Saturday, October 6, 2012

அஞ்சலி: பதிவர் ஆயிரத்தில் ஒருவன் மணி

பதிவர் ஆயிரத்தில் ஒருவன் மணி இன்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது  57 என்று அறிகிறோம் 

அவரின்  வலைத்தளம் : http://mani-saraswathi.blogspot.in/
இந்த செய்தி கேள்விப்பட்ட சில மணி நேரங்களாக மனது அவரை பற்றிய நினைவுகளிலேயே சுற்றி சுற்றி வருகிறது.

ORB ராஜா அலுவலக திறப்பு விழாவில் முதல் முறை சந்தித்தேன். மிக நன்றாக பேசினார். பின் பதிவர்விழா அன்று பார்த்து பேசியது.

பதிவர் விழா முடிந்த பின் எல்லார் படங்களும் ப்ளாகில் போட்டு வந்த போது " என்னை படம் எடுத்தீர்களா? அதை ப்ளாகில் போடுவீர்களா? " என்று சிறு குழந்தை மாதிரி ஆர்வத்துடன் மெயில் அனுப்பி கேட்டார்.

அவர் படம் போட்ட பின் மீண்டும் நன்றி சொல்லி மெயில் அனுப்பினார்.

"இறந்தவர்களுக்கு துன்பம் இல்லை; இருப்போருக்கு தான் துன்பம்" என்பார்கள். நண்பர் மணிக்கு இனி எந்த துன்பமும் இல்லை. என் வருத்தமெல்லாம் அவர் குடும்பம் மீது தான். அவர்களுக்கு எந்த சிறு வழியிலாவது உதவ வேண்டும் !

************
இறுதி சடங்கு நடைபெறும் இடம் - 11 கே.ஆர். ராமசாமி தெரு,கே.கே.சாலை,எம்.ஜி.ஆர் நகர் மார்கெட் அருகில்,எம்.ஜி.ஆர் நகர்,சென்னை - 78

இறுதி சடங்கு நடைபெறும் நேரம் - காலை 8 முதல் 8.30 வரை !

34 comments:

 1. ஆழ்ந்த அஞ்சலிகள்!

  ReplyDelete
 2. சகோ.மணியின் குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்!

  அவர்களுக்கு இந்த துயரத்தை தாங்கும் மனபலத்தை இறைவன் தந்தருள்வானாக

  ReplyDelete
 3. ஆழ்ந்த அஞ்சலிகள், அவரது ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறோம்.

  ReplyDelete
 4. ஆழ்ந்த அஞ்சலிகள்!

  ReplyDelete
 5. ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் குடும்பத்தினருக்கு இறைவன் ஆறுதலையும், பொறுமையையும் தர பிரார்த்தனைகள்.

  ReplyDelete
 6. நிச்சயமாக அவர் குடும்பத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. எல்லாம் வல்ல இறைவன் அவர் குடும்பத்திற்கு இதை தாங்கும் வலிமையும் பொறுமையும் தர பிரார்த்தனைகள்.

  ReplyDelete
 7. என்னங்க இப்படி அதிர்ச்சியான தகவல் சொல்றீங்க...

  மிகவும் வருத்தமுறுகிறேன்..

  அவருடன் சென்னை பதிவர் சந்திப்பில் மிகவும் நெருக்காமான பழக்கம் ஏற்பட்டது..

  அவருடைய சமையல் கலை பாராட்டி அவருடன் வெகு நேரம் பேசிக்கொண்டு இருந்தேன்...

  பழகுவதற்கு இனிய நண்பர் அதிகமாக பேசாதவராக இருந்த அவர் செயலில் நல்ல வேகம்...

  அவருடைய குடும்பத்தாருக்கு மட்டுமல்ல பதிவுலகிற்கும் பெரிய இழப்பு...

  அன்னாரை இழந்து வாடும் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்...


  அவருடைய ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை வேண்டுகிறேன்...

  ReplyDelete
 8. ஆழ்ந்த இரங்கல்கள்.

  ஒரூ வாரம்கூட ஆகலை நம்ம ஈழநாதன் (வயசு 31) மறைந்த அதிர்ச்சி வந்து தாக்கி. இப்ப என்னன்னா மணி.

  ரொம்பவே வருத்தமா இருக்கு.

  காலனுக்கு ஏன் இத்தனை அசுரப்பசி:(

  ReplyDelete
 9. ஆழ்ந்த அஞ்சலிகள்!

  ReplyDelete
 10. அன்னாருக்கு மலர் வணக்கம்!!

  ReplyDelete
 11. மனம் அதிகம் துயர் கொள்கிறது
  அவருடைய ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்

  ReplyDelete
 12. நம்பிக்கைகள் என்றும் வீண்போனதில்லை
  அருமையான பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 13. "ஆயிரத்தில் ஒருவன்” மணியின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்! அவருக்கு எனது அஞ்சலிகள்!

  ReplyDelete
 14. அன்னாருக்கு அஞ்சலிகளும்,ஆழ்ந்த அனுதாபங்களும்...

  ReplyDelete
 15. மணியின் மறைவினால் துயருறும் அவரது குடும்பத்தினருக்கு எனது அனுதாப்ங்கள்.ம்னியின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

  ReplyDelete
 16. அவர் படைத்த உணவின் சுவை மறையுமுன்னே அவர் மறைந்துவிட்டரே!! வேதனை அளிக்கிறது அவரது இழப்பு அழ்ந்த இரங்கல்கள்

  ReplyDelete
 17. மணி அவர்கள் வீட்டுக்கு சென்று வந்தோம். அவருக்கு இரு மகன்கள், ஒரு மகள். மகன் மற்றும் மகளுக்கு இவ்வருட பிப்ரவரி மற்றும் ஏப்ரலில் திருமணம் முடித்துள்ளார். கடைசி மகன் பாலிடெக்னிக் படிக்கிறார். நம் மூலம் எந்த உதவியாவது தேவையா என பின்னர் விசாரித்து சொல்வதாக நண்பர் ஜெய் கூறியுள்ளார்.

  அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் அருகிலேயே அமர்ந்து கொண்டு " அப்பா உங்க பிரண்ட்ஸ் வந்திருக்காங்க. எழுந்து பாருங்க. எழுந்து பாருங்க " என்றே திரும்ப திரும்ப கூறினர். அவர் இறந்ததை அவர்களால் இன்னும் மனதளவில் ஏற்று கொள்ள முடிய வில்லை :((

  ReplyDelete
 18. எனது அஞ்சலிகள்.

  ReplyDelete
 19. ஆழ்ந்த அனுதாபங்கள்.

  ReplyDelete
 20. அவரது ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறோம்.

  ReplyDelete
 21. சகோதரர் மணியின் குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்!அன்னாரின் குடுமப்த்தினருக்கு இறைவன் நற் பொறுமையை தந்தருளவானாக!

  ReplyDelete
 22. அவருடைய முகம் நன்றாக நியாபகம் இருக்கிறது. அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறோம்.

  ReplyDelete
 23. அருமையான மனிதர்...அன்னாரது ஆத்மா சாந்தியடையட்டும்...

  ReplyDelete
 24. அவரது ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்...

  ReplyDelete
 25. எனது அனுதாபங்கள்.

  ReplyDelete
 26. அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

  ReplyDelete
 27. எனது அஞ்சலிகள்.

  ReplyDelete
 28. எனது அஞ்சலிகள்......

  ReplyDelete
 29. அவருடைய குடும்பத்தினரை நினைத்து வருந்துகிறேன்! :-(

  ReplyDelete
 30. அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம்..

  ReplyDelete
 31. என்னுடைய அஞ்சலிகளும்..

  ReplyDelete
 32. எனது அஞ்சலிகளும்...

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...