Tuesday, January 29, 2013

பிசினஸ் வெற்றிகதைகள் : சக்சஸ் சீக்ரெட்ஸ் !

பிசினஸ் வெற்றிக்கதைகள்: விகடன் பிரசுர வெளியீடு. எஸ். பி அண்ணாமலை எழுதியது. தமிழகத்தில் உள்ள பல்வேறு பிரபல பிசினஸ் மேன்களை பேட்டி எடுத்து, அவர்கள் வெற்றி கதையை பதிவு செய்துள்ளார்.

                         

அந்த நிறுவனத்துக்கே சென்று பல்வேறு புகை படங்களுடன், சுவாரஸ்யமான முறையில் வெளிக்கொண்டு வந்துள்ளனர் இந்த புத்தகத்தை

சுய தொழில் தொடங்க நினைப்போருக்கும், ஏற்கனவே சுய தொழில் புரிவோருக்கும் நிச்சயம் பல நல்ல Sparks இப்புத்தகத்தில் உண்டு. இதிலிருந்து நான் ரசித்த சில துளிகள் இங்கே பகிர்கிறேன் :

******
சசி அட்வர்டைசிங் M .D சாமிநாதன்

கூச்சம் தவிர். இது தான் தொழில் முனைவோருக்கு தேவையான பாலிசி. எதையும் விட கூடாது. எல்லா கதவையும் முட்டி பார்த்துடணும்

இதயம் நல்லெண்ணெய் - முத்து

ஒரு பொருளின் தரம் சுத்தமாக இருந்தால் ஆயிரம் வருஷம் கூட அந்த தொழிலில் நிலைத்து நிற்க முடியும். வாடிக்கையாளர் நமக்கு கடவுள் எனும்போது கடவுளுக்கு படைக்கும் பொருள் எவ்வளவு சுத்தமாக இருக்க வேண்டும்? நல்ல பொருள் கொடுத்தால் வாடிக்கையாளர்கள் நம்மிடம் திரும்ப திரும்ப வருவார்கள். தரமற்ற பொருள் கொடுத்தால் பொருள் தான் திரும்ப வரும். வாடிக்கையாளர் வர மாட்டார்

ஒரு தொழிலில் வளர்ச்சியை எப்படி கண்டுபிடிப்பது? போட்டியாளர்களை வைத்தோ ஏற்ற இறக்கங்களை வைத்தோ இல்லை. ஒவ்வொரு மாதத்துக்கும் தொழில் எந்த அளவு வளர்ந்துள்ளது என்பதை வைத்து தான் !

லயன் டேட்ஸ் பொன்னுத்துரை

சின்ன சின்ன விஷயங்கள் கூட சமயத்தில் பெரிய சாதனைகளுக்கு விதையாகி விடும். யார் எங்கே எந்த விஷயம் சொன்னாலும் அதை நான் கவனமா காத்து கொடுத்து கேட்பேன். கொட்டை இல்லாம பேரிச்சம்பழம் விற்கும் எண்ணம் ரோடில் இரண்டு பேர் பேசி கொண்டு போவதை வைத்து செய்து பார்த்த முயற்சி தான்

நாங்கள் புதிய தொழில் ஆரம்பித்த போது கிண்டல் செய்தவர்களே அதிகம். இத்தகைய கேலி, கிண்டல்களால் சோர்ந்து விடாமல் இலக்கு நோக்கி போய் கொண்டே இருக்க வேண்டும்.

**
நீல்கிரிஸ் ராஜா

நம்மிடம் பணியாற்றும் ஊழியர்களை எப்போதும் நம் குடும்பத்தில் ஒருவராய் நடத்த வேண்டும். அந்த அன்பு தான் விசுவாசமான ஊழியர்களை பெற்று தரும்.

நாம் செய்யும் தொழிலுக்கு ஒரு போட்டியாளர் இருக்கும் போது அதிக கவனம் தேவை. லாப சதவீதத்தை எவ்வளவு குறைவாக வைத்து வாடிக்கையாளரை தக்க வைத்து கொள்ள முடியும் என்று பார்க்க வேண்டும். செலவுகள் போக 10 சதவீத லாபம் போதும் என்ற மனநிலை இருந்தால் தான் அதிக வாடிக்கையாளரை கவர முடியும்

***
சுகுணா சிக்கன் சுந்தர்ராஜன்

ரிஸ்க் எடுப்பவர்கள் மட்டுமே தொழில் நடத்துபவர்களாக இருப்பார்கள் கவனித்துள்ளீர்களா? அதிலும் சரியான பாதையில் புதிய சிந்தனையோடு அதிக ரிஸ்க் எடுக்க துணிபவர்கள் சாதிக்கிறார்கள்

*******
கெவின் கேர் ரங்கநாதன்

என்ன தான் பிசினஸ், பிசினஸ் என்று அலைந்தாலும் குடும்பத்துக்கான நேரம் ஒதுக்க தவற கூடாது. வாரத்துக்கு ஐந்து நாட்கள் பிசினஸ் வேலை மீதம் இரண்டு நாட்கள் குடும்பத்துக்கு மட்டும் தான்

*******
ஈகிள் டயரி பிரதாப்

நாம் எந்த தொழிலில் இருந்தாலும் சரி நம் தயாரிப்புகள் நம்மையே முதலில் திருப்தி படுத்த வேண்டும். எங்கோ எதுவோ தப்பாக நடக்கிறது என்று தோன்றினால் அதை பற்றியே சிந்தனையிலேயே இருந்தால் புதுப் புது யோசனைகள் தன்னால் வந்து விழுந்து தயாரிப்புகளை தரமாக்கி விடும்

*******
சௌபாக்கியா கிரைண்டர் வரதராஜன் 

சக்சஸ் என்பது ஒரு கூட்டு முயற்சி. நாம் நினைப்பதை ஊழியர்கள் சரியாக செயல்படுத்தினால் தான் இலக்கை வேகமாக அடைய முடியும். ஊழியர்களுக்கும் நமக்கும் இடையே பிரச்சனைகளோ, மன குறையோ இருக்க கூடாது என்று தான் வருடத்துக்கு ஒரு முறை சுற்றுலா அழைத்து செல்கிறேன்
******
புரோபஷனல் கூரியர் சுசீலன்

எந்த தொழிலாக இருந்தாலும் இது நமக்கு தெரியாதே என்று சோர்ந்து விடாமல் திடமான ஆர்வம் இருந்தால் எல்லா தொழிலிலும் வெற்றி பெற முடியும். கூரியர் தொழிலுக்குள் என்னை ஈடுபடுத்தி கொண்டு முன்னேற காரணம் ஆர்வம் தான். முதலீடு என்று பார்த்தால் அலுவலகம் வைக்க செய்த செலவு மட்டும் தான்

*****
மெடிமிக்ஸ் சோப் நிறுவன தலைவர் கே. பி சித்தன்

லாபம் வருகிற காசை தொழிலில் மேலும் மேலும் முதலீடு செய்து கொண்டே இருக்க வேண்டும். வந்த வரை லாபம் என்று மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை எடுத்து கொண்டே போனால் தொழிலில் வளர்ச்சி இருக்காது

**********
காளீஸ்வரி பயர் வொர்க்ஸ் செல்வராஜ்

பணியாளர்களை பொறுத்த வரை ஒரு வேலை சொன்னால் அதை துடிப்போடு " முடியும்" என்று சொல்பவரை என் அருகிலேயே வைத்து கொள்கிறேன். "முயற்சிக்கிறேன்; கொஞ்சம் டயம் கொடுங்க " என்பவர்கள் இரண்டாம் வட்டத்தில் இருப்பார்கள். எடுத்தவுடன் " அது சிரமம்ங்க" என்பவரை எப்போதும் வெளி வட்டத்தில் தான் வைக்கிறேன். அருகில் சேர்ப்பதில்லை

*****
வாய்ப்பு கிடைத்தால் அவசியம் வாசியுங்கள் இந்த பிசினஸ் வெற்றி கதைகளை !

பெயர்: பிசினஸ் வெற்றி கதைகள்
ஆசிரியர்: எஸ். பி அண்ணாமலை
விகடன் பிரசுரம்
பக்கங்கள்: 224
விலை: ரூ : 100
*******
அண்மை பதிவுகள்:

உணவகம் அறிமுகம்: தேவர் ஹோட்டல் தஞ்சாவூர்

தொல்லைகாட்சி: சிவகார்த்தி- லொள்ளு சபா - சூப்பர் சிங்கர் T- 20 பைனல்...


25 comments:

 1. புத்தக அறிமுகத்திற்க்கு நன்றி..த.ம2

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஆட்டோமொபைல்

   Delete
 2. நல்ல புத்தக அறிமுகம். முடியும்போது வாசிக்கிறேன்....

  த.ம. 2

  ReplyDelete
  Replies
  1. வாங்க வெங்கட் நன்றி

   Delete
 3. உழைப்பால் உயர்ந்தவர்கள்.

  நல்ல பகிர்வு.

  ReplyDelete
 4. ஒவ்வொருவருடைய கருத்தும் அருமை.. நானும் முடிந்தால் வாசிக்கிறேன்...

  ReplyDelete
  Replies
  1. வாசியுங்கள் ஸ்கூல் பையன் நன்றி

   Delete
 5. நல்ல புத்தகம் சார்! இப்படி விமர்சனம் படிக்கும் போது தான் வாங்க தவறவிட்ட புத்தகங்கள் தெரிகின்றது.. கண்டிப்பாக வாங்கி படிக்கவேண்டும்!!

  ReplyDelete
  Replies
  1. நன்றி சமீரா படியுங்கள்

   Delete
 6. நல்ல புத்தக அறிமுகம். நன்றி பகிர்வுக்கு.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ராம்வி; நன்றி

   Delete
 7. நல்லதொரு புத்தக அறிமுகம்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி ரோஷினி அம்மா

   Delete
 8. நன்றீ அண்ணா. மீண்டும் வாசிக்க தூண்டுகிறது உஙகள் புத்தக விமர்சனம்

  ReplyDelete
  Replies
  1. ஏற்கனவே புக் படிச்சிருக்கியா? நன்றி அன்பு;

   Delete
 9. தொழில் முனைவோர்களுக்கு ஊக்கமளிக்கும் விதத்தில் இருந்தது எடுத்தாளப்பட்ட வரிகள்.. புத்தகம் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டியது. பகிர்தலுக்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. வாங்க எழில் நன்றி

   Delete
 10. அருமையான பதிவு.
  அருமையான புத்தக மதிப்புரை; வாங்கி படிக்க வேண்டிய புத்தகம்.
  திரு மோகன் குமார் எல்லா துறைகளிலும் ஜொலிக்கிறார்.
  எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
  வாழ்த்துகள் மோகன் குமார்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் அன்பான வார்த்தைகளுக்கு மிக மகிழ்ச்சி ஐயா நன்றி

   Delete
 11. நல்ல ஒரு புத்தக அறிமுகம் . நன்றி

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஞானம் சேகர்

   Delete
 12. அவசியம் வாசிக்கவேண்டிய அருமையான புத்தகத்தை
  அறிமுகம் செய்தமைக்கு மனமார்ந்த நன்றி
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...