Thursday, January 3, 2013

உணவகம் அறிமுகம்: சுக நிவாஸ், லஸ் கார்னர்


யிலாப்பூரில் அவ்வப்போது ஷாப்பிங் செல்வது வழக்கம். அப்படி செல்லும்போதெல்லாம் நாங்கள் சாப்பிடும் இடம்: லஸ்ஸில் இருக்கும் சுக நிவாஸ் தான். மதிய சாப்பாடு, மாலை ஸ்நாக்ஸ், இரவு டிபன் என விதம் விதமாய் இங்கு சாப்பிட்டுள்ளோம். விகடனில் வட்டியும் முதலும் தொடரில் ராஜூ முருகன் கூட இக்கடையில் சாப்பிட்டது பற்றி குறிப்பிட்டுள்ளதை நீங்கள் கவனித்திருக்கலாம்)

மிக பழமையான கடை இது. ஹோட்டலில் அமர்ந்து சாப்பிடும் போது அங்கு மாட்டியுள்ள பழைய காலத்து சென்னை படங்கள் மிகவும் ஈர்க்கின்றன.சுதந்திரத்துக்கு முன் இந்த ஹோட்டல் இருந்த அதே இடத்தின் போட்டோ, அப்போதைய லஸ் கார்னர் போட்டோ, அதில் மனிதர்கள் அணிந்துள்ள உடைகள் - இவற்றை அங்கு செல்லும் ஒவ்வொரு முறையும் சில நிமிடமாவது பார்ப்பது வழக்கம்.

கடைக்கு வெளியே ஐந்து ரூபாய் டீ என்ற போர்டு யாரையும் உள்ளே வர செய்கிற ட்ரிக் !  ஐந்து ரூபாய் டீ மிக சிறிய கோப்பையில் தான் தரப்படும். ரெகுலர் டீ என்றால் பதினைந்து ருபாய். ஒரு முறை மூன்று டீ குடித்து விட்டு பில்லில் நாற்பத்தைந்து என்று பார்த்து அதிர்ச்சியாகி வெளியே ஐந்து ரூபாய் என போட்டிருக்கே என கேட்க அப்புறம் தான் இந்த விஷயம் தெரிந்தது. அதிலிருந்து தெளிவாய் " குட்டி கப் - அஞ்சு ரூபா டீ " என கேட்டு வாங்கிடுறது வழக்கம்

இந்த கடையின் முக்கிய விசேஷமே இங்கு கிடைக்கும் காம்போ பேக்குகள் தான். 3 பஜ்ஜி + டீ, மற்றும் வடை, போண்டா என பல நல்ல காம்போ மாலை நேரங்களில் கிடைக்கும் . மதிய நேரத்திலும் கூட பிரைட் ரைஸ், சப்பாத்தி உள்ளிட்ட காம்போ-க்கள் உண்டு.

சுட சுட போடப்படும் வெங்காய பஜ்ஜி எப்பவுமே அருமை ! வடை, போண்டா போன்றவை மாலை நேரங்களில் சுட சுட கொடுப்பார்கள்.

மதிய லஞ்சில் சாம்பார் மற்றும் வத்தல் குழம்பு ஐயர் வீட்டு ஸ்பெஷல் ஆக செமையாக இருக்கும். அதெப்படி வத்தல் குழம்பு இது போன்ற சில இடங்களில் மட்டுமே அவ்வளவு திவ்யமா இருக்கோ தெரிய வில்லை.இங்குள்ள டிபன் வகைகளில்,  நமது ஆல்டைம் பாவரைட் உணவுகளான பரோட்டா மற்றும் அடை ஆகியவை விரும்பி சாப்பிடுவேன்

விலை - நிச்சயம் மிடில் கிளாஸ் மக்களின் பர்சை பதம் பார்க்காத அளவில் இருக்கும்.

லஸ் கார்னர் சென்றால் இந்த புராதான ஹோட்டலை ஒரு முறை விசிட் அடியுங்கள். சென்னையின் அற்புத பழைய படங்களுடன் நல்ல உணவை ரீசனபில் விலையில் சாப்பிட்டு வாருங்கள் !

*********
அண்மை பதிவு:

வானவில் + தொல்லை காட்சி: எஸ். ரா Vs சாரு, நீயா நானா, பியா இன்னபிற

23 comments:

 1. Thanks, next time lemme try.

  ReplyDelete
 2. //அதெப்படி வத்தல் குழம்பு இது போன்ற சில இடங்களில் மட்டுமே அவ்வளவு திவ்யமா இருக்கோ தெரிய வில்லை. (வீட்டில் அப்படி வருவதே இல்லை)//

  என்ன சொல்லவரிங்க சார் உங்க ஹவுஸ் பாஸ்கு சமைக்க தெரியலன்னு தானே சொல்றிங்க..

  ReplyDelete
 3. SP ராஜ்: ஏங்க ஏன்? வீட்டுல சாப்பாடு கிடைக்க வேணாமா? வீட்டம்மா வேற பதிவை படிக்குறாங்க. :) முதல்லே நான் எழுதிய அந்த கடைசி வரியை டெலீட் பண்ணிடுறேன்

  வீட்டம்மா ரொம்ப ரொம்ப நல்லா சமைப்பாங்க ஹோட்டல் குழம்பு வேறு டே ஸ்ட் !

  ReplyDelete
  Replies
  1. எப்படியோ ஐயாசாமி பூரிக்கட்டை அடில இருந்து தப்பிச்சுட்டார் போல?! :-(

   Delete
 4. பரவால்லியே சென்னை வந்தா சாப்பாட்டுக்கு கவலைப்பட வேண்டாம் . நல்ல உணவகத்தை அறிமுகப்படுதிட்டீங்க. நன்றிங்க.

  ReplyDelete
  Replies
  1. நன்றி பூந்தளிர்

   Delete
 5. சுட சுட போடப்படும் வெங்காய பஜ்ஜி எப்பவுமே அருமை ! வடை, போண்டா போன்றவை மாலை நேரங்களில் சுட சுட கொடுப்பார்கள்.
  >>
  சுட்டு குடுத்தாதான் வடை, பஜ்ஜி, இல்லாட்டி அதுக்கு பேரு மாவு. புரியுதுங்களா சகோ?!

  ReplyDelete
  Replies
  1. இதெல்லாம் சகோக்கள் சுட்டு குடுத்தா தானே தெரியும் :)

   Delete
 6. http://www.sukhanivas.com/

  ReplyDelete
  Replies
  1. அட ! நன்றி நண்பரே

   Delete
 7. வாவ், கண்டிப்பாக செல்ல வேண்டும் என்று ஆவலை தூண்டுகிறது உங்களது பதிவு, தொடர வாழ்த்துக்கள் !

  ReplyDelete
  Replies
  1. மகிழ்ச்சி நன்றி சுரேஷ் குமார்

   Delete
 8. மயிலாப்பூர்ல இப்படி ஒரு ஹோட்டலா! போயிருவோம்! தகவலுக்கு நன்றி!

  ReplyDelete
 9. மைலாப்பூர் செல்லும்போது நினைவில் வைத்துக் கொள்கிறேன்!

  நேற்று எஸ் வி சேகர் நாடகம் பார்த்துத் திரும்பும்போது கூட சரவணா ஸ்டோர் பின்புறம் உள்ள தெருவில் தென்பட்ட ஒரு கடையில் என் விருப்ப ரவா, ஆனியன் ரவா சாப்பிட்டுப் பார்த்து வந்தேன்! (இரண்டையும் சொன்னால் சர்வர் விநோதமாகப் பார்ப்பாரோ என்று தோன்றும். அலட்சியமாகச் சென்று விடுவார்... 'எத்தனை பேரைப் பார்த்திருக்கோம்...')

  சென்ற பதிவின் நீங்கள் சொல்ல நினைத்த பதிலை வேக தட்டச்சில் கூகிளார் மறைத்த வரிகளை நான் யூகித்துத் தெரிந்து கொண்டேன். அது சரிதான் என்பதை உங்கள் பதில் சொன்னது!

  ReplyDelete
  Replies
  1. ஸ்ரீராம் சார்: நீங்களும் நிச்சயம் உணவகம் அறிமுகம் எழுதலாம் அப்பவாவது ரவா தோசை தவிர மற்றவையும் சாப்பிட துவங்குவீர்கள் :)

   Delete
  2. ரவா தோசையை வைத்து உணவகத் தரத்தை எடை போடலாம் என்று நினைப்பேன்! மற்றும் சாம்பார் சுவை! மற்றபடி நானும் மற்ற எல்லா ஐட்டங்களும் டேஸ்ட் பார்ப்பேன். :)))

   Delete
 10. உண்ணத் தூண்டும் படங்கள் மற்றும் அருமையான நடையுன் பதிவு.

  ReplyDelete
  Replies
  1. வாங்க அமரபாரதி மிக மகிழ்ச்சி நன்றி

   Delete
 11. மணல் கயிறு படத்தில் S V சேகர் சாந்தி கிருஷ்ணா தோன்றும் ஹோட்டல் இதுதான் என நினைக்கிறேன். யாரேனும் உறுதிப் படுத்தலாம்.

  ReplyDelete
  Replies
  1. அப்படியா? நன்றி நாகராஜன் அடுத்த முறை போகும்போது அங்கேயே கேட்டு விடுகிறேன்

   Delete
 12. லஸ்ஸில் இருப்பது சுக நிவாஸ் தானே? நீங்கள் சுக் நிவாஸ் என்று 'க்' வைத்து எழுதியிருக்கிறீர்கள்?

  ReplyDelete
  Replies
  1. நன்றி நம்பள்கி ; கரீட்டா அப்படியே (தப்பா) சொல்லி பழகிட்டோம் இப்போ மாத்திட்டேன்

   Delete

Related Posts Plugin for WordPress, Blogger...