Monday, October 8, 2012

தொல்லை காட்சி: அது இது எதுவும், சூப்பர் சிங்கரும்

அது இது எது சொதப்பல்

ஒரு நிகழ்ச்சியின் வெற்றி எதை வைத்து இருக்கும்? அநேகமாய் அந்த நிகழ்ச்சியின் பார்மட் / Content இவற்றை பொறுத்து தானே ? ஆனால் விஜய் டிவியில் வரும் அது இது எது நிகழ்ச்சி முன்பு சிவகார்த்திகேயன் compere செய்தார். செம நக்கல், வந்திருப்போரை இவர் அடிக்கும் கிண்டலே நிகழ்ச்சியை தொடர்ந்து ரசிக்க வைக்கும். நான் மட்டுமல்ல பலரும் விரும்பி பார்த்த நிகழ்ச்சி அது ! சிவகார்த்திகேயன் சினிமாவில் பிசி ஆகி விட, மா. கா. பா. ஆனந்த் இதனை தொகுத்து வழங்க ஆரம்பித்தார். நிகழ்ச்சி இப்போது சுத்தமாக படுத்து விட்டது. ஓரிரு முறை பார்த்ததிலேயே வெறுத்து விட்டது ! TRP மிக இறங்கி, விஜய் டிவி இதனை அடியோடு தூக்கினாலும் ஆச்சரியப்பட வேண்டாம் !

டிவியில் பார்த்த படம் : காந்தி

கலைஞர் டிவியில் காந்தி ஜெயந்தி அன்று காந்தி தமிழ் படம் ஒளிபரப்பினர். என்ன தான் ஆங்கில படம் பார்த்தாலும் தமிழில் பார்க்கையில் முழுதாய் புரிந்து ரசிக்க முடிந்தது. பள்ளியில் படிக்கும் என் பெண் மிக ஆர்வமாய் படம் பார்த்தாள். அது தான் நிஜ மகிழ்ச்சி ! காந்தி படத்தை இம்முறை பார்த்த போது அதன் பல காட்சிகள் டில்லியில் உள்ள நேரு இல்லத்தில் படம் பிடித்திருப்பது தெரிந்தது. சிறைச்சாலை என காட்டப்படுவதும் சரி, ஆங்கிலேயர்கள் அலுவலகமானாலும் சரி நேரு இல்லத்தையே வெவ்வேறு ஆங்கிளில் காண்பித்துள்ளனர். ஒவ்வொரு முறையும் நெகிழ வைக்கும் படம் - காந்தி

விஜய் டிவியில் அனுஷ்கா


தாண்டவம் பற்றி பேச விக்ரமுடம் (விஜய் டிவி) வந்திருந்தார் அனுஷ்கா. திவ்யதர்ஷினி அவரிடம் சில கேள்விகள் கேட்க அவர் பதில் சொல்ல வேண்டும். ஒவ்வொரு கேள்விக்கும் விக்ரம் பதில் சொல்ல, அதையே கிளி பிள்ளை போல ஒப்பித்தார் அனுஷ்கா. தனக்கென்று சுய புத்தியே இருக்காதா? என்ன தான் தலைவி என்றாலும் ரொம்ப ஏமாற்றமாய் இருந்தது ! ஜெயா, சன் என எல்லா பக்கமும் இவர்கள் வந்து " தாண்டவம் வெற்றி விழாவை" (!!??) கொண்டாடி மகிழ்ந்தனர்.

காந்தி பிறந்த நாள் சிறப்பு நிகழ்சிகள்

லாரன்சின் காஞ்சனா, சிம்பு நடித்த ஒஸ்தி, பாலாவின் அவன்- இவன் இவையெல்லாம் காந்தி கொள்கைகளை விளக்க பல்வேறு டிவிக்கள் தேர்ந்தெடுத்த திரைப்படங்கள் ! ஹே ராம் மட்டுமே ஓரளவு இந்த நாளுக்கான சரியான படமாய் இருந்தது.

மெகா டிவியில் அரை மணி நிகழ்வாக காந்தி வாழ்க்கையை அழகாக காட்டினர். அவர் வாழ்விலிருந்து எடுத்த படங்கள், வீடியோவுடன் கூடிய இந்த நிகழ்ச்சி காந்தி பிறப்பு முதல் இறப்பு வரை மிக நிறைவாய் இருந்தது.

மற்றபடி வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் ஏதும் அன்று பார்க்கலை ( காந்தி படம்- கிரிக்கெட் மாட்ச்கள் இவை தான் ஆக்ரமித்தன)

ஒரு கிரிக்கெட் வீரர் பற்றி கங்குலி


இரண்டாம் செமி பைனல் முடிந்ததும் ஸ்டூடியோவில் கங்குலி, பீட்டர்சன், அக்ரம் ஆகியோர் பேசும் போது கங்குலி ஒரு விஷயம் சொன்னார். " நான் ஒரு வீரருடன் இருநூறு மேட்சுக்கு மேல் துவக்க ஆட்ட காரரா இறங்கியிருக்கேன். எப்பவும் என்னை தான் முதல் பந்து எதிர்கொள்ள சொல்வார். எனது ஆட்டம் சரியாக இல்லாத சில நேரம் "முதல் பந்தை நீங்கள் விளையாடுங்கள்; எனக்கு டென்ஷனா இருக்கு " என்றாலும் அவர் "நோ" என்றே சொல்லுவார். கேப்டனாக இருந்த போதும் சில முறை கேட்டுள்ளேன்; அப்பவும் அதே பதில் தான் " ( என்னது ? கேப்டன் சொன்னதையும் அவர் கேட்கலியா?-அதிர்ச்சியுடன் அக்ரம் கேள்வி...)

"சில தடவை நான் கேட்டு பார்த்துட்டு கிரீஸ் அருகே போய் யார் முதலில் ஆடுறதுன்னு பார்த்துக்கலாம்" என சொல்லிடுவேன். அப்புறம் கிரீஸ் அருகே சென்றதும், நான் போய் நான் ஸ்ட்ரைக்கர் இடத்தில நின்று கொள்வேன்; அங்கு வந்து அவர் ஆர்கியூ செய்ய மாட்டார். பேசாமல் முதல் பந்தை எதிர்கொள்ள போயிடுவார். நான் ஸ்ட்ரைக்கர் ஆக நிற்கும் நான் அவரை பார்க்கவே மாட்டேன். வேறு எங்கோ பார்த்து கொண்டு நிற்பேன்; இப்படி ஓரிரு முறை அவர் முதல் பந்தை எதிர் கொண்டார்"

இப்படி சச்சின் பேரை சொல்லாமலே சச்சின் பற்றி அவர் பேசியது செம காமெடியா இருந்தது. அதுவும் சின்ன குழந்தை மாதிரி கிரீஸ் அருகே வந்த பின் சச்சினை ஏமாற்றியது பற்றி அவர் சொன்னது செம !

T- 20 பைனல்

இலங்கை, பாக், ஆஸ்திரேலியா இவற்றையெல்லாம் எப்போதும் இந்திய பார்வையாளர்களான நாம் ஆதரிக்க மாட்டோம். பைனலில் நம்மில் பலரின் ஆதரவு மேற்கு இந்திய தீவுக்கு தான் இருந்தது.

நேற்று அவர்கள் வெறும் 137 எடுத்த போது நிச்சயம் ஜெயிப்பது கஷ்டம் என நினைத்திருக்க, பவுலிங்கில் அசத்தி ஜெயித்து விட்டனர். வெற்றி பெற்ற பின் அவர்கள் ஆடிய நடனம் என்னா அட்டகாசம் தெரியுமா? நேற்று அதனை பார்க்கா விடில் இந்த யூ டியூப் வீடியோவில் பார்த்து மகிழுங்கள் !


சூப்பர் சிங்கர் அப்டேட்

ஒய்ல்ட் கார்ட் ரவுண்ட் முடிந்து மக்கள் வாக்களித்து விட்டனர். இதிலிருந்து யார் பைனல் செல்கிறார்கள் என இவ்வார இறுதியில் தெரிவிப்பார்கள். ஒய்ல்ட் கார்ட் மூலம் ஒருவர் தான் பைனல் செல்வார் என ஆரம்பத்தில் சொல்லி விட்டு அப்புறம் இரண்டு பேரை பைனல் அனுப்புவார்கள். இது தான் விஜய் டிவியின் வழக்கம். இம்முறையும் அதுவே நடக்கும் என நம்புகிறோம்.

ஆஜித் செல்வது நிச்சயம் என நினைக்கிறேன். மேலும் யாழினி அல்லது ரக்சிதா இவர்களில் ஒருவர் செல்ல கூடும்.
****
 வல்லமை அக்டோபர் 8, 2012 இதழில் வெளியானது

31 comments:

  1. ஒவ்வொரு முறையும் நெகிழ வைக்கும் படம் - காந்தி

    பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  2. அது இது எது.... சிவகார்த்திகேயன் இருந்த போது பார்த்திருக்கிறேன். மா.கா.பா. வந்த முதல் இரண்டு நிகழ்ச்சிகள் பார்த்தேன் - அவ்வளவு சரியாக இல்லை.... அதன் பிறகு பார்க்க வாய்ப்பில்லை!

    காந்தி - நல்ல படம்....

    ReplyDelete
  3. தொலைக்காட்சி நிகழ்சிகளை சரியாக பார்க முடியவில்லையே என்ற குறைகளை அவ்வப்போது வீடு திரும்பல் போக்கிவிடுகிறது,,

    தொடருங்கள் சகோ..

    ReplyDelete
  4. அது இது எது வை இப்பொழுது பார்ப்பதே இல்லை...சிவகார்த்தி இல்லாதது பெரிய வெற்றிடம்தான்....விஜய் டி.வி இதை இத்துடன் நிறுத்திக்கொண்டால் நிகழ்ச்சியின் கௌரவம் தப்பிக்கும்...

    இதை பார்த்தவுடன் நான் ஒரு போஸ்ட் போட்டிருந்தேன்....
    http://www.venkkayam.com/2012/09/blog-post_2.html

    ReplyDelete
  5. Anonymous1:33:00 PM

    மா. கா. பா. பாவம் மோகன்.. அந்த நிகழ்ச்சியின் பார்மெட்ட இவருக்கு ஏத்த மாதிரி மாத்துனாலோ, இல்ல இவர வச்சி வேற எதுனாவது காமெடி புரோகிராம் இந்த ஸ்லாட்க்கு செஞ்சாலோ விஜய் டிவி டி.ஆர்.பி ய தக்க வச்சுக்கலாம்...

    வெஸ்ட் இன்டிஸ் டிசேர்வ் இட்..

    ReplyDelete
  6. காந்தி ஜெயந்தி ஆண்டு காந்தியும், ஹே ராமும் உர்யுப்படியான படங்கள். இரண்டுமே கலைஞர்தான் ஒளிபரப்பியது என்று நினைக்கிறேன்.
    கிரிக்கெட் இறுதி ஆட்டம் மிக சுவாரஸ்யமாய் இருந்தது. கெயில் ஆட்டமும் சமி ஆட்டமும் சூப்பர்! டான்ஸ் சொல்றேன்! கேப்டன் பந்தா செய்யாமல் குஷியாகக் கலந்து கொண்டது கண்கொள்ளாக் காட்சி!

    கங்கூலி தகவல் ஆச்சர்யம். அர்நாபின் சச்சின் பேட்டியும் சுவாரஸ்யமாக இருந்தது!

    ReplyDelete
  7. காந்தி நல்ல படம்.
    ரக்‌ஷிதா செலக்ட் ஆனால் நன்றாக இருக்கும். பார்க்கலாம்.

    ReplyDelete
  8. " தாண்டவம் வெற்றி விழாவை" (!!??) கொண்டாடி மகிழ்ந்தனர்.

    he....he...

    ReplyDelete
  9. சுவாரசியமான அலசல்..T-20 பற்றி தனியாக பதிவு எழுதுவீங்கன்னு பார்த்தேன்...

    ReplyDelete
  10. பல நிகழச்சிகளின் தகவலுக்கு நன்றி... இங்கே மின்சாரம் ஆறு மணி நேரம் மட்டுமே...

    ReplyDelete
  11. கிரிக்கட் விஷயங்கள் சூப்பர்.

    ReplyDelete
  12. ஏனுங்க நண்பரே இன்னும் பச்சக் குழந்தையாவே இருக்கீங்களே.டிவியிலே எப்ப பொருத்தமான நிகழ்ச்சியைக் காண்பித்தார்கள்.
    சினிமா சம்பந்தபட்ட நிகழ்ச்சிகளுக்குதானே விளம்பர வருவாய் விடைக்கும்.
    வாழ்க வளமுடன்
    கொச்சின் தேவதாஸ்

    ReplyDelete
  13. கங்குலி சச்சின் மேட்டர் நச். அப்புறம் வெஸ்ட் இண்டீசின் டான்ஸ் கலக்கல். பின்னே ஜெயிச்சா யாருக்குத்தான் டான்ஸ் வராது?

    ReplyDelete
  14. யாழினி கட்டாயம் பைனலுக்கு வருவாள். பிரகதிக்கு 60 லட்ச ரூ. வீடு. இரண்டாம்/மூன்றாம் பரிசு யாழினி/கௌதம் இருவருக்கு எப்படி வேண்டுமானாலும் வரலாம். பாருங்களேன்.
    சகாதேவன்

    ReplyDelete
  15. Anonymous7:54:00 AM

    மா.கா.பா ஆனந்த திரையில் பயப்படுகிறாரோ .. கொஞ்சம் அங்குமிங்கும் சொதப்புகின்றார்.. சூப்பர் சிங்கரில் அந்த பாவனா பொண்ணு தமிழைக் கொல்லுது .. அதைப் பற்றிக் கொஞ்சம் எழுதலாமே ?

    ReplyDelete
  16. ஆம் ராஜராஜேஸ்வரி நன்றி

    ReplyDelete
  17. நன்றி வெங்கட்

    ReplyDelete
  18. அப்படியா தொழிற்களம் ? மகிழ்ச்சி நன்றி

    ReplyDelete
  19. கிருதிகன்: உங்களின் அந்த பதிவை படிச்சிருக்கேன் நன்றி

    ReplyDelete
  20. மொக்கராசு : //இவர வச்சி வேற எதுனாவது காமெடி புரோகிராம் இந்த ஸ்லாட்க்கு செஞ்சாலோ விஜய் டிவி டி.ஆர்.பி ய தக்க வச்சுக்கலாம்...

    வெஸ்ட் இன்டிஸ் டிசேர்வ் இட்..//

    மிக சரியா சொல்லிருக்கீங்க நன்றி

    ReplyDelete
  21. விரிவான கருத்துக்கு நன்றி ஸ்ரீராம்

    ReplyDelete

  22. கோவை டு தில்லி : நாங்களும் ரக்சிதாவை சப்போர்ட் செய்யவே செய்கிறோம் பார்க்கலாம்

    ReplyDelete
  23. நன்றி சரவணன். சினிமா அரசியலில் இதெல்லாம் சகஜம் தானே !

    ReplyDelete
  24. ராம்வி: வாங்க ரொம்ப நாள் கழ்சிசு வந்திருக்கீங்க நல்லா இருக்கீங்களா

    ReplyDelete

  25. நன்றி தனபாலன் சார்

    ReplyDelete

  26. முரளி சார் நன்றி

    ReplyDelete

  27. தேவதாஸ்: நன்றிங்க

    ReplyDelete
  28. துரை டேனியல்: உண்மை தான் நன்றி

    ReplyDelete
  29. சகாதேவன்: அடேங்கப்பா நிறைய predict செய்றீங்க; பார்க்கலாம் எந்த அளவு பலிக்குதுன்னு

    ReplyDelete
  30. இக்பால் செல்வன்: மா. கா. பா சூப்பர் சிங்கரில் பரவாயில்லை. ஆனால் தனியே அது இது நிகழ்ச்சி செய்யும் போது கொஞ்சம் டென்ஷன் ஆகிடுறார் போல

    ReplyDelete
  31. Anonymous4:17:00 PM

    சிவ. கார்த்திக்கேயனுக்காகவே அது இது எது நிகழ்ச்சி பார்த்தேன்... எப்ப மா.கா.பா வந்தாரோ அதன் முதல் நிகழ்ச்சியிலேயே நான் சேனலை மாற்றிவிட்டேன்...

    காரணம் சூப்பர் சிங்கரில் அவர் போடும் மொக்க பிளேடுகளே அதற்கு காரணம்..

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...