Tuesday, October 6, 2015

குற்றம் கடிதல் - ஆசிரியர்- மாணவர் உறவு குறித்து ஒரு சினிமா !

ரிலீஸ் ஆகும் முன்பே தேசிய விருது உட்பட பல அவார்டுகளை வென்ற படம்... கஷ்டப்பட்டு தான் தியேட்டரை அடைந்துள்ளது.

பள்ளி ஆசிரியை - தவறு செய்யும் மாணவனை அறைகிறார். மயங்கி விழும் அவன் கோமா நிலைக்கு தள்ளப்பட, அடுத்து என்ன ஆகிறது என்ற ஒரு நாள் நிகழ்வே கதை..



முதலில் நல்ல விஷயங்கள்..

ஒரு நாளில் நடக்கும் சம்பவம்.. அந்த பையனுக்கு என்ன ஆகும் என்ற பதை பதைப்பு.. இது தான் நம்மை தொடர்ந்து பார்க்க வைக்கிறது (திரைக்கதை சில நேரம் இழுவை என்ற போதும் )

படத்தில் நடித்ததில் எவரும் நமக்கு தெரிந்த முகம் இல்லை; தியேட்டர் ஆர்டிஸ்ட்கள் தான் அநேகம் பேர்.. இது படத்துக்கு ஒரு ரியலிஸ்டிக் பீலிங் தருகிறது. பெரும்பாலானோர் நடிப்பு நன்று..

படத்தில் என்னை மிக கவர்ந்த விஷயம் ஒன்று தான்: ஆசிரியை அடித்து மயக்கமானான் மாணவன் என்பது ஒரு சம்பவம். இதனை மையமாக வைத்து - சுற்றி உள்ள அத்தனை பேரும் எப்படி வெவ்வேறு விதமாய் ரீ ஆக்ட் செய்கிறார்கள் என்பதை சொன்னது தான் இப்படத்தின் ஹை  லைட் மற்றும் ரசிக்கத்தக்க விஷயம்.

குற்ற உணர்ச்சி என்ன செய்யும் என்பதை சற்று அதீத படுத்தி சொன்னாலும், அந்த மன அழுத்தத்தின் பின்னே ஒரு விஷயம் உள்ளது; நமக்கு ஏதேனும் ஒரு பிரச்சனை அல்லது கஷ்டம் என்றால் - அது சரியாகும் வரை - மனது திரும்ப  திரும்ப  அதையே தான் நினைக்கும்...படத்தில் அந்த டீச்சருக்கு நிகழ்வதும் அது தான்..

மீடியாவை கிழி கிழி என கிழித்தது கிளாஸ்... ஹிந்தியில் பீப்ளி லைவ் படத்தில் மீடியாவை காட்டிய அதே விதத்தில் இங்கும் காண்பித்துள்ளனர்..



இனி நெகடிவ் :

உண்மையை சொல்ல வேண்டுமெனில் இது அரை மணி நேர படமாய் வந்திருக்க வேண்டிய ஒரு கதை. அதனை 2 மணி நேரமாய் இழுத்ததில் 3 மணி நேரம் படம்   பார்க்கும் எபக்ட் ....சில தேவையில்லாத சம்பவங்கள்... (படி முழுதும் ஏறுவதை காட்டும் ஆர்ட் பிலிம் காட்சிகள்), அதீத அழுகை..

அதிகப்படியான பிரசார நெடி.. திரும்ப திரும்ப செக்ஸ் எஜுகேஷன் தேவை என விவாதம் வருகிறது; ஆசிரியர்கள் மாணவர்களை அடிக்க கூடாது; பணக்காரன் - ஏழை - கம்மியூநிசம் போன்ற  பிரசார விஷயங்களை இன்னும் அடக்கி வாசித்திருக்கலாம்.

குற்றம் கடிதல்.. நிச்சயம் ஒரு நல்ல படைப்பு.. இரண்டாம் முறை பார்க்க முடியாத படம். நல்ல சினிமா விரும்புவோர் சிற்சில குறைகளை கண்டுகொள்ளாமல் கண்டு ரசிக்கலாம் !

1 comment:

  1. நன்றி நண்பரே
    அவசியம் பார்க்கிறேன்

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...