Wednesday, July 10, 2013

வானவில்: கோவை நேரம்- ஆயாலும் ஞானும் - புன்னகை மன்னன்

பார்த்த படம் - ஆயாலும் ஞானும் தம்மில் (மலையாளம்) 

மருத்துவமனையில் சீரியசாக சேரும் ஒரு பெண் குழந்தைக்கு - அவளது தந்தை எதிர்ப்பையும் மீறி ஆப்பரேஷன் செய்கிறார் டாக்டர். பிரிதிவிராஜ். ஆப்பரேஷனில் அந்த சிறுமி இறக்க, பிரிதிவிராஜ் அந்த ஊரை விட்டே ஓடி ஒளிய நேரிடுகிறது.



பிளாஷ்பேக்கில் பிரிதிவிராஜ், டாக்டர் பிரதாப்பிடம் பயிற்சி எடுப்பதை சொல்கிறார்கள். மருத்துவம் மீது மிகுந்த அபிமானம் கொண்ட டாக்டர் பிரதாப் ஒரு இக்கட்டான நிலையில் பிரிதிவிராஜ் காரியர் அழியாமல் காப்பாற்றுகிறார்

சிறுமி மரணத்திற்கு பின் இன்று பிரிதிவிராஜ் தப்பி - சென்றது டாக்டர் பிரதாப் மரணம் அடைந்தார் என்ற செய்தி கேட்டு இறுதி அஞ்சலி செலுத்த தான்.

போலிஸ் அவரை அரெஸ்ட் செய்ய சிறுமி மரணம் பற்றிய ஒரு உண்மை அப்போது தெரிய வருகிறது. பிரிதிவிராஜ் என்ன ஆனார் எனபதை படம் பார்த்து அறியுங்கள் !

மலையாளத்தில் மட்டும் எப்படி தான் இவ்வளவு அழகான கதைகள் வருகிறதோ ? ஹீரோயின், காதல், பாட்டுகள் போன்ற சமாசாரம் அதிகம் இன்றி ஒரு சுவாரஸ்ய படத்தை தந்திருக்கிறது இந்த டீம்

அவசியம் பாருங்கள் !

போஸ்டர் கார்னர்

அய்யாசாமி கார்னர்

ரயில்வேயின் ஸ்மார்ட் கார்ட் வைத்திருக்கிறார் அய்யாசாமி. எப்பவாவது ரயிலில் போகும்போது கியூவில் நிற்காமல் - ஸ்டைலாய் போய் ஸ்மார்ட் கார்ட் மிஷினில் டிக்கெட் எடுப்பார். அப்போது வரிசையில் நிற்போரை சற்று இளக்காரமாய் ஒரு லுக் வேறு விடுவார் ( அவரு பெரிய டெக்னிக்கல் ஆசாமி மாதிரியும், அவங்க எல்லாம் காமன் மேன் மாதிரியும் இருக்கும் அந்த லுக்கு ! )

அப்படித்தான் அண்மையில் ஒரு முறை டிக்கெட் எடுக்க கார்டை பயன்படுத்தினார். முதன்முறை போட்டார் - எல்லாம் வந்தது - டிக்கெட் வரலை -சரி அடுத்து ஒரு முயற்சி - சேம் ரிசல்ட் - மீண்டும் முயல - மூன்றாம் முறை டிக்கெட் வந்து விட்டது.

ஆனால் இப்போது ஒரு அதிர்ச்சி ! 3 டிக்கெட் என டைப் அடித்து வந்து விட்டது. அதிலும் 1 பெரியவர் - 2 குழந்தைகள் என ரிட்டன் டிக்கெட்டுடன் வந்து விழுந்தது. மீதம் 2 டிக்கெட்டை எப்படி விற்பது ? அதுவும் 2 குழந்தைகள் டிக்கெட்டை மட்டும் எப்படி விற்பது? கருமம் ரிட்டன் டிக்கெட் வேறு !

ரயில்வேயில் கேட்டா எங்களுக்கும் அந்த மெஷினுக்கும் சம்பந்தமே இல்லைம்பாங்க.

அரசாங்கத்துக்கு தானே போகுது; போயிட்டு போகட்டும் " என மனதை தேற்றி கொண்டு நடந்தார் அய்யாசாமி !

விகடன் வலை பாயுதேவில் ரசித்தது 

ஆடு கோழி மீன் எது என முடிவு செய்வதற்குள் மண்டை காய்ந்து மதியம் ஆகி விடுகிறது # ஞாயிறு பிரச்சனை !

20 நிமிஷமா டைப்பிங்க்னு வரும் கடைசியில் வெறும் ஓகேன்னு அனுப்பிடுவாங்க ! # Why I hate chatting

டி ஷர்ட் போடும் அங்கிள்களின் இம்சைகளுக்கு சற்றும் குறைவில்லாதது லெக்கின்ஸ் போடும் ஆன்டிகளின் இம்சைகள் !

பதிவர் பக்கம் - கோவை நேரம் 

நண்பரை பற்றி எழுதும்போது - நம்மை பற்றி எழுதுற மாதிரி கொஞ்சம் கூச்சமா இருக்கு (க்கும் உம்மை பத்தி எழுதுறதுக்கு கூச்சபடுற ஆளா நீயி? - மனசாட்சி )

கோவை நேரம் என்கிற பெயரில் பதிவெழுதும் நண்பர் ஜீவா - பயண கட்டுரைகள் மற்றும் சாப்பாட்டு கடை ஸ்பெஷலிஸ்ட் என்று சொல்லலாம். நான் வெஜ்ஜில் புகுந்து விளையாடுவார். மீன் குழம்பு, குடல் குழம்பு என ஒவ்வொன்றும் செய்கிற பக்குவமும் எழுதுவது இவர் வழக்கம்.

கோவை நேரத்தின் ப்ளாக் லிங்க்: http://www.kovaineram.com/

என்னா பாட்டுடே - என்ன சத்தம் இந்த நேரம் !

"படத்தின் முதல் காட்சியில் ஹீரோவும் ஹீரோயினும் மலை மேல் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொள்கிறார்கள் " என்று ஒரு கதை ஆரம்பித்தால் எப்படி இருக்கும் ? புன்னகை மன்னனின் முதல் காட்சியில் கே. பி சார் இப்படி தான் அதிர்ச்சி தர நினைத்தார். (பின்னர் இந்த தவறுக்கு ப்ராயச்சித்தம் என்று சொல்லிவிட்டு - தற்கொலை முடிவுகள் தவறு என சொல்லும் வானமே எல்லை எடுத்தார் )

புன்னகை மன்னனில் அந்த பாட்டு.... அடடா ! சான்சே இல்லை ! SPB யின் ரசிகரல்லாதோர் கூட இந்த பாட்டில் அவர் குரல் கேட்டு மயங்க வாய்ப்புண்டு !



கிரிக்கெட் கார்னர்

இந்தியா எங்கு சென்றாலும் மழை அவர்களை தொடர்கிறது. இங்கிலாந்தில் தான் மழை என்றால் - வெஸ்ட் இண்டீசிலும் இதே நிலை தான். வெஸ்ட் இண்டீசில் மேட்ச் நடப்பதால் சுத்தமாய் மேட்ச் பார்க்க முடிவதில்லை. என்னை மாதிரி கிரிக்கெட் ரசிகனுக்கு மேட்ச் என்ன ஆச்சு என்ற சஸ்பென்ஸ் தெரியாமல் ஒழுங்காய் தூக்கம் வராது ! வீட்டிலோ இரவு முழுக்க டிவி முன் உட்கார்ந்தால் திட்டு விழும் !

முதல் 2 மேட்ச் தோற்றாலும் - எப்படியோ இந்தியா பைனலுக்குள் நுழைந்து விட்டது. நேற்று முதலில் ஆடிய இந்தியா ஓவருக்கு 4 ரன் என்கிற அளவில் தான் அடித்திருந்தது மழை வந்து குறுக்கிட அடுத்து ஆடிய இலங்கையை ஓவருக்கு 6.85 ரன் எடுக்கணும் என அதிரடியாய் சொல்லிட்டனர். டக்வொர்த் லூயிஸ் என சற்று அதிகம் அடிக்கணும் என்பது சரி தான்.. ஆனாலும் 4 என்கிற ரன் ரேட் எங்கே ? 6.85 ரன் ரேட் எங்கே ??

இலங்கையுடன் எத்தனை மேட்ச் தான் ஆடுவார்களோ? கடந்த ஏழெட்டு வருடத்தில் இந்தியா ஆடிய முத்தரப்பு கிரிக்கெட் டோர்னமென்ட் அனைத்திலும் இரண்டாம் அணி இலங்கை தானாம் ! மூன்றாவது வேறு ஏதாவது அணி. இதை தவிர இலங்கை சென்று நாம் ஆடுவதும் அவர்கள் இந்தியா வருவதும் இன்னொரு பக்கம் தொடர்கிறது ...

உள்ளூரிலேயே 2 கிரிக்கெட் டீம் இருக்கும்..பெரிய டீம் சின்ன டீம் என்று சொல்லுவார்கள் இரண்டும் அடிக்கடி பிரண்ட்லி மேட்ச் ஆடி கொள்ளும். அப்படி தான் இருக்கு இந்தியாவும் இலங்கையும் ஆடும்போது !

7 comments:

  1. என்ன சத்தம் பாடல் எத்தனை முறை கேட்டாலும் பிடிக்கும் பாடல்!

    அய்யாசாமி - :)

    ReplyDelete
  2. வணக்கமுங்க.என்னையும் அறிமுகப்படுத்தி இருக்கீங்க .நன்றிங்..
    பயணக்கட்டுரைல உங்கள மிஞ்ச முடியாதுங்...

    ReplyDelete
  3. ஆமாண்ணே கதை கேக்கும் போதே படம் பார்க்கணும்னு ஆவள இருக்கு கத்துக்குறேன் மலையாளம் கத்துக்குறேன்\\\

    ReplyDelete
  4. வானவில் எப்போதும் போல் அருமை...

    அய்யாசாமி....:))) சமீபத்தில் எனக்கும் ATM மிஷினில் ஏற்பட்ட பிரச்சனையால் முதல் இருமுறை SORRY UNABLE TO PROCESS என்று வந்தது. ஆனால் பணம் அக்கவுண்ட்டிலிருந்து டெபிட் ஆகிவிட்டதென மொபைலில் மெசேஜ் வந்து, மூன்றாம் முறை தான் பணம் எடுக்க முடிந்தது. டெபிட் ஆன பணம் அடுத்த நாள் தான் அக்கவுண்டில் வந்து சேர்ந்தது.

    ReplyDelete
  5. என்ன சத்தம் அந்த நேரம் பாடல் மிகவும் அருமையான பாடல்! கோவை நேரம் அறிமுகம் சிறப்பு! வலைபாயுதெ வாசகங்கள் ரசித்தேன்! அருமையான பகிர்வு! நன்றி!

    ReplyDelete
  6. என்ன சத்தம் இந்த நேரம் பார்த்த முதல் நாளிலிருந்து அந்த அருவியை பார்க்க ஆசை பட்டு அத்திரபள்ளி போனோம்.நாங்கள் முதல் முறை போன போது அதிக தண்ணீர்.

    அய்யாசாமிக்கு கிடைத்த பல்புகள் மிக பிரகாசமாய் இருக்கு.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...