Saturday, October 13, 2012

விலைவாசி+மின்வெட்டு..தமிழகத்தின் இருண்ட காலம் !

டந்த சட்ட மன்ற தேர்தலில் அம்மாவுக்கு ஓட்டு போட்ட அப்பாவிகளில் நானும் ஒருவன். ஐயாவின் மேல் இருந்த சில வருத்தங்களே அம்மாவுக்கு ஓட்டு போட வைத்தன. குறிப்பாக ஐயா குடும்பத்து உறுப்பினர்கள் அனைவரும் ஒரு பவர் சென்டராக மாறி வலம் வந்தது; அவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள், மூப்பின் காரணமாய் பல விஷயங்களில் அவர் உறுதியான முடிவு எடுக்காமல் இருந்தது, இலங்கை தமிழர் விஷயத்தில் போட்ட இரட்டை வேடம் இவையே ஐயா மீது  வருத்தம் கொண்டு, அதற்கு மாற்றாக அம்மாவை பலரும் ஆதரிக்க காரணமாய் இருந்தன.

அம்மா வந்ததும் தந்த முதல் அதிர்ச்சி விலை வாசி ஏற்றம் ! எனக்கு நினைவு தெரிந்து  இது போன்ற மோசமான விலை வாசி உயர்வை சந்தித்ததே இல்லை. பெட்ரோல் உள்ளிட்ட சில பொருள்களின் விலை உயர்வுக்கு மத்திய அரசு காரணம் என்றாலும், பஸ் கட்டணம், பால் விலை, மின் கட்டணம் இவை மூன்றும் ஒரே நேரத்தில் பல மடங்கு உயர்த்தப்பட்டது ! இது மாதம் நான்கு இலக்கங்களில் சம்பாதிக்கும் அனைவரையும் மிக மோசமாய் பாதித்தது.

எம். ஜி. ஆர் ஒருவர் தான் தமிழகத்தில் அடுத்தடுத்து தேர்தலில் தொடர்ந்து வென்றவர். அதற்கு ஒரு முக்கிய காரணம் அவர் ஏழை எளியவர்களின் நண்பனாக தன்னை காட்டி கொண்டார். ஏழை மக்களும் அதனை முழுமையாக நம்பினர். ஆனால் அவரை தலைவர் என்று சொல்லும் கட்சி செய்த இந்த செயலை, அதுவும் இத்தகைய கடும் விலை வாசி உயர்வை எம். ஜி. ஆர் நிச்சயம் செய்திருக்க மாட்டார்.


அடுத்து மின்வெட்டு ! தி.மு.க வின் மோசமான அணுகுமுறை தான் மின்வெட்டுக்கு காரணம் என அவர்கள் சொன்னதை சில மாதங்கள் கேட்கலாம்.

"நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆறு மாதத்தில் மின்வெட்டை நீக்குவோம்" என்றவர்கள் ஒண்ணரை வருடத்தில் தமிழ் நாட்டை இருண்ட மாநிலமாக்கி விட்டனர். ஜூவியில் இது பற்றி வாசித்த கட்டுரையில் சில முக்கிய விஷயங்கள் சொல்லப்பட்டிருந்தன.

"சென்னை தவிர்த்து தமிழகத்தின் ஏனைய பகுதிகளில் 14 மணி நேரம் மின்வெட்டு நீடிக்கிறது. சேலம், திருப்பூர், மதுரை உள்ளிட்ட சிறு நகரங்களில் பகல் வேளையில் பெரும்பாலும் மின்சாரம் இல்லாததால் சிறு தொழில் செய்வோர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தங்கள் நிறுவனத்தில் இருப்போர் வேலையின்றி அமர்ந்திருக்கும் சூழல், வேலை இல்லாவிடினும் அவர்களுக்கு முழு சம்பளம் தரவேண்டும் ! தமிழ் நாட்டு நிறுவனங்களுக்கு ஆர்டர் தந்தால் சரியான நேரத்தில் அவர்கள் திருப்பி தருவதில்லை என பல நிறுவனங்கள் ஆர்டரை குஜராத் போன்ற மாநிலங்களுக்கு திருப்பி விடுகின்றன. "

இதையெல்லாம் படிக்கும் போது மனம் நொந்து போகிறது.

மின்வெட்டை சமாளிக்க சாதாரண மனிதர்கள் கூட கீழ்க்காணும் வழிகளை முன் வைக்கிறார்கள். இவை முதல்வருக்கு தெரியாதா? இவற்றை கடைபிடிக்க ஏன் அவர் தயங்குகிறார்?

1. தி.மு.க அரசு செய்தது போல வெளி மாநிலங்களிடம் இருந்து மின்சாரம் வாங்கலாம் . இதன் மூலம் சென்ற ஆட்சியில் இருந்தது போல் சில மணி நேர மின் வெட்டுடன் நிலைமையை சமாளிக்கலாம்.

2. சென்னைக்கு ஒரு மணி நேர மின்வெட்டும், தமிழகத்தின் மற்ற இடங்களுக்கு 14 மணி நேர மின்வெட்டும் என்பது மிக பெரிய தவறு. சென்னைக்கான மின்வெட்டு நேரத்தை இன்னும் சில மணி நேரம் அதிகரித்து விட்டு மற்ற இடங்களின் மின்வெட்டை கணிசமாய் குறைக்கலாம்.

3. சென்னையிலுள்ள பெரிய நிறுவனங்களுக்கு மிக அதிக மின்சாரம் தருவதே, மற்ற இடங்களில் உள்ள சாதாரண மக்களுக்கு மின்தடை ஏற்படுத்த காரணம்.  பெரிய நிறுவனங்கள் ஜெனரேட்டர் வைத்து சமாளிக்க முடியும் என்ற போதும் அவர்களுக்கு தடையில்லா மின்சாரம் தரப்படுகிறது.

சில மாதங்களுக்கு முன் இருந்தது போல் வாரத்தில் இரு நாள் விடுமுறை, நிறுவனங்களுக்கு கொண்டு வரலாம். இன்னும் சில நடவடிக்கை மூலம் பிற இடங்களுக்கு அதிக மின்சாரம் வழங்கலாம்.

***
ஜெயா டிவி இன்னமும் மாதம் மும்மாரி பொழிகிறது; மக்கள் சுபிட்சத்துடன் வாழ்கின்றனர் என்று தான் சொல்லி கொண்டிருக்கிறது. நிஜம் என்னவென்றால் தமிழகத்தின் இருண்ட காலம் இது தான் ! இதனை விட மோசமான நிலை இனி வரவே கூடாது !

இவை ஒருபுறமிருக்க மக்கள் பிரச்சனையை இப்போது தான் கையில் எடுக்கிறது தி.மு.க. அவர்கள் தருகிற பிட் நோட்டிஸ் வாசித்தால் அதில் மளிகை கடை லிஸ்ட் போல பல விஷயங்கள் சொல்லி செல்கிறார்கள். குறிப்பாய் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்து விட்டது; எதிர் கட்சி மீது பொய் வழக்கு , இன்ன பிற .


சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தது என்பது எப்போதும் எதிர்கட்சிகள் எல்லாமே பாடும் ராகம் தான். உண்மையில் ஒரு சாதாரண மனிதனாக இரண்டு ஆட்சிக்கும் எனக்கு சட்டம் ஒழுங்கில் எந்த வித்யாசமும் தெரியவில்லை. ஐயா ஆட்சியில் நிறைய கொள்ளைகள் நடந்தது. அம்மா வந்தால் குறையும் என நினைத்தேன். அதே மாதிரி தொடருகிறது அவ்வளவு தான் !

எதிர் கட்சிகள் மீது பொய் வழக்குகள் என்பது உண்மையாய் கூட இருக்கலாம். ஆனால் அதை பற்றி மக்கள் அதிகம் கவலைப்படுவதில்லை.

மக்களை மிக அதிகம் பாதிக்கும் விலை வாசி உயர்வு, மின்வெட்டு இவை இரண்டுக்கும் அதிக முக்கியத்துவம் தந்து பிரசாரம் செய்தால் தான் மக்களிடமிருந்து இன்னும் அதிக சப்போர்ட் கிடைக்கும் என்று தோன்றுகிறது !

விலைவாசி உயர்வை குறைக்க அம்மா ஏதும் செய்வார் என தோன்றவில்லை. ஆனால் மின்வெட்டை குறைப்பது நிச்சயம் அவரால் முடியும். சென்ற முறை எல்லாம் மிக துரிதமாய் சில விஷயங்களில் முடிவெடுத்து செயல்பட்டவர் தான். மின்வெட்டை சரி செய்ய நடவடிக்கை எடுக்காவிடில் மக்களின் ஒட்டு மொத்த எதிர்ப்பும் தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும். இடைத்தேர்தல்கள் மாதிரி  "நமக்கு நாமே" பாலிசி அப்போது உதவப்போவதில்லை. எனவே மக்கள் நலனில் அக்கறை உள்ள ஆட்சியாக மாறவேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பு !
***
சமீபத்திய பதிவு: மாற்றான் விமர்சனம் : இங்கே 
***

டிஸ்கி: அம்மாவை பார்த்து பேச தஞ்சை போகிறேன் ( எங்க அம்மா பாஸ் !) திங்கள் இரவு வரை தஞ்சை வாசம். நன்றி !

48 comments:

 1. காலை வணக்கம்....அதிகமா பிளாக் பக்கமே வர முடிவதில்லை...அவ்ளோ கரண்ட் கட் .

  ReplyDelete
 2. கோவை இப்போ ரொம்ப தொழில் பாதிப்பு அதிகம் ஆயிடுச்சு..ரொம்ப கஷ்டம்..என்னாலும் இப்போ அதிகமா வேலை எடுக்க முடிவதில்லை.அப்படியே எடுத்தாலும் சொன்ன நேரத்தில் டெலிவரி செய்ய முடிவதில்லை.இந்த ஆட்சி ஒழிஞ்சு போகணும் அப்படின்னு நினைக்கிற சாதாரண வர்க்கத்தில் நானும் இருக்கிறேன்..

  ReplyDelete
 3. நல்ல பகிர்வு. சென்னை பரவாயில்லை. வெளி மாநிலங்களில் 15 மணி நேரம் மின்வெட்டு எனும் போது கஷ்டமாகத் தான் இருக்கிறது. அதிரடியாய் சில நடவடிக்கைகள் எடுத்தால் தான் சரி வரும். ஏனோ செய்ய மறுக்கிறார்கள். ஏன் என்பது அவர்களுக்கே வெளிச்சம்.

  ReplyDelete
 4. அம்மாவுக்கு, அதான் உங்க அம்மாவுக்கு எனது வணக்கத்தினைத் தெரிவிக்கவும்...

  ReplyDelete
 5. நீங்க சொன்னது அனைத்தும் உண்மை! தமிழகத்தின் சில பகுதிகளில் பயணம் போனபோது இருந்த மின்வெட்டு நிலையை முதன்முதலில் உணந்து அதிர்ந்துவிட்டேன்:(

  ReplyDelete
 6. மோகன் குமார்,

  http://ganeshdigitalvideos.blogspot.com

  இந்த தளத்தில் மின் வெட்டு பற்றிய நல்ல ஒரு விளக்கமான கட்டுரையை பகிர்ந்திருக்கிறார்கள். அதை படித்ததில் இதன் இன்னொரு பரிமாணம் புரிகிறது. அய்யாவோ, அம்மாவோ - யார் வந்தாலும் இந்த கஷ்டம் தீராது போல இருக்கிறது!

  இதற்கு நடுவில் இலவச தொல்லைக்காட்சி, இலவச மிக்சி என்று மொத்த மின்சார கன்சம்ஷனை எந்த வித தொலை நோக்கும் இல்லாமல் உயர்த்தியதை நினைத்தால் தான் .. என்ன சொல்ல. நமக்கு கொடுத்து வைத்தது அவ்வளவுதான்!

  இதையெல்லாம் பொது நல வழக்காக எடுத்துப்போனாலும் 'அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது' என்று கோர்ட் சொல்லுகிறது. இது போன்ற அரசியல் வியாதிகளை தண்டிக்க என்ன தான் வழி?

  சரியாக எலெக்ஷனிற்கு ஒரு வருடம் முன் இந்த பிரச்சனையை தீர்த்து விடுவார்கள்.

  மக்கள் மறதி மேல் தான் எல்லோருக்கும் என்ன நம்பிக்கை!

  ReplyDelete
 7. Tamizhagaththil chennaiiku veliye iruppavarkal irandaam thara kudimakkala?
  Amma eppo vizhiththuk kolvaro?!

  ReplyDelete
 8. சென்னைவாசிகளுக்கு பிரச்சனையில்லை..மற்ற மாவட்டத்தார் 18 மணீநேர மின்வெட்டால் அவதிப்படுகிறார்கள்..
  விரைவில் மின்விளக்கு எரியட்டும் வெளிச்சம் பரவட்டும்..

  ReplyDelete
 9. /அம்மாவை பார்த்து பேச தஞ்சை போகிறேன் ( எங்க அம்மா பாஸ் !)/

  ஹை..காமெடி..உங்களுக்கு காமெடி எழுதவராதுன்னு யாரோ சொன்னாங்களே.. வருதே..

  ReplyDelete
 10. நான் சென்ற வாரம் என் சொந்த ஊரான காஞ்சிபுரம் போன போது அங்கே பகலில் பெரும்பாலும் கரண்ட் இல்லை.இரவிலும் ஒரு மணிக்கு ஒரு முறை ஒரு மணி நேரம் என்று வாட்டி எடுத்து விட்டார்கள்.விட்டால் போதும் என்று ஓடி சென்னை வந்து விட்டேன்.பாவம் ஜனங்கள்.பயங்கர கோபத்தில் இருக்கிறார்கள்

  ReplyDelete
 11. மற்ற பகுதியினர் அதிகமான மின்வெட்டால் வாடும்போது சென்னைவாசிகள் மட்டும் 23 மணிநேரம் மின்சாரம் அனுபவிப்பது உறுத்தலாகத்தான் உள்ளது.

  ReplyDelete
 12. Anonymous11:51:00 AM

  அடுத்த தடவை பாமக கட்சி தலைவர் ராமதாசுக்கு வோட் போட்டு அவரை முதல்வராக்கினால் இந்த பிரச்சினைகள் அனைத்தும் தீரும், தமிழகத்தில் பாலாறும் தேனாறும் ஓடும். மரங்கள் செழித்து வரும் (நாங்க ஆட்சிக்கு வந்தா யாரு மரத்தை வெட்டுவது)
  எந்த கூட்டணியில் இருப்பார் என்று இப்போது என்னால் கூறமுடியாது - நிச்சயமாக ஏதாவது கட்சியுடன் கூட்டணி வைத்திருப்பார்.

  தெரிவிப்பது - ராமதாஸ் அவர்களின் கால் செருப்பான தொண்டன் அருள் (ARUL GREEN )

  ReplyDelete
 13. இங்கயும் ரொம்ப மோசமாக உள்ளது. காலையில் இரண்டு மணிநேரம், மாலையில் இரண்டு மணிநேரம். இரவு முழுவதும் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை.....

  பள்ளி நேரத்திலும், படிக்கும் நேரத்திலும் இருக்காது.....

  விரைவில் நடவடிக்கைகள் எடுத்தால் பரவாயில்லை....

  ReplyDelete
 14. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சரியான நெருக்கடி தோழரே!!

  அரசு மட்டும்மல்ல,, பொது மக்களும் மின்சாரத்தின் தேவையை இப்போது புரிந்துகொள்ள துவங்கிவிட்டார்கள்,,

  இனி வரும் காலங்களிலாவது திட்டமிட்டு விரயங்களை தவிர்ப்போம்...

  இந்த மின்சார தட்டுப்பாடு மிக விரைவில் தண்ணீர் தட்டுபாடாக மாறிவிட்டால்..?

  நினைத்து பாருங்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் தண்ணீர் தட்டுப்பாடு வந்தால்..?

  ReplyDelete
 15. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நாளுக்கு நாள் மின் வெட்டு அதிகம் தான்...

  ...ம்... ???

  ReplyDelete
 16. இத்தகைய கரண்ட் பிரச்சனைக்கு போன முறை இருந்த அம்மாவின் தொலைநோக்கு பார்வை இல்லாத ஆட்சி தான் காரணமாம். கலைஞர் ஆட்சியில் போடப் பட்ட திட்டமெல்லாம் நடைமுறைக்கு வர இன்னும் சில வருடங்கள் ஆகும். அம்மா அத்தனை கம்பெனிகள் திறக்க பெர்மிஷன் கொடுத்த போதே கரண்ட்டிற்கு முன் யோசனையுடன் செயல்பட்டிருக்க வேண்டும்.

  E.B மெயின் ஆஃபிசில் A.D ஆக இருக்கும் என் தங்கை சொன்னது.

  ReplyDelete
 17. //இந்த மின்சார தட்டுப்பாடு மிக விரைவில் தண்ணீர் தட்டுபாடாக மாறிவிட்டால்..?//

  மாற்விட்டது!! நாகர்கோவிலில் பல இடங்களில் ஒரு மாதமாக தண்ணீர் சப்ளையே இல்லை. போர் தண்ணிதான்...

  எந்த நாட்டிலும், தொழிற்பேட்டைகள், MNCs அளவுக்கதிகமாக அனுமதிக்கும்போது, அதற்கேற்றவறு மின் உற்பத்தி மற்றும் நீர் நிலையங்களையும் சேர்த்து துவங்குவார்கள். இங்கேதான், கண்கெட்ட பிறகு .... :-(((

  ReplyDelete
 18. சென்னை தவிர்த்த பிற இடங்களில் மிக மிக மோசமாக உள்ளது மின் வெட்டு:(.

  ஹுஸைனம்மா, நெல்லையிலும் தண்ணீருக்கு தட்டுப்பாடுதான். அங்கே பெரும்பாலான இடங்களில் போரும் வற்றிக் கிடக்கிறது.

  ReplyDelete
 19. ஹைதை மாநகரத்துலே காலையில் 2 மணிநேரம், மதியம் 2 மணிநேரம் கரண்ட் கட். மின் தட்டுப்பாடு எல்லா இடங்களிலும் தான். விலைவாசி பத்தி என்ன புண்ணியம்? ஏழை சொல் அம்பலம் ஏறுமா??!!!!

  ReplyDelete
 20. எங்க ஊருல மினிமம் 16 மணிநேரம் பவர் கட். இன்வெர்ட்டர் போட்டும் யோசிச்சு யோசிச்சு சிக்கனமா செலவு செய்றதா இருக்கு.

  ReplyDelete
 21. சிரமம் தெரிகின்றது.:((

  ReplyDelete
 22. hello Mohan! பதிவை மிக மென்மையாக கொடுத்துள்ளீர்கள். இங்கே தென் தமிழகம் வந்து பாருங்கள் கொதித்துக்கொண்டிருக்கிறது..இரவில் சுத்த்மாக தூக்கத்தை தொலைத்துவிட்டு புலம்பும் மக்கள்...தமிழகத்தில் நிறைய மக்கள் மனநிலை பாதிப்புக்கு மன அழுத்தத்திற்கு ஆளாகிக்கொண்டிருக்கிறார்கள்.இப்போதுகூட தொடர்ந்து 5 ம்ணி நேரமாக பவர்கட்..

  ReplyDelete
 23. கோவை நேரம்: உங்களை மாதிரி சிறு தொழில் முனைவோர் தான் மிக பாதிக்கப்பட்டுள்ளனர். உங்கள் உணர்வுகளை பகிர்ந்தமைக்கு நன்றி

  ReplyDelete
 24. வெங்கட்: அம்மாவுக்கு தாங்கள் தெரிவித்த அன்பிற்கு நன்றி

  ReplyDelete
 25. துளசி மேடம்: ஆம் உண்மை தான் :((

  ReplyDelete
 26. பந்து: விரிவான அருமையான பின்னூட்டதிற்கு நன்றி

  ReplyDelete
 27. மிடில் கிளாஸ் மாதவி: சரியான கேள்வி தான் கேட்டுள்ளீர்கள் :(

  ReplyDelete
 28. சீன் கிரியேட்டர் : இரவில் கரண்ட் கட் பண்ணுவதெல்லாம் கொடுமை. மனுஷன் நிம்மதியா தூங்க கூட முடியாட்டி செம எரிச்சல் வரும்

  ReplyDelete
 29. சரியாக சொன்னீர்கள் TN முரளி

  ReplyDelete

 30. கோவை டு தில்லி : நன்றி மேடம். விரைவில் தீரும் என்று நம்புவோம்

  ReplyDelete
 31. தொழிற் களம் குழு: மிரட்டும் கேள்வியை தான் முன் வைத்துள்ளீர்கள்

  ReplyDelete
 32. தனபாலன்: நன்றி சார்

  ReplyDelete

 33. அமுதா மேடம்: தகவலுக்கு மிக மிக நன்றி

  ReplyDelete
 34. ஹுசைனம்மா: வெளி நாட்டில் இருந்தாலும் இந்தியா, தமிழகம் குறித்த தகவல்களில் மிக அப்டேட்டட் ஆக இருப்பீர்கள் நன்று

  ReplyDelete
 35. நன்றி ராமலட்சுமி மேடம். நீங்கள் சொல்வது மிக உண்மை :((

  ReplyDelete
 36. புதுகை தென்றல் மேடம்: அங்கும் நாலு மணி நேரம் கரண்ட் இல்லையா? ரைட்டு

  ReplyDelete

 37. ராஜி: என்னங்க இது மின்வெட்டு உங்க ஊரில் 16 மணி நேரமா? கொடுமைங்க

  ReplyDelete

 38. ராஜி: என்னங்க இது மின்வெட்டு உங்க ஊரில் 16 மணி நேரமா? கொடுமைங்க

  ReplyDelete
 39. மாதேவி: ஆம் நன்றி

  ReplyDelete
 40. உமா: ம் :(

  கஷ்டத்தை நான் நேரடியே அனுபவிக்க வில்லை இல்லையா? மேலும் அரசியல் சார்ந்த கட்டுரைகள் நான் அநேகமாய் எழுதுவதே இல்லை. அது ஹவுஸ் பாசுக்கு பிடிப்பதில்லை. அதான் சனிக்கிழமை அவர் படிக்காத நாள் பார்த்து இப்பதிவு போடுறேன்.திங்கள் ஒருவேளை படித்தால் திட்டு நிச்சயம் :)

  ReplyDelete
 41. //ஜெயா டிவி இன்னமும் மாதம் மும்மாரி பொழிகிறது;//

  இன்னுமா இந்த உலகம் ஜெயா டி. வியை நம்புது?

  முப்பது சதவிகிதத்துக்கு மேல் லாபம் பார்க்கும் IT நிறுவனங்களுக்கெல்லாம் எதற்கு தடையற்ற மின்சாரம்? சென்னை OMR ரோட்டில் உள்ள அனைத்து பெரும் நிறுவனங்களுக்கு 14 மணி நேரம் மின்வெட்டை அமுல் படுத்தினால் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு தாராளமாய் மின்சாரம் கிடைக்கும்.

  எதிர்காலத்தில் மின்வெட்டை சமாளிக்க ஒரே வழி. போயஸ் கார்டனிலும், கோபாலபுரத்திலும் 14 மணி நேரம் மின்வெட்டை இப்போதே அமுல் படுத்தினால்தான் இந்த ஆட்சியும் வரும் (தி. மு. க.) ஆட்சியும் மின் வெட்டை 'தொலை' நோக்கு பார்வையுடன் அணுகும்.

  ReplyDelete
 42. ஒருவேளை சின்னம்மா இன்வர்ட்டர் பிசினஸ்ல இறங்கியிருக்காங்களோ?

  ReplyDelete
 43. நீங்கள் சொன்ன தீர்வுகள் அம்மாவிற்கு தோன்றாமல் இருக்குமா என்பது தெரியவில்லை.. ஆனால் மின்வெட்டு பற்றி அரசு பெரிதாக கவலைப்பட வில்லை எனபது தான் கவலை கொள்ள செய்கிறது... நன்றி சார்

  ReplyDelete
 44. இப்படியும் ஆட்சி செய்ய வேண்டுமா...
  மக்கள் வாழ்வாதாரத்தை அழித்து ஆட்சி எதற்கு.
  எது செய்தாவது மக்களை காப்பாற்றுவதே நல்ல ஆட்சி.

  ReplyDelete
 45. வரலாறு காணாத மின்வெட்டு!

  அம்மாவுக்கு ஓட்டுப் போட்டது உங்க தப்பா என் தப்பா? இப்போ நீங்க "அப்பாவி"னு சொல்றீங்க? அப்போ அறிவுப்பூர்வமாகச் செய்வதாகத்தானே நெனச்சீங்க?

  Ignorance is not an excuse! You need to pay the price for your mistake! நீங்க செஞ்ச தவறுக்கு நீங்க அபராதம் கட்டுறீங்க! :)

  ஐயாவாவது மைனாரிட்டி ஆட்சியை வச்சுக்கிட்டு மத்தியில் உள்ளவர்களோட "அனுசரிச்சு" போயி, 2ஜி அது இதுனு செய்துகொண்டும் ஓரளவுக்கு திறமையான ஆட்சி நடத்தியது போல இப்போத் தெரியுமே? :)))

  Enjoy the dark Tamilnadu! இல்லைனா ஐயா ஆட்சி வந்திருந்தால் 24 மணி நேரமும் பவர்கட் வந்திருக்கும்னு நெனச்சும் ஆறுதல் அடஞ்சிக்கலாம்! :)

  ReplyDelete
 46. மகஇக இந்த ஆட்சியை இருண்ட காலம் என்று 1996 ல் சொல்லியதோடு மட்டுமல்ல பாடலாகவும் வெளியிட்டு உள்ளனர்

  கேட்டு ரசியுங்கள்

  http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=1776:irunda8&catid=55:songs

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...