Saturday, October 20, 2012

தென்றலின் கனவு : பதிவர் சசிகலா புத்தக விமர்சனம்

தென்றல் என்கிற வலைப்பூவில் தொடர்ந்து கவிதைகள் எழுதி வருபவர் -சசிகலா. இவரது கவிதைகள் தென்றலின் கனவு என்கிற பெயரில் புத்தகமாக வெளிவந்துள்ளது.

கணவர் ரவிசங்கர், மகன்கள் இனியவன், இளையவன் படங்கள் புத்தகத்தின் பின் (உள்) அட்டையில் உள்ளது வித்யாசமாய் இருக்கு !

காற்றோடு முட்டி மோதி என்கிற கவிதை நகர வாழ்வில் சிக்கி திணறி தாமதமாய் வேலைக்கு போகும் பெண்ணின் துயரை சொல்லி செல்கிறது.

உடல் ஊனம், வளர்ப்பு பிராணிகள் பற்றி ஆங்காங்கு சில கவிதைகள் இருந்தாலும் காதல் தான் மிக அதிகமாய் பொங்கி வழிகிறது

அழைக்க மாட்டாய்
என தெரிந்தும்
நொடிக்கொரு முறை
எடுத்து பார்க்கிறேன்
அலை பேசியை !
 


காதல் வந்த பிறகு என்கிற சிறு கவிதையில் (இக்கவிதை 84-ஆம் பக்கமும் மறுபடி பிரசுரம் ஆகியுள்ளது ! புத்தகத்திலும் ஒரு மீள் பதிவு !) பெண்களுக்கு காதல் வந்தால் என்ன மாறுதல் வருகிறது என சொல்கிறார். ஆண்களுக்கு இத்தகைய பெண்களின் உணர்வுகள் ஆச்சரியமாய் தான் இருக்கும். பெண்கள் இத்தகைய கவிதைகளை ஒரு விதத்தில் ரசித்தால் ஆண்கள் இப்படியும் அவர்கள் நினைப்பார்களா என யோசிப்பார்கள் !


கொடுங்கள் கொடுத்து கொண்டே இருங்கள்
உங்களுடையது என்று எதுவும் இல்லை
என்று ஒரு கவிதையில் சொல்லும் கவிஞர், இந்த புத்தக வெளியீட்டு படங்களை புகைப்படம் எடுத்து தந்தமைக்கு எனக்கு இன்னும் பணம் செட்டில் செய்ய வில்லை :))

இறந்து போன அம்மாவை அரை நாள் விடுப்பில் வா; மடியில் தலை சாய்த்து படுக்க வேண்டும் எனும் பெண்ணின் உணர்வுகள் நெகிழ்த்துகிறது

சில சுமாரான கவிதைகளுக்கு பின் ஒரே பக்கத்தில் இரு நல்ல கவிதைகளையும் பார்க்க முடிகிறது உதாரணத்துக்கு ஒன்று

எந்த விருந்தினருக்காக
என் வீட்டு வாழை மரத்தில்
இலை கழுவி கொண்டிருக்கிறது
மழை !

எந்திரத்தனமான உலகில் என்னும் கவிதையில் ஆண் -பெண் இருவரும் வேலைக்கு போகும் நகர வாழ்க்கையின் கொடுமை அப்படியே வெளிப்படுகிறது. நாங்களும் இதை அனுபவ ரீதியாக உணர்ந்துள்ளோம் !

பெண்களுக்கு உரித்தான possessiveness- காதலன் மீது கோபம் என்றால் பூனை குட்டியை உதைப்பதிலும், இன்னொரு ஆண் காதலனுடன் வண்டியில் போனால் கூட பொறாமை வருவதிலும் வெளிப்படுகிறது

சமையலறையும்
சலவை துணியுமே
உலகம் என்றிருந்தேன்
கவிதையின் அறிமுகம்
கிடைக்கும் வரை

என்கிற வரிகள் ஒரு பெண்ணின் சுயம் தேடும் தேடலை அழகாய் வெளிப்படுத்துகிறது.

மொத்தத்தில் :

பெண்களின் உணர்வுகளை அழகாய் பதிவு செய்துள்ள சசிகலாவிற்கு வாழ்த்துகள் ! தொடர்ந்து எழுதுங்கள் !

23 comments:

 1. சக பதிவரின் கவிதை நூல் விமர்சனம் நன்று. நானும் கவிதைகள் முழுவதையும் படித்து விட்டேன். பல நல்ல கவிதைகள் காணப்படுகின்றன.
  இது போன்ற விமர்சனம் நிச்சயம் ஊக்கமளிப்பதாக அமையும்.சசிகலாவுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. நான் முழுவதும் படித்து விட்டேன் மோகன் சார் எனக்கு பிடித்த கவிதைகளில் ஒன்று

  எந்த விருந்தினருக்காக
  என் வீட்டு வாழை மரத்தில்
  இலை கழுவி கொண்டிருக்கிறது
  மழை !

  சசிகலா சங்கர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. தென்றலின் கனவு புத்தக வரிகளை படித்ததோடு தூக்கியெறியாமல் நிறை குறைகளை தரமாக ஒரு பதிவாக்கி தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

  (எல்லாமே நல்லாதான் இருக்கு அது என்ன என்னவோ செட்டில் என்று இருந்ததே அது தான் சரியா தெரியள)

  ReplyDelete
 4. இல்லை கழுவும் மழை அருமை. அடுத்த கவிதையும் நன்றாக இருக்கிறது. நல்ல அறிமுகம். பாராட்டுகள்.

  ReplyDelete
 5. சக பதிவரின் கவிதை நூல் விமர்சனத்திற்கு ஒரு சல்யூட்...

  நன்றி...

  ReplyDelete
 6. கவிதை நூல் விமர்சனம் நன்று. சென்னை வந்தபோது நண்பர் கணேஷ் இப்புத்தகத்தைத் தந்தார். அவரோடு அன்று வெளியே சென்ற போது அவரது பையில் இருக்கட்டும், விடைபெறும்போது வாங்கிக் கொள்கிறேன் என வைத்தது - நியாகமாய் மறந்து விட்டேன்! - அடுத்த பயணத்தின் போது நினைவாக வாங்கிக் கொள்ள வேண்டும்!

  தொடரட்டும் பதிவுகள் தினம் தினம். த.ம. 9

  ReplyDelete
 7. சகோதரி கவிஞர் தென்றல் சசிகலா எழுதிய கவிதை நூலைப் பற்றிய தங்கள் விமர்சனம் நன்றாக உள்ளது.

  நூலை வெளியிட்ட பதிப்பாளரின் முகவரியையும் புத்தகத்தின் விலையையும் தெரியப்படுத்தினால் பணம் அனுப்பி பெற்றுக் கொள்வேன்.

  ReplyDelete
 8. தென்றலின் கனவு புத்தக வரிகளை படித்ததோடு அவரின் கவிதை நிறை குறைகளை சொல்லியவிதம் சூப்பர்!புத்தகம் வெளிநாட்டிலும் வரவேண்டும் !ஆவல்.

  ReplyDelete
 9. கவிதைகள் அழகாக இருக்கின்றன.

  சசிகலா அவர்களுக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 10. சசிகலாவுக்கு வாழ்த்துகள்!

  பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 11. என்னுடன் சேர்ந்துக் கொண்டதற்கு மிக்க நன்றி.
  அருமையான விமர்சனம்
  http://tamilraja-thotil.blogspot.com/2012/09/blog-post_7.html

  ReplyDelete
 12. நன்றி முரளி

  ReplyDelete
 13. வாங்க சரவணன் எனக்கும் பிடித்தது அக்கவிதை

  ReplyDelete

 14. சசிகலா: ஆக மொத்தம் உங்களிடம் போட்டோவுக்கு பணம் வாங்க முடியாது போல :)

  ReplyDelete
 15. தனபாலன் : நன்றி

  ReplyDelete
 16. வெங்கட் : அடடா அடுத்த முறை வாங்கிடலாம் அந்த புக்கை

  ReplyDelete
 17. தமிழ் இளங்கோ சார் : உங்கள் முகவரியை அனுப்பி வையுங்கள் சசிகலா புத்தகம் அனுப்பி வைப்பதாக சொன்னார்.


  Mail ID: snehamohankumar@yahoo.co.in

  ReplyDelete
 18. மகிழ்ச்சி தனி மரம் நன்றி

  ReplyDelete
 19. நன்றி மாதேவி

  ReplyDelete
 20. நன்றி ராமலட்சுமி மேடம்

  ReplyDelete
 21. வாங்க தமிழ் ராஜா நன்றி

  ReplyDelete
 22. கவிதைகள் எளிதாக புரிந்து கொள்ளும் படியாக நன்றாக உள்ளது.

  கிடைக்கும் போது படிக்கிறேன்....:)

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...