Friday, July 20, 2012

வடிவேலு உங்களின் HR மேனஜரானால்.... + சட்ட ஆலோசனை

டிவேலு மேட்டர் அடுத்து உள்ளது. பொறுமை ! பொறுமை !! அதற்கு முன் சட்ட ஆலோசனை.

வடிவேலு மட்டும் தான் வேண்டும் என்போர் நேரடியாக கேள்விகளை தாண்டலாம் !
****
கேள்வி: சௌந்திரராஜன் – சென்னை
நகர்புறங்களில் இருக்கக்கூடிய பைனான்ஸ் கம்பெனிகள் வெற்றுக் காசோலைகளை கையெழுத்துடன் பெற்றுக் கொண்டு கடன் அளித்துவிட்டு, பின்னொரு காலங்களில் கடன் தொகையைத் திரும்பப் பெறும் போது அந்த வெற்றுக் காசோலையை தாங்களே நிரப்பிக் கொண்டு அவர்களே வழக்கும் தொடர்ந்தால் அந்த வழக்கின் நிலை என்ன? என் நண்பர் ஒருவர் இது போன்று ஒரு அவல நிலையில் பெரும் வேதனையில் இருக்கிறார். அன்புகூர்ந்து விடையளியுங்கள்.

பதில்:

காசோலை, வெற்றுப் பத்திரம் இவற்றில் எதுவும் நிரப்பபடாமல் கையெழுத்து போடுவது தவறு. மீறிப் போட்டால் இத்தகைய பிரச்னைகளை எதிர் கொள்ளத்தான் வேண்டும்.

சரி உங்கள் நண்பர் விஷயத்துக்கு வருவோம்.

உங்கள் நண்பர் தந்த காசோலையை வைத்து பணம் தந்தவர், உங்கள் நண்பர் மீது செக் பவுன்சிங் வழக்கு போட்டிருக்க கூடும் என உங்கள் கேள்வி மூலம் தெரிகிறது.

செக் பவுன்சிங் வழக்கை பொறுத்தவரை செக் மட்டும் அல்ல, நீங்கள் குறிப்பிட்ட நபருக்கு எவ்வளவு கடன் பட்டீர்கள் என்பதற்கான ஆவணங்களும் மிக முக்கியம். உங்கள் நண்பர், கடன்பட்டதாக சொல்லப்படும் தொகை வேறு, கடன் வாங்கிய தொகை வேறு எனவும், கடன்  தந்தவர் தானாகவே அதனை நிரப்பி கொண்டு இவ்வாறு செய்துள்ளார் எனவும் வாதிட வேண்டும். அது ஒன்றுதான் வழி. சரியான வழக்கறிஞர் மூலம் நீதிமன்றத்தை நாடச் சொல்லுங்கள்.
****
கேள்வி: ஜெயகோபால், முகப்பேர்

விதிமுறைகளை மீறிக் கட்டிடம் கட்டியதாக, அண்மையில் சென்னை, தி.நகர் ரங்கநாதன் தெருவில் பல வணிக வளாகங்களுக்கு சீல் வைத்தார்கள். அங்கு மட்டுமில்லை, பல ஊர்களிலும், நகரங்களிலும், விதிமுறைகளை மீறித்தான் கட்டிடங்களைக் கட்டியுள்ளனர்.இவை அனைத்தும் இதுநாள் வரை, எல்லா வரிகளையும் கட்டி, மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு அனைத்தும் பெற்றுள்ளன. இதில் அரசின் பத்திரப் பதிவுத் துறை, உள்ளாட்சி மன்றங்கள், குடிநீர் வாரியம், மின்சார வாரியம்…. எனப் பல துறைகளுக்கும் தொடர்புள்ளன. சட்ட மீறல், இவ்வளவு பெரிதாகியுள்ள நிலையில் இவற்றை எவ்வாறு வரன்முறைப்படுத்துவது?

பதில்:

நீங்கள் சொல்வது நிச்சயம் உண்மை தான். தற்சமயம் விதிமுறை மீறி கட்டப்பட்ட கட்டிடங்கள் ஏராளம் உள்ளன. அவை கட்டப்படும் போதே CMDA பார்த்து உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். குறிப்பாக பெரிய கட்டிடங்கள் கட்டும் போது CMDA அல்லது லோக்கல் அதாரிட்டி இன்ஸ்பெக்ஷன் செய்ய வேண்டும். ஆனால் பெரும்பாலும் செய்வது இல்லை.

கட்டி முடித்து பின் அதனால் யாருக்கும் பாதிப்பு வரும்போது, பாதிக்கப்பட்டோர் வழக்கு தொடர்ந்தால் மட்டுமே நீதி மன்ற ஆணையின் பேரில் நடவடிக்கை எடுக்கின்றனர்.

அமெரிக்காவில் இது போன்ற விதிமீறல் நடந்தால், முதலில் ஒரு விளம்பரம் செய்வார்கள். குறிப்பிட்ட நபர் மீது வழக்கு தொடரப்போவதாகவும், இதில் யாரேனும் சேர்ந்து கொள்ள விரும்பினால் சேரலாம் என்றும். இப்படி, அந்த நபரால் பாதிக்கப்படும் பலரும் சேர்ந்து வழக்கு தொடரும் போது வழக்கு வலுப்பெறும். ஒரு பெரிய நிறுவனத்தை எதிர்த்து ஒருவர் போராடுவதைவிட, பலர் சேர்ந்து போராடுவது எளிது தானே?

தனி நபர் வழக்கு தொடர்ந்தால், அவரை முடக்குவது வலிமை உள்ளவர்களுக்கு எளிது. வழக்கு தொடர்ந்தோர் பலர் எனில் கஷ்டம்.

தனிப்பட்ட வீடுகள் எனும் போது குடிநீர் வரி, மின்சார பில் வசூலிக்கும் மின்சார வாரியம் யாரும் இதற்கு பொறுப்பாக முடியாது. அவர்களுக்கு விதிமுறை மீறல் பற்றி ஏதும் தெரியாது. உண்மையில் CMDA-வும் கட்டிடம் கட்டும் பில்டரும் தான் இதற்கு பொறுப்பு. ஆனால் துரதிஷ்ட வசமாய் காசு கொடுத்து வீடு வாங்குவோர் தலையில் அனைத்து கஷ்டங்களும் விடிகிறது.

வீடு கட்ட அனுமதி வழங்கும் நிறுவனம் கடைசி வரை கட்டிடம் கட்டும்போது பார்வையிடுவதும், எல்லாம் சரி என்ற பிறகே முழு அனுமதி தருவதும் மட்டுமே இதைத் தீர்க்க முடியும் ஆனால் அதற்குள்ளும் நம் நாட்டில் லஞ்சம் ஊடுருவி விடும் !
***************
ண்பர் ஒருவர் ஈ மெயிலில் அனுப்பிய வடிவேலு காமெடி உங்களுடன் பகிர்கிறேன்.

43 comments:

 1. நீங்க எங்க HR மானேஜர் இரவுவானம் சுரேஷ் அவர்களை நக்கலடித்தமைக்கு...வன்மையான மகிழ்ச்சி...!ஹஹா!

  ReplyDelete
 2. //துரதிஷ்ட வசமாய் காசு கொடுத்து வீடு வாங்குவோர் தலையில் அனைத்து கஷ்டங்களும் விடிகிறது. //

  எத்தனை பதிலளித்தாலும் அத்தனையும் இதில்தான் முடிகிறது என்பது தான் வருத்தம்.

  ReplyDelete
 3. @வீடு சுரேஸ்குமார் said...
  நீங்க எங்க HR மானேஜர் இரவுவானம் சுரேஷ் அவர்களை நக்கலடித்தமைக்கு...வன்மையான மகிழ்ச்சி...!ஹஹா!//

  என்னவொரு வில்லத்தனம், வாங்க செத்து செத்து வெளாடுவோம்

  ReplyDelete
 4. நான் அப்படி இல்லீங்க, இங்க சங்கமே அபராதத்துலதான் ஓடிட்டு இருக்குது :-)

  ReplyDelete
 5. நீங்கள் தரும் சட்ட ஆலோசனை மிகவும் பயனுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு வழிகாட்டி என்பதாலும் இனிமேல் யாரும் பாதிப்படையாமல் இருக்கவும். தொடரட்டும்... வடிவேலு மேட்டர்... ஹா... ஹா... ஹா...

  ReplyDelete
 6. வடிவேலு மேட்டர் படித்தவுடன் அவர் படம் புது படம் நடிப்பது இல்லை என்ற வருத்தம் தோன்றியது.

  ReplyDelete
 7. இரவுவானம்...நீங்க பல்க்கான அமவுண்டை வருமான வரியா கட்டுற நியூஸ் லீக் ஆயிருச்சி. மோகன்குமார் சார், திருப்பூர்ல ரெய்டுக்கு ஏற்பாடு பண்ணுங்க.

  ReplyDelete
 8. அதற்குள்ளும் நம் நாட்டில் லஞ்சம் ஊடுருவி விடும் !//

  ம்ம்ம்!

  ReplyDelete
 9. அப்போ இந்த வருசமும்,போச்சா!சோனமுத்தா....,

  ReplyDelete
 10. வடிவேலு காமெடி ரசித்தேன். அவர் திரை உலகத்துக்குத் திரும்பி வருவதோடு, அவர் மகனும் ஹீரோவாக நடிக்க ஒரு படம் தயாராகிறதாமே...!

  ReplyDelete
 11. வடிவேலு நச்....

  சட்ட ஆலோசனை பயன் உள்ளதாக உள்ளது...

  ReplyDelete
 12. ஹா.. ஹா.. ரசித்தேன் ! பகிர்வுக்கு நன்றி ! (த.ம. 9)

  ReplyDelete
 13. நல்ல கலக்கலான பதிவு வடிவேலு காமெடி செம காலாட்டா

  ReplyDelete
 14. வடிவேலு காமெடி ஹா.. ஹா..

  ReplyDelete
 15. சட்ட ஆலோசனையும் காமெடியும் தந்து கலக்கீட்டீங்க பாஸ்!

  ReplyDelete
 16. சட்ட ஆலோசனைகள் பயனுள்ளவை

  வடிவேலு செம :D

  ReplyDelete
 17. வடிவேலு :)))

  ReplyDelete
 18. வீடு சுரேஷ்: இன்னொரு சுரேஷை வம்புக்கு இழுத்துட்டீங்க பாவங்க அவரு :)

  ReplyDelete
 19. சீனி: உண்மை தான். நம்ம நாடு அப்படி தான் இருக்கு :(

  ReplyDelete
 20. இரவு வானம்: விடுங்கண்ணே. இவங்களெல்லாம் இப்படி தான். நீங்க கண்டினியூ....

  ReplyDelete
 21. பாலகணேஷ்: நன்றி சார்

  ReplyDelete
 22. scenecreator said...

  வடிவேலு மேட்டர் படித்தவுடன் அவர் படம் புது படம் நடிப்பது இல்லை என்ற வருத்தம் தோன்றியது.

  மிக சரியாக சொன்னீர்கள் ! உண்மை !

  ReplyDelete
 23. சிவா: ஒரு பச்ச புள்ளையை போயி ஏன்யா.. :)

  ReplyDelete
 24. ஷங்கர்: வாங்க நன்றி

  ReplyDelete
 25. புது மாப்பிள்ளை கோகுல் வாங்க சார். சௌக்கியமா?

  ReplyDelete
 26. ஸ்ரீராம்: ஆம் நானும் கேள்விப்பட்டேன் நன்றி

  ReplyDelete
 27. சங்கவி நன்றிங்க

  ReplyDelete
 28. தனபாலன் சார்: நன்றி மகிழ்ச்சி

  ReplyDelete
 29. சலீம்: நீங்கள் தானே சட்ட ஆலோசனை இல்லை என கேட்டீர்கள்? போட்டு விட்டேன். நன்றி

  ReplyDelete
 30. வலங்கை சரவணன்: நன்றி மகிழ்ச்சி

  ReplyDelete
 31. சுரேஷ் :நன்றி சார்

  ReplyDelete
 32. வரலாற்று சுவடுகள்: நன்றி நண்பரே

  ReplyDelete
 33. மாதேவி: நன்றி மேடம்

  ReplyDelete
 34. வடிவேலு காமெடி அருமை:).

  ReplyDelete
 35. சட்ட ஆலோசனை பயனுலதாக இருந்தது.

  ReplyDelete
 36. அனைத்து விதிகளுக்கு உட்பட்டு எந்த வீடோ கட்டடமோ இருக்க முடியாது என்றே கருதுகிறேன்.

  ReplyDelete
 37. This comment has been removed by the author.

  ReplyDelete
 38. நன்றி ராமலட்சுமி மேடம்

  ReplyDelete
 39. நன்றி ஹாரி பாட்டர்

  ReplyDelete
 40. முரளி சார்: முன்பு அலாகிரட்டி என்று ஒரு நிறுவனம் வீடு கட்டி விற்றது. அது போன்று விரல் விட்டு எண்ணக்கூடிய நிறுவனங்கள் சட்ட மீறல் இன்றி கட்டிடம் கட்டுகின்றனர்

  ReplyDelete
 41. நல்ல பதில்கள்...

  வடிவேல் காமெடி சூப்பர்.

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...