Thursday, October 11, 2012

மாற்றான் பாடல்கள் எப்படி? ஒரு அலசல்



ந்த வருடத்தில் செம எதிர்பார்ப்போடு இருக்கும் ஒரு படம்: மாற்றான். தான் இயக்கிய அனைத்து படங்களையும் ஹிட் ஆக்கிய கே. வி. ஆனந்த் தான் முதல் அட்ராக்ஷன்.

இந்த விமர்சனம் எழுதி ரொம்ப நாளாகி விட்டது. அப்படி இப்படி என தாமதமாகி, நாளை படம் ரிலீஸ் ஆவதால், இதற்கு
மேல் தாமதம் கூடாது என இப்போது இப்பதிவு வெளியாகிறது.

இப்பட பாடல்களை கடந்த ஒரு மாதமாக கேட்டு வருகிறேன். ஆரம்பத்தில் கேட்டபோது எழுதிய விமர்சனம் முதலிலும், பல முறை கேட்டபின் இப்போது உள்ள உணர்வை மஞ்சளிலும் தந்துள்ளேன்

பாடல்களின் ஆடியோ வடிவமும் இணைக்கப்பட்டுள்ளது !


கால் முளைத்த பூவே

பாடியது:ஜாவேத் அலி, மகாலட்சுமி ஐயர்

அட்டகாசமான பல்லவி. இரண்டு சரணத்திலும் முதல் பகுதி வேகமாய் பாடுகிறேன் பேர்வழி என ஒப்பிக்கிற மாதிரி உள்ளது மட்டும் உறுத்துகிறது.



பாட்டு..செம ஸ்பீட்.  முதலில் ஹிட் ஆனது இந்த பாட்டு என்று தான் நினைக்கிறேன். ஜாலியான சூரியா பாத்திரத்தை எஸ்டாப்ளிஷ் செய்ய உதவும் பாலே டான்ஸ் ஆக இருக்கலாம். நிச்சயம் படத்தில் பார்க்க ஒரு விஷுவல் ட்ரீட் காத்திருக்கு !

***
கேட்க கேட்க ரொம்ப பிடிச்சு போயிடுச்சு இந்த பாட்டு. அடிக்கடி கேட்கும் இப்போதைய விருப்ப லிஸ்ட்டில் இந்த பாட்டும் இருக்கிறது !

#####
யாரோ யாரோ நான் யாரோ

பாடியது: கார்த்திக், ப்ரியா ஹிமேஷ்

ஏழாம் அறிவின் சோக பாட்டை (யம்மா யம்மா காதல் பொன்னம்மா) நினைவு படுத்துது ! மெட்டு, குரல் ஹாரிஸ் இசை இவை இரண்டு படத்திலும் ஒரே மாதிரி இருக்கு. எப்படி இயக்குனருக்கு தோணாமல் போனது என தெரியலை. பாட்டு கேட்கும் போது ஏழாம் அறிவு சூரியா யம்மா யம்மா பாட்டுக்கு டான்ஸ் ஆடுவது அப்படியே கண்ணில் வந்து போகுது.



மிக மெதுவாய் போகும் பாட்டு. ஹிட் ஆவது கடினம் என்றே நினைக்கிறேன். இந்த ஆல்பத்தின் ஒரே சொதப்பல் இப்பாடல் தான்
***
அதிக முறை இந்த பாட்டை கேட்கவே இல்லை. படத்தின் பாடல்களை பாடவிடும் போது இந்த பாட்டை மட்டும் தவிர்த்து விடுவேன்.ஏனோ சுத்தமாய் கவரவில்லை இந்த பாட்டு

######
தீயே தீயே

பாடியவர்கள்: ஆலாப் ராஜூ, சத்யன், பிரான்க்கோ, சுசித்ரா.

கொஞ்சம் வித்யாசமான ஒரு பார்ட்டி சாங் போல் தான் இருக்கிறது. பாட்டில் இசை ஈர்க்கிறது. முதல் சரணம் முழுக்க பெண்ணின் உதடு பற்றியும், முத்தம் பற்றியுமே பேசுகிறது



மெலடியா, பார்ட்டி சாங்கா என்று பிரிக்க முடியாதது சிறு குறை. ஓகே ரக சாங். ஓஹோ அல்ல
****
நிறைய முறை கேட்டும் கூட பெரிய அளவில் ஈர்க்க வில்லை. படமாக்கியதில் ஏதாவது வித்யாசமா இருந்தால் ஒழிய பாட்டு நம் மனதில் தங்காமல் போக வாய்ப்புகள் அதிகம் !

#########

ரெட்டை கதிரே

பாடியவர்கள்: கிரிஷ் மிலி ,பாலாஜி   நிதானமாய் ஆரம்பித்து பின் ஸ்பீட் எடுக்கும் ஒரு பாட்டு.

பாடல் வரிகள் மிக அருமை.

புயலடித்தும் வாழுதே இரு பறவை ஒரு கூட்டில்
மெது மெதுவாய் பூக்கட்டும் இந்த பூக்கள் எதிர் காற்றில்

என்ற வரிகளை கேட்கையில் இரட்டை சூர்யா பாடும் பாட்டு என்பது புரிகிறது.நடுவில் ஆங்கில வரிகளும் பெண் குரலில் ஒலிக்கிறது (பாரின் லொகேஷன்??)



இரண்டாவது சரணத்துக்கு முன் வயலின் அருமையாய் இழைகிறது. இரண்டு பாத்திரத்தில் உள்ள வெவ்வேறு குணங்களை காட்டும்படி உள்ளது இப்பாட்டு. நிச்சயம் குட்டி பசங்க வரை இந்த பாட்டு ரீச் ஆகி, " தீரே..தீரே" என்று பாடத்தான் போகிறார்கள் ! 
########
நாணி கோணி 
Pick of the Album. பின்னே பாடியது தலைவி ஸ்ரேயா கோஷல் ஆச்சே? எப்படி தான் ஹிட் ஆகும் பாட்டு மட்டும் சரியா தேர்ந்தெடுத்து பாடுறாரோ! கூட விஜய் பிரகாஷ் வேறு ! சர்ரியான டூயட்.



தலைவி அனாயாசமாக ஹை பிச்சில் பாடிட்டு கீழ் ஸ்தாயியிலும் பாடுறார். வாட் எ வாய்ஸ் !!

கே. வி ஆனந்தின் அட்டகாசமான படமாக்கலை பார்க்க வெயிட்டிங்.
***
கேட்க கேட்க இனிக்கிற குரல் ஸ்ரேயா கோஷலுக்கு சொந்தம். பாட்டில் அவர் பாடுகிற ஹை பிட்ச்சும் சரி ஆண் குரல் கடைசியில் சில வரிகளை வேறு மாதிரி பாடுவதும் சரி மிக ரசிக்க வைக்கின்றன. அட்டகாசமான டூயட்.  

****
மொத்தத்தில் மூணு பாட்டு சூப்பர். ஒன்று ஜஸ்ட் ஓகே. ஒன்று சொதப்பல்.

சூர்யா - ஹாரிஸ் ஜெயராஜ் கெமிஸ்ட்ரி மீண்டும் ஒரு முறை வொர்க் அவுட் ஆகியிருக்கு !

23 comments:

  1. சில நாட்களாக இப்படத்தின் வெளியீடு பற்றிய விளம்பரங்கள் வந்தபடியே இருக்கின்றன. பாடல் ஒன்று கூட இதுவரை கேட்கவில்லை.... :)

    மாலை கேட்டுப் பார்க்கிறேன்....

    பகிர்வுக்கு நன்றி மோகன்.

    ReplyDelete
  2. எனக்கு பிடித்த பாடல்க‌ள் வ‌ரிசையாக‌

    1. தீயே தீயே (Romantic)
    2. கால் முளைத்த பூவே (Duet)
    3. ரெட்டைக் கதிரே (Introduction song)
    4. நாணி கோணி (Duet)
    5. யாரோ யாரோ (சோகம்)


    ReplyDelete
  3. நான் ஒரு பாடலையும் கேக்கலை இன்னும். இன்னிக்கு படம் ரிலீசனதும் நம் மக்கள் சுடச்சுட விமர்சனம் போடுவங்கள்ல.. அதைல்லாம் படிச்சுட்டு படத்தையே பார்த்துட உத்தேசம்.

    ReplyDelete
  4. சுடச்சுட பதிவை போட்டுட்டீங்க.. பாட்டெல்லாம் ஹிட்.. அதில் சந்தேகமில்லை. இல்லையென்றாலும் ஹிட் ஆக்கிவிடுவார்கள்.. அதற்கென தனியாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது..

    ReplyDelete
  5. நானும் இதுவரை கேட்கவில்லை. பய்ங்கர எதிர்பார்ப்புடன் வெளியாகும் படம் போல....

    ReplyDelete
  6. இன்னும் பாட்டுலாம் கேட்கலை. பாட்டு கேட்க கரண்டை அனுப்புங்க சகோ

    ReplyDelete
  7. ம் .... சாதரணமாக கார்த்திக் பாடல்கள்தானே டக்கென ஹிட்டாகும்!

    ReplyDelete
  8. மின்சாரம் இருக்கு போது கேட்கிறேன்... நன்றி...

    ReplyDelete
  9. சில முறை ரேடியோவில் போகும்போது கேட்டேன்... ஆனால் பாடல்கள் மனதில் பெரிதாக ஒட்டவில்லை.

    ReplyDelete
  10. நன்றி.
    படம் பார்த்து விட்டு விமர்சனம் எழுதுங்கள்.

    பாடல்கள் கேட்கின்றேன்.

    ReplyDelete
  11. தொலைக்காட்சியில போடும்போதுதான் கேக்கணும்.

    ReplyDelete
  12. நன்றி வெங்கட்

    ReplyDelete
  13. உங்களுக்கு பிடித்த பாடல் வரிசை நம்ம வரிசையை விட மாறுபடுது நன்றி ஸ்கூல் பையன்

    ReplyDelete

  14. பாலகணேஷ் அண்ணா : சரிங்கோ !

    ReplyDelete
  15. மதுமதி: வாங்க பாட்டு வந்து லேட் ஆகிடுச்சு. நாளைக்கு படம் ரீலிஸ் இல்லியா. இன்னிக்கு போட்டா நிறைய பேர் பார்ப்பாங்க என ஒரு எண்ணம்

    ReplyDelete
  16. கோவை டு தில்லி. ஆமாங்க. செம எதிர்பார்ப்பு இருக்கு

    ReplyDelete
  17. ராஜி : வாங்க அனுப்பிட்டா போச்சு. நிறய ஓட்டு போட்டு நம்மளை முதல்வர் ஆக்கிடுங்க :))

    ReplyDelete
  18. ஸ்ரீராம். said...

    ம் .... சாதரணமாக கார்த்திக் பாடல்கள்தானே டக்கென ஹிட்டாகும்!

    ********
    கரக்ட். இங்கு அவர் பாட்டு ரொம்ப சுமார் ஆகிடுச்சு

    ReplyDelete
  19. தனபாலன்: நன்றிங்க

    ReplyDelete
  20. ஹாலிவுட் ரசிகன்: மூணு பாட்டு நிச்சயம் ஹிட் என பலரும் சொல்றாங்க கேட்க கேட்க பிடிக்கும்

    ReplyDelete
  21. வாங்க மாதேவி நன்றி

    ReplyDelete

  22. முரளி சார்: ரைட்டு நன்றி

    ReplyDelete
  23. மாற்றான் - எதிர் பார்த்த மாற்றமில்லை....! - மாற்றான் விமர்சனம்

    http://p-dineshkumar.blogspot.in/2012/10/maatran-movie-review.html

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...