Wednesday, October 31, 2012

புயலுக்கு முந்தைய சென்னை

சென்னையை நீலம் புயல் இன்னும் சிறிது நேரத்தில் தாக்கவுள்ளது. இதன் தாக்கம் மிக அதிகமாக இருக்கும் என தெரிகிறது. புயலுக்கு முந்தைய ரிப்போர்ட் இது. இப்போதே காற்று மிக மிக அதிகமாக (புயல் போலவே) வீசுகிறது.
**
காலை அலுவலகம் வரும்போதே டூ வீலர் காற்றில் ஆட துவங்கி விட்டது. வண்டி ஓட்டுவது மிக கடினமாய் இருந்தது.

பல தனியார் நிறுவன ஊழியர்கள் பணிக்கு வந்து விட்டனர். புயல் காரணமாக மதியத்துக்கு மேல் நிர்வாகம் அவர்களை வீட்டுக்கு
அனுப்பி விட்டது. சில இடங்களில் இரவு நேர பணி செய்வோருக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதுசென்னை மக்கள் எப்போதும் sincerityக்கு பெயர் போனவர்கள். இன்றும் பல நிறுவனங்களில் 90 சதவீத அட்டெண்டன்ஸ் இருந்தது.

கூகிள் பிளஸ்சில் வெவ்வேறு ஊரிலிருக்கும் நிலையை நண்பர்கள் பகிர்ந்து கொண்டிருந்தனர். அடித்த காற்றில் டூ வீலர் ஓட்டுபவரின் ஹெல்மெட் பறந்து போனதாக ஒரு நண்பர் குறிப்பிட்டிருந்தார்.

மாயவரம், பூம்புகார் உள்ளிட்ட இடங்களில் மிக அதிக மழை மற்றும் காற்று என்று நண்பர்கள் தெரிவித்தனர்

என் பெண்ணுக்கு நவம்பர் 1- யூனிட் டெஸ்ட்கள் ஆரம்பம் ; அதற்கு இரு நாட்கள் முன் லீவு. அவர்கள் பள்ளியில் நோட்டுகளை வாங்கி வைத்து கொண்டு பரீட்சைக்கு முதல் நாள் தான் தருவார்கள் ( பசங்க எப்படி படிப்பார்கள் என்ற யோசனையே கிடையாது ) ஒவ்வொரு நாளும் லீவு விட விட ஜாலி ஆனாள் அவள். அரசே லீவ் விட்டால் கூட, அவர்கள் பள்ளியில் லீவு என அறிவித்தால் மட்டுமே லீவு என எடுத்துகொள்ள முடியும். பல முறை அரசு லீவு என அறிவித்த பின்னும் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளி வைத்துள்ளனர்

காலை காம்பவுண்ட் மேலே இருக்கும் தொட்டி எல்லாம் இறக்கி தரையில் வைத்தோம்; ஆனால் அப்படியும் காற்றில் அவை விழுந்து உடைய துவங்கி விட்டன. எங்கள் வீட்டினருகில் இருக்கும் அனைத்து கார்களிலும் அவற்றின் கவர்கள் கிழிந்து பறக்க ஆரம்பித்து விட்டது. சில வீடுகளில் பிளாஸ்டிக் டேன்க் மூடிகள் உடைந்து பறந்து வந்து விழுகிறது.

எங்கள் அலுவலக காம்பவுண்ட் உள்ளே பல நாய்கள் எப்போதும் இருக்கும் அவற்றின் ஓலம் பெரிதாக இருக்கிறது. அவை மிக பயந்து போயிருக்கின்றன.

ரயில்கள் மதியத்துக்கு மேல் நிறுத்தப்பட்டு விட்டன. வீட்டுக்கு செல்வோர் பஸ்ஸை தான் நாட வேண்டியுள்ளது.

பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு விட்டது. எப்போது வருமோ தெரியாது.

இந்த நிமிடம் வரை விமான போக்குவரத்து நிறுத்தப்படவில்லை. புயல் ஆரம்பித்தால் நிறுத்தப்படலாம் !

மாலை ஆறு முதல் எட்டு வரை புயல் அடிக்க கூடும்

பிற தகவல்களை கரண்ட் இருந்தால் பின்னர் பகிர்கிறேன் !

*****
புயலில் கடைபிடிக்க எச்சரிக்கை என தட்ஸ் தமிழ்/ தளிர் சுரேஷ் பகிர்ந்த சில தகவல்கள் &  அவசர உதவி நம்பர் இதோ:

மின்கம்பங்கள் சாயலாம்

பொதுவாக மழைகாலத்தில் தேங்கிக் கிடக்கும் மழைநீரில் மின்சாரம் பாய்வதற்கு வாய்ப்பிருக்கிறது. புயல் காலங்களில் முறிந்து விழும் மரங்கள், மின்கம்பங்கள் அருகே செல்வதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

மரங்கள் விழலாம் - கீழே ஒதுங்காதீர்கள்

புயலடித்துக் கொண்டிருக்கும் நிலையில் மரங்களின் கீழே மழைக்கு பாதுகாப்பு என ஒதுங்கி நிற்பதைத் தவிர்க்க வேண்டும். தேவையில்லாமல் மழை நீரில் நடந்து போவதைத் தவிர்க்கவும்

சுவிட்சுகளை முடிந்தவரை ஆப் செய்யுங்கள்

புயல் காற்று வீசும் நிலையில் வீடுகளில் மின்சாதனங்கள் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களுக்கான சுவிட்சுகளை கூடுமானவரை அணைத்தே வைக்கவும்.

மெழுகுவர்த்திகள் ஸ்டாக் இருக்கட்டும்

மின்சாரம் துண்டிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் வீட்டில் மெழுகுர்த்திகளை போதிய அளவில் வைத்துக் கொள்வது நல்லது.

தற்போதைய நிலம் புயலுக்கான முன்னெச்சரிக்கையின் போது வானிலை மையமும் கூட தகவல் தொடர்பு சாதனங்கள் பாதிக்கப்படும் என்பதை சுட்டிக்காட்டுகிறது.

அவசர உதவிக்கு...

புயல் மற்றும் மழை வெள்ளம் குறித்த விவரங்களை அறிய சென்னையில் தகவல் மையம் திறக்கப்பட்டிருக்கிறது. இதன் தொலைபேசி எண்: 044-28447727 .

சென்னையில் புயல், மழை பற்றிய அறிய 044-28447734 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
***
தொடர்புடைய பதிவு:

சென்னை புயல்: After effects : நேரடி அனுபவம் + படங்கள் : இங்கு வாசிக்கலாம்

23 comments:

 1. Replies
  1. Thanks "நன்பேண்டா...!"

   Delete
 2. உரிய நேரத்தில் ‘உடனடி’ தகவல் தந்ததற்கு அனவருடைய சார்பிலும் நன்றி.

  ReplyDelete
  Replies
  1. நன்றி அறுவை மருத்துவன்

   Delete
 3. நல்ல தகவல்கள்.

  நிலம் - கடந்து விட்டதா கரையை!

  ReplyDelete
  Replies
  1. அக்கறையுடன் போன் செய்து பேசியமைக்கு மிக நன்றி வெங்கட்

   Delete
 4. \\கூகிள் பிளஸ்சில் வெவ்வேறு ஊரிலிருக்கும் நிலையை நண்பர்கள் பகிர்ந்து கொண்டிருந்தனர். அடித்த காற்றில் டூ வீலர் ஓட்டுபவரின் ஹெல்மெட் பறந்து போனதாக ஒரு நண்பர் குறிப்பிட்டிருந்தார்.\\ கட்டாம ஓட்டிகிட்டு போயிருக்காரு...........

  ReplyDelete
  Replies
  1. அப்படிங்கறீங்க??

   Delete
 5. இன்னும் அலுவலகத்தில் இருக்கிறேன்...இங்கிருப்பதே இப்போதைக்கு பாதுகாப்பானதாக தோன்றுகிறது...

  ReplyDelete
  Replies
  1. கரண்ட் ஆபிசில் தான் இருப்பதால் எனக்கும் அப்படி தோனுச்சு ஆனா பாமிலி இருக்கே அதான் ஓடி வீட்டுக்கு வந்துட்டேன்

   Delete
 6. //அவர்கள் பள்ளியில் நோட்டுகளை வாங்கி வைத்து கொண்டு பரீட்சைக்கு முதல் நாள் தான் தருவார்கள்//

  லாஜிக் புரியலையே?

  நல்ல அப்டேட் அண்ட் தகவல்கள்.

  கரண்ட் எங்களுக்கு வந்து ஒரு பதிவும் போட்டாச்சு.

  ReplyDelete
  Replies
  1. நோட்டு முழு போர்ஷன் முடித்ததும் சரியா எழுதிருக்க என சரி பார்த்துட்டு திரும்ப தருவார்கள். தேர்வுக்கு ஒரு வாரம் முன் இதை வாங்கிட்டு சரியா முதல் நாள் தான் தருவார்கள் :((

   Delete
  2. அதே நிலைமைதான் என் மகள் படிக்கும் பள்ளியிலும். நான் கணிதத்திற்காக தனியாக வீட்டில் ஒரு நோட்புக் வைத்திருக்கிறேன்.

   Delete
 7. matters like this, if u share with time in India will be helpful to people lk me who is thinking abt grand kids going to school. i read this post at 6.15 a.m of Indian time :-)

  ReplyDelete
 8. அங்கன மகள்கள் இருக்கற இடத்துலே ஸான்டி புயல். இன்னும் கரண்ட் வல்லே. வீட்டுக்கு பேஸ்மென்டிலே
  தண்ணி நிக்குது. மின்சாரம் இல்ல.
  என்னோட டாட்டர் இப்ப ஸ்டேட்ஸிலே இருக்கா . அங்கேயே சிடிஸன் ஆயிட்டா ... அங்கெல்லாம் பவர் கட்டே
  கிடையாதுன்னு பெருமைப்பட்டாயே கிழவா !!

  உனக்கு இங்கன தமிழ் நாட்டிலே நீலம் வர்றதுக்கு இரண்டு நாள் முன்னாடியே அங்கன சான்டி வந்துடுச்சு.
  கரன்ட் போயிடுச்சு. இன்னும் வரல்லே.

  உனக்கு இங்கன வளசரவாக்கத்திலே நேத்திக்கு மத்தியானம் 2 மணிக்கு போன கரண்ட் இன்னிக்கு காலைலே
  6 மணிக்கு வந்திடுச்செ. !!

  இப்ப பாரு. நம்ம இந்தியா தான் பெட்டரு !!

  மோஹன் குமார் சாரே ! உங்க பதிவுக்கு வழி இன்னிக்கு தான் தெரிஞ்சது.
  புயலடிக்கர நேரத்திலே வந்திருக்கேன்.
  சூடா ஒரு காபி தாங்களேன்.


  சுப்பு ரத்தினம் ( தாத்தா )

  ReplyDelete
  Replies
  1. இரண்டு புயல்களையும் ஒப்பிட்ட விதம் அருமை ஐயா

   காபியா? நேரில் பார்க்கும் போது சாப்பாடே சேர்ந்து சாப்பிடலாம் சார்.

   Delete
 9. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே http://blogintamil.blogspot.in/2012/11/4.html) சென்று பார்க்கவும்...

  நன்றி...

  ReplyDelete
  Replies
  1. Thank you very much


   நீங்கள் சொன்னதால் தான் பார்த்தேன்

   Delete
 10. நண்பர்களே உங்கள் கருத்துகளுக்கு நன்றி; மின்சாரம் இல்லை. தனித்தனியே பதில் தர இயல வில்லை

  தங்கள் புரிதலுக்கு நன்றி !

  ReplyDelete
 11. இப்போ யோசிக்கும்போதபுயலடித்தபோது புயல் கரையைக் கடந்தபோது அடித்த காற்றை விட காலை இருந்த காற்றின் வேகம் அதிகம்தான்!

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...