Wednesday, January 23, 2013

வானவில் : விஸ்வரூபம் கதை- சச்சின் தெரு- ஆரோகணம்

பார்த்த படம் - ஆரோகணம் 

ஆரோகணம் படம் நன்றாக இருப்பதாக பலரும் சொன்னதால் சமீபத்தில் பார்த்தேன். மிகச் சிறிய அளவு மனநிலை பாதிக்கப்பட்ட (அதுக்கு எதோ ஒரு பேர் சொல்றாங்க; மறந்துடுச்சு) ஒரு பெண்ணின் கதை. டாகுமெண்டரி போல செல்லும் அபாயம் இருப்பதை உணர்ந்து, அவரை குடும்பத்தினர் காணாமல் தேடுவதாக ஒரு புறமும் அவருக்கு விபத்து நடந்தது என மறுபுறமும் (அலை பாயுதே !) சொல்லி செல்கிறார்கள்.

லக்ஷ்மி ராமகிருஷ்ணா இயக்குனரென்பதால் பெண்களின் உணர்வுகள் நன்றாகவே வெளிவந்துள்ளது. முக்கிய பாத்திரத்தில் சரிதா தங்கை விஜி. இவரது பெண்ணாக வருபவர் அழகு. பதிவர் நண்பர் சுரேகாவும் கூட சிறு பாத்திரத்தில் வருவதை காண மகிழ்ச்சியாக இருந்தது.

சற்று முயன்றால் படம் இன்னும் நன்றாக வந்திருக்க கூடும். விரைவில் டிவியில் போடும்போது கண்டுகளியுங்கள் ஆரோகணத்தை !

அய்யாசாமி கார்னர்


அய்யாசாமியின் பால்ய கால நண்பன் நந்து சென்னை வந்தபோது போனில் அழைத்தார். பரஸ்பர நலம் விசாரிப்புகளுக்கு பிறகு அய்யாசாமியின் ப்ளாக் பற்றி பேச்சு செல்ல, சில பதிவுகள் பற்றி தஞ்சாவூர் பாஷையில் வண்டை வண்டையாக திட்ட ஆரம்பித்தார் நந்து. பொறுமையாய் கேட்ட அய்யாசாமி, " ரைட்டு விடு. எப்படி பாத்தாலும் நீ என்னோட வாசகரா போய்ட்டே; நம்ம வாசகர்கள்லே சில பேர் இப்படித்தான், அப்பப்ப நம்மை திட்டுவாங்க. எழுத்தாளர்னு ஆயாச்சுன்னா இதெல்லாம் சகஜம் தானே " என்றதும் எதிர் முனையில் கெட்ட வார்த்தைகள் வலுத்தது.

நிற்க. 35 வருட நண்பர்களான நந்து மற்றும் மோகன் , அய்யாசாமியின் எழுத்துலக பணிகள் பற்றி "விலா"வாரியாய் விசாரிக்க ஒரு மீட்டிங்குக்கு ( கிளப்) கூப்பிட்டிருக்கிறார்கள். "போனாலும் செத்தோம்; போகாட்டியும் செத்தோம்" என புலம்பிக் கொண்டிருக்கிறார் அய்யாசாமி !
இந்த வார ரிலீஸ்: விஸ்வரூபம்


பல தடைகளை தாண்டி இவ்வார வெள்ளியன்று ரிலீஸ் ஆகிறது விஸ்வரூபம். நிறைய சர்ச்சைகள் இருப்பதே படத்துக்கு பெரும் பப்ளிசிட்டி ஆகி விட்டது. முதல் 3 நாள் அனைத்து ஷோ சென்னை தியேட்டர்களில் நிரம்பி விட்டது. ஞாயிறு வரை நீங்கள் டிக்கெட் புக் செய்யலை எனில் மடிப்பாக்கம் குமரன் போன்ற சின்ன தியேட்டர்களில் பார்த்தால் தான் உண்டு !

கமலின் இயக்கம் மேல் எனக்கு சற்று பயம் தான். நம்மை போல ஓரளவு படித்த, நிறைய சினிமா பார்க்கும், ரசிக்கும் விமர்சிக்கும் மக்களுக்கே அவர் இயக்கும் படங்கள் முழுதாய் புரிவதில்லை என்பது என் கருத்து. விஸ்வரூபத்தில் இக்கருத்து பொய்யானால் மகிழ்ச்சியே !

வலைபாயுதேவில் ஷேக் என்பவர் இப்படி எழுதியிருந்தார்: கமல் பெருமையுடன் வழங்கும் என்பதற்கு பதில் பொறுமையுடன் வழங்கும் என போட்டிருக்கலாம் # விஸ்வரூபம் !

அடுத்த சில வரிகள் விஸ்வரூபம் பற்றி இணையத்தில் உலவி வரும் கதை உள்ளது. வேண்டாமெனில் அடுத்த பத்திக்கு தாவி விடவும் !!

அமெரிக்காவில் இருக்கும் கமல் கத்தக் டான்ஸ் மாஸ்டர். அவரை காதலித்து மணக்கிறார் புதுமுகம் பூஜா. இருவருக்கும் சண்டை வர கமலை விட்டு பிரிய காரணம் தேடி ஒரு டிடக்டிவ் வைக்கிறார். கமல் உண்மையில் யார் என்று தெரியும் போது அதிர்ந்து போகிறார்... இப்படி போகுதாம் கதை !

இரு மகிழ்வான செய்திகள்

ஹிந்துஸ்தான் சாம்பர் ஆப் காமர்சின் கார்பரேட் அபேர்ஸ் கமிட்டியின் உறுப்பினராகவும், ACS இன்ஸ்டிடியூட் கிளையான Chennai West Study Circle -க்கு டெபுடி கன்வீனர் (துணை தலைவர்) ஆகவும் தேர்ந்தேடுக்கப்பட்டுள்ளேன்.

இதில் டெபுடி கன்வீனர் பதவி மிக சுவாரஸ்யமாக உள்ளது, எந்த அணியிலும் வைஸ் கேப்டனுக்கு மிக அதிக பொறுப்பிருக்கும். திட்டமிடல் தொடங்கி ஓடியாடி வேலை செய்வது வரை. என்ஜாயிங் இட் !

இவற்றால் இணையம் பக்கம் உலா வருவது பெருமளவு குறைகிறது. இப்போதெல்லாம் பதிவு போடுவதுடன் இணைய சேவை முடிந்து விடுகிறது.

ஒவ்வொரு நாளும் பாதி நேரம் துறை சார்ந்த நண்பர்களுடன் போனில் அளவளாவ வேண்டியிருக்கிறது. ஓர் மனிதனுக்கு நிறைய நண்பர்கள் எனில், நிறையவே மகிழ்ச்சி என்பது உண்மை தான் ! லைப் இஸ் பியூட்டி புல் !

நிற்க . ACS Institute-விழாவில் நடந்த லட்சுமன் சுருதி இசை நிகழ்ச்சி வரும் சனிக்கிழமை ராஜ் டிவி-யில் காலை 10 மணி முதல் 12.30 வரை, குடியரசு தின சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகிறது. நண்பர்கள் முடிந்தால் பார்க்கவும்.

சென்னை ஸ்பெஷல் : சச்சின் தெரு 

மடிப்பாக்கத்தில் உள்ள ஒரு தெருவின் பெயர் சச்சின் தெரு ! பல ஊர்கள் சுற்றியிருந்தாலும் தமிழகத்தில் சச்சின் பெயரில் ஒரு தெரு இருப்பதை எங்கள் மடிப்பாக்கத்தில் தான் கண்டேன். இது ஒரு புறம் மகிழ்ச்சி எனினும், இன்னொரு வருத்தமும் உண்டு. இந்த தெருவில் எத்தனை வீடுகள் இருக்கும் என நினைக்கிறீர்கள்? பத்து வீடு கூட இல்லை ! இவ்வளவு சின்ன தெருவுக்கா சச்சின் பெயர் வைக்கணும் என்கிற எண்ணமும் இந்த தெருவை கடக்கும் ஒவ்வொரு முறையும் வந்து போகிறது !

போஸ்டர் கார்னர் உடல்நலம் + படித்ததில் பிடித்தது :

வெளியிடங்களில் சூப் சாப்பிடுவதை தவிர்ப்பது நலம் ஏன்?

நல்ல காய்கறிகளில் தான் சூப் தயாரிக்கிறார்களா என நிச்சயம் சொல்ல முடியாது

சூப் சூடாக இருக்க நிறைய சுடவைப்பதால் காய்கறிகளில் உள்ள சத்து குறைகிறது

சூப் திக்காக இருக்க சோள மாவு அதிகம் சேர்ப்பார்கள் உருளை கிழங்கை வேக வைத்து மசித்து கலப்பார்கள். இதனால் உடல் பருமன் கூடும்

அசைவ சூப்பிற்கு பயன்படுத்தும் கறிகள், எலும்புகள் தரமானதாக வாங்குகிறார்களா என்பது தெரியாது

சூப் நல்ல நிறமாக காட்ட கலர்ஸ் சேர்ப்பார்கள் இவை ஆரோக்கியமானதல்ல

ஒரு கப் சூப்பிற்கு இவ்வளவு தான் உப்பு சேர்க்க வேண்டும் என்ற அளவு உண்டு. இதனை பல இடங்களில் பாலோ செய்வதில்லை. அதிக உப்பு உடல் நலனுக்கு கேடு .

*****
அறிவிப்பு: நண்பரின் வீடு சென்னை மேடவாக்கத்தில்  வாடகைக்கு  உள்ளது. 3 பெட் ரூம், தனி கார் பார்க்கிங், அருமையான போர் தண்ணீர் மற்றும் பஞ்சாயத்து தண்ணீர் உள்ள வீடு. பேருந்து நிறுத்தத்தில் இருந்து 5 நிமிட நடையில் உள்ளது. தேவைப்படுபவர்கள் 90030 12871 என்கிற எண்ணில் தொடர்பு கொள்ளவும் 

40 comments:

 1. Anonymous8:15:00 AM

  //மிகச் சிறிய அளவு மனநிலை பாதிக்கப்பட்ட (அதுக்கு எதோ ஒரு பேர் சொல்றாங்க; மறந்துடுச்சு) //

  Bi-Polar Disorder

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் சிவா; ரைட்டு

   Delete
 2. //இப்போதெல்லாம் பதிவு போடுவதுடன் இணைய சேவை முடிந்து விடுகிறது.//

  மகிழ்ச்சி ப்ளஸ் வாழ்த்துகள் மோகன். இல்லியா?

  //இவ்வளவு சின்ன தெருவுக்கா சச்சின் பெயர் வைக்கணும்//

  பரவால்ல விடுங்க, வருங்காலத்தில் ஒரு பிரதான சாலைக்கே சச்சின் பெயரை வைப்பாங்க. படப்பை டூ தாம்பரம் வரும் வழியில் இருக்கும் ஒரு சிறிய தெருவின் பெயர், "மு.க.ஸ்டாலின் தெரு".

  //சில பதிவுகள் பற்றி தஞ்சாவூர் பாஷையில் வண்டை வண்டையாக திட்ட ஆரம்பித்தார் நந்து//

  விடுங்க பாஸ், இவிய்ங்க எப்பவுமே இப்படித்தான். இதெல்லாம் பாத்தா தொழில் பண்ண முடியுமா? :))

  ReplyDelete
 3. //இப்போதெல்லாம் பதிவு போடுவதுடன் இணைய சேவை முடிந்து விடுகிறது.//

  மகிழ்ச்சி ப்ளஸ் வாழ்த்துகள் மோகன். Career is more important than staying online இல்லியா?

  இப்படி எழுத நினைச்சேன். மிசஸ் ஆகாம மிஸ் ஆயிடுச்சு :-)

  ReplyDelete
  Replies
  1. உங்க கடைசி வரியை ( இதெல்லாம் பாத்தா தொழில் பண்ண முடியுமா? ) நந்து போனில் படித்து காட்டி செமையாய் சிரித்தான்

   ஆங்கிலத்தில் அப்புறம் டைப் செய்து கொள்ளலாம் என நினைத்து அப்படியே மறப்பது எனக்கும் அடிக்கடி நிகழும்.. பதிவுகளிலும் !

   Delete
 4. Anonymous8:41:00 AM

  Vishvaroopam story romba nalaikku munnadiye reveal akiduchu.. Neenga romba late sir..!!!

  ReplyDelete
  Replies
  1. உண்மை தான். ஆனால் நம்ம பதிவு மூலம் கூட சிலருக்கு இப்போ தான் போகும் என பகிர்ந்தேன் நண்பரே

   Delete
 5. ஆரோகணம் - Bipolar Disorder

  ReplyDelete
  Replies
  1. ஆம் நன்றி நண்பரே

   Delete
 6. Please write a blog regarding our meeting in the club nandhu and mohan

  ReplyDelete
  Replies
  1. டேய் .. ஓடி போயிடு.. !

   Delete
 7. ஒரிஜினல் AVG Internet Security 2013 மென்பொருள் - இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

  http://mytamilpeople.blogspot.in/2013/01/avg-internet-security-2013-free-download.html

  ReplyDelete
 8. ஒரிஜினல் AVG Internet Security 2013 மென்பொருள் - இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

  http://mytamilpeople.blogspot.in/2013/01/avg-internet-security-2013-free-download.html

  ReplyDelete
 9. //ஹிந்துஸ்தான் சாம்பர் ஆப் காமர்சின் கார்பரேட் அபேர்ஸ் கமிட்டியின் உறுப்பினராகவும், ACS இன்ஸ்டிடியூட் கிளையான Chennai West Study Circle -க்கு டெபுடி கன்வீனர் (துணை தலைவர்) ஆகவும் தேர்ந்தேடுக்கப்பட்டுள்ளேன். //

  Congrats Mohan.

  //ஓர் மனிதனுக்கு நிறைய நண்பர்கள் எனில், நிறையவே மகிழ்ச்சி என்பது உண்மை தான்//

  Rightly said. I feel the same after we started our school re-union activities...Life is beautiful with lot of friends...

  //அய்யாசாமியின் எழுத்துலக பணிகள் பற்றி "விலா"வாரியாய் விசாரிக்க ஒரு மீட்டிங்குக்கு ( கிளப்) கூப்பிட்டிருக்கிறார்கள்//

  Eagerly waiting for the meeting resolutions!!!

  ReplyDelete
  Replies
  1. //Eagerly waiting for the meeting resolutions!!!//

   நீங்க வேற.. அதெல்லாம் எழுத முடியாது. அநியாயத்துக்கு கலாய்ச்சிட்டாங்க

   Delete
 10. //ஹிந்துஸ்தான் சாம்பர் ஆப் காமர்சின் கார்பரேட் அபேர்ஸ் கமிட்டியின் உறுப்பினராகவும், ACS இன்ஸ்டிடியூட் கிளையான Chennai West Study Circle -க்கு டெபுடி கன்வீனர் (துணை தலைவர்) ஆகவும் தேர்ந்தேடுக்கப்பட்டுள்ளேன். //

  வாழ்த்துக்கள் மோகன்!!!

  //அறிவிப்பு: நண்பரின் வீடு....///

  ஊருக்கு திரும்பும் நேரம் வீடு பற்றிய அறிவிப்பு. மிக்க நன்றி, அழைத்து பேசுகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. நண்பருடன் Home Ministor பேசினார். Duplex என்பதால் யோசிக்கிறார்!!!!

   Delete
  2. பாஸ்கர் உங்கள் மெயில் ஐ. டி தரவும். உங்கள் பின்னூட்டம் மற்றும் ப்ளாகில் (??) உங்கள் மெயில் ஐ. டி தெரிய வில்லை

   Delete
  3. I sent email to your Email-id.

   என்னுடைய ப்ளாகில் மெயில் ஐ. டி மட்டும் அல்ல; நான் எழுதியதே(!@#$%$#@!#$$#@$#$) எதுவும் தெரியாது. ஹிஹிஹிஹி..........

   Delete
 11. அய்யாசாமி தலைமறைவு என்று விளம்பரம் செய்துவிடவா

  ReplyDelete
  Replies
  1. க்கும் இந்த பசங்க கிட்டே தலை மறைவு ஆக முடியாது. வீடு தேடி வந்து பொளந்துடுவாங்க

   Delete
 12. //வெளியிடங்களில் சூப் சாப்பிடுவதை தவிர்ப்பது நலம் ஏன்//

  காரணங்கள் சூப்பிற்கு மட்டுமல்ல, எல்லா உணவுக்குமே பொருந்தும். :-)))

  ReplyDelete
  Replies
  1. இப்டி சொன்னா, நாங்க எப்டி ஹோட்டலில் சாப்பிடுறது? சாப்பாட்டு கடை பதிவு எழுதுறது? ம்ம்??

   Delete
 13. வானவில் வழக்கம் போல் அருமை. எனக்கும் விஸ்வரூபம் புரியுமான்னு தான் டவுட்டு...:)

  ReplyDelete
  Replies
  1. ஆமுங்க ரோஷினி அம்மா

   Delete
 14. புதிய பொறுப்புகளுக்கு வாழ்த்துக்கள்! வழக்கம் போலவே வானவில் கலர்ஃபுல்!

  ReplyDelete
  Replies
  1. நன்றி உமா மகிழ்ச்சி

   Delete
 15. // கமல் உண்மையில் யார் என்று தெரியும் போது அதிர்ந்து போகிறார்... //

  அப்ப இந்தப் படத்துல நடிக்கிறது(தது) கமல் இல்லையா.. ?

  ReplyDelete
  Replies
  1. தம்ப்ப்ப்ப்ரி ....

   Delete
 16. இதுகாகதான் இப்பலாம் சூப் வீட்லையே அம்மா செஞ்சிடறாங்க....

  டெபுடி கன்வீனர் ஆகியதற்கு வாழ்த்துக்கள் சார்...

  ReplyDelete
 17. பதவி உயர்விற்கு வாழ்த்துக்கள்! சுவையான கதம்பமாய் ஜொலித்தது பதிவு! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. வாங்க சுரேஷ் நன்றி

   Delete
 18. Anonymous6:48:00 PM

  இரு மகிழ்வான செய்திகள் //

  வாழ்த்துக்கள் Mohan...


  ReplyDelete
 19. நன்றி மேடம்

  ReplyDelete
 20. //ஹிந்துஸ்தான் சாம்பர் ஆப் காமர்சின் கார்பரேட் அபேர்ஸ் கமிட்டியின் உறுப்பினராகவும், ACS இன்ஸ்டிடியூட் கிளையான Chennai West Study Circle -க்கு டெபுடி கன்வீனர் (துணை தலைவர்) ஆகவும் தேர்ந்தேடுக்கப்பட்டுள்ளேன்//

  வாழ்த்துகள் சார்!

  ReplyDelete
 21. நான் உங்க பதிவு மூலமாகத்தான் விஸ்வரூபம் கதை தெரிஞ்சிகிட்டேன். நன்றி. பதவி உயர்வுக்கு வாழ்த்துக்கள். வானவில் கலக்கல்.

  ReplyDelete
 22. வாழ்த்துகள் மோகன்.

  விஸ்வரூபம் இரண்டு வாரத்திற்கு தடை செய்யப்பட்டு விட்டதே...

  ReplyDelete
 23. //ஹிந்துஸ்தான் சாம்பர் ஆப் காமர்சின் கார்பரேட் அபேர்ஸ் கமிட்டியின் உறுப்பினராகவும், ACS இன்ஸ்டிடியூட் கிளையான Chennai West Study Circle -க்கு டெபுடி கன்வீனர் (துணை தலைவர்) ஆகவும் தேர்ந்தேடுக்கப்பட்டுள்ளேன்//
  ANNA HEARTY CONGRATULATIONS

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...