Wednesday, July 17, 2013

வானவில்- ரயில் விபத்து- ஜீவனாம்சம்- வேளச்சேரி The Grand Mall

சம்பவம் - ரயிலில் கண்ட விபத்து

சென்னை மின்சார ரயிலில் - செயின்ட் தாமஸ் மவுண்ட் வந்த போது நிகழ்ந்தது இது - ரயில் பிளாட்பாரமிற்குள் பாதி மட்டுமே நுழைந்து - மீதம் வெளியிலேயே நின்று விட்டது, இறங்கி பார்த்தால் - "உள்ளே யாரோ விழுந்துட்டார் அதான் நிறுத்திட்டாங்க" என்றனர்.

" இங்கே தான் சார் பிளாட்பாரத்தில் நின்னுட்டுருந்தார் - என் பக்கத்தில் தான் இருந்தார் நல்லா குடிச்சுட்டு தள்ளாடி கிட்டு இருந்தார். பிளாட்பாரம் ஓரத்தில் நிக்குறாரேன்னு " தள்ளி வாங்க ரயில் வருதுன்னு சொல்லிக்கிட்டே இருந்தேன் ரயில் வரும்போது சரியா ட்ராக்கில் சாஞ்சிட்டார்; " - சம்பவத்தை நேரில் பார்த்தவர் அந்த ஒரு இளைஞர். பலரும் வந்து அவரிடம் பேசி கொண்டிருக்க அலுக்காமல் அதை சொல்லி கொண்டிருந்தார்

பலரும் " அட கொடுமையே ! பாத்துட்டீங்களா நேர்ல பாத்துட்டீங்களா? ரொம்ப கஷ்டமா இருக்குமே உங்களுக்கு " என டென்ஷன் படுத்தி கொண்டிருந்தனர்

ரயில் பாதையை கடக்கும்போது செல்போன் பேசியபடி சென்று அடிபட்டு இறப்போர் மட்டும் ஒவ்வொரு வாரமும் சென்னையில் ஏராளம் பேர் ! தினசரி ரயிலில் அடிபட்டு ஒருசிலரேனும் இறக்காமல் இருப்பதில்லை . பிளாட்பாரம் ஓரத்தில் தெரியாமல் நின்று ரயில் மோதி இறந்த கதைகளும் - ரயிலில் தினம் சென்று வரும் நேரங்களில் பல முறை கேள்விபட்டுள்ளேன்

செல்போன் பேசியபடி ரயில் பாதையை கடப்பதும், பிளாட் பாரத்தின் ஓரத்தில் நிற்பதையும் தவிர்க்க வேண்டும்; உங்களுக்கு வளர்ந்த குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கும் அவசியம் சொல்லுங்கள் !

சென்னை ஸ்பெஷல் - வேளச்சேரி மால்

வேளச்சேரியில் இன்னொரு Mall - மிக விரைவில் திறக்கப்பட உள்ளது ! பீனிக்ஸ் மால் தவிர தற்போது தி க்ராண்ட் மால் - வேளச்சேரி -ரயில்வே ஸ்டேஷன் அருகில் திறக்கப்பட உள்ளது. மால் - அதிகார பூர்வமாக செயல்படும் முன்பே - குரோமா என்கிற எலக்ட்ரானிக்ஸ் கடை மட்டும் தரை தளத்தில் இயங்க துவங்கி விட்டது ! Mall- ன் மற்ற பகுதிகள் திறக்க ஓரிரு மாதம் ஆகும் என்று சொல்கிறார்கள். வேளச்சேரி பஸ் டெர்மினஸ் மற்றும் ரயில் நிலையத்துக்கு அருகில் என்பதால் சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான் (5 தியேட்டர் வருகிறது என நினைக்கிறேன்) ஆனால் ஏற்கனவே விழி பிதுங்கும் இந்த சாலையின் டிராபிக்கை நினைத்தால் தான் பயமாய் உள்ளது !

அழகு கார்னர்


மரியான் ஹீரோயின் பார்வதி.

"பூ"வில் எப்படி இருந்தார் ! சென்னையில் ஒரு நாளில் முழுக்க வேறொரு முகம்; இப்போது மரியானில் இன்னொரு விதமாய் இருக்கிறார் ! அரிதாக நடிக்க தெரிந்த ஒரு நடிகை !

சட்ட பக்கம் : டைவர்ஸ் - ஜீவனாம்சம் குறித்து

பெண்கள் வார இதழான ஸ்நேகிதியில் கேள்வி பதில் பகுதியில் வந்ததன் சுருக்கம் இது.

எனது தம்பி ஒரு பெண்ணை திருமணம் முடித்து 4 ஆண்டுகள் ஆகிறது 2 வயது குழந்தை உண்டு. இந்நிலையில் தம்பியின் மனைவி வேறொரு ஆணுடன் தொடர்பில் இருக்கிறார். 3 முறை வீட்டை விட்டு அவருடன் சென்று விட்டார்

ஒவ்வொரு முறையும் பெண்ணின் பெற்றோர் அவரை கூட்டி வந்தாலும் " எனது அம்மா - அப்பா கட்டாயத்துக்காக தான் இருக்கிறேன். எனக்கு என் காதலுடன் வாழவே விருப்பம்" என்கிறார் அவள் பெற்றோரிடம் பேசினால் " நீங்கள் தான் அவளை வாழ வைக்க வேண்டும் இல்லாவிடில் ஜீவனாம்சமாக 10 லட்சம் கொடுங்கள் " என்கிறார்கள்

அந்த நபருடன் சேர்ந்து வாழும் பெண்ணிற்கு நாங்கள் ஜீவனாம்சம் தரவேண்டும் என்பது சரியா? தந்து தான் ஆகவேண்டுமா?

(பதில் தந்தவர் - வழக்கறிஞர் சுதா ராமலிங்கம்)

அந்த பெண்ணிற்கு உங்கள் தம்பியுடன் வாழ விருப்பம் இல்லை என தெரிகிறது. இதற்கு தீர்வு குடும்ப நீதி மன்றத்தை நாடி விவாகரத்து பெறுவது தான்.

மனைவியின் முறை தவறிய உறவு தான் விவாகரத்துக்கான காரணம் என்பதை நிரூபிக்க சரியான ஆதாரங்கள் இருக்க வேண்டும். அப்படி இருக்கும் பட்சத்தில் உங்கள் தம்பி ஜீவனாம்சம் தர வேண்டியதில்லை ஜீவனாம்சம் கோர அவர்களுக்கு உரிமை இல்லை. ஆனால் சீதனமாக வந்த நகை, வாகனம் பாத்திரங்கள் நீங்கள் திரும்ப தர வேண்டும்.

விவாகரத்துக்கு பெண் சம்மதிக்காமல் இருந்து, பெண் வீட்டார் உங்களுக்கு தொந்தரவு தந்தாள், உங்கள் பகுதி போலிஸ் ஸ்டேஷனில் புகார் தரலாம்

திருமணமான பெண்ணுடன் தொடர்பு வைத்தமைக்காக அந்த ஆண் மீது நீங்கள் புகார் தரலாம் என்றாலும், அந்த பெண் விரும்பியே செய்வதால் அவர் மீது புகார் தந்து எந்த பயனும் இல்லை

என்னா பாட்டுடே

சில பாடல்கள் தான் 20, 25 வருஷமாய் கேட்டாலும் அலுக்காமல் இருக்கும்.அப்படி ஒரு ராஜா ஸ்பெஷல் பாட்டு " பூந்தளிராட பொன் மலர் சூட"...

இந்த பாட்டில் ராஜாவின் ஸ்பெஷல் டச் - அந்த கோரஸ் மற்றும் எஸ். பி பி பாடும்போது ஹூம் ஹூம் என ஜானகி ஹம் செய்வதும், அதே போல ஜானகி பாடும்போது எஸ். பி பி ஹம் செய்வதும் தான்.

அலைகள் ஓய்வதில்லையுடன் வெளியான இப்படம் பெரும் வெற்றி பெறாவிட்டாலும் இன்றும் நினைவில் நிற்கும் பாடல்கள் கொண்ட படம்.

பாடலில் பழைய ஊட்டியின் அழகையும் சேர்த்து ரசியுங்கள்



போஸ்டர் கார்னர்


பதிவர் பக்கம் 

சிலிகான் ஷெல்ப் என்கிற இந்த வலைப்பதிவு முழுக்க முழுக்க புத்தகங்களுக்கானது. பல அற்புதமான புத்தங்களை இவ்வலைப்பதிவு அறிமுகப்படுத்துகிறது. சுஜாதாவுக்கு பிடித்த சிறுகதைகள் என்கிற பதிவில் தமிழின் சிறந்த சிறுகதைகள் பல பற்றி அறிய முடிவதோடு, அவற்றில் பலவற்றை வாசிப்பதற்கான லின்க்கும் கிடைக்கிறது !

********
அண்மை பதிவு :

சென்னையை கலக்கும் நம்ம ஆட்டோ - நிறுவனர் அப்துல்லா பேட்டி

11 comments:

  1. நானும் காலேஜ்ல படிக்கும் போது ரயில்ல புட்போர்ட் தான். ஒருமுறை ஒரு பையன் கம்பத்துல அடிப்பட்டு கீழ விழுந்ததை பார்த்ததுக்கு அப்புறம் எப்ப ரயில்ல ஏறினாலும் முதல்ல உள்ள போனது நான் தான் :-)))

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோவம் நல்லது ; வணக்கம்

      Delete
  2. Anonymous7:59:00 AM

    /// இறக்காமல் இறப்பதில்லை ///

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
    Replies
    1. தம்பி அது " இறக்காமல் இருப்பதில்லை"... கவனித்து சொன்னமைக்கு நன்றி மாத்திட்டேன்

      Delete
    2. தம்பி போன போஸ்ட்டுக்கு திடீர்னு இரவோடு இரவா நிறைய ஓட்டு விழுந்துருக்குது; உங்க நண்பர்கள் உங்க போஸ்ட் கூட போட்டி போடுறாங்க போல !

      Delete
  3. Anonymous9:37:00 AM

    கல்லூரிப் படிக்கும் காலந் தொட்டே, ரயில் விபத்துகளுக்கு மட்டும் பஞ்சமில்லை சென்னையில்.. மக்களுக்கும், நிர்வாகத்துக்கும் போதிய நடைமுறைகளை நிலைநாட்டுவதில் அக்கறை இல்லை, ஜீவானாம்ச சட்டம் மட்டுமில்லை நம் மக்களுக்கு சட்டம் குறித்த முழு தகவலும், அறிவும் ஏற்படவில்லை.

    ReplyDelete
  4. பூ படம் நான் விரும்பி பார்க்கும் சில படங்களில் ஒன்று, அதில் நடிச்ச பார்வதி மேனனை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவங்களா இது?!

    ReplyDelete
  5. //அரிதாக நடிக்க தெரிந்த ஒரு நடிகை
    அரிதாக ஒரு நடிக்கத் தெரிந்த நடிகை

    Rarely, an actress who can act
    An actress who can rarely act
    :)

    ReplyDelete
  6. நல்ல விழிப்புணர்வு தகவல்! நன்றி!

    ReplyDelete
  7. அன்பின் மோகன் குமார் - பல தகவல்கள் பகிர்வினிற்கு நன்றி - தலைப்புல பதிவர் பக்கமும் சேர்த்திருக்கலாமே ! பயனுள்ள தகவல் அடங்கிய பத்தி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  8. பதிவர்பக்கம் சென்றுபார்கிறேன். நன்றி.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...