Sunday, November 1, 2015

சச்சின் சர்ச்சை : கபிலுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை?

" ச்சின் டெண்டுல்கர் தன் திறமை முழுதும் பயன் படுத்தினார் என்று சொல்ல முடியாது; 200- 300 என்றெல்லாம் அவர் நிறைய அடித்திருக்க வேண்டும். 100 அடித்தால் போதும் என அவர் பல நேரம் இருந்து விட்டார்; இது பம்பாய் காரர்களின் மனநிலை.ரிச்சர்ட்ஸ் போல, ஷேவாக் போல அவர் ஆடியிருக்க வேண்டும் " என கபில் பேசியிருக்கிறார்.

சச்சின் விளையாட துவங்கும் வரை எனக்கு ரொம்ப பிடித்த இந்திய வீரர் கபில் தான். ஆனால் இவ்விஷயத்தில் அவர் பேசியது சரியென தோன்ற வில்லை.

கபிலுக்கு அவர் ஆடிய காலத்திலிருந்தே பம்பாய் காரர்களுடன் ஒத்து போகாது. வேற விதமாய் சொல்ல வேண்டுமெனில் பம்பாய் காரர்களால் அவர் பெரிதும் பாதிக்கப்பட்டார்.. (முக்கியமாக கவாஸ்கர் ) அந்த பேகேஜ் (Baggage) எல்லாம் உள்ளே இன்னும் இருக்கிறது போலும்.... அதனை சச்சின் மேலா காட்டுவது?

சச்சின் ஏன் ஷேவாக் அல்லது ரிச்சர்ட்ஸ் போல் ஆட வேண்டும்?

எந்த வீரர் தான் இன்னொருவர் போல ஆடுகிறார்? அவரவருக்கென்று தனி பாணியுண்டு.. அது தான் அவர்களை வித்யாசபடுத்திக் காட்டுகிறது..

எந்த வீரர் போலவும் இன்னொருவர் இல்லை; எனவே ஷேவாக் அல்லது ரிச்சர்ட்ஸ் போல் ஆட வேண்டும் என்ற கூற்று மிக தவறான ஒன்று..

அடுத்து.. சச்சின் நூறுகளுடன் திருப்தி அடைந்தார் என்பது.. 200- 300 என்பவை டெஸ்ட் மேட்ச்களில் மட்டுமே சாத்தியம்.. சச்சின் நிச்சயம் சில 200-கள் அடித்துள்ளார். ஆனால் எந்த ஒரு வீரரும் 300 அடித்த எத்தனை  டெஸ்ட் மேட்சில் ரிசல்ட் வந்துள்ளது என கபில் எடுத்து பார்க்க வேண்டும் ! அது தனி ஒருவரின்  சாதனையாக இருக்குமே ஒழிய அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவாது.

பல வேர்ட் கிளாஸ் வீரர்கள் குறிப்பிட்ட காலம் மட்டுமே fearless cricket ஆடுகிறார்கள். இளங்கன்று பயமறியாது என்பது போல.. சச்சின் முதன் முதலில் துவக்க ஆட்டக்காரராக வந்த போது இப்படித்தான் ஆடினார்.. ஜெயசூரியா ஒரு காலத்தில் இப்படி ஆடுவார்.. தோனி விளையாட வந்த புதிதில் கொஞ்ச காலம் ஒன் டவுன் இறங்கி விளாசி தள்ளினார்..

ஆனால் கொஞ்ச நாளிலேயே எதிர் அணியினர் அவர்கள் ஆட்டத்தில் உள்ள சில வீக்நெஸ் வைத்து இப்படி அதிரடியே ஆடும்போது அவுட் ஆக வைத்து விடுகிறார்கள். இதன்பின் அவர்கள் நிலைத்து நின்று ஆடும் போக்கிற்கு மாறியாக வேண்டியுள்ளது..

சச்சினுக்கு நேர்ந்ததும் அது தான்.

சச்சினுக்கு ரிக்கார்ட்கள் மீது விருப்பம் இருந்திருக்கலாம். ஆனால் அந்த விருப்பத்தை விட அவர் அதிக முக்கியத்துவம் அணியின் வெற்றிக்கு தான் தந்துள்ளார். சில மேட்ச்கள் அவர் 90 -களில் இருக்கும் போது அணி வெற்றி பெற்றிருக்கிறது. தினேஷ் கார்த்திக் ஒரு முறை சச்சின் 94ல் இருக்கும்போதே சில 4, 6 அடித்து மேட்ச் முடித்து விட்டார்.இத்தனைக்கும் இன்னும் எத்தனையோ ஓவர்கள் மீதம் இருந்தது.   சச்சின் அவரை தடுக்கவே இல்லை.

இது போல் இன்னும் பல உதாரணம் தரமுடியும்..

 நிற்க.கபில் ரசிகன் என்றாலும் இன்னொரு விஷயத்தை வருத்ததோடு பதிவு செய்ய வேண்டியுள்ளது. கபில் காலத்தில் ஹேட்லியின் 434 தான் உலக சாதனை. கபிலுக்கு 400 விக்கெட் எடுக்கும் முன்பே மூச்சு வாங்க ஆரம்பித்து விட்டது. அதிலும் உலக சாதனை நெருங்கும் போது இன்னும் மோசம்... 2-3 டெஸ்ட் ஆடினால் அரிதாய் ஒரு விக்கெட் எடுப்பார். இப்படி சீரிசுக்கு 1-2 ஆய் எடுத்து 434 ஐ  தாண்டினார் (சச்சின் நூறாவது செஞ்சுரிக்கு காத்திருந்த மாதிரி அப்போது 434 க்கு காத்திருந்த ரசிகர்கள் நாங்கள்.. )

எனவே சாதனை என்கிற விஷயத்தில் ஆர்வம் இல்லாத வீரர்கள் யாரும் இல்லை.. கபில் சச்சினை பற்றி சொல்லும் முன் தன்னை குறித்தும் யோசித்திருக்கலாம்

எல்லாவற்றையும் விட முக்கிய விஷயம் ஒன்று உள்ளது..



சச்சினை பிற நாட்டினர் எவ்வளவோ மதிக்கின்றனர்.. ஆனால் நம் நாட்டில் இருந்து இப்படி அவர் மீது ஒரு கல் எறிவது எவ்வளவு அசிங்கமாக உள்ளது !

கபில் உலக அரங்கில் மதிக்கப்படும் ஒரு வீரர்.. அவர் இப்படி பேசுவதை பிற நாட்டு கிரிக்கெட் வீரர்கள்/ ரசிகர்கள் எப்படி பார்ப்பர் !

வயதானாலே இப்படி தான் .. என்ன பேசுகிறோம் என தெரியாமல் உளறி கொட்டுவார்கள் போல் உள்ளது !

நாமும் அப்படி மாறாமல் இருப்போமா தெரிய வில்லை..

ஆனால் இது போன்ற சில விஷயங்கள் தன்னை பற்றி பேசப்படும்போதும் சச்சின் அமைதி காப்பது ரொம்ப அழகான விஷயம்.. பெரும்பாலான விஷயங்களுக்கு சச்சின் பதில் சொல்வது இல்லை.. இதுவும் எல்லாராலும் முடியாத ஒரு விஷயம் தான்.. (கபிலை பற்றி யாராவது பேசினால் மறு நாளே பத்திரிக்கையில் அதற்கு பதிலடி தருவார் !!)

முன்னேறும் எவரும் சச்சினிடம் இந்த விஷயத்தையும் கூட கற்று கொள்ள வேண்டும் !

3 comments:

  1. உண்மைதான்! கபிலிடமிருந்து சச்சினைப் பற்றி இப்படியொரு விமர்சனம் வரும் என்று எதிர்பார்க்கவில்லை! சொல்லப்போனால் அந்த 434வது விக்கெட்டுக்காகவே கபில் டெஸ்டில் தொடர்ந்துகொண்டிருந்த காலம் ஒன்றிருந்தது. சச்சின் எப்போதும் விமர்சனங்களுக்கு பேட்டால் பதில் சொல்வார். மற்றபடி பதிலறிக்கை வராது. அது அவரது சிறந்த குணம்.

    ReplyDelete
  2. .
    கபில் பேசியது தேவையற்ற பேச்சுதான். வருங்காலத்தில் நாமும் இப்படித்தானோ?

    சச்சின் மாதிரி மௌனமாய் கடந்து செல்ல...
    நமக்கு இயலுமோ?
    !
    .
    .

    ReplyDelete
  3. சச்சின் இன்னும் அதிக திறமை உடையவர் என்ற அர்த்தத்தில் சொல்லி இருக்கலாம்.
    பெரும்பாலோர்க்கு வயது அதிகம் ஆக ஆக நாவடக்கம் குறைந்துவிடுவதாக தோன்றுகிறது

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...