Wednesday, October 24, 2012

வானவில்: ரிட்சி ஸ்ட்ரீட்-நதியா- வடிவேலு

இணைய பக்கம் அறிமுகம்

சென்னையில் உள்ளோர் அனைவருக்கும் தெரிந்த ஒரு தெரு ..ரிட்சி ஸ்ட்ரீட் ! குறைந்த விலை என்பதோடு, இங்கு கிடைக்காத எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களே இல்லை என்பதால் மிக பிரபலம்! இந்த தெருவிற்கென தனி இணைய தளம் இப்போது வந்துள்ளது.

 http://www.ritchiestreet.info/ என்கிற இந்த தளத்தில் நூற்றுக்கணக்கான கடைகள் பெயரும் அங்கு கிடைக்கும் பொருள்கள் அவற்றின் விலை என்ன என்பதும் அறிய முடிகிறது. நீங்களும் இந்த தகவலை பயன்படுத்தி கொள்வீர்கள் என நம்புகிறேன்


அழகு கார்னர்

நான் முதன் முதலா ஒரு ஹீரோயினை ரசித்தேன் என்றால் அது இவர் தான் ! பூவே பூச்சூடவா வந்த போது விடலை பருவத்திலேயே கிறுக்கு பிடிக்க வைத்தார். இன்னிக்கும் ஜம்முன்னு இருக்கார்.வெயிட் போடாமல் பார்த்துகிட்டா வயசே தெரிவதில்லை பாருங்க !

பார்த்த படம் காசனோவா மலையாளம்

மோகன்லால் நடித்த மலையாள படம். ப்ளே பாய் ஹீரோ திடீரென  மனம் மாறி ஒரு பெண்ணை உண்மையாய் காதலிக்கிறார். ஹீரோயினை சில வில்லன்கள் கொன்று விட, அவர்களை வித்தியாச முறையில் பழி வாங்குகிறார் ஹீரோ.

புளித்து போன இந்த கதையை முழுதும் வெளிநாடுகளில் படமாக்கி உள்ளனர். ஷ்ரேயா, லட்சுமி ராய் உள்ளிட்ட ஹீரோயின்கள் தான் சற்று ஆறுதல்

இதில் இன்னொரு கொடுமை: எங்கேயும் காதல் என்றொரு ஜெயம் ரவி நடித்த படம் வந்ததல்லவா? ப்ளே பாய் பாத்திரத்தில் அவர் வருவதும், இதில் மோகன்லால் வருவதும் அப்படியே பல காட்சிகள் டிட்டோ !

இந்த மொக்கை படம் எப்போதாவது டிவி யில் போட்டால் சானல் மாற்றி விடுவது உத்தமம் !

QUOTE CORNER

Opinions are like hand watches. Every one's watch shows different time. But every one believes that their time is correct.

ரசித்த காமெடி

வடிவேலுவின் காமெடியில் மிக ரசிக்கும் ஒன்று   இந்த பார்ட்.

லேடன் கிட்டே பேசுறியா? லேடன் ..............பின் லேடன் !படித்து மிரண்ட விஷயம்

குமுதம் சிநேகிதியில் வித்யாசமான மாற்றான்கள் என ஒரு இரட்டையர் பேட்டி படித்தேன். கேரளாவில் வசிக்கும் இந்த இரட்டையர்கள் தங்களை போலவே இரட்டையராய் பிறந்த சகோதரிகளை மணந்துள்ளனர். திருமணம் ஆன நாள் முதல் - முதலிரவு துவங்கி இன்று வரை இந்த இரண்டு ஜோடிகளும் ஒரே அறையில் தான் தூங்குவார்களாம். இதிலேயே சற்று மிரண்டு போன நான் அடுத்த கேள்வி பதிலில் இன்னும் மிரண்டேன்

"இப்படி ஒரே ரூமில் படுக்கும் போது ஆள் மாறாட்டம் நடுக்குமா?" என கேட்க, "நாங்கள் இருவரும் அவர்கள் இருவரில் யாருடன் வேண்டுமானாலும் தாம்பத்யம் வைத்து கொள்வோம். எங்களை பொறுத்த வரை நாங்கள் நால்வர் இல்லை. ஒருவர் தான்" என்று கூறியிருக்கிறார்கள் !

ஐம்பது வயதுக்கு மேல் ஆகிறது இவர்களுக்கு. இப்போதான் காலம் கெட்டு போச்சு..கெட்டு போச்சு என்கிறோம். ஆனால் இருபது வருஷத்துக்கு முன்பிருந்தே இத்தகைய கதைகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன !

சென்னையில் ஒரு மழைக்காலம்

மிக தாமதமாக துவங்கியுள்ளது சென்னையின் மழைக்காலம். ஆகஸ்ட், செப்டம்பரில் வழக்கமாய் பெய்யும் அளவு மழை இன்றி போர்வெல் எல்லாம் வற்றி போய் விடும் என்கிற பயம் இருக்கும் போது நல்ல வேளையாய் வந்து சேர்ந்தது.

முதல் நாள் வரை ஓரிரு மணி நேரம் ஏ. சி போட்டு உறங்கிய காலம் போய், திடீரென மின்விசிறி (Fan ) கூட இன்றி உறங்குகிறோம். புரட்டாசி முடிந்து ஞாயிறு கறிக்கடைக்கு சென்றால் எல்லாரும் ஸ்வெட்டர் போட்டு கொண்டு நிற்பதை காண வேடிக்கையாய் இருந்தது

குழந்தை பள்ளி செல்லும் / திரும்பும் நேரம் தவிர மற்ற நேரம் மிக அதிக மழை பெய்ய வேண்டும் என நினைக்கிறது என் மிடில் கிளாஸ் மனது !

சென்னை ஸ்பெஷல் : 38 அடுக்கு மாடி - சென்னையின் மிக பெரிய கட்டிடம்

சென்னையின் மிக உயர கட்டிடம் என்றால் எல். ஐ. சி யை தான் நினைப்போம்.. அது ஒரு காலம். அப்புறம் அதை விட உயர மாளிகைகள் எவ்வளவோ வந்து விட்டன. இப்போது சென்னையின் மிக உயர 38 அடுக்கு கட்டிடமாக OMR- ரோடில் வரவுள்ளது. இது அலுவலக கட்டிடம் அல்ல.. அடுக்கு மாடி குடியிருப்பு தான் !

அக்ஷயா பில்டர்ஸ் கட்டப்போகும் இந்த கட்டிடத்தில் ஒவ்வொரு தளத்திலும் ஒரு வீடு மட்டுமே ! ஒவ்வொரு வீட்டின் அளவும் 6700 சதுர அடி . (இரண்டரை கிரவுண்டுக்கும் மேல்) இப்படி ஒரு தளத்துக்கு ஒன்றாக 31 வீடுகள் வருகிறது. அப்ப, மீதம் ஏழு தளங்கள்? ரெஸ்டாரன்ட் ஒரு தளத்தில், கிளப், ஸ்பா போன்றவை ஒவ்வொரு தளத்தில் இப்படி அட்டகாச வசதிகள் கொண்ட இந்த ப்ராஜக்ட்டில் ஒரு வீட்டின் விலை அதிகமில்லை ஜென்டில் மேன் 7 கோடி ரூபாய் தான் !

ஹலோ எங்கே ஓடுறீங்க? வீட்டை புக் பண்ணவா?

30 comments:

 1. இணைய தள அறிமுகத்திற்கு நன்றி...

  QUOTE CORNER : உண்மை...

  ReplyDelete
  Replies
  1. சென்னையில் உள்ளோர் அனைவருக்கும் தெரிந்த ஒரு தெரு ..ரிட்சி ஸ்ட்ரீட் ! குறைந்த விலை என்பதோடு, இங்கு கிடைக்காத எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களே இல்லை என்பதால் மிக பிரபலம்! இந்த தெருவிற்கென தனி இணைய தளம் இப்போது வந்துள்ளது.

   http://www.ritchiestreet.co.in/ என்கிற இந்த தளத்தில் நூற்றுக்கணக்கான கடைகள் பெயரும் அங்கு கிடைக்கும் பொருள்கள் அவற்றின் விலை என்ன என்பதும் அறிய முடிகிறது. நீங்களும் இந்த தகவலை பயன்படுத்தி கொள்வீர்கள் என நம்புகிறேன்

   Delete
 2. Anonymous9:46:00 AM

  புதிய தகவல்.
  இணைய பக்கம் அரிமுக படுத்தியதர்க்கு நன்றி சார்.

  ReplyDelete
 3. நதியா மேட்டர் ஹவுஸ் பாஸுக்கு தெரியுமா?!

  ReplyDelete
 4. ஒரு வீட்டின் விலை அதிகமில்லை ஜென்டில் மேன் 7 கோடி ரூபாய் தான் !
  >>>
  7 கோடிதானா? என் சகோவா இருந்துக்கிட்டு இதுப்போல சிம்பிள் வீட்டையெல்லாம் பதிவா போடக்கூடாது. அப்புறம் என் இமேஜ் பாதிக்கும்ல. ஒரு 7000கோடி.., 8000கோடின்னா ஓக்கே. ஆமா, கோடிக்கு எத்தனை பூஜ்ஜியம்?!

  ReplyDelete
 5. ரிச்சி தெருவின் வலைத்தளத்தை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...

  ReplyDelete
 6. //குழந்தை பள்ளி செல்லும் / திரும்பும் நேரம் தவிர மற்ற நேரம் மிக அதிக மழை பெய்ய வேண்டும் என நினைக்கிறது என் மிடில் கிளாஸ் மனது !//
  அதே மைண்ட் தான் பாஸ்.. நைட் 8 - மார்னிங் 6 பெய்தால் சூப்பரா இழுத்துப் போர்த்திட்டு தூங்கலாம் :)

  //இப்படி அட்டகாச வசதிகள் கொண்ட இந்த ப்ராஜக்ட்டில் ஒரு வீட்டின் விலை அதிகமில்லை ஜென்டில் மேன் 7 கோடி ரூபாய் தான் !//
  அப்போ அடுத்த சூப்பர் சிங்கரில் கலந்துக்க வேண்டியது தான். ஏதாச்சு ஒரு வீடு கொடுப்பாங்கல்ல?? :)

  ReplyDelete
 7. இணைய தளம் அறிமுகம் - நன்று.

  வடிவேல் காமெடி நானும் ரசித்தேன்.

  31 மாடி கட்டிடம் - இங்கே இரண்டு நாட்களாக 81 மாடி கட்டிடத்திற்கு விளம்பரங்கள் வந்து கொண்டிருக்கிறது - ஆரம்ப விலை 3 கோடி.

  நதியா - :)

  ReplyDelete
 8. பயனுள்ள பலதகவல்கள்! அருமையான பகிர்வு! நன்றி!

  ReplyDelete
 9. - ரிட்சி ஸ்ட்ரீட் தகவல் உபயோகமானது.

  - நதியா மொய்து ஜோர்!

  - காசனோவா.. வித்தியாச விமர்சனம்!

  - quote .. அடிக்கடி எஸ் எம் எஸ்ஸில் வருவது!

  - வடிவேலு ரசிக்கத்தக்க காமெடி!

  - சென்னையின் மழைக்காலம் சென்னைவாசிகளுக்கு பொற்காலம்! வாகன ஓட்டிகளுக்கு அல்ல!

  - omr தகவல் பிரமிக்க வைக்கிறது!

  ReplyDelete
 10. Anonymous7:39:00 PM

  வித்யாச வானவில்...
  நதியா This Week...Next week? Eagerly awaiting!!! -:)


  ReplyDelete
 11. வீடு விலை மலிந்துகொண்டே போகின்றது. :))

  ReplyDelete
 12. ரிச்சி ஸ்ட்ரீட் இணைப்புக்கு நன்றி...

  ReplyDelete
 13. நன்றி தனபாலன்

  ReplyDelete
 14. சுடர்விழி: நன்றி

  ReplyDelete
 15. This comment has been removed by the author.

  ReplyDelete

 16. ராஜி: ஆள் மேட்டர் ஹவுஸ் பாஸ் நோஸ்

  ReplyDelete
 17. வாங்க கணேஷ் மகிழ்ச்சி

  ReplyDelete
 18. ஹாலிவுட் ரசிகன்: ஹா ஹா சூப்பர் சிங்கரில் இப்போதான் 40 லட்சம் வீட்டுக்கு வந்திருக்காங்க இங்கே வீடு ஏழு கோடி :))

  ReplyDelete
 19. வெங்கட் : 81 மாடி கட்டிடமா? அடேங்கப்பா

  ReplyDelete
 20. ஸ்ரீராம் பதிவை முழுதும் சுருக்கமாய் அலசும் தங்களுக்கு நேரில் சந்திக்கும் போது ட்ரீட் தருவதாக அய்யாசாமி சொல்லியிருக்கார் (நீங்க தான் மூச்சே காட்டுவதில்லையே; முகத்தையா காட்டுவீங்க? அந்த தைரியம் தான் இல்லாட்டி அவராவது ட்ரீட் தருவதாவது )

  ReplyDelete
 21. ரெவரி: நம்மல்லாம் ஒரே ஏஜ் குரூப் போல. அடுத்த வாரம் இந்த தலைமுறை ஹீரோயினாய் இருக்கலாம்

  ReplyDelete
 22. மகிழ்ச்சி பிரபா

  ReplyDelete
 23. Anonymous6:55:00 AM

  வண்ண மயமான வானவில்...

  ReplyDelete
 24. நதியா 45 வயதிலும் கரெக்டா உடம்பை மெயிண்டெய்ன் செய்கிறார்.நதியா ஸ்டைல் மாதிரி அப்புறம் யாரும் பிரபலமாகவில்லை. OMR ப்ராஜக்ட்டில் ஒரு வெராண்டா கூட புக் செய்ய முடியாது போல..

  ReplyDelete
 25. ரிச்சி ஸ்ட்ரீட் நல்ல பகிர்வு சார். .பலபேர்க்கு உபயோகமாக இருக்கும்..

  அந்த அடுக்கு மாடி குடியிருப்பு கடந்த வாரம் பார்த்தேன் சார்.. வானை முட்டும் கட்டிடம்.. பிரமிப்புக்கு பதிலாக பயம் தான் வந்தது ஏனோ தெரியவில்லை...

  நதியா எனக்கு பிடித்த நடிகை!! எந்த உடைக்கும் கச்சிதமாக பொருந்துவார்..

  கதம்ப பதிவு மணக்கிறது சார்..

  ReplyDelete
 26. எப்பா ஒரு வீட்டு விலையா இது?அல்லது ஒரு அப்பார்மென்ட் விலையா? நமக்கு சுத்தி பார்த்தலே போதும்.

  ReplyDelete
 27. அருமையான பதிவு.
  நன்றி.

  ReplyDelete
 28. \\சென்னையின் மிக பெரிய கட்டிடம் \\ மலேசியா, துபாய் போன்ற நாடுகளைப் பார்க்கும் பொது நாம் இன்னமும் கிருஷ்ணதேவராயர் காலத்துல தான் இருக்கோம்....... :(

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...