Thursday, July 19, 2012

கிருஷ்ணர் பிறந்த மதுரா கோவிலும், பணிக்கர் டிராவல்சும்-அனுபவம்

க்ரா௦- டில்லி இரு ஊர்களுக்கும் நடுவே உள்ளது மதுரா. டில்லி- ஆக்ரா நேஷனல் ஹைவேயில் இருந்து உள்ளே இறங்கி சில கிலோ மீட்டர்கள் சென்றால் வரும் சிறிய ஊர் தான் மதுரா.

கடைகள் இங்கு மிக குறைவு. இருப்பனவும் மிக சிறிய கடைகள் தான்.

கோயிலை ஒட்டி ஒரு குளம் உள்ளது. இந்த குளத்தில் தான் கம்சன் கிருஷ்ணனுக்கு முன் பிறந்த குழந்தைகளை போட்டு கொன்றதாக ஐதீகம். அதனால் இந்த குளத்தை யாரும் பார்ப்பதோ, செல்வதோ இல்லை என்கிறார்கள்

கோயிலில் சூடம் காட்டுவதோ, குங்குமம் போன்றவை தருவதோ இல்லை. ஆரத்தி என்கிற ஆராதனை ஒரு நாளைக்கு குறிப்பிட்ட சில நேரங்களில் மட்டுமே செய்வார்கள். அப்போது தான் தீபாராதனை காட்டுவார்களாம்.

கோயிலுக்கு செல்லவோ, செருப்பு வைக்கவோ எதற்கும் பணமில்லை. கோயிலுக்கு அருகே உள்ள கடைகளில் பொதுவாய் தண்ணீர், பிஸ்கட் போன்றவை விலை சற்று அதிகம் விற்பார்கள். ஆனால் இங்குள்ள தனியார் கடைகளில் தண்ணீர் பாட்டில் விலை கம்மியாய் விற்கிறார்கள் .. இது ஆச்சரியமாய் இருந்தது

அருகருகே கிருஷ்ணர் பிறந்த கோவிலும், மசூதியும்
மதுராவில் கிருஷ்ணர் பிறந்த இடத்துக்கு அருகிலேயே ஒரு மசூதி உள்ளது. இப்படி அடுத்தடுத்து இந்து மற்றும் முஸ்லீம் மசூதி இருப்பதால், பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு இவை இரண்டுக்கும் மிக அதிக பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. உள்ளே நுழையும் போது செம செக்கிங் நடக்கிறது.

இந்த கோவில் பற்றி விக்கிபீடியாவில் படிக்கும்போது சில தகவல்கள் மனதை தைக்கிறது. அவுரங்கசீப் இந்த கோவிலின் பெரும்பகுதியை இடித்து விட்டு அதன் அருகிலயே மசூதி கட்டினார் என்பதும் பின் 1965-ல் மீண்டும் இந்த இடம் இந்துக்களின் புனித இடம் என கிருஷ்ணர் கோவில் கட்டப்பட்டதாகவும் தெரிகிறது.

கோவில் நுழைவாயில்
பகல் நேரத்தில் சென்றால் இங்குள்ள பிரகாரங்களில் நடக்க ஏதுவாக திக் சாக்ஸ் போட்டு செல்வது நல்லது.

பூசாரிகள் மஞ்சள் சட்டை, மஞ்சள் வேஷ்டி அணிந்து பேசாமல் அமர்ந்துள்ளனர். ஆரத்தியில் போது மட்டுமா தான் இவர்களுக்கு வேலை போலும்.

கிருஷ்ணர் பிறந்த இடத்தை "பால கிருஷ்ணா " இடம் என்கின்றனர். பின் மனைவியுடன் உள்ளதை ராதா-கிருஷ்ணா இடம் என்கின்றனர். எங்கள் பஸ்ஸில் வந்த கைடு இது பற்றி ஆங்கிலத்தில் சொன்னதை அப்படியே தருகிறேன்:

“ Krishna borning this place. Here three Krishna. First Krishna Bala Krishna. Second Krishna Birth Krishna. Third Krishna Radha Krishna. Birth of Krishna only here”

இப்படி "தெளிவாக" விளக்கினார் கைடு :))

கிருஷ்ணர் பிறந்த இடத்துக்கு மிக குறுகலாக உள்ள இடம் வழியே செல்கிறோம். கிருஷ்ணர் பிறந்தது ஒரு சிறையின் அறைக்குள்அல்லவா? அதனால் தான் அந்த இடம் மிக குறுகலாக உள்ளது. சுவற்றில் கிருஷ்ணர் பிறந்த போது நிகழ்ந்த சம்பவங்கள் படம் வடிவில் உள்ளன. கிருஷ்ணர் பிறந்த தொட்டில் போன்றவை அங்கு உள்ளன.அதை அனைவரும் பக்தியுடன் தொட்டு வணங்குகின்றனர். " கிருஷ்ண பகவான்க்கி ஜே" " கிருஷ்ண பரமாத்மாக்கி ஜே " என்று மக்கள் உரக்க குரல் கொடுக்கின்றனர்.

கிருஷ்ணர் தன் துணையுடன் கவுன் போன்ற பெரிய உடை அணிந்து காட்சி தருகிறார்.

மதுராவில் நிறைய மாடுகள் இன்றும் பலரும் வளர்ப்பதை காண முடிகிறது. பால் கோவா இங்கு மிக அருமையாய் இருக்குமாம்.

மதுராவில் லஸ்ஸி மிக பாப்புலராம். தேவா குடிக்கலாம் என்றபோதும் நான் பஸ்ஸில் செல்வதால் வயிறு புரட்டும் என வேண்டாம் என்று சொல்லி விட்டேன். மதுரா போய் விட்டு    லஸ்ஸி குடிக்கலையா என சில நண்பர்கள் ஆச்சரியமாய் கேட்டனர்.

*****************
பனிக்கர் டிராவல்ஸ்

நாங்கள் பனிக்கர் டிராவல்ஸ் மூலம் ஆக்ரா கோட்டை, தாஜ் மஹால் மற்றும் மதுரா சுற்றி பார்த்தோம். தேவா முன்பே இதில் ஆன்லைனில் ரிசர்வ் செய்து வைத்திருந்தான்.
நாற்பது பேர் அமரும் பஸ்ஸில் மூன்று டிவி கொஞ்சம் கொஞ்சம் தூரம் விட்டு வைத்திருந்தனர். ஹிந்தி சினிமா மட்டுமல்லாது, டிவி கனக்ஷனும் உள்ளது. மாலை ஐ.பி. எல் மேட்ச் பார்த்து கொண்டே வந்தோம்.

ஆக்ரா கோட்டை, மதுரா ஆகிய இடங்களுக்கு கைடு வந்தார். தாஜ் உள்ளே கைடு அனுமதி இல்லை என்பதால் வரலை. அவர்கள் வந்த இடங்களில்

எல்லாம் உள்ளே செல்வதற்கான டிக்கெட் நம்மிடம் பணம் வாங்கி மொத்தமாய் வாங்கி தந்து விடுகிறார்கள். இதனால் அதற்கு கியூவில் நிற்கும் தொந்தரவு இல்லை.

பனிக்கர் மூலம் பயணிப்போர் பெரும்பாலும் தென் இந்தியர்கள் என்பதால் காலை மற்றும் மதியம் இரண்டு வேளையும் தென்னிந்திய உணவு ஏற்பாடு செய்தது பாராட்ட வேண்டிய விஷயம் !

போலவே பெரும்பாலான இடங்களில் அவர்கள் சொன்ன டைமுக்கு மக்கள் திரும்ப வந்து விட்டனர். அவர்களும் சொன்ன நேரத்துக்கு (அதிக பட்சம் ஐந்து அல்லது பத்து நிமிட வித்யாசம்) வண்டியை எடுத்து விட்டனர்.

வீடுதிரும்பல் பரிந்துரை:

1 .இந்துக்கள்/ கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் மதுரா நிச்சயம் செல்லுங்கள்.

2. பனிக்கர் டிராவல்ஸ் நம்பகமான நிறுவனம். நிச்சயம் செல்லலாம்.
*****

வல்லமை ஜூலை 11 இதழில் வெளியானது !

46 comments:

 1. இனிமையான பயணத்தை அருமையாக சொல்லி உள்ளீர்கள்... படங்களும் அருமை..

  கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் : பனிக்கர் டிராவல்ஸ் நம்பகமான நிறுவனம் !

  பகிர்வுக்கு நன்றி...
  தொடருங்கள்...வாழ்த்துக்கள்... (த.ம. 3)

  ReplyDelete
 2. வட இந்தியாவின் அனைத்து கோவில்களிலும் ”ஆர்த்தி”க்கென தனி சமயம் உண்டு. காலையிலும் மாலையிலும் அந்த நேரத்தில் மட்டுமே அவை. மற்ற நேரங்களில் வருபவர்களுக்கு “டிக்கா” [பொட்டு] வைத்து விடுவதோடு பூஜாரிகள் வேலை முடிந்தது.

  மதுரா ”பேடா” மிகவும் பிரபலம். பெருமாலான கைடுகள் ஆங்கில அறிவு இல்லாதவர்கள். நமக்கு ஹிந்தி தெரிந்திருந்தால் மிக நல்லது. ஹிந்தியில் பல விஷயங்களை அழகாய் சொல்லுவார்கள்.... கிருஷ்ணர் பிறந்த இடம் [சிறை] தற்போது மசூதிக்குள் தான் இருக்கிறது.....

  பனிக்கர் டிராவல்ஸ் நல்ல நிறுவனம் தான். நிறைய முன்னேறி இருக்கிறது சென்ற இருபது வருடங்களில்.... :)

  நல்ல பகிர்வு மோகன். வாழ்த்துகள்.

  ReplyDelete
 3. நல்லபதிவு.

  மதுராவில் ஸ்ரீகிருஷ்ணா ஜன்மஸ்தான் மட்டுமில்லாமல் கொஞ்ச தூரத்தில் கோகுலம் இருக்கிறது. இங்கேதான் நந்தன் யஷோதாவின் வீடு.

  விருந்தாவன் (ஒரு எட்டு கிலோமீட்டர் தூரமே) போனால் ராஸலீலா நடந்த இடமும், யமுனை ஆற்றின் கரையில் கம்ஸனை வதம் செய்தபின் ஓய்வெடுத்த இடமும் உண்டு. இன்னும் அநேக கோவில்களும்.

  கோவர்தனகிரியைக் குடையாகத் தூக்கினான் என்று சொல்கிறார்களே... அந்த கோவர்தனகிரியையும் தரிசிச்சு மதுராப் பயணத்தை அனுபவிக்கலாம்.

  ட்ராவல்ஸ் ஏற்பாடென்றால் என்னென்ன இடம் காண்பிப்பார்கள் என்று தெரியலை.

  துளசிதளத்தில் மதுராப் பயணம் 12 பகுதிகள் இருக்கின்றன.

  ReplyDelete
 4. //ட்ராவல்ஸ் ஏற்பாடென்றால் என்னென்ன இடம் காண்பிப்பார்கள் என்று தெரியலை.//
  Travels-களில் இரண்டு விதமான ஏற்பாடுகளைச் செய்கிறார்கள். ஒன்றின் ஒரு நாள் பயணம் (ஆக்ரா, தாஜ்மஹால், மதுரா என்று முக்கிய இடங்களுக்கு மட்டும்). மற்றொன்று இரண்டு நாள் பயணம் அதில் வி(பி)ருந்தாவனமும் அடங்கும்.

  வெங்கட் கூறியபடி பனிக்கரில் நிறைய முன்னேற்றங்கள் நடந்திருக்கிறது போலும். நான் (பனிக்கரில்) சென்று 15 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.

  மீண்டும் பழைய சம்பவங்களை நினைத்துப் பார்க்கத் தூண்ட வைத்த பதிவு. நன்றிகள்.

  ReplyDelete
 5. நின்னு நிதானமாச் சுற்றிப்பார்த்து ரசிக்க இப்படி ஒருநாள் ரெண்டுநாள் எல்லாம் சரிப்படாதே:(

  ReplyDelete
 6. உங்கள் இணையத்தை மேலும் பிரபலப் படுத்த / அதிக வாசகர்களைப் பெற உங்கள் பதிவுகளை தமிழ்10 தளத்தில் இணையுங்கள் . ஓட்டளிப்பில் புதிய மாற்றம் செய்யப்பட்டு இருப்பதால் இப்போது தரமான பதிவுகள் அனைத்தும் முன்பை விட விரைவிலேயே பிரபலமான பக்கங்களுக்கு வந்து விடும் .தளத்தை இணைக்க இங்கே செல்லவும்
  பதிவுகளுக்கு எளிதாக வாக்களிக்க ஓட்டளிப்புப் பட்டையை இணைக்க மறவாதீர்கள் .


  http://www.tamil10.com/  ஒட்டுப்பட்டை பெற  நன்றி

  ReplyDelete
 7. அருமையான பகிர்வு. கிருஷ்ணர் பிறந்த இடத்தையெல்லாம் பார்க்க கொடுத்து வச்சிருக்கனுமே.

  ReplyDelete
 8. கைடு உங்களுக்கு எப்படி விளக்கினாரோ தெரியல ஆனா நீங்க எங்களுக்கு விளக்கும் விதம் அருமை...

  பயணங்கள் மனதை இனிமையாக்குவது போல் பயணக்கட்டுரையும் இனிதாக்குகிறது...

  ReplyDelete
 9. படமும் உங்கள் எழுத்து நடையும் அந்த இடத்திற்கே அழைத்து சென்ற உணர்வளித்தது.

  ReplyDelete
 10. // நின்னு நிதானமாச் சுற்றிப்பார்த்து ரசிக்க இப்படி ஒருநாள் ரெண்டுநாள் எல்லாம் சரிப்படாதே:(//

  ஆம். நீங்கள் சொல்வதும் சரிதான். ஆனால் இந்தியாவில் பொதுவாக சுற்றிப்பார்க்க நினைப்பவர்கள் 1-2 நாளில் ஒரு பெரிய வேன் ஏற்பாடு செய்து 15-20 இடங்களைப் பார்ப்பதைத் தானே வழக்கமாக வைத்துள்ளோம். வெளிநாட்டுக்காரர்களைப் போல் ஒரு தீம் டூர் செலவதெல்லாம் இங்கே நடப்பதில்லையே.

  ReplyDelete
 11. வழக்கம் போலவே அருமையான புகைப்படங்களுடன் தரமான பதிவு! அவசியம் பார்க்க வேண்டிய திருத்தலங்களுள் ஒன்று!

  ReplyDelete
 12. நன்றி தனபாலன் சார்

  ReplyDelete
 13. வழக்கம் போல் கூடுதல் தகவல்கள் தந்தீர்கள் மிக மகிழ்சியும் நன்றியும் வெங்கட்

  ReplyDelete
 14. துளசி மேடம். அடேங்கப்பா ! மதுரா பற்றி 12 பதிவுகளா? அவசியம் பின்னர் வாசிக்கிறேன்

  ReplyDelete
 15. சீனி: மிக மகிழ்ச்சி நன்றி

  ReplyDelete
 16. இரவு வானம்: நன்றிங்க

  ReplyDelete
 17. சங்கவி: பயண கட்டுரை பிரியரே: நன்றி

  ReplyDelete
 18. சசிகலா: நன்றியும் மகிழ்ச்சியும்

  ReplyDelete
 19. நன்றி நண்பர் வரலாற்று சுவடுகள்

  ReplyDelete
 20. பயண கட்டுரை யும் படங்களும் நல்லாருந்துச்சு மோகன் சார் பாராட்டுக்கள்

  ReplyDelete
 21. படங்களும் தகவல்களும் அருமை. தேவையானவருக்கு பயனாகும் வகையில் டிராவல்ஸ் விவரமும் கொடுத்திருப்பது நன்று.

  ReplyDelete
 22. படங்களுடன் சுவாரஸ்யமான பதிவு. வெங்கட், துளசி மேடம் பின்னூட்டங்களிலிருந்து இன்னும் மேல் விவரங்களும் கூடத் தெரிந்து கொள்ள முடிந்தது.

  ReplyDelete
 23. பயண அனுபவங்கள் அருமை! சிறப்பான புகைப்படங்களையும் பகிர்ந்து மதுரா தரிசனம் கிட்டசெய்தமைக்கு நன்றி!

  ReplyDelete
 24. பயண அனுபவம்...நன்றாக உள்ளது..

  ReplyDelete
 25. Very informative post.. thanks

  //1).இந்துக்கள்/ கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் மதுரா நிச்சயம் செல்லுங்கள்.

  2. பனிக்கர் டிராவல்ஸ் நம்பகமான நிறுவனம். நிச்சயம் செல்லலாம். //

  Thanks for specific points.. it will be complete if just one more information is furnished..

  ie.. 'who will fund this tour, so that I can also enjoy..?'

  ReplyDelete
 26. This comment has been removed by the author.

  ReplyDelete
 27. பயண பதிவு அருமை. மொகலாயர்கள் அழித்த இந்துக் கோவில்கள் எண்ணிக்கையில் அடங்காதது. மதுரா என் வாழ்க்கையில் போக நினைத்திருக்கும் ஒரு இடம். இறைவனின் எண்ணம் எப்படி என்று பார்ப்போம்.

  ReplyDelete
 28. interesting view mohan!

  still i remember ur article about your 2nd class ac journey to hyderabad. so we can expect more article like this!

  ReplyDelete
 29. Anonymous11:58:00 PM

  காலையிலே வாசிச்சேன்...தமிழ்ல எழுத முடியாதால ஓடிட்டேன்...

  இது நான் பார்க்காத ஸ்தலம்...தொடருங்கள்...

  அடுத்த பயணம் எங்க?

  சிண்டு முடிப்பு: குடும்பத்தை எங்கேயும் கூட்டிட்டு போக மாட்டீங்களா மோகன்? -:)

  ReplyDelete
 30. நன்றி ராமலட்சுமி மேடம்

  ReplyDelete
 31. ஸ்ரீராம்
  //துளசி மேடம் பின்னூட்டங்களிலிருந்து இன்னும் மேல் விவரங்களும் கூடத் தெரிந்து கொள்ள முடிந்தது.//

  ஆம் நன்றி

  ReplyDelete
 32. முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மணிமாறன்

  ReplyDelete
 33. மாதவா: நம்ம அடுத்த டூரை படிக்கிற நீங்கல்லாம் ஸ்பான்சர் பண்ணா நல்லாருக்கும் எப்புடி?

  ReplyDelete
 34. அமரபாரதி உண்மை நன்றி

  ReplyDelete
 35. ஷர்புதீன்: நன்றி. அது பர்ஸ்ட் ஏ. சி பயண அனுபவம் ( செகண்ட் ஏ சிக்கும் தேர்ட் ஏசிக்கும் பெரிய வித்யாசம் இல்லேங்கலே)

  ReplyDelete
 36. ரெவரி: இந்த இடங்கள் எல்லாம் குடும்பத்துடன் தான் சென்றேன். அவர்கள் படங்கள் ப்ளாகில் பகிர்வதில்லை. நான் இருக்கும் படங்கள் மனைவி அல்லது மகள் எடுத்தது தான்

  பெரும்பாலான பயணம் குடும்பத்துடன் தான். வெகு சில மட்டுமே நண்பர்களுடன்

  ReplyDelete
 37. ஸ்ரீராம்,

  வெறும் பின்னூட்டம் பார்த்துத் தெரிஞ்சுக்க முடியுமா?

  இந்தச் சுட்டியில் இருந்து நூல்பிடிச்சு மேலேறிப் போகலாமே!

  http://thulasidhalam.blogspot.co.nz/2010/11/blog-post_22.html

  ReplyDelete
 38. அரு7மையான பதிவு.
  வாழ்த்துகள்.

  ReplyDelete
 39. தகவலுக்கு:
  http://generationneeds.blogspot.com/2012/07/blog-post_20.html

  //கிருஷ்ணன் பிறந்த தொட்டில்//

  Interesting!! எத்தனை ஆண்டு பழையது? எப்படி இருக்கிறது? ஏன் படம் போடவில்லை? அட்லீஸ்ட் வார்த்தைகளிலாவது விவரித்திருக்கலாம்.

  ReplyDelete
 40. என்னங்க ஹுஸைனம்மா,

  தொட்டிலில் எப்படி குழந்தை பிறக்கும்?
  பிறந்த குழந்தையைத்தான் தொட்டிலில் போடுவாங்க இல்லையா?

  மதுராவில் ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்த காராக்ரஹத்தில் ஒரு மேடை மட்டுமே இருந்துச்சு நான் பார்த்தபோது.

  கம்சன்தான் குழந்தை பிறந்தவுடன் வந்து கொன்னு போட்டுருவானே. தொட்டில் வச்சுத் தாலாட்ட விட்டுருப்பானா?

  ReplyDelete
 41. நடராசன் ஐயா: மிக நன்றி

  ReplyDelete
 42. ஹுசைனம்மா: கோவிலுக்குள் காமிரா மட்டுமல்ல, மொபைல் கூட அனுமதி இல்லை. அதான் படம்
  எடுக்க முடியலை

  தொட்டிலை அவ்வளவு ஊன்றி நான் கவனிக்கலை. துணியெல்லாம் போட்டு அலங்காரம் செய்திருந்த மாதிரி நியாபகம்.

  ReplyDelete
 43. //தொட்டிலில் எப்படி குழந்தை பிறக்கும்? //

  டீச்சர், அவ்வ்வ்வ்...!! :-)))))
  குழந்தையைத் தாலாட்டிய தொட்டில் என்ற அர்த்தத்தில்தான் கேட்டேன்.

  ReplyDelete
 44. நோ தாலாட்டு மதுராவில்:(

  ஒன்லி இன் கோகுலம்.

  தங்கத்தொட்டில் பார்த்தேன் அங்கே!

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...