Monday, January 14, 2013

கண்ணா லட்டுதின்ன ஆசையா - Laugh Riot !

ன்று போய் நாளை வா - தமிழில் எனக்கு மிக பிடித்த காமெடி படங்களில் ஒன்று. அப்படம் ரிலீஸ் ஆனபோது நான் பள்ளி மாணவன் ! அண்ணன் தஞ்சை ஞானம் தியேட்டரில் படம் பார்த்து விட்டு வந்து, சீன் பை சீனாக சொல்ல, சகோதரர்கள் மூவரும் விழுந்து விழுந்து சிரித்தோம். படத்தை பார்க்காமலே, அண்ணன் சொன்ன காமெடி காட்சிகளை ஸ்கூலுக்கு போய் நான் ரீல் ஓட்டி நண்பர்கள் மத்தியில் புகை விட வைத்தேன்.

படம் வெளிவந்து ஓரிரு வருடம் கழித்தே, இன்று போய் நாளை வா - பார்க்க முடிந்தது. அதன் பின் பல முறை பார்த்தாயிற்று.

மிக குறுகிய நாட்களில் பாக்யராஜ் எடுத்த அட்டகாச காமெடி படம் அது ! அவரிடம் சொல்லாமல் கொள்ளாமல் ரீ-மேக் அடித்து விட்டனர் ! ஒரு கோடி நஷ்ட ஈடு கேட்டு அவர் போட்ட வழக்கு என்ன ஆனதோ தெரியலை. குறைந்தது 10 லட்சமாவது கதைக்காக சந்தானம் நிச்சயம் அவருக்கு தரலாம் !

லட்டு - கதை

                 

சந்தானம், பவர் ஸ்டார். சேது என மூன்று இளைஞர்கள் ஒரே பெண்ணை காதலிக்கிறார்கள். அவள் ஒருவனை காதலித்தால் மற்றவர்கள் விலகிக்கணும் என்பது டீல்.

அவளை கவர, அவள் அப்பா, சித்தப்பா, சின்னம்மா என்று ஆளுக்கு ஒருவரை ஐஸ் வைக்கிறார்கள். அவள் யாரை காதலித்தார், முடிவு என்ன ஆனது என்பதை 140 நிமிடம் நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைத்து சொல்கிறார்கள்.

பவர் ஸ்டார் 

படத்தின் மிகப்பெரும் சர்ப்ரைஸ் பாக்கேஜ் பவர் ஸ்டார் ! ஹீரோக்கள் மூவருக்கும் அறிமுக காட்சி இருந்தாலும், முதல் பந்திலேயே சிக்சர் அடிப்பது பவர் ஸ்டார் தான் ! பள்ளி பெண்ணை பவர் சைட் அடிக்க அவள் 'எங்க அப்பாவோட பிரண்டு தானே நீங்க? " என பல்பு தருவது சிரிப்பின் ஆரம்பம் 

பவர் ஸ்டார் என்ற பெயரிலேயே வருவதால்,முகநூலிலும், பிளஸ்சிலும் என்னென்ன சொல்லி ஒட்டினோமோ, அதே போல் சந்தானம் ஓட்டி தள்ளுகிறார். ஒவ்வொரு முறை சந்தானம் பவர் ஸ்டாரை திட்டுவதும் அதற்கு அவர் ரீ ஆக்ஷனும் செமையாய் சிரிக்க வைக்கிறது.

பவர் ஸ்டார் அண்ணன் - என இன்னொரு முக்கால் கிழவரை காட்ட, அவர் ஒரு பக்கம் அதகளம் செய்கிறார். 


பவர் ஸ்கோர் செய்யும் காட்சிகள் எக்கச்சக்கம். அழகு மலர் ஆட பாட்டுக்கு டான்ஸ் ஆடுவது, தனது அல்லக்கைகளின் பாராட்டுடன் நடன பயிற்சி எடுப்பது என அசத்துகிறார் . இப்பாத்திரம் அவரது நிஜ வாழ்க்கை கூத்துகளை பெரிதும் பிரதிபலிக்கிறது. உதாரணமாய் வணக்கம் போடும் முன், படத்தின் கடைசி டயலாக் பவர் ஸ்டாரிடம் சந்தானம் சொல்கிறார் " " நான் காமெடியன் தான். அது எனக்கே தெரியும் ஆனா நீ காமெடியன்னு தெரியாம ஹீரோ மாதிரி சுத்தி வந்துக்கிட்டு இருக்கே"

இது தான் தனது நிஜ ரூட் என்று புரிந்து கொண்டால்,  பவர் ஸ்டார் தமிழகத்தின் காமெடியனாக அடுத்த சில வருடங்கள் வலம் வரலாம் !

சந்தானம்

தயாரிப்பு சந்தானம் எனும்போதே மக்கள் ஆர்வமாய் கை தட்டுகிறார்கள். லட்டு மாதிரி காரக்டர் இவருக்கு தான் ! தனது வழக்கமான ஒன் லைன் காமேடிகளால் பிச்சு உதறுறார். "உன்னை வாழ்த்தி பாடுகிறேன் " பாட்டை உல்ட்டா செய்து இவர் ஹீரோயினிடம் பாடும் பாட்டு அலப்பறையை கூட்டுது. சொந்த படம் என்பதால் ஹீரோ ஆகணும் என நினைக்காமல் ஓகே ஓகே போலவே வளைய வந்தது புத்திசாலித்தனம்.

மற்றவர்கள்

சேது ஹீரோவாக அறிமுகம். பெரிதாய் குறை சொல்ல ஏதுமில்லை (பாக்யராஜுடன் ஒப்பிட முடியாது; இங்கு லைம்லைட் சந்தானம் மற்றும் பவர் ஸ்டாருக்கு தான் !) 

ஹீரோயின் விசாகா த்ரிஷாவுடன் விளம்பரத்தில் நடித்தவர். "டல் திவ்யா தூள் திவ்யா ஆகிட்டா "என குரல் கொடுப்பார்களே அவரே தான் ! நடிப்பை விடுத்து தமிழ் சினிமா ஹீரோயினாக என்னென்ன தேவையோ அவை சரியாக இருக்கிறது. கிளாமர் சற்று தூக்கல் தான். (அவர் டான்ஸ் ஆடும் முதல் பாட்டில், அவரது தொப்பை தனியாய் ஆடுமாறு இருப்பதை கவனித்து தவிர்த்திருக்கலாம்) 

VTV கணேஷ் பாத்திரத்தை நினைத்தாலே சிரிப்பு வருகிறது. கட்டை குரலுள்ள அவரை ஒரு மாபெரும் பாடகராக காட்டியதுடன் , அவர் குரலை வைத்தே, அறிமுகமான  அடுத்த சில காட்சிகளில் நகைச்சுவை புகுந்து விளையாடுகிறது

தேவதர்ஷினி, கோவை சரளா, லொள்ளு சபா மனோகர், டான்ஸ் மாஸ்டர் சிவசங்கர் போன்றோர் சந்தானம்- பவர் ஸ்டார் முன்பு அதிகம் எடுபடாமல் போகிறார்கள் 

இயக்கம் - மணிகண்டன் 

துவக்கம் முதல் க்ளைமாக்ஸ் கடைசி ஷாட் வரை காமெடியை விடாமல் பிடித்திருப்பதில் இருக்கு இவரது வெற்றி சூட்சுமம் ! 

முதல் பாதியில் இன்று போய் நாளை வா- படத்திலிருந்து பெரிதும் வேறுபட்டாலும் பின் பகுதியில் முக்கிய பகுதிகள் அதே படத்தை ஒத்திருக்கிறது. இருப்பினும் திரைக்கதை இன்றைய ரசிகர்களை சரியாக குறி வைத்து எழுதி ஜெயித்து விட்டார்.

பட இறுதியில் பவர் ஸ்டாரின் போன் காதலி சொல்கிறார் " நான் உங்களை லவ் பண்ணலை; மணிகண்டனை (டைரக்டர்) லவ் பண்றேன் "...இப்படி பட வசனத்திலும் தன் பெயரை வர வைச்சிட்டார் !

முதல் பாதியில் பாட்டுகள் அடிக்கடி முளைக்கிறது. ஏதும் மனதில் பதியலை. பிற்பகுதியில் ஒரே ஒரு பாட்டு என்பது ஆறுதல் !

திருட்டு கதை -தான் உறுத்துகிறது ! நிச்சயம் பாக்யராஜிடம் பேசி சரி செய்திருக்கணும். இப்படி உரிமை வாங்காமலே ரீ- மேக் செய்யலாம் என்பது தமிழ் சினிமாவில் ஒரு தவறான முன் உதாரணமாய் ஆகிவிடக்கூடாது.

தியேட்டர் நொறுக்ஸ்

"முதல் நாள் - முதல் காட்சி இதுவரை நான் பார்த்ததில்லை; இந்த படமாவது அப்படி பார்க்கணும்" என்றாள் பெண் (படங்கள் பொதுவாய் வெள்ளியன்று காலை தானே ரிலீஸ் ஆகும் !) சத்யம் க்ரூப் தியேட்டர் எதிலும் டிக்கெட் இல்லை. ஐநாக்ஸில் டிக்கெட் இருந்தும், அவர்கள் இணையம் தகராறு செய்ததால் புக் செய்ய முடியலை. சரி நேரே போய் பார்த்துடலாம் என்று காலை 9.40 காட்சிக்கு சென்று விட்டோம் நல்லவேளை டிக்கெட் இருந்தது 

10 ரூபா டிக்கெட் எங்களுக்கு முன் தந்து கொண்டிருந்தனர். மல்டிபிளக்ஸ்சில் 10 ரூபா மட்டும் தந்து முழு ஏ. சி யில் படம் பார்க்க முடிகிறது என்பது ஆச்சரியமாய் இருக்கிறது. ( 120 ரூபா தந்து விட்டு அவர்களுக்கு 2 Row தள்ளி நாங்கள் அமர்ந்திருந்தோம்)

பவர் ஸ்டாருக்கு கிடைக்கும் கை தட்டல்களை பார்த்து அவருக்கு இவ்வளவு ரசிகர்களா என ஆச்சரியமாய் இருந்தது.

படத்தில் லாஜிக் மிஸ்டேக்குகள் நிறையவே இருக்கு. ஆனால் சிரிப்பது என்று முடிவெடுத்தபின் லாஜிக்காவது ..ஒண்ணாவது !
இடைவேளையிலும் , படம் முடிந்தும்-  மக்கள் மிக மகிழ்ச்சியாய், படம் குறித்து நல்லவிதமாய் பேசியபடி வெளி வந்தனர். படத்தின் வெற்றி உறுதி !
**
நிறைவாக :

மீண்டும் மீண்டும் உண்ண தூண்டும் லட்டு ! 

2013-ன் முதல் வெற்றி படம் ... இது ஒரு சிரிப்பு மழை !        Go For it !
*****
அண்மை பதிவு :

சென்னை புக் பேர் 2013 : பெஸ்ட் டீல்ஸ்


சென்னை புத்தக கண்காட்சி: பிளஸ், மைனஸ் - ஸ்டால் & நிகழ்ச்சி விபரங்கள்

24 comments:

 1. உங்கள் விமரசனத்தை நம்பி படம் பார்க்கலாம் போல் தோன்றுகிறது.

  ReplyDelete
  Replies
  1. பாருங்க கும்மாச்சி நன்றி

   Delete
 2. அட பரவாயில்லையே .... இந்தப் படத்தை பார்க்கலாம் போல இருக்கு.

  பாக்யராஜின் படம் ரசித்துப் பார்த்திருக்கிறேன். அதனால் இது பார்க்கும்போது நிச்சயம் இரண்டையும் ஒப்பிடத் தோன்றுமில்லையா.... :)

  ReplyDelete
  Replies

  1. நன்றி வெங்கட்

   Delete
 3. நன்றி, தம்பி! அப்பொ படம் பார்த்திடலாம். கதையைச் சொல்லாமல் (அதுதான் 'இன்று போய் நாளை வா'ன்னு சொல்லியாச்சே!) பட விமர்சனம் எழுதி, அதுவும் படம் பார்க்கத் தூண்டுகிற வகையில் எழுதி இருக்கிறீர்கள். பார்த்திடலாம்.

  ReplyDelete
  Replies
  1. மகிழ்ச்சி சார் பாருங்கள். ஆனால் உங்கள் கண்ணோட்டம் நிறைய மாறுபடும் என நினைக்கிறேன்.

   சிறு சந்தேகம்: தின்ன என்பது சரியா? திண்ண என்பது சரியா?

   Delete
 4. பாக்யராஜ் வழக்குப் போட்டிருப்பதாக நானும் நியூஸ் படித்தேன். மனம் விட்டுச் சிரிக்க நல்ல ஒரு படம் போல!

  ReplyDelete
  Replies
  1. ஸ்ரீராம்: பாக்யராஜ் விஷயம் செட்டில் ஆகிடுச்சு என்கிறார்கள் சில நண்பர்கள்

   நன்றி

   Delete
 5. // அவரது தொப்பை தனியாய் ஆடுமாறு இருப்பதை கவனித்து தவிர்த்திருக்கலாம்//

  நீங்கள் அதை கவனிக்காமல் தவிர்த்திருக்கலாம்...

  ReplyDelete
  Replies
  1. பிரபா: தொப்பையே ஆடுதுங்குறேன் !!

   Delete
 6. சூப்பர் விமர்சனம்.. நிச்சயம் பார்க்கணும். நன்றி

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஸ்ரீ விஜி

   Delete
 7. படத்தில் விசாகாவின் இடுப்பு நல்லாத்தான் இருக்கு. பயப்படாம சிரிச்சுக்கிட்டே லட்டை சுவைககலாம்னு சொல்றீங்க. சுவைச்சிடலாம். நன்றி.

  ReplyDelete
  Replies
  1. பாலகணேஷ்: இந்த ரணகளத்திலும் படம் பார்த்தாச்சா :))

   Delete
 8. படம் பாக்கலாம் போல இருக்கே. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய பொங்கல் திரு நாள் நல் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி பூந்தளிர் உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துகள்

   Delete
 9. நான் பார்த்துட்டேன் படம் சூப்பர்

  ReplyDelete
  Replies
  1. அப்படிங்களா? நன்றி சக்கர கட்டி

   Delete
 10. Anonymous10:42:00 AM

  இங்கு திரையரங்குகளில் காணோம், டிவிடி, ஆன்லைனில் வந்தபின் தான் பார்க்க வேண்டும். விமர்சனத்துக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies

  1. பாருங்கள் இக்பால் செல்வன். படம் DVD -யில் கூட பாக்கலாம். சிரிக்க முடியும்.

   Delete
 11. பவர்ஸ்டார் பாசறைக்கு அண்ணனை வருக வருகவென வரவேற்கிறோம்

  ReplyDelete
  Replies
  1. வாங்க ராம்சாமி அண்ணே. சேந்துடுவோம் :)

   Delete
 12. போற போக்கை பாத்தா ரஜினியைத் தாண்டிடுவார் போல இருக்கே!

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...