Wednesday, October 24, 2012

ஆபாச படம் தெரிவதால் இன்ட்லியில் தொடர்வோர் பட்டையை நீக்கவும் !

நண்பர்களே,

உங்கள் ப்ளாகில் இன்ட்லியில் தொடர்வோர் என்கிற பட்டையை இணைத்திருந்தால் அதை உடனடியாக நீக்கவும். அதில் தற்போது ஆபாச படம் தெரிகிறது.

சற்று முன் வீடுதிரும்பல் ப்ளாகை பார்த்த நான் இந்த விஷயம் ( ஆபாச படம் ) பார்த்து அதிர்ச்சி ஆனேன். முதலில் நம் ப்ளாகில் தான் பிரச்சனையோ என்று குழப்பம் வந்தது.

கூகிள் பிளஸ்சில் நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்கள் இதே செய்தியை பகிர்ந்திருந்தார். அப்புறம் தான் இது இன்ட்லி பட்டையால் வந்தது   என புரிந்தது.

இது தற்காலிகமான பிரச்சனை ஆக தான் இருக்க வேண்டும். விரைவில் இன்ட்லி இதை கவனித்து சரி செய்யும் என நம்புவோம். ஆபாச படம் நம் ப்ளாகில் தெரிய வேண்டாம் என்பதால் இன்ட்லி தொடர்வோர் பட்டையை தற்காலிகமாக நீக்கவும்.

இன்ட்லி தளத்தில் அவர்களை எப்படி தொடர்பு கொள்வது (Contact us ) என்ற தகவல் இல்லை. யாருக்கேனும் இன்ட்லி குழுமத்தின் மெயில் முகவரி தெரிந்தால் அவர்களுக்கு இந்த விஷயத்தை தெரிவிக்கவும்

நன்றி !

15 comments:

 1. Anonymous10:08:00 PM

  இண்ட்லியில் இப்படியான கோளாறு பல நாள்களாக இருக்கின்றது, அவர்களை முறையாக தொடர்புக் கொள்ள முடியவில்லை, எதாவது ஸ்கிர்ப்ட் விளம்பர ஹாக் ஆகி இருக்கக் கூடும், இண்ட்லி பயன்படுத்தும் ப்லிக் பல வைரஸ்கள் வரக் கூடியவை. இண்ட்லி கண்காணிக்கக் கடவ !

  ReplyDelete
 2. நான் ரிமூவ் செய்துவிட்டேன் ஒரு நிமிஸம் சைட் அவ்வளவுதானா என்று யோசித்தேன்..அதிர்ச்சியாகிவிட்டது

  ReplyDelete
 3. தற்போது தான் பிளாக்கர் நண்பன் எச்சரித்தார்.. நீக்கி விட்டேன்.
  நன்றி!

  ReplyDelete
 4. tamilish என்பதிலிருந்து இண்ட்லி ஆக மாற்றப்பட்டதிலிருந்தே எதேதோ பிரச்சனைகள். இன்று இப்படி ஒன்று. பிளாக்கர் நண்பன் தளத்தில் பார்த்து தான் நானும் தகவல் அறிந்தேன்.

  சில மாதங்களாகவே இண்ட்லியில் பிரச்சனை இருந்ததால் ஓட்டுப் பட்டையை முதலிலேயே நீக்கி விட்டேன். இண்ட்லியில் தொடர்வோர் கேட்ஜெட் பயன்படுத்தவே இல்லை!

  ReplyDelete
 5. ஏற்கனவே ஒரு முறை சிக்கல் இருந்ததால் Follower Gadget மீண்டும் இணைக்கவில்லை

  ReplyDelete
 6. மிக்க நன்றி...

  முகவரி : service@indli.com

  (விருப்பம் உள்ளவர்கள்) தகவல் அனுப்ப வேண்டுகிறேன்... நன்றி..

  ReplyDelete
 7. This comment has been removed by the author.

  ReplyDelete
 8. திரட்டிகள் அவ்வப்போது நம்மை காயப்படுத்திக்கொண்டே தான் இருக்கின்றன அந்த வகையில் இது ஒரு படி மேல்!!!

  Thanks for sharing this useful and awareness information brother!!

  should everyone circulate this information.

  ReplyDelete
 9. எப்படி இருந்த திரட்டி இப்போ இப்படி இப்படி எல்லாம் ஆச்சே :(((

  ஆரம்பகாலத்தில் பதிவுலகை நான் அறிந்ததே இந்த திரட்டியால் தான்... இன்று அந்த திரட்டி இந்த நிலையில் இருப்பதை பார்க்கும் போது வேதனையா இருக்கு...

  சம்மந்தப்பட்டவர்கள் கவனம் எடுத்து பழைய நிலைக்கு திரட்டியை கொண்டு வரலாமே

  ReplyDelete
 10. இன்ட்லியில் வோட்டுப் போட்டுப் பலகாலம் ஆச்சு. கிளிக் செய்வதால் பயன் ஏதும் ஏற்பட்டதில்லை என்பதால் சமீப காலங்களில் க்ளிக் செய்வதேயில்லை. நாங்களும் 'எங்கள் ப்ளாக்'கில் தமிளிஷ், (இன்டலி) தமிழ் 10, தமிழ்மணம் இணைத்திருந்தோம். இதற்குமுன் ஒருமுறையும் இப்படிப் பிரச்னைகள் ஏற்பட்டபோது இவற்றை நீக்கினோம். தமிழ்மணம் நாங்களே விரும்பினாலும் இணைக்க முடியவில்லை தற்சமயம் அதிலும் அவ்வளவு கவனம் செலுத்துவதில்லை.

  ReplyDelete
 11. எனக்கு அவசரமாக போன் செய்து ஆபீசர் சொல்லிவிட்டார்...!

  ReplyDelete
 12. இன்டலியை சில முறை அவர்கள் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டேன் ஆனால் அவர்கள் எந்த விளக்கமும் அளிக்ககவில்லை

  ReplyDelete
 13. இன்டலி பாலோயர்ஸ் முகம் தெரியாமல் போன போதே தூக்கிட்டேன். அது மாதிரிதான் ஸ்லைடு ஷோ வெட்ஜ் வைத்திருந்தேன் நான் தேர்ந்தெடுத்த தலைப்பு "flower" ஆனால் "அந்த" மாதிரியான படங்கள் வர ஆரம்பிச்சது தெரிந்ததுமே எடுத்துவிட்டேன்.

  ReplyDelete
 14. தகவலுக்கு நன்றி! இப்போது இண்ட்லி என் தளத்தில் லோட் ஆக வில்லை சரி செய்ய முயற்சிக்கிறார்கள் என்று நினைக்கிறேன்!

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...