Tuesday, October 23, 2012

நீர்ப்பறவை -மனதை கவ்வும் பாடல்கள் - விமர்சனம்

மீபத்தில் வெளியான பாடல்களில் நம் மனதை பெரிதும் கவர்ந்து போவது நீர் பறவை பட பாடல்கள் தான். தென் மேற்கு பருவகாற்றுக்கு இசை அமைத்த ரகுநந்தன் இசை ! பல பாடல்கள் மிக மென்மையாய் மனதை வருடி போகிறது.

சார்.........சுனைனா சார் !
பற பற பறவை ஒன்று என்கிற பாடல் மூன்று முறை ஒலிக்கிறது. பாடல் வரிகளில் சிற்சில மாற்றங்கள் இருந்தாலும் மெட்டு மற்றும் இசை மூன்று பாட்டிலும் அப்படியே இருக்கு ! பெண் குரலில் ஒலிக்கும் பாடல்களை சின்மயி ஒரு முறையும், ஸ்ரேயா கோஷல் இன்னொரு முறையும் பாடி உள்ளனர்.

பற பற-வில் உயர பறப்பது  சின்மயியின் குரலே ! ஸ்ரேயா கோஷல் தான் எனக்கு அதிகம் பிடிக்கும் என்றாலும், சின்மயி பாட்டின் உணர்வை/ அர்த்தத்தை மிக நன்கு உணர்ந்து பாடி உள்ளது அந்த பாட்டை  சிறக்க  வைக்கிறது.

கடலுக்குள் சென்ற காதலனுக்காக பெண் பாடும் வரிகளை பாருங்கள் :  

ஊரெங்கும் மழையும் இல்லை.
வேறெங்கும் புயலும் இல்லை
என்றாலும் நெஞ்சில் இடி இடிக்குதே

நீரின் மகன் எந்தன் காதலன்
நீரின் கருணையில் வாழுவான்
இன்று நாளைக்குள் மீளுவான்
எனது பெண்மையை ஆளுவான்

இயக்குனர் சீனு ராமசாமி,  GV பிரகாஷ், இசை அமைப்பாளர் ரகுநந்தன்  

ஜி. வி பிரகாஷ் - ஆண் குரலில் வரும் அதே பாட்டில் மிக அதிக கிறித்துவ வார்த்தைகள் பயன்படுத்தபட்டுள்ளது. ஊழியம், ஆசீர்வாதம், விவிலியம், ஸ்தோத்திரம், பரிசுத்தம் என ரொம்பவே அதிகமா போயிட்டார் கவிஞர் வைரமுத்து !

(இப்போது கிருத்துவர்கள் எதிர்ப்பால் இந்த வரிகளில் சில மாற்றப்பட உள்ளதாக செய்திகள் சொல்கின்றன).

ஆண் குரல் பாடலில் "பெட்ரோல் மீது தீயை போல உந்தன் மீது பற பரவென பரவுது மனசு " என்கிற வரிகளும் அதை பாடி முடித்த பின் வருகிற வயலினும் சரி மனதை கொள்ளை அடிக்கிறது. வயலின் மற்றும் பிளூட் பாடல் முழுதும் அசத்துவது பழைய இளையராஜா பாட்டை கேட்கும் பீலிங் அப்படியே தருது.

மீனுக்கு சிறு மீனுக்கு என்னும் பாடல்  (விஜய் பிரகாஷ், ஹரிணி) அழகான டூயட். இப்பாடலின் மிக அழகான பகுதி சரணத்தில் "அடடா முத்தம் பறிக்கிற வழி.. இது தான் குறுக்கு வழி" என்று பாடும் போது மெட்டை முழுவதுமாய் மாற்றி Beat-டையும் மாற்றி அடிக்கும் இடம் தான். இந்த பாடலிலும் விவிலியம், திருமறை  உள்ளிட்ட வார்த்தைகளை கவிஞர் விடவில்லை :((

தேவன் மகளே (பிரசன்னா, சைந்தவி) மற்றொரு டூயட். காதல் மலர்ந்தவுடன் வருகிற பாட்டு என நினைக்கிறேன். வயலினின் உபயோகம் மிக நன்கு தெரிந்து வைத்திருக்கிறார் இசை அமைப்பாளர்.

ஹரிஷ் ராகவேந்திரா பாடும் ரத்த கண்ணீர் என்னும் பாட்டு மாண்டேஜ் பாடலாக கதையை ஒட்டி வரக்கூடும். சுய பச்சாதாபம் அதிகமாய் ஒலிக்கும் இப்பாட்டு இப்போதைக்கு அதிகம் ஈர்க்க வில்லை.

அம்மா செண்டிமெண்ட் பாடலான "யார் வீட்டு முகமும்" ஒரு மெலடி.  வரிகள் புரிகிற மாதிரி பாடியுள்ளார் அனந்த் அரவிந்த்.

மொத்தத்தில்:    பற பற, மீனுக்கு சிறு மீனுக்கு, தேவன் மகளே  ஆகிய பாடல்களால் இந்த ஆல்பத்தை நன்கு ரசிக்க முடிகிறது.

ரகுநந்தன்: உங்க கிட்டே நாங்க நிறைய எதிர்பார்க்கிறோம் ! அடிச்சு ஆடுங்க சார் !
****
அனைவருக்கும் இனிய நவராத்திரி மற்றும் பூஜா வாழ்த்துகள் !

22 comments:

  1. எல்லா பாடல்களுமே மனதை வருடும் மெலடி....

    ReplyDelete
  2. உங்களோட இந்த விமர்சனம் பாடல் கேட்கும் ஆவலை தூண்டுகிறது சார்.. லிங்க் கொடுத்து இருந்தால் இன்னும் ஈஸி-ஆ (ஓசி) இருந்து இருக்கும்...
    நன்றி சார்...

    ReplyDelete
  3. பதிவு படித்ததும் பாடல்களை கேட்க வேண்டும் என்கிற ஆர்வம் எழுகிறது.நன்றி.

    ReplyDelete
  4. உங்களின் இந்த விமர்சனம் பார்த்தபின்பு எனக்கும் படத்தை பார்க்க பாடலை கேட்க ஆவலாய் உள்ளது

    ReplyDelete
  5. பாடல்களை கேட்கவேண்டும் போல் ஆவல் மீளுகிறது.

    ReplyDelete
  6. Anonymous6:46:00 PM

    நிறைய மெலோடீஸ் போல...பிடிக்கும்னு நினைக்கிறேன்...நன்றி மோகன்..

    ReplyDelete
  7. ம்ம்.. இதுவரை கேட்கவில்லை. இணையத்தில் இருக்கிறதா தேடிப் பார்க்கிறேன்....

    இன்று தமிழ் மணம் என்னாச்சு?

    ReplyDelete
  8. பதிவை படித்தவுடன் பாடல்கள் கேட்கும் ஆர்வம் வருகிறது கேட்கிறேன்

    ReplyDelete
  9. இனிய நவராத்திரி மற்றும் பூஜா வாழ்த்துகள்

    ReplyDelete
  10. உங்கள் பதிவை படித்த பின்தான் ஆர்வமாய் பாடல்களை தரைவிறக்கி கேட்டேன் ....

    பாடல்கள் அத்தனையும் முத்துக்கள்
    ரெம்ப நாளைக்கு அப்புறம் ஒரு படத்தில் உள்ள பாடல்கள் அத்தனையும் மனம் கவர்ந்தது என்றால் அது இந்த படம்தான் ..

    அடையாளம் காட்டியமைக்கு நன்றி :

    ReplyDelete
  11. ஆம் ஸ்கூல் பையன் நன்றி

    ReplyDelete
  12. சமீரா. மொபி தமிழனில் ( mobitamilan.net ) எல்லா பாட்டும் கிடைக்கும்; Compressed ஆகவும் இருக்கும். பெரிய அளவிலும் இருக்கும்

    ReplyDelete

  13. நன்றி ராம்வி. கேளுங்கள்

    ReplyDelete

  14. கண்ணதாசன்: நன்றி கேட்டு பாருங்கள் நிச்சயம் பிடிக்கும்

    ReplyDelete
  15. நன்றி சசிகலா

    ReplyDelete

  16. ஆம் ரெவரி கேட்டு பாருங்கள்

    ReplyDelete
  17. சரவணன்: நன்றி

    ReplyDelete
  18. ராஜராஜேஸ்வரி: நன்றி

    ReplyDelete
  19. ராஜராஜேஸ்வரி: நன்றி

    ReplyDelete
  20. வாங்க துஷ்யந்தன். நன்றி மகிழ்ச்சி

    ReplyDelete
  21. This comment has been removed by the author.

    ReplyDelete
  22. துப்பாக்கி, மாற்றான் , ஆதி பகவான் ஏதும் மனம் ஈர்க்கவில்லை இந்த நீர்பறவை போல... சுத்தமான பாடல்கள் என எனது முகநூலில் பதிவிட்டுருக்கிறேன்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...