நிகழ்ச்சியில் நான் விரும்பும் மாற்றம் ஒன்றே ஒன்று தான். நிகழ்ச்சியில் பலரிடமும் கேள்வியை கேட்ட பிறகு அந்த கேள்விக்கான சரியான பதில் சொல்லும் ஒருவரை கடைசியாகவோ, அல்லது நடத்தும் இமானோ சரியான பதில் சொன்னால், பொது அறிவும் நமக்கு டெவலப் ஆன மாதிரி இருக்கும்.

சொல்லுங்கண்ணே சொல்லுங்க -பாருங்கண்ணே பாருங்க !

***
வல்லமை ஜூலை 18 , 2012 இதழில் வெளியானது !
***
இது ஆறாவது வாரம் ...! உங்களால் தான் இது சாத்தியமானது ! நெஞ்சார்ந்த நன்றி  !!

      புதுப்பிக்கப்பட்ட நாள் : 2012-07-22      
வலைப்பதிவுகளின் முன்னணி பட்டியில் ஒவ்வொரு ஞாயிறும் வெளியிடப்படும். கடந்த ஏழு நாட்களில் வலைப்பதிவுகள் வாசகர்களிடம் பெற்ற பார்வைகளை (ஹிட்ஸ்) முதன்மையாக கொண்டு இந்தப் பட்டியல் வெளியிடப்படுகிறது. மறுமொழிகள், வாசகர் பரிந்துரை வாக்குகள் போன்றவையும் ஒரு காரணியாக இருக்கும்

54 comments:

 1. வாழ்த்துக்கள் தமிழ்மணத்தில் முதல் இடத்துக்கு !

  இந்த நிகழ்ச்சியை நானும் தவற விடுவதில்லை அருமையான நிகழ்ச்சி

  ReplyDelete
 2. அப்பா ரொம்பவே விரும்பி பார்ப்பார்.

  சில பதில்களை கேட்கும்போது, சிரிப்பைவிட, இது கூட தெரியாம இருக்காங்களேன்னு வருத்தப்படுவதுமுண்டு.

  த.ம.க்கு வாழ்த்துகள் :).

  ReplyDelete
 3. இந்த நிகழ்ச்சி நான் பார்த்ததில்லை..ஆனா மக்கள் தொலைகாட்சில இவரோட நிகழ்ச்சி பார்த்திருக்கேன்! மணம் விட்டு சிரிக்கலாம்!

  தொடர்ந்து முதலிடத்தில் நீடிப்பது சாதாரனமில்லை..,வாழ்த்துக்கள் மோகன் சார்!

  ReplyDelete
 4. இந்த நிகழ்சியினை நானும் தொடர்ந்து பார்க்கிறேன்
  ரசிக்கும்படியாக உள்ளது
  அதே சமயம் பள்ளிக் குழந்தைகளின் பொது அறிவுத்திறன்
  அச்சமூட்டியும் போகிறது
  தொடர்ந்து ஒன்றில் நிலைக்க மனமார்ந்த
  நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. முதல்ல இவரு கொஞ்சம் அரட்டை கொஞ்சம் சேட்டைல கொஞ்சமா சேட்டை பண்ணிட்டிருந்தார்.,இப்போ ஆதித்யால செமையா கலக்குறார்,நானும் பாப்பேன்.நானும் கேக்கும் கேள்விக்கு திரையில் விடை போட்டால் நல்லாருக்கும்னு நினைப்பேன்.

  "ஒரே இரத்தம்"

  ReplyDelete
 6. தமிழ்மணத்தில் முதல் இடம் மோகன் சார் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 7. இந்த நிகழ்ச்சி சில சமயம் மகிழ்ச்சியாக இருக்கும்... அதே சமயம் சிறு பிள்ளைகளுக்கு தெரியும் சாதாரண கேள்விற்கான பதிலை சொல்ல, பெரியவர்கள் திணறுவது தான் வேடிக்கை...

  தமிழ்மணத்தில் முதல் இடத்திற்கு வாழ்த்துக்கள்...

  (த.ம. 6)

  ReplyDelete
 8. ஹி ஹி ... நானும் அடிக்கடி விரும்பிப் பார்க்கும் நிகழ்ச்சி இது பாஸ். ஆனா சில நேரங்களில் பதில் சொல்றவங்க இமானை கடிப்பதாக எண்ணி மொக்கை போடும் போது தான் காண்டாகும்.

  தமிழ்மண ரேங்கிங் மாறிடுச்சு போல பாஸ். :(

  ReplyDelete
 9. Anonymous2:27:00 PM

  தொடர்ந்து ஆறு வாரங்கள் நம்பர் ஒன் இடம் பிடிப்பது மிகப்பெரிய விஷயம். இந்த வெற்றிக்கு உங்கள் அருமையான எழுத்து நடையும், தீவிர உழைப்புமே காரணம். செம. நன்றிகள். வாழ்த்துகள்.

  ReplyDelete
 10. ஹாலிவுட் ரசிகன்: தமிழ் மண வருடாந்திர ரேங்கிங் பல வாரங்கள் இயங்காமல் இருந்து இப்போது தான் இயங்க ஆரம்பித்துள்ளது. நீங்கள் சொல்வது அதை தான் என நினைக்கிறேன்

  ஆனால் ஒவ்வொரு ஞாயிறன்று அவர்கள் "இவ்வார டாப் 20 ப்ளாகுகள்" என ஒரு லிஸ்ட் வெளியிடுகிறார்கள். இந்த வாராந்திர டாப் 20-ல் தான் வீடுதிரும்பல் ஆறு வாரங்களாக முதலிடத்தில் உள்ளது

  நன்றி ஹாலிவுட் ரசிகன் !

  ReplyDelete
 11. நல்ல ஒரு நிகழ்ச்சி பாராட்டலாம், அதுபோல விடைகளையும் சொன்னால் இன்னும் நல்லா இருக்கும்...!

  ReplyDelete
 12. இது மக்கள் தொலைக்காட்சியிலிருந்து ஆதித்யா சுட்டுக்கொண்ட நிகழ்ச்சி. மக்களில் வந்தபோது முன்னர் திரையில் விடையில்லாமல் வந்தபோது அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பினேன். அதன் பின்னர் விடைகளை திரையில் காட்டியதாக ஞாவகம்.

  இப்போது நீங்கள் மணி கட்டியிருக்கிறீர்கள். பார்ப்போம் ஆதித்யா செவி மடுக்கிறதா என.

  ReplyDelete
 13. நன்றி பிரேம் நீங்களும் ரசித்து பார்கிரீர்களா? மகிழ்ச்சி

  ReplyDelete
 14. நானும் பார்த்து ரசித்திருக்கிறேன்.

  ReplyDelete
 15. மகிழ்ச்சி ரகு நன்றி

  ReplyDelete
 16. நன்றி வரலாற்று சுவடுகள். மக்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சி போலவே தான் இதுவும். அங்கு தமிழ் கலப்பின்றி பேசுவதில் அதிக கவனம் செலுத்தினார்கள் என நினைக்கிறேன்

  ReplyDelete
 17. நன்றி ரமணி சார்

  ReplyDelete
 18. கோகுல்: நன்றி

  ReplyDelete
 19. வலங்கை சரவணன் : நன்றி

  ReplyDelete
 20. உண்மை தான் தனபாலன் சார் நன்றி

  ReplyDelete
 21. நன்றி மனோ

  ReplyDelete
 22. நன்றி இந்தியன். நம்ம ப்லாகை எல்லாம் ஆதித்யா / சண் டிவி மக்கள் பார்ப்பாங்களா என்ன?

  ReplyDelete
 23. டிவி நிகழ்ச்சிகள் அதிகம் பார்ப்பதில்லை. இது போன்றவை, பொறுமை இருப்பதில்லை:)!

  முதலிடத்துக்குப் பின் நிறைய உழைப்பு உள்ளது. வாழ்த்துகள்!

  ReplyDelete
 24. இவரு முதல மக்கள் டிவியில இருந்தார்..இப்ப ஆதித்யா டிவிக்கு மாறிட்டார்...சில நேரத்துல நல்லா பண்ணுவார்..ஆனா சில நேரத்துல மொக்கையா இருக்கும்...
  அப்புறம் சார், தமிழ்மணத்தில் தொடர்ந்து முதல் இடம் பிடித்ததற்கு வாழ்த்துக்கள்.... :) தரமான பதிவுகளை தருகிறேர்கள்....

  ReplyDelete
 25. நானும் அடிக்கடி பார்த்து ரசிக்கும் நிகழ்ச்சி. சிலர் வேண்டுமென்றே தவறான மற்றும் கிண்டலான பதில் கொடுத்து அவரையும் கலாய்ப்பார்கள்.

  இமான் அண்ணாச்சி முதலில் மக்கள் டிவியில் இருந்தவர். 'கொஞ்சம் அரட்டை கொஞ்சம் சேட்டை' நிகழ்ச்சியில் அவர் வந்து இதே போன்று கேள்விகள் கேட்பார். அப்போதே இவரை ரசித்து விட்டு 'எங்கள் ப்ளாக்'கிலும் சொல்லியிருந்தோம். அப்போது வெள்ளை பேன்ட் வெள்ளை ஷர்ட் ஒரு துண்டுதான் அவர் காஸ்டியூம். ஆங்கில வார்த்தைகள் உபயோகிக்க மாட்டார். அவரை சன் டிவி கொத்திக் கொண்டு வந்து விட்டது. என்னதான் கலாட்டா நிகழ்ச்சியாக இருந்தாலும் சரியான விடை சொல்பவர்களையும் குழப்பி தவறு போலக் காட்டுவது தவறு என்று அவரிடம் சொல்லவேண்டும். நிகழ்ச்சி கொஞ்சம் செயற்கையாகப் போய்க் கொண்டிருக்கிறது. (இவர் சில படங்களிலும் சீரியல்களிலும் கூட நடி[த்திரு]க்கிறார் )

  ReplyDelete
 26. ஆதித்யாவிலே குறிப்பிட்டு சொல்லகூடிய நிகழ்ச்சி.. ஒரு முறை எந்த எந்த கோவில்களில் எந்த மரம் இருக்கும் என்று கேட்டு ஒரு நிகழ்ச்சி நடத்தினார்.. சிரித்து ஏலாமல் பொய் விட்டது.. நல்ல பதிவு அண்ணா..

  ReplyDelete
 27. முரளி சார்: நன்றி

  ReplyDelete
 28. ராமலட்சுமி மேடம்: நன்றி மகிழ்ச்சி

  ReplyDelete
 29. ஸ்ரீராம் said

  // என்னதான் கலாட்டா நிகழ்ச்சியாக இருந்தாலும் சரியான விடை சொல்பவர்களையும் குழப்பி தவறு போலக் காட்டுவது தவறு என்று அவரிடம் சொல்லவேண்டும். //

  மிக சரியாக சொன்னீர்கள் ஸ்ரீராம் . அதை பார்க்கும் போது இமானுக்கும் கேள்வி மட்டும் தான் தெரிகிறது; பதில் தெரியவில்லை என நினைத்து கொள்வேன்

  ReplyDelete
 30. நன்றி ராஜ். தங்கள் வார்த்தைகள் மகிழ்ச்சி தருகிறது

  ReplyDelete
 31. நன்றி ஹாரிபாட்டர். மிக மகிழ்ச்சி

  ReplyDelete
 32. Anonymous8:23:00 PM

  ஆறாவது வாரம் தொடர்ந்து முதலிடத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 33. மக்கள் டீவியில் இமானை ரசித்திருக்கிறேன்! எங்களூரில் ஆதித்யா ஒளிபரப்பு ஆவதில்லை! அரசு கேபிள் வந்தபின் சன் மட்டும் வருகிறது.

  ReplyDelete
 34. மக்கள் டிவியில் தான் இந்த ப்ரோக்ராம் பார்த்து இருக்கிறேன்..இப்போ ஆதித்யா...விலைக்கு வாங்கிட்டாங்களோ..?

  ReplyDelete
 35. நல்ல நிகழ்ச்சி. தில்லியில் நண்பர் ஒருவர் இமான் அண்ணாச்சிக்கு விசிறி... Fan Club ஆரம்பிக்க யோசிச்சுட்டு இருக்கார்! :)

  ReplyDelete
 36. அண்ணாச்சி நாங்களும் பார்கொமுல்லா(நானும் அவர் மாவட்டம் தான்)எனக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சி..
  தொடர்ந்து முதலிடத்தில் நீடிப்பது சாதாரணமில்லை..,வாழ்த்துக்கள் மோகன் சார்.......

  ReplyDelete
 37. இந்த நிகச்சியை டிவி யில் பார்த்ததில்லை.ஆனால் இணையத்தில் பார்த்திருக்கிறேன். மண்ணின் வாசனையோடு அவர் பேசுவது மிக அருமை.

  ReplyDelete
 38. This comment has been removed by the author.

  ReplyDelete
 39. இங்க கொடுத்திருக்கிற வீடியோவைப் பார்க்கும்போது, சிரிப்பைவிட, இதுகூடத் தெரியலையேன்னு வருத்தம்தான் வருது. ஒருசிலர், பதில் தெரிந்தாலும் அவரைக் கலாய்ப்பதற்காகவே தவறாச் சொல்றாங்களோ?

  இந்தியாவின் நாலு பக்கமும் பீச்னு சிரிக்காம சொன்ன அம்மணி - நெஜமாச் சொல்றாங்களா, கலாய்க்கிறாங்களான்னு கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்க.

  ReplyDelete
 40. தொடர்ந்து 6 வாரம்... உங்கள் உழைப்புக்கு கிடைத்த வெற்றி அண்ணே... கண் விழித்து எழுதியதற்கான அங்கீகாரம்... வாழ்த்துக்கள் அண்ணா...

  ReplyDelete
 41. மெட்ராஸ்பவன் சிவகுமார்: தங்கள் மனம் திறந்த பாராட்டு மிக மகிழ்ச்சி தருகிறது நன்றி தம்பி (நேற்று மற்றவர்களுக்கு பதில் தருகையில் உங்கள் பெயர் விடுபட்டு விட்டது)

  ReplyDelete
 42. பாலஹனுமான் சார்: மிக நன்றி

  ReplyDelete
 43. சுரேஷ்: அடடா ! ஆதித்யா வருவதில்லையா? சரி !

  ReplyDelete
 44. கோவை நேரம்: ஆம் சன்னுக்கு இது தானே வழக்கம்?

  ReplyDelete
 45. வெங்கட் நாகராஜ்: நன்றி யார் அந்த நண்பர்? நமக்கு தெரிஞ்சவரா?

  ReplyDelete
 46. சித்தார்த்தன்: மிக மகிழ்ச்சி நண்பரே

  ReplyDelete
 47. மணிமாறன்: ஆம் நன்றி

  ReplyDelete
 48. ஹுஸைனம்மா said...

  . ஒருசிலர், பதில் தெரிந்தாலும் அவரைக் கலாய்ப்பதற்காகவே தவறாச் சொல்றாங்களோ?

  ****

  ஆம் ஆனால் அது வெகு சிலர் தான். தவறாய் பதில் சொல்வோரை மட்டும் எடிட் செய்து போடுகிறார்கள் போலும் அப்போ தான் காமெடியா இருக்கும் என

  ReplyDelete
 49. சங்கவி: தங்கள் பாராட்டு மிக மகிழ்ச்சி தருகிறது. இரவெல்லாம் விழித்து எழுதுவதில்லை. பெரும்பாலும் சனி, ஞாயிறு பகல் நேரம் தான் எழுதுவேன்

  காலை, மதியம், இரவு என டாக்டர் மாத்திரை சாப்பிட சொல்லுற மாதிரி சனி, ஞாயிறுகளில் மூணு வேளையும் குறைந்தது மூணு பதிவாவது எழுதிடுவேன் :)

  நன்றி.

  ReplyDelete
 50. நிகழ்ச்சியில் நான் விரும்பும் மாற்றம் ஒன்றே ஒன்று தான். நிகழ்ச்சியில் பலரிடமும் கேள்வியை கேட்ட பிறகு அந்த கேள்விக்கான சரியான பதில் சொல்லும் ஒருவரை கடைசியாகவோ, அல்லது நடத்தும் இமானோ சரியான பதில் சொன்னால், பொது அறிவும் நமக்கு டெவலப் ஆன மாதிரி இருக்கும்.///இந்த ஆதங்கம் எனக்கும் இருக்கு

  ReplyDelete
 51. நிகழ்ச்சியில் நான் விரும்பும் மாற்றம் ஒன்றே ஒன்று தான். நிகழ்ச்சியில் பலரிடமும் கேள்வியை கேட்ட பிறகு அந்த கேள்விக்கான சரியான பதில் சொல்லும் ஒருவரை கடைசியாகவோ, அல்லது நடத்தும் இமானோ சரியான பதில் சொன்னால், பொது அறிவும் நமக்கு டெவலப் ஆன மாதிரி இருக்கும்.///இந்த ஆதங்கம் எனக்கும் இருக்கு

  ReplyDelete
 52. நம்ம வீட்டில தெரியாதுங்க...ENZOY..

  ReplyDelete
 53. இமான்(இம்மானுவேல்) எங்க ஊர்க்காரர்தான். நானும் என் மகளும் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சி. ஒருசில சாதாரண கேள்விகளுக்குகூட விடையை தவறாக சொல்லும் இளவயதினரை பார்க்கும் போது கொஞ்சம் கோபம் வரும்.
  வாழ்த்துக்கள் தமிழ்மணத்தில் முதல் இடம் பெற்றதற்கு!

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...