Wednesday, October 17, 2012

வானவில்- தஞ்சை-நீலிமா ராணி- IRCTC


மெட்ராஸ்ல இருக்கவங்க தான் மனுஷங்க; நாங்கல்லாம் மண்ணுங்க !

மீபத்தில் அதிகாலை நாலே முக்காலுக்கு தஞ்சை சென்று இறங்கிய சில நிமிடங்களில் கரண்ட் போயிந்தே !  இருட்டில் தட்டு தடுமாறி மாரிஸ் கார்னர் அருகே உள்ள அம்பாள் டீ கடைக்கு வந்தேன். ஒரு டீ சொல்லி விட்டு " கரண்ட் எப்ப சார் வரும்?" என்று கேட்க, ஏற இறங்க பார்த்து விட்டு " தம்பி வெளியூரில் இருந்து வர்றீங்களா? எப்ப வரும்னு சொல்லவே முடியாதுங்க. மெட்ராஸ்ல இருக்கவங்க தான் மனுஷங்க; நாங்கல்லாம் மண்ணுங்க. எங்களுக்கெல்லாம் எதுக்குங்க கரண்ட்டு ? " என்றார். "அடடா நல்ல வரவேற்பா இருக்கே" என்று நினைக்க, " விருந்தாடியெல்லாம் நாம அனுப்பி வைக்க வேணாம். அவங்களே இங்கே உள்ள நிலைமை பார்த்துட்டு மெட்ராஸ் ஓடிடுவாங்க; பல பேருக்கு இது நடக்குது " என தொடர்ந்தார் !

வீட்டுக்கு சென்றதும் அவர் சொன்னது உண்மை என்று புரிந்தது. இன்வர்டர் வீட்டில் இருந்தாலும் கூட இந்த அளவு கரண்ட் கட்டுக்கு கதைக்கே ஆவாது ! பகல் முழுசும் கரண்ட் இல்லாவிட்டால் கூட இன்வர்டர் போடாம இருந்தா இரவு ஓரளவு தாக்கு பிடிக்கும். நள்ளிரவு கூட ஒரு மணி நேரம் மாற்றி மாற்றி கரண்ட் கட் பண்றது கொடுமை !

டிவி பார்ப்பது அங்கு பெரிதும் குறைஞ்சிடுச்சு. கரண்ட் இருக்க நேரத்தில் அவசரமா சமையல் செய்வது, கீசர் போட்டு குளிப்பது போன்ற வேலைகள் செய்கிறார்கள். நிலைமை ரொம்ப மோசமா தான் இருக்கு :(

தஞ்சையில் பதிவர் சந்திப்பு

தஞ்சையில் பதிவர்கள் ஜோசப் பால்ராஜ், சென் மற்றும் மருத்துவர் மயிலன் ஆகியோர் சந்தித்து உரையாடினோம். ஜோசப் சுவாரஸ்யமாய் பல விஷயங்கள் பகிர்ந்து கொண்டார்.


மணற்கேணியில் நடத்திய போட்டிகள் குறித்த அனுபவங்கள், இருதய மாற்றம் செய்த செந்தில்நாதன் நோய் குறித்தும் அவரது இப்போதைய நிலை குறித்தும் பல தகவல்கள் (அவருக்கு சிறந்த கோ- ஆபரேஷன் தந்த நோயாளி என சிங்கப்பூரில் அவார்ட் தந்துள்ளனராம். மேலும் சிங்கப்பூர் அரசு உறுப்பு தானத்துக்கு எவ்வளவு முக்கியத்துவம் தருகிறது என்பதும், உறுப்புகள் விரைவில் கிடைப்பதால் சிங்கப்பூரில் இத்தகைய ஆப்பரேஷன் செய்வது மிக நல்லது என்றும் அவர் பேச்சினூடே தெரிய வந்தது)

அப்துல்லா மணிஜி,டாக்டர் புருனோ உள்ளிட்ட பல பதிவர்கள் பற்றி நிறைய சுவாரஸ்ய தகவல்கள் பேசி சிரித்தோம்.

டாக்டர் மயிலன் தனது ஆப்பரேஷன் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

மாலை ஐந்தே முக்கால் முதல் ஏழு வரை ஜாலியாய் பேசி கொண்டிருந்தோம். ஏழு மணிக்கு கரண்ட் போச்சு. நல்லவேளை முன்னமே சில போட்டோ எடுத்துட்டோம்.

இனிய சந்திப்புக்கும் தேநீருக்கும் நன்றி நண்பர்களே ! மீண்டும் சந்திப்போம் ஜோசப், சென் & மயிலன் !

அழகு கார்னர்

இந்த அம்மணி கிட்டே என்னமோ ஒரு ஈர்ப்பு இருக்கு.. என்னான்னு சொல்ல தெரியலை. தமிழ் சினிமா இவரை சின்ன பாத்திரத்திற்கு மட்டுமே பயன்படுத்தினாலும் சின்ன திரையில் கலக்கிக் கொண்டிருக்கிறார் ! இவருக்கு இணையத்தில் பெரிய  ரசிகர்  பட்டாளமே  இருக்குங்கோவ் !


பதிவர் பக்கம்

இந்த வாரம் நாம் குறிப்பிட விரும்பும் பதிவர் உடல்நலன் குறித்து நல்ல பதிவுகள் எழுதுபவர். உங்களில் பலருக்கு ஏற்கனவே தெரிந்திருக்கலாம். துரை டேனியல் !

எப்போதும் பிறருக்கு பயன்தரும் தகவல்களையே பதிவாக எழுதுவார் இவர் !

நம் உடலில் உள்ள Body clock எப்படி இயங்குகிறது என்பது குறித்த அவரின் இந்த பதிவை வாசியுங்கள்.

தொடர்ந்து அசத்துங்க துரை டேனியல் !  

காணாமல் போன கல்லூரி மாணவன்

                             

இந்த புகைப்படத்தில் உள்ள பதிவர் அமைதி அப்பாவின் உறவினர் மகன் சுகிலன் கடந்த சில நாட்களாக காண வில்லை. பதினெட்டு வயதுள்ள இவர் சென்னையில் சத்திய சாய் மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு M.B.B.S படித்து வருகிறார். ஒரு மாதமாய் பெற்றோரை பார்க்காததால், ஊருக்கு வருகிறேன் என சொல்லிவிட்டு பஸ்ஸில் ஏறி வேதாரண்யம் சென்றுள்ளார். கடைசியாக " பஸ்ஸில் ஏறிவிட்டேன்; பெருங்களத்தூர் தாண்டி விட்டது" என வீட்டுக்கு பேசி உள்ளார். மறுநாள் வீட்டுக்கு வரலை. போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. கல்லூரி சென்று விசாரித்ததில் படிப்பில் பிரச்சனையோ காதல் விவகாரமோ இல்லை என தெரிந்துள்ளது. செல்போன் சிக்னல் கடைசியாக வேதாரண்யம் அருகே நாகூரில் கிடைத்ததாக போலிஸ் கூறியுள்ளது.

கல்லூரி மாணவர்கள் இப்படி காணாமல் போவதும் நடக்கிறது என்கிற எச்சரிக்கைக்காகவும் இதை பகிர சொல்லி பதிவர் அமைதி அப்பா தெரிவித்திருந்தார்.

மேற்கண்ட சுகிலன் பற்றி தகவல் தெரிவிக்க 9486766404, 9442577348 என்கிற எண்களை தொடர்பு கொள்ளவும். 

QUOTE CORNER

Certain is it that there is no kind of affection so purely angelic as of a father to a daughter. In love to our wives there is desire; to our sons, ambition; but to our daughters there is something which there is no words to express. ~Joseph Addison

அப்பா- மகள் உறவு குறித்த quote இன்று போட ஒரு காரணமிருக்கு. இன்று என் மகள் ஸ்நேகா பிறந்த நாள்.


IRCTC டார்ச்சர் !

IRCTC சைட் என்று ஒன்று இருக்கிறதே. அது மனுஷனை மிருகம் ஆக்கிடும் போல. கம்பியூட்டரை தூக்கி எறியாதது தான் பாக்கி.

ஒரு காலத்தில் இந்த சேவை எவ்வளவு நல்லா இருந்தது ! இப்போ பல லட்சம் மக்கள் யூஸ் செய்கிறார்கள் என்றால் அதற்கு தகுந்த மாதிரி பேன்ட்விட்த் அதிகமாக்கணும். இல்லாட்டி இந்த சேவையை கடாசிட்டு எல்லாரும் போய் கியூவில் நின்னு வாங்கிக்குங்கன்னு சொல்லணும். முடியலை பாஸ் ! ஒரு வாரமா , ஒவ்வொரு நாளும் பத்து முறைக்கு மேல் பல நேரத்தில் முயற்சி பண்ணி வெறுத்து போயிட்டேன் ! கொடுமை. இனி ஊருக்கு போக ஏஜன்ட் மூலம் தான் டிக்கெட் போடணும் போல !

35 comments:

  1. மகளின் பிறந்தநாளுக்கு எங்கள் இனிய வாழ்த்து(க்)கள்.

    எப்போதும் மகள்தான் அப்பாவுக்கு அதிகச் செல்லம்!!! இதுலே மட்டும் வீட்டுவீட்டுக்கு வாசப்படிதான்:-))))

    காணாமல்போன மாணவர்.... மிகவும் கவலையாக இருக்கிறது. பெற்றோர்கள் மனம் என்ன பாடு படும் என்பது ......

    ப்ச்.....

    ReplyDelete
  2. கல்லூரி மாணவர் விரைவில் கிடைக்க வேண்டும்...

    தங்கள் மகள் ஸ்நேகாவுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. உங்கள் அருமை மகளுக்கு எனது வாழ்த்துகள்...

    காணாமல் போன மாணவர் - என்ன நடக்கிறது.... சீக்கிரமே அவர் மீண்டும் பெற்றோருடன் சேர எனது பிரார்த்தனைகள்.

    அழகு கார்னர் - :)

    IRCTC: காலை 10-11 மணி வரை நிச்சயம் வேலை செய்யாது! பொறுமை கடலினும் பெரிதாக இருந்தால் தான் நீங்கள் இந்த சைட்டின் மூலம் முன்பதிவு செய்ய முடியும்!

    ReplyDelete
  4. தங்கள் மகள் ஸ்நேகாவிற்கு பிறந்த நாள் நல் வழ்த்துக்கள்.

    காணமல் போன கல்லூரி மானவர் திரும்பி கிடைக்க பிராத்தனை செய்கிறேன்.

    கரண்ட் கட் மிக பெரிய பிரச்ச்னையாக இருக்கிறதே??

    ReplyDelete
  5. IRCTC issue :எல்லா மாநிலங்களுக்கும் தனித்தனி சர்வர்களும் (தமிழ்நாட்டு சர்வரில் தமிழ்நாடு வண்டிகள் மட்டும் புக் செய்யலாம் ) & மாநிலங்களுக்கிடயே ஓடும் வண்டிகளுக்கு ஒரே சர்வரும் அமைத்தால் இந்த பிரச்னை குறையும் என நினைக்கிறேன். புக் செய்யும் முன் இரண்டு ஆப்சன்ஸ் குடுக்கலாம்.

    1) Inter state or Intra state


    2) If intra state is selected , then we can select which state. ( it should get navigated to the respective server).


    இதில் ஏதும் நடைமுறை/தொழில்நுட்பச் சிக்கல் உள்ளதா எனத் தெரியவில்லை.

    ReplyDelete
  6. துரைடேனியல் has left a new comment on your post "வானவில்- தஞ்சை-நீலிமா ராணி- IRCTC":

    உங்கள் மகள் ஸ்நேகாவுக்கு அன்பு வாழ்த்துக்கள்! என்னைப் பற்றி பகிர்ந்து கொண்டமைக்கு மனமார்ந்த நன்றிகள் நண்பரே! பதிவின் அனைத்து பகுதிகளும் அருமை.

    ReplyDelete
  7. மெட்ராஸ்ல இருக்கவங்க தான் மனுஷங்க; நாங்கல்லாம் மண்ணுங்க. எங்களுக்கெல்லாம் எதுக்குங்க கரண்ட்டு ?


    உண்மையான வலி மிகுந்த வார்த்தைகள் மோகன் சார்

    தங்கள் மகள் ஸ்நேகாவிற்கு பிறந்த நாள் நல் வழ்த்துக்கள்.


    நான் தஞ்சாவூர் வந்திருந்தால் பதிவர் சந்திப்பில் கலந்து கொண்டிருப்பேன்

    ReplyDelete
  8. கல்லூரி மாணவர் விரைவில் கிடைக்க பிராத்தனை செய்கிறேன்

    ReplyDelete
  9. irctc முன்பதிவு செய்ய பொறுமை நிறைய வேண்டும்

    ReplyDelete
  10. எங்கு சென்றாலும் பதிவர்களை தவறாது சந்தக்க நினைப்பது மிக சிறப்பு...
    நீலிமா ராணி ( சங்கம் சார்பில் நடவடிக்கை எடுக்க ஆலோசிக்கப் படும்)..
    IRCTC நாங்க எல்லாம் கிங்கு, எவ்ளோ பிரச்னை வந்தாலும் புக் பனாமா விடறது இல்ல..

    ReplyDelete
  11. மகளுக்கு என் அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள்!

    மாணவர் சுகிலன் பற்றி இன்னும் தகவல் கிடைக்கவில்லை என்பது கவலை அளிக்கிறது:(!

    ReplyDelete
  12. Anonymous10:45:00 AM

    உங்கள் அருமை மகளுக்கு அன்பான பிறந்த நாள் வாழ்த்து(க்)கள்!!

    நீலிமா ராணி ரசிகர் பட்டாளத்தில் நீங்களும் உண்டு தானே :-)

    ReplyDelete
  13. தங்கள் மகளுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

    மாணவர்கள்/இளைஞர்கள் காணாமல் சமீபகாலமாக அதிகரித்துள்ளது. இது உண்மையாகவே ஒரு பெரிய சமூகப் பிரச்சனைதான். ஆனால், மேற்கூறியச் சம்பவம் வேறு மாதிரி இருக்கிறதே. கடைசீ வரைத் தொடர்பில் இருந்தார் என்பது மேலும் கவலையைத் தருகிறது. விரைவில் நல்லவை நடக்கும் என்று நம்புவோம்.

    கரண்ட் விலைவாசி என்று தமிழகத்தில் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது போலிருக்கிறதே!! [விலைவாசி உயர்வு தற்போது இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகம் (12.64%). இந்திய அளவில் இது 9 1/2 சதவீதம் தான்.]

    நீலிமா! - உங்க வீட்டுல படிச்சா நீங்க காலிமா!!

    ReplyDelete
  14. உங்கள் அன்பு மகள் ஸ்நேகாவுக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  15. ஆரம்பமே அமர்க்களம் அண்ணே ..
    மின்வெட்டு எல்லாத்தையும் பாடா படுத்துது ..
    அந்த பொண்ணு மேலையும் எனக்கு ஒரு கண்ணு ..(வெளியே சொல்லிடாதிங்க)
    ரயில் டிக்கட் நரக வேதனை ... எப்படி தான் இனி புக் பண்றதே என்றே தெரியலை .

    ReplyDelete
  16. சுகிலன் குறித்து இதுவரை தகவல் கிட்டாதது வருத்தமளிக்கிறது.

    கரண்ட் பிரச்னை, பெரிய பிரச்னையாகத்தான் இருக்கீறது. இந்தியாவில் யாரிடம் பேசினாலும், இதேதான். இன்வர்ட்டர்கூட சார்ஜ் செய்ய முடியாததுதான் கொடுமை.

    சிங்கப்பூர் இதய மாற்று சிகிச்சை குறித்த தகவல்களையும், டாக்டர். மயிலனின் அறுவை சிகிச்சை அனுபவங்களையும் தனிப்பதிவாக எழுதுங்களேன்.

    ReplyDelete
  17. உங்களின் அன்பு ஸ்நேகாவிற்கு என் இதயம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள். காணாமல் போன அந்த மாணவர் விரைவில் கிடைக்க வேண்டுதல்கள். நீலிமா பற்றிய வெங்கட ஸ்ரீனிவாசனின் கமெண்ட் சூப்பர். ஐஆர்டிசி விஷயத்தில் எனக்கு அனுபவம் குறைவு. வானவில் கலர்ஃபுல்.

    ReplyDelete
  18. மகளுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.

    மின்சாரம் மக்களுக்கு உண்மையிலேயே ஷாக்கடிக்க வைக்கும் அனுபவமாத்தான் இருக்கு. எவ்ளோ நொந்து போயிருந்தா அந்த மனிதரிடமிருந்து அவ்வளவு வலிமிகுந்த வார்த்தைகள் வந்துருக்கும்.

    மாணவர் விரைவில் கிடைக்கப் பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  19. உங்கள் மகளுக்கு எங்கள் பிறந்த நாள் வாழ்த்துகளும் இணைகின்றன.
    கல்லூரி மாணவர் கூடக் காணாமல் போவது வேதனை+அதிர்ச்சி. அவர் சீக்கிரம் கிடைக்க எங்கள் பிரார்த்தனைகளும்/
    மேரீஸ் கார்னர் பெயர் கேட்டதும் பழைய நினைவுகள் எட்டிப் பார்த்தன!

    ReplyDelete
  20. கல்லூரி மாணவர் திரும்ப கிடைக்க இறைவனை வேண்டுகிறேன்....

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  21. ஸ்நேகாவிற்கு எங்களது பிறந்த நாள் நல் வாழ்த்துகள்!



    ReplyDelete
  22. ஸ்நேகாவிற்கு எங்களது பிறந்த நாள் நல் வாழ்த்துகள்!



    ReplyDelete
  23. மருத்துவக்கல்லூரி மாணவன் சுகிலன் குறித்து பகிர்ந்துக் கொண்டமைக்கு நன்றி.

    ReplyDelete
  24. Anonymous5:54:00 PM

    உங்கள் மகளுக்கு எங்கள் பிறந்த நாள் வாழ்த்துகளும் ஆசீர்வாதங்களும்...

    Wishing her many more happy returns of the day Mohan...

    Treat her like a queen today and like a princess everyday...

    As a gift to her,please read the book "Strong fathers strong daughters"

    http://reverienreality.blogspot.com/2011/07/1.html

    ReplyDelete
  25. உங்கள் மகளுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.

    மாணவன் விரைவில் கிடைக்க பிரார்த்திக்கின்றேன்.

    ReplyDelete
  26. If not Tatkal.. Try after 10:30 pm or around 5:00-5:30 AM -- you won't be disapponted..

    ReplyDelete
  27. சுகிலன் கிடைக்க என் மனமார்ந்த பிரார்த்தனைகள். மற்ற பகுதிகளும் என்னை மிகவும் கவர்ந்தன சார்!

    ReplyDelete
  28. மகளுக்கு என் அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள்!

    ReplyDelete
  29. பின்னூட்டமிட்ட சிநேகாவுக்கு வாழ்த்து சொன்ன அனைத்து நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி

    கல்லூரி மாணவன் காணாமல் போனது பலரை மனதையும் பாதித்தது உணர முடிகிறது. அவர் குறித்த தகவல் தெரிந்தால் நிச்சயம் பகிர்கிறேன்

    ReplyDelete
  30. IRCTC டார்ச்சர் !\\ call their help line and complain. depending on the pressure they may yield after sometime to upgrade their servers!!

    ReplyDelete
  31. சினேகா பேர் நீங்களா வச்சீங்களா, இல்லை நீங்க பேர் வச்சப்புறம் தான் அவங்க நடிக்கவே வந்தாங்களா? happy birthday to Sneha!!

    ReplyDelete
  32. happy birthday wishes to sneha

    ReplyDelete
  33. அருமையான பதிவு.
    உங்கள் மகள் ஸ்னேகாவிற்கு எங்கள் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  34. irctc -யால டென்ஷன் ஆகாதவங்க இருக்கவே முடியாது சார்.. payment ஆனதும் சர்வர் error - டைம் அவுட் நு வந்து நம்ம மூட் அவுட் பண்ணிடும்..

    உங்கள் மகளுக்கு, என் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் சார்.. தாமதத்திற்கு மன்னிக்கவும்.. கொஞ்சம் வேலை அதிகம்...
    என்னுடைய பிறந்தாலும் அன்று தான்.,.

    ReplyDelete
  35. நண்பர்களே மகிழ்ச்சியான செய்தி. காணாமல் போன சுகிலன் தற்பொழுது, பழனியில் கிடைத்துவிட்டார்.

    அவராகவே தான் சென்றுள்ளார். கடத்தப்பட வில்லை.மேலும் விபரங்கள் பிறகு தெரிவிக்கிறேன்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...