Saturday, July 13, 2013

சிங்கம் -1 Vs சிங்கம் -2 - சினிமா விமர்சனம்

சிங்கம் முதல் பார்ட் - எனக்கு பிடித்த ஒரு மசாலா படம். அதன் அடுத்த பாகம் எனும்போது - " ஏன் இந்த வேலை" என்று தான் படம் வெளிவரும் முன் தோன்றியது. ஆனால் பெரும்பான்மை மக்களை மகிழ்ச்சி படுத்தும் விதத்தில் எடுத்துள்ள ஹரி & டீமுக்கு முதல் பாராட்டுகள் !



போதை பொருள் கடத்தும் வில்லன் கும்பலை வேரோடு பிடிக்கும் போலிஸ் கதை தான் சிங்கம் -2

சிங்கம் - 1 ஐ விட எங்கெங்கு பின் தங்கியது இந்த பார்ட் என்று பார்ப்போம்

பாடல் -  முதல் பார்ட்டில் தேவி ஸ்ரீ பிரசாத் உருப்படியாய் பாட்டு போட்டிருந்தார் இதில் சிங்கம் டான்ஸ் தவிர மற்ற பாட்டுகள் ஊஹூம் ; படமாக்கலும் வழக்கமான ரகம்; கதைக்கு பாடல்கள் எவ்விதத்திலும் உதவலை :(

நகைச்சுவை - இரண்டாம் பார்ட்டில் சந்தானம் இருக்கிறார் எனும்போது - நிச்சயம் காமெடி நன்றாக இருக்கும் என்று தான் எதிர்பார்ப்போம். ஆனால் வெகு சில இடங்களில் மட்டுமே சந்தானம் சிரிப்பை வரவழைக்கிறார். விஸ்வரூபம் கமல் போல மிமிக்ரி செய்யும் போதும், " வாழைக்காயை பார்த்து சீவுய்யா " எனும்போதும், அனுஷ்காவை (மிக சரியாக ) குதிரை என்பதும் ரசிக்க முடிகிறது. மற்றபடி கிச்சு கிச்சு கூட மூட்ட வில்லை

அனுஷ்கா - முதல் பார்ட்டில் இவரது பார்ட் - தென்றல் போல அவ்வளவு சுகமாய் இருக்கும். இங்கு மிக மிக செயற்கை ஆக உள்ளது. கதையை இழுக்க சூர்யா- அனுஷ்கா திருமணம் நடக்கலை என சொல்லி இரு குடும்பத்து பாத்திரங்களையும் மிக ஆர்டிபீசியல் ஆக்கி விட்டார் ஹரி . அனுஷ்கா - சிறிது கூட ஈர்க்காமல் போகும் அரிதான ஒரு படம் இது ! அம்மணி தலையை தூக்கி சீவி இருக்கும்போது நெற்றி நாற்பதடி ரோடு போல பெரிதாக இருக்கிறது. தலைவியை மாற்ற வேண்டிய நேரம் வந்துடுச்சா என தெரியலை. செல்வ ராகவனின் இரண்டாம் உலகம் பார்த்து விட்டு தான் மாற்றணுமா என முடிவெடுக்கணும் !
நாற்பதடி ரோடு நெற்றி 
நீளம் + இழுவை - இரண்டரை மணி நேரம் தாண்டி படம் ஓடும்போது - நெளிய ஆரம்பித்து விடுகிறோம்.
****
மேலே சொன்ன குறைகளையெல்லாம் தாண்டி படத்தை பார்க்க இரண்டே பேர் தான் காரணம் - சூர்யா + ஹரி !

சூர்யா அதே அர்ப்பணிப்புடன் ஒரு ஹிட் கொடுக்க வேண்டிய அவசியத்தில் கர்ஜிக்கிறார். எந்த பிரச்னையும் தெரிய வந்த அடுத்த நொடி படபடவென ஏழெட்டு போலிசுக்கு வெவ்வேறு ஆர்டர் போடுகிறார் ! அவரது மைண்ட் என்ன கம்பியூடரால் ஆனதா என தெரியலை. தனக்கு போலீசில் என்ன போஸ்ட் வேண்டும் என்பதை இவரே முடிவு செய்கிறார். தனது பதவியில் என்னென்னெ பவர் வேண்டும் என இவர் உள்துறை அமைச்சருக்கு ஆர்டர் போடுவது சீரியஸ் காமெடி.

படத்தில் எப்படி அத்தனை பேரையும் சுட்டு கொல்ல - ஹீரோவுக்கு பெர்மிஷன் கிடைக்கிறதோ ? இந்தியாவில் தான் இப்படி என்றால் தென் ஆப்ரிக்கா சென்றும் அங்குள்ளவர்களை டுமீல் செய்து கொண்டே இருக்கிறார் ஹீரோ. எனக்கு தெரிந்து குறைந்தது நூறு பேரை சுட்டு கொன்றிருப்பார் ! (எத்தனை பேரை சுட்டு கொன்றார். எத்தனை பேரை வெட்டி கொன்றார் என ஒரு போட்டியே வைக்கலாம் பட குழு !)

படத்தின் முதல் 45 நிமிடம் பாட்டு- பள்ளி காட்சிகள் என கொட்டாவி வர .வைக்கிறது. கடைசி 30 நிமிடம் தென் ஆப்ரிக்கா - கப்பல் என செம இழுவை - ஆனால் நடுவில் உள்ள ஒரு மணி நேரம் தான் படம் ஹிட் ஆக ஒரே காரணம் !
சூர்யா போலிசாக சார்ஜ் எடுத்து கொண்ட பின் ஒவ்வொரு காட்சியும் செம பரபரப்பு. அடுத்த் ஒரு மணி நேரம் நம்மை படத்துடன் முழுமையாக ஒன்ற வைத்து விடுகிறார்கள். இங்கு தான் சிங்கம் - 2 வெற்றி படமாகிறது

ஹன்சிகா பள்ளி மாணவி எனும் கொடுமையை மறந்து விட்டு பார்த்தால் - ஓரளவு ரீலிப் ஆக தான் இருக்கு.

இயக்குனர் ஹரி - நகைச்சுவையை சரியாக தந்து, நீளத்தில் கை வைத்திருந்தால் படம் இன்னும் ரசிக்கும்படி வந்திருக்கும். Still, இது ஒரு பீல் குட் மூவி தான்.

ஆங்கில ஜேம்ஸ் பாண்ட் படங்கள் போல - சீக்வென்ஸ் கதை சரியாக அமைத்தால் வெற்றி பெறலாம் என நிரூபித்துள்ளது சிங்கம் -2

சிங்கம் - 2 : வொர்த் வாட்சிங் !

6 comments:

  1. Anonymous5:01:00 PM

    anushka first makeup man maathunga...anushka azhaguthan..thamanna kooda paiya padathula romba azhaga iruppanga..because of different costume and make up..

    ReplyDelete
  2. ஓக்கே ரைட்டு

    ReplyDelete
  3. அனுஷ்காவை இந்த படத்தில் ஓரங் கட்டி விட்டார்கள்

    ReplyDelete
  4. அன்பின் மோகன் குமார் - வொர்த் வாட்சிங்குன்னு முடிச்சீட்டிங்க - அத ஒரு மணி நேரத்துக்காகவா - இல்ல சூர்யாவுக்காகவா ? எப்படி இருந்தாலும் பாத்துட வேண்டியது தான். நல்வாழ்த்துகள் நட்புடன் சீனா

    ReplyDelete
  5. allam nalla eruirathu appo appo konjam soorya sri Vekama pesuraar so athu avarda allam film laum thodarnthu eruku atha koncham change panninaa ok
    thank you

    ReplyDelete
  6. anuska madatha rombe pidikum avangada acting rombe rombe pidikkum

    Ethu Srilankan tamil peoples da
    Comments


    good luck

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...