Wednesday, January 16, 2013

சென்னை புக்பேர்: Best டீல்ஸ்+ பிரிவுவாரி ஸ்டால் விபரம் !

போகியன்று மதியம் 1 முதல் மாலை7 வரை புத்தக சந்தையில் குடும்பத்துடன் வலம் வந்தோம். மகளுக்கு தான் மிக அதிக புத்தகங்கள் வாங்கப்பட்டது.

குடும்பத்தை பார்த்து கொண்டும், சக பதிவர்களுடன் அளாவிக்கொண்டும் இருந்த போதும் அய்யாசாமி உங்களுக்காக காரியத்தில் கண்ணாய் (கையாய் ) இருந்து தயார் செய்த குறிப்புகள் இதோ:

பிரிவு வாரியாக சில ஸ்டால் விபரங்கள்

உடல்நலம்

69- ஹோமியோபதி சிகிச்சை குறித்த சிறப்பு ஸ்டால்

95 - மூலிகை மணி (இங்கு நிறைய ஹெல்த் டிப்ஸ் போஸ்டர் வைத்திருந்தார்கள் : அதில் என்னை மிரள வைத்த ஒன்று : மாசத்துக்கு ரெண்டு நாள் மட்டும் தான் "அது" வச்சிக்கணும் ! எந்த வயசுல.. 60 வயசுலயா என கேட்க நினைத்தேன். யாரிடம் கேட்பது என தெரியலை )

176- கிருஷணமாச்சாரி யோக நிலையம்

குழந்தைகள் புத்தகங்கள்

இவர்களுக்கான கடைகள் பார்த்து பார்த்து குறித்து ஓய்ந்து விட்டேன். அப்புறம் தான் புரிந்தது. இம்முறை 50 % க்கும் மேல் குழந்தைகள் சம்பந்தமான புத்தக ஸ்டால்கள் தான் உள்ளன என்பது !

நமக்கு புத்தகம் வாங்க என்றால் கூட சற்று யோசிப்போம். குழந்தைகள் கேட்டால் வாங்கி தரும் வாய்ப்பு அதிகமல்லாவா? இதை கடந்த வருட அனுபவத்தில் உணர்ந்தவர்கள் ஏகப்பட்ட குழந்தைகள் ஸ்டால்கள் போட்டு தள்ளி விட்டனர்.

சிறு குழந்தைகளின் ரைம்ஸ், டிராயிங் நோட்டுகள் இவை ஒரு பிரிவென்றால், 10th, + 2 படிக்கும் மாணவர்களை குறிவைத்தும் ஏராள புத்தக கடைகள் ! மிக சில மட்டும் சொல்கிறேன் :

162 - அறிவியல் உபகரணங்கள் கிடைக்கும் கடை ( வெர்னியர் காலிப்பர், பிப்பெட், பியூரட் போன்றவை). அவசியம் செல்ல வேண்டிய கடை இது. கூட்டம் அமோகம் !

343 - முத்து காமிக்ஸ் கடை - குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களும் விரும்பி செல்லும் கடை இது; அதிகம் தமிழ் படிக்காத குழந்தைகளை காமிக்ஸ் காட்டி தமிழ் புத்தகம் படிக்க வைக்க முயலலாம் !

191 & 193 - சிறு குழந்தைகளுக்கான ரைம்ஸ் CD , DVD -க்கள் கிடைக்குமிடம் (டிவி/ கணினி வைத்து சத்தமாய் ரைம்ஸ் போடுகிறார்கள். சிறு குழந்தைகள் பார்த்தால் உள்ளே தாவி விடும் !

15 (துலிகா), 16 ( மை புக் ஹவுஸ்), 22 (டெக்னோ புக் ஹவுஸ்), 70 (ஓரியன்ட் ப்ளாக் ஸ்வான் )

படம்: நன்றி குகன்
இஸ்லாமியர்கள் புத்தகங்கள் கிடைக்கும் ஸ்டால்கள்

9- பர்கான் பதிப்பகம்
17- அறிவு நாற்றங்கால்
52- பஷாரத் பதிப்பகம்
92- இளையான் குடில் மடல்
104 -ரஹமத் பப்ளிஷர்ஸ்
250 - இஸ்லாமிக் பவுண்டேஷன்

பெண்கள் Special

ஸ்டால் எண் 8 - காளீஸ்வரி பதிப்பகம் : சமையல் குறித்த புத்தகங்கள், பெண் நாவலாசிரியர்கள் எழுதிய நூல்கள், etc

ஸ்டால் எண் 23- செல்வ நிலையம்

சில முக்கிய ஸ்டால் எண்கள் :

கிழக்கு - 115, 246 (ஏனோ ரொம்ப அடக்கி வாசிக்கிறாங்க கிழக்கு பதிப்பகம். சென்ற வருடங்கள் இருந்த ஜோர் அங்கு இல்லை)

உயிர்மை - 363

விகடன் -  (நாங்கள் பார்த்த போது மிக அதிக கூட்டம் இருந்தது இங்கு தான். மக்களுக்கு விகடன் மேல் இருக்கும் மதிப்பும் பிரியமும் தெரிகிறது. சரவணா ஸ்டோர் போன்ற கூட்டம் பார்த்துட்டு நாங்கள் உள்ளேயே நுழையலை )

புக்மேன் - 76 (முழுக்க தமிழ் மற்றும் ஆங்கில சுய முன்னேற்ற நூல்கள் மட்டுமே இங்கும் கூட்டம் அம்மியது)

7- பாலாஜி பதிப்பகம் - 30 நாளில் ஹிந்தி உள்ளிட்ட வெவ்வேறு மொழிகள் கற்பது எப்படி, பல வித டிக்ஷனரிகள், சட்டம் குறித்த எளிய நூல்கள்

43- டிஸ்கவரி புக் பேலஸ் - (பதிவர்கள் ஒன்று கூடும் இடங்களில் ஒன்று)


நமது பதிவர் நண்பர்கள் வெளியிட்ட அனைத்து புத்தகங்களும் டிஸ்கவரியில் கிடைக்கிறது !

இவ்வருடம் சாகித்ய   அகாடமி விருது பெற்ற செல்வராஜ் எழுதிய தோல் ஸ்டால் எண் 182-ல் கிடைக்கிறது (ரூ. 400)
****
புகழ் பெற்ற எழுத்தாளர்களின் எக்ஸ்க்ளூசிவ் புத்தகங்கள் கொண்ட ஸ்டால்கள்  :

வாலி ( 39)
வாரியார் (40)
ஜக்கி  வாசுதேவ் (101)
314 கலைஞர் கருவூலம் (கலைஞர் நூல்கள் மட்டும்)

302 -நா. முத்துகுமார் நூல்கள்

263- ஞானி படைப்புகள் (அவரை ஸ்டால் வாசலில் பார்த்து உரையாடலாம்)

ஸ்டால் எண்  22-ல்  சில வித்யாச தலைப்புகள் பார்த்தேன்: உதாரணத்துக்கு சில:

சாகாக்கலை (அட !),
மாமியார் - மருமகள் பிரச்சனை தீர (இவ்வகையில் இது தான் முதல் புக் என்று பில்ட் அப் வேறு !)
*******
பெஸ்ட் டீல்ஸ்: 
93- மீனாட்சி பதிப்பகம் : 5 அல்லது 10 வருடம் முன்பு பிரிண்ட் செய்த சில அற்புத தமிழ் எழுத்தாளர்கள் புத்தகங்கள் அன்றைய விலைக்கு தருகிறார்கள். வருடா வருடம் சுஜாதா புக்ஸ் 20, 30 ரூபாயில் போடுவதும் அவற்றை பதிவர்கள் மட்டுமே முதல் இரு நாளில் சூரையாடுவதும் அறிந்ததே. இம்முறையும் சுஜாதா புக்ஸ் காலி. ஜனவரி 20-க்கு மேல் சுஜாதா புக்ஸ் நிறைய வருது என்கிறார்கள். 

18- ஜோதி ஸ்டாலில் திருக்குறள் முழு உரை - 15 ரூபாய்க்கு கிடைக்கிறது (நிஜ விலை 35). நிச்சயம் வாங்கி பிறருக்கு பரிசு கொடுக்கலாம். நான் 5 புத்தகம் வாங்கினேன். மகளின் நண்பிகளுக்கு தருவாள். 

27- கல்கி புத்தகங்கள் காம்போ பேக்கில், சற்று குறைந்த விலையில் கிடைக்கிறது 

29 & 30 - பொது அறிவு மற்றும் குழந்தைகள் புத்தகங்கள்  பலவற்றுக்கு 50 % டிச்கவுன்ட் உள்ளது 

102- பாலாஜி - பெண்கள் மற்றும் குழந்தைகள் புத்தகங்கள் 30 ரூபாய்க்கு நிறைய கிடைக்கிறது. 4 பெரிய சைஸ் ஆங்கில நாவல்கள் 200 ரூபாய் என்ற டீலுக்கு கூட்டம் அம்முது 
220- வள்ளுவர் பண்ணை பதிப்பகத்தில் சுஜாதா புத்தகங்கள் மீனாட்சி பதிப்பகம் அளவு விலை குறைவாய் இல்லையென்றாலும், கிழக்கு, உயிர்மை அளவு காஸ்ட்லி ஆக இல்லாமல் கிடைக்கிறது. Worth buying !
இந்த முறை சந்தித்த பதிவர்கள் 

கே. ஆர். பி செந்தில் 
பபாஷா 
அகநாழிகை வாசு 
பாலகணேஷ் 
மேவி 
பிலாசபி பிரபாகரன் 
அஞ்சா சிங்கம் செல்வின் 

மெட்ராஸ் பவன் சிவகுமார் (புத்தக சந்தையிலிருந்து மிக அருகே குடியிருக்கும் பதிவர் இவர் தான். நடக்கிற தூரத்தில் வீடு)
கோவை நேரம் ஜீவா 
அகிலா 
கோவை சரளா 
அரசன் 
டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன் 
MSK  சரவணா 

எனது பெண் மற்றும் வீட்டம்மாவை பதிவுலகில் (வெங்கட் நாகராஜ் தம்பதி தவிர) வேறு யாரும் சந்தித்ததே இல்லை; இம்முறை மேலே சொன்ன நண்பர்கள் அனைவரும் சந்தித்தனர். " ஓ .. இவங்க தான் உங்க ஹவுஸ் பாசா?" என்றும் " பார்க்க அவ்வளவு டெரரா தெரியலையே " என்றும் நண்பர்களில் சிலர் காதில் கிசுகிசுத்தனர்.
***
பல பதிவர்கள் வாங்கிய புத்தக பட்டியல் தனி பதிவாக ஓரிரு நாளில் வருகிறது. உங்களுக்கு என்ன புத்தகம் வாங்கலாம் என்கிற ஐடியா ஓரளவு அப்பதிவு தரக்கூடும்.

நீங்கள் புத்தக சந்தை சென்றிருந்தால், என்ன புத்தகம் வாங்கினீர்கள் என பின்னூட்டத்தில் சொல்லவும். அவற்றில் சிலவற்றை வெளிவரும் புதிய பதிவில் சேர்ப்பிக்கிறேன் !
***********
அண்மை பதிவுகள்:

சென்னை புத்தக கண்காட்சி: பிளஸ், மைனஸ் - ஸ்டால் & நிகழ்ச்சி விபரங்கள்

கண்ணா லட்டு தின்ன ஆசையா - Laugh Riot - விமர்சனம்

பாண்டியன் மெஸ் (அலெக்ஸ் பாண்டியன் - சினிமா விமர்சனம் - By: ராஜசுந்தர்ராஜன்)

சமர் விமர்சனம்

26 comments:

 1. ஹிஹிஹி...உங்க வீட்டம்மணி இருக்கிறதால் தான் கொஞ்சம் அடக்கி வாசித்திங்களோ...
  உங்களை சந்தித்ததில் பெரும் மகிழ்ச்சி...

  ReplyDelete
  Replies
  1. //.உங்க வீட்டம்மணி இருக்கிறதால் தான் கொஞ்சம் அடக்கி வாசித்திங்களோ...//

   இல்லியா பின்னே?

   Delete
 2. மு.மேத்தாவின் கவிதை தொகுப்புகள் சிலவற்றை வாங்கினேன்...

  ReplyDelete
  Replies
  1. அடடா இன்னும் உங்களுக்குள் ஒரு கவிஞர் இருக்கார் போல :)

   Delete
 3. நாடோடித்தடம் - ராஜ சுந்தரராஜன் - தமிழினி- 250/-
  எல்லா நாளும் கார்த்திகை - பவா செல்லதுரை - வம்சி - 130/-
  எரியும் பனிக்காடு - பி.எச்.டேனியல் - தமிழில்.இரா.முருகவேள் - விடியல் - 150/-
  பஞ்சாபி சிறுகதைகள் - சாகித்திய அக்காதமி
  ஹிந்தி சிறுகதைகள் - சாகித்திய அக்காதமி
  CIA - என்.சொக்கன் - மதி - 100
  வெள்ளெருக்கு - கண்மணி குணசேகரன் - தமிழினி - 90/-
  திருக்குர்ஆன் - தமிழில் - 50/-
  அழியாத கோலங்கள் - தமிழில் தலை சிறந்த காதல் சிறுகதைகள் - தொகுப்பு- கீரணூர் ஜாகீர் ராஜா - 200
  இரவு - ஜெயமோகன் - தமிழினி - 140/-
  கன்னட சிறுகதைகள் - - சாகித்திய அக்காதமி
  மண் பொம்மை - சாகித்திய அக்காதமி
  எனது நினைவலைகள் - - சாகித்திய அக்காதமி
  ஒரு வழிப்பறி கொள்ளையனின் ஒப்புதல் வாக்குமுலம் - பிலிப் - தமிழில் - போப்பு - 550/-
  திசையெல்லாம் நெருஞ்சி - சு. வேணுகோபால் - தமிழினி - 50/-
  மீனுக்குள் கடல் - பாதசாரி - தமிழினி - 15/-
  ஆராவடு - சயந்தன் - தமிழினி - 120/-
  அஞ்சலை - கண்மணி குணசேகரன் - தமிழினி -230/-

  ReplyDelete
  Replies
  1. அருமை அருண். நீங்கள் சென்னை வந்த அன்று என்னால் வர முடியலை :(

   Delete
 4. ரொம்பவே பயனுள்ள பதிவு. புத்தகச் சந்தை போறவங்களுக்கு கண்டிப்பாப் பயன்படும்.

  இங்கே நடக்கும் புத்தகக் கண்காட்சிகளில், (மேப் கொடுத்தாலும்) என்ன புத்தகங்கள் நல்லாருக்கு, எங்கே கிடைக்கும் என்பது போன்ற விபரங்கள் தெரியாததாலே அலைந்து திரிந்து கால் ஒரு வழியாகிடும்!! அந்த அனுபவம் இருப்பதால் இந்தப் பதிவின் பயன் புரிகீறது.

  (அடுத்த அமீரகப் புத்தகக் கண்காட்சியின்போது, இப்படி ஒரு பதிவு எழுதுறதுக்காகவே உங்களை வரவழைக்கலாம்னு ஐடியா கொடுப்பீங்களே? :-))) முடியாது, ஏன்னா இங்க நாங்க வாங்குறதெல்லாம் ஆங்கிலப் புத்தகங்கள்தான் - கிடைக்கிறதத்தானே வாங்க முடியும்)

  ReplyDelete
  Replies
  1. மகிழ்ச்சி ஹுசைனம்மா. நன்றி

   Delete
 5. புத்தகங்களுக்குதான் index இருக்கும். உங்க பதிவு புத்தக கண்காட்சிக்கே index போட்ட மாதிரி இருக்கு. பயனுள்ள பதிவு.

  ReplyDelete
  Replies
  1. நன்றி ராம்வி. மகிழ்ச்சி

   Delete
 6. //343 - முத்து காமிக்ஸ் கடை - குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களும் விரும்பி செல்லும் கடை இது; அதிகம் தமிழ் படிக்காத குழந்தைகளை காமிக்ஸ் காட்டி தமிழ் புத்தகம் படிக்க வைக்க முயலலாம் !//

  400 ரூபாய் ஸ்பெஷல் இதழான NBS வாங்கினீர்களா? :)

  ReplyDelete
  Replies
  1. இல்லீங்க கார்த்திக். வாங்கலை :)

   Delete
 7. அன்னைக்குத்தான் நானும் வந்திருந்தேன்.புலவர் ஐயாவைத் தவிர வேறு பதிவர்கள் யாரையும் பார்க்கவில்லை

  ReplyDelete
  Replies
  1. அப்படியா? உங்களை பார்க்காம போய்ட்டேனே? குடும்பத்தை அறிமுக படுத்தியிருப்பேன்

   Delete
 8. நல்ல ஒரு ஐடியா சார்.. உங்கள் பதிவிலிருந்து புத்தக கடை எண்ணைகளை குறித்து கொண்டேன். நேரில் செல்லும்போது சுலபமாக இருக்கும். நன்றி சார்

  ReplyDelete
  Replies
  1. நன்றி சமீரா; சென்று வென்று வாருங்கள் !

   Delete
 9. 1001 இரவுகள், மோகமுள், தி. ஜா சிறுகதைத் தொகுப்பு முதல் பாகம், (இரண்டாம் பாகம் முதலிலேயே வாங்கியிருந்தேன்), முத்து காமிக்ஸ், வாலியின் நானும் இந்த நூற்றாண்டும், ஆறாம், ஸ்ரீ வைஷ்ணவம், மௌனத்தின் அலறல் காலச்சக்கரம், ரங்கராட்டினம்... இன்னும் முடியவில்லை!:)))

  ReplyDelete
  Replies
  1. சரிதாயணம் விட்டுட்டீங்களே ! நான் உங்க லிஸ்ட் இங்கே போடும்போது அதையும் சேத்துக்குறேன் :)

   Delete
 10. //மாசத்துக்கு ரெண்டு நாள் மட்டும் தான் "அது" வச்சிக்கணும்//

  செக்ஸ் என்றே சொல்லியிருக்கலாம் மோகன். அது தவறான வார்த்தை அல்லவே.


  சனிக்கிழமை (19-01-13) போகலாம்னு இருக்கேன். இப்போதைக்கு நான் வாங்க நினைத்திருப்பது

  1. வாலிப வாலி
  2. போர்த்தொழில் பழகு - இறையன்பு
  3. கொலையுதிர் காலம் - சுஜாதா

  மற்றதெல்லாம் அங்கு போய்தான் முடிவு பண்ணனும். கிழக்கில் கொஞ்சம் வேட்டை, ஏதேனும் காமிக்ஸ் & வழக்கம் போல் வாத்தியாரின் புத்தகங்கள். அவ்வளவுதான்.

  ReplyDelete
  Replies
  1. எனக்கு ஓரிரு புக் வாங்கணும் ரகு. முடிஞ்சா அன்று வர்ரேன். இல்லாட்டி உங்களுக்கு போன் பண்றேன்

   Delete
 11. புத்தகப் புழுவான எனக்கு பொறாமையா இருக்கு.

  ReplyDelete
  Replies
  1. பொண்ணும் இங்கே தானே இருக்கா? ஒரு ட்ரிப் அடிக்கிறது !

   Delete
 12. இப்படி எல்லாம் புத்தக கண்காட்சி நடத்தி எங்கள் வயிற்றெரிச்சலை கட்டிகொள்கிறார்கள் இந்த பதிப்பகத்தார் ஹும்ம்ம்ம்ம்ம்

  ReplyDelete
  Replies
  1. எப்பவாவது ஒரு முறை பொங்கல் சமயம் சென்னை வர்ற மாதிரி பாருங்க நண்பா; அது மட்டுமல்ல எப்போ சென்னை வந்தாலும் டிஸ்கவரி நீங்க செல்லலாம். நமது டேஸ்ட் புக்ஸ் அங்கு தான் நிறைய இருக்கு. பதிவர்களான நமக்கு ஸ்பெஷல் டிஸ்கவுன்ட்டும் உண்டு

   Delete
 13. முத்து காமிக்ஸில் (ஸ்டால் 343) இல் "Never Before Special" வெளியீடு 11-ஜனவரி என்பதால் முதல் நாளே போய்விட்டேன். முதல் நாள் அதகளம் பண்ணிவிட்டோம். எந்த புத்தக ஸ்டாலை விட இதில் கூட்டம் அதிகம்.

  1) மாற்று வெளியில் - சித்திரக் கதை இதழ்

  2) பணம் - KRP செந்தில் குமார் - டிஸ்க்கவெரியில்

  3) பனி மண்டலக் கோட்டை (பழைய காமிக்ஸ் புக்) - ஸ்டால் 300 இல்.

  4) Activity book - சிங்க ரோஹிணியில்

  6) Fun with Activity CD- பெபிள்ஸ்

  ReplyDelete
 14. எனக்குப் பொறாமையா இருக்கு மோகன்..... இரண்டு வாரம் லீவு எக்ஸ்டெண்ட் பண்ணி இருக்கலாம்னு இப்ப தோணுது.... ம்ம்ம்ம்ம்....

  அடுத்த வருஷம் வாய்ப்பு கிடைக்குதா பார்க்கலாம்!

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...