Tuesday, January 1, 2013

பாண்டிச்சேரி ஆரோவில் & அரபிந்தோ ஆசிரமம் - அறியாத தகவல்கள்

நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் !


புத்தாண்டை - பாண்டிச்சேரி ஆரோவில் மற்றும் அரபிந்தோ ஆஷ்ரம் குறித்த நல்லதொரு விஷயத்துடன் துவங்கலாம்.

ஆரோவில்

பாண்டிச்சேரி டூரிசம் நடத்தும் ஒரு நாள் டூரின் ஓர் பகுதியாகத்தான் ஆரோவில் கண்டேன்.


முதலில் நுழைந்ததும் பெரிய தியேட்டர் மாதிரி இடத்தில் ஆரோவில் பற்றிய 15 நிமிட வீடியோ படம் காட்டினர்.


1968-ல் அன்னையால் இங்கு கட்டிடம் கட்டும் பணி துவக்கப்பட்டது துவக்க விழாவிற்கு 124 நாடுகளிலிருந்து மக்கள் வந்து கலந்து கொண்டனர் அத்தனை நாட்டு கற்களும் இங்கு அடித்தளம் அமைக்கும் போது பயன்படுத்தப்பட்டுள்ளது. 1971 -பிப்ரவரி - 21ல் இது பொது மக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டது

இங்கு எந்த ஒரு மதமும் பின்பற்றப்படவில்லை; இங்கு "Humanity " க்கு மட்டுமே மிக முக்கியத்துவம் தருவதாக சொல்லப்படுகிறது

ஆரோவில் இருக்கும் ஏரியா 3500 ஏக்கர் பரப்பளவில் விரிந்து கிடக்கிறது. இங்கு 50,000 மக்கள் வாழ முடியுமாம்

மாத்ரி மந்திர் என்று சொல்லப்படும் தியான மண்டபம் தான் இதன் முக்கிய பகுதியாக இதன் soul -ஆக கருதப்படுகிறது. அதன் உள்ளே சூரிய ஒளி வரும் வண்ணம் கட்டப்பட்டுள்ளது அதன் சிறப்பு

இதன் உள்ளே அமர்ந்து தியானம் செய்ய தற்போது ஒரு நாள் முன்னர் வந்து விண்ணப்பம் தர வேண்டுமாம். பின் மறுநாள் வந்து தான் நேரில் காணவும் தியானம் செய்யவும் முடியும்

சிகப்பு மண்ணில் / சிகப்பு தரையில் தற்போது கட்டப்படுகிறது ஒரு ஆம்பி தியேட்டர்.
ஆம்பி தியேட்டர்
ஆரோவில் மற்றும் அரபிந்தோ ஆஷ்ரம் பல சிறு கைத்தொழில் வேலைகளை செய்கிறது இதில் அங்கிருக்கும் அனைவரும் ஈடுபடுத்தப்படுகிறார்கள். பின் அவை விற்பனைக்கு வருகிறது. இவர்களின் வருமானத்துக்கு இது ஒரு வகையில் வழி வகை செய்கிறது. மேலும் நிறைய டோனேஷன்களும் வரும் என்று நினைக்கிறேன்

மேலே உள்ள தகவல்கள் பெரும்பாலும் வீடியோ படம் மூலம் அறிய வந்தது. படம் பார்த்ததும் அடுத்து தான மண்டபம் பார்க்க செல்கிறோம். தியான மண்டபம் அருகே இருக்கும் பானியன் மரம் புகழ் பெற்றது. அதன் அருகே பல வித மலர்கள் அழகாக பூத்து குலுங்குகிறது. நாம் செல்லும் தூரம் முழுக்க பசுமை, பசுமை, பசுமை தான் !

வீடியோ பார்த்த இடத்திலிருந்து, 1 கிலோ மீட்டர் தூரத்தில் தியான மண்டபம் உள்ளது. வயதானவர்களுக்கும், குழந்தைகளுக்கும் மட்டும் அந்த ஒரு கிலோ மீட்டருக்கும் இலவச பேருந்து செல்கிறது என்றாலும், பாண்டிச்சேரி டூரிசம் நம்மை அந்த பஸ்ஸில் அழைத்து போய் விடுகிறார்கள் (நேரத்தை மிச்சப்படுத்த) ! பார்த்து முடித்ததும் மீண்டும் அதே பஸ்ஸில் வெளியில் கூட்டி வருகிறார்கள்

ஆரோவில்லில் எடுத்த சிறு வீடியோ இது :******************
அரபிந்தோ ஆசிரமம் - ஒரு எளிய அறிமுகம்


அரபிந்தோ ஆசிரமம் பற்றி கேட்க கேட்க ஆச்சரியமாய் இருக்கிறது. அது ஒரு தனி உலகம். அந்த உலகின் சட்ட திட்டங்கள், நடைமுறைகள் இவை மிக வித்யாசமானவை. பல்லாயிரக்கணக்கான மக்கள் இதை பின்பற்றுகிறார்கள் என்று அறிந்து வியப்பு மேலிடுகிறது !


********
ரபிந்தோ அந்நிய ஆட்சி இருந்த போது சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர். அப்போ அவரை கைது செய்து தனிமை சிறையில் அடைத்தனர். பின் மிக திறமையான வாதத்தால் அவர் வெளியே வந்தார் (இதிலும் டிவைன் இன்டர்வென்ஷன் உண்டு என நாங்கள் நம்புகிறோம்)


அன்னை முதலில் பிரான்சில் இருந்து ஒரு முறை இங்கு வந்து பார்த்து விட்டு திரும்ப போய் விட்டார் மறுமுறை வந்த பிறகு இந்த இடத்தை விட்டு கடைசி வரை அவர் அகலவில்லை

இங்குள்ள சமாதியில் முதலில் அரபிந்தோ அவர்கள் அடக்கம் செய்யப்பட்டார் அப்போதே மதர் காலத்துக்கு பின் அவரையும் அதே இடத்தில் புதைக்கவேண்டும் என்று திட்டமிட்டு அதற்கேற்ப ஏற்பாடுகள் நடந்தது. இப்போது இதே சமாதியில் கீழே அரபிந்தோவும் அதன் மேல் அடுக்கில் மதரும் உள்ளனர்.

சமாதி தினம் இரு முறை பூக்களால் அலங்காரம் செய்யப்படுகிறது இந்த பூக்கள் ஆசிரமத்துக்கு இருக்கும் தோட்டங்களில் இருந்து தினம் கொண்டு வரப்படுகிறது. பூக்களின் கீழ் இருக்கும் மணல் பல நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்டது

ஒவ்வொரு நாளும் பத்து முதல் பதினைந்து வகை வண்ண மலர்களை கொண்டு இந்த இடம் அலங்கரிக்கப்படுகிறது இதன் அருகில் அமர்ந்து பலர் தியானம் செய்கின்றனர் இங்கு முழு அமைதி நிலவுகிறது. சிலர் சமாதி மேல் தலை வைத்து பிரார்த்தனை செய்கின்றனர். சிலர் ஏனோ அழுகிற நிலையில் தங்கள் குறைகள் மற்றும் வருத்தங்களை மனதுக்குள் சொல்கிறார்கள்.

ஆரோவில்லின் புகழ் பெற்ற மரத்துக்கு அருகே

ஆஷ்ரமத்தில் கிட்டத்தட்ட 1200 வாலண்டியர்கள், இன்மேட்கள் உள்ளனர். வெளியிலிருந்து வந்து சேவை செய்து விட்டு சென்று விடுவோர் வாலண்டியர்கள். இங்கேயே தங்கி சேவை செய்வோர் இன்மேட். பொதுவாய் இன்மேட் ஆக ஒருவரை அங்கீகரிக்கும் முன் சில வருடங்கள் (ஐந்து !!) பார்த்து விட்டு தான் அப்புறம் அங்கீகரிக்கிறார்கள். இவர்களுக்கு எந்த சம்பளமும் கிடையாது. முழு நேரம் ஏதாவது வேளையில் இவர்கள் தங்களை ஈடுபடுத்தி கொள்ள வேண்டும். இது தான் அன்னையின் விருப்பம் அன்னை யாரும் எப்போதும் சும்மா இருக்க கூடாது ஏதேனும் வேலையில் ஈடுபடனும் என்று கூறுவாராம். இங்கு தங்க ஒவ்வொருவர் செய்ய வேண்டியதும் அதுவே !

இன்மேட்களுக்கு தங்க வீடு தரப்படுகிறது. உணவு அனைவருக்கும் பொதுவான ஒரு இடத்தில் வழங்கப்படுகிறது ஒவ்வொருவருக்கும் நான்கு ஆடைகள் வருடத்துக்கு வழங்கப்படுகிறது. வீட்டுக்கு தேவையான சோப்பு உள்ளிட்ட மளிகை சாமான்கள், மருந்துகள் வழங்கப்படுகிறது. மற்றபடி பணம் (Stipend ) யாருக்கும் தருவதில்லை. பணமே இல்லாமல் தான் வாழ்க்கை நடத்தவேண்டும் . இது கிட்டத்தட்ட சந்நியாசி வாழ்க்கை தான் !

ஆஷ்ரமத்தில் பல வித சிறு தொழில்கள் உள்ளன. பேப்பர் வைத்து தயாரிக்கப்படும் கைவினை பொருட்கள் உள்ளிட்ட பல விஷயங்களில் அவர்கள் ஈடுபடுகிறார்கள். இதிலிருந்து கிடைக்கும் லாபம் ஆஸ்ரமத்துக்கு சேர்கிறது

இதனை துவக்கியது அரபிந்தோ அவர்கள் என்றாலும் ஒரு நிலையில் அவர் தன்னை பின்னே கொண்டு சென்று, மதர் தான் இனி இதற்கு தலைமை என அறிவித்து விட்டார். அதன் பின் அவர் ஆங்காங்கு கைடன்ஸ் தருவதுடனும், மக்களை தினம் குறிப்பிட்ட நேரம் சந்திப்பதுடனும் நிறுத்தி கொண்டார்

மதர் இருந்த வரை மட்டும் தான் தலைவர் என்கிற பதவி இருந்தது இப்போது தனிப்பட்ட ரிலிஜியஸ் தலைவர் என்று யாரும் இல்லை. ஒரு தனி ட்ரஸ்ட் ஆஸ்ரமம் இயக்கங்களை கவனிக்கிறது. இது ஒரு மாதிரி உலகமாக இருக்க வேண்டும் என்பது மதரின் ஆசை. அதையே இன்றும் நடைமுறை படுத்துகிறார்கள்

இவர்களுக்கு பள்ளி, கல்லூரியும் உண்டு. இங்குள்ள கல்வி முறை வித்யாசமானது. ரெசிடென்ஷியல் பள்ளி மற்றும் வீட்டிலிருந்து வந்து போகும் வசதி இரண்டும் உண்டு. தங்கி படிப்பது எனில் ஐந்து அல்லது ஆறு வயதுக்கு மேல் தான். ஆறு வயது வரையாவது வீட்டில் பெற்றோருடன் தங்கி தான் பள்ளிக்கு வரணும். ஆசிரம பள்ளி டிசம்பரில் துவங்கி நவம்பரில் முடிகிறது. ஆண்டு விடுமுறை டிசம்பரில் தான் வருகிறது

இங்கு தேர்வு என்று எதுவும் யாருக்கும் கிடையாது ! பத்தாவது ப்ளஸ் டூ, கல்லூரியிலும் இதே நிலை தான் ! குறிப்பிட்ட சில நிறுவனங்கள் (பாண்டிச்சேரி யூனிவர்சிட்டி உட்பட) இந்த படிப்பை அங்கீகரிக்கின்றன. இங்கு படித்து பின் ஐ. ஐ. டி யில் படித்தோரும் உண்டு என்கிறார்கள்

எஞ்சினியரிங் மற்றும் டாக்டர் படிக்க வேண்டும் எனில், எட்டாவதுக்கு பின் வேறு பள்ளியில் சேர்ந்து பப்ளிக் தேர்வு எழுதி அப்புறம் செல்ல வேண்டும்,

மிக குறைவான மாணவர்களே இங்கு படிக்கிறார்கள். நான்கு மாணவர்க்கு ஒரு ஆசிரியர் என்கிற அளவில் மிக அதிக கவனம் செலுத்தப்படுகிறது.

உடற்பயிற்சி தான் மிக மிக முக்கியம் என்கிறார்கள். சனி ஞாயிறு கூட உடற்பயிற்சி வகுப்புகள் உண்டு ! இங்கு தங்கி படிக்க மிக குறைந்த கட்டணமே வாங்குகிறார்கள்.
  ******* ஆரோவில் மற்றும் அரபிந்தோ ஆசிரமம் இரண்டுமே ஒரே நிறுவனத்தின் கீழ் தான் வருகிறது. இவர்கள் வாழ்க்கையை நினைத்தால் ஆச்சரியமே மேலிடும் ! எந்த சம்பளமும் இல்லாமல், வாழ்க்கைக்கு தேவையான மிக குறைந்த வசதிகளுடன், மலர்ந்த முகத்துடன் வேலை செய்யும் அரபிந்தோ ஆசிரம சேவையாளர்களை பாண்டி செல்லும் போது அவசியம் சந்தியுங்கள் !

42 comments:

 1. புத்தாண்டில் புதுத் தகவல்கள்
  புத்தாண்டு வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. நன்றி முரளி சார்; புத்தாண்டு வாழ்த்துகள்

   Delete
 2. மாத்ரி மந்திர் என்று சொல்லப்படும் தியான மண்டபம் தான் இதன் முக்கிய பகுதியாக இதன் soul -ஆக கருதப்படுகிறது. அதன் உள்ளே சூரிய ஒளி வரும் வண்ணம் கட்டப்பட்டுள்ளது அதன் சிறப்பு

  அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

  இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. வாங்க ராஜராஜேஸ்வரி புத்தாண்டு வாழ்த்துகள்

   Delete
 3. இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் .

  ReplyDelete
  Replies
  1. நன்றி ராஜசேகர் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்

   Delete
 4. அருமையாகப் பகிர்ந்துள்ளீர்கள்.

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

  ReplyDelete
 5. ANNA WISH YOU A HAPPY AND PROSPEROUS NEW YEAR 2013.

  ReplyDelete
  Replies
  1. நன்றி அன்பு. வீட்டில் அனைவருக்கும் வாழ்த்துகள் தெரிவிக்கவும்

   Delete
 6. புத்தாண்டில் நல்ல ஆரம்பம்

  நன்றிகள்!

  இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

  ReplyDelete
 7. இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. நன்றி ராகவாச்சாரி புத்தாண்டு வாழ்த்துகள்

   Delete
 8. அருமையான பகிர்வுக்கு நன்றி.

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் எங்களுடைய இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. நன்றி அமைதி அப்பா; தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்

   Delete
 9. ரொம்ப வித்யாசமா இருக்கு.. நான் ஆசிரமம் என்றதும் சாமியார்கள் இருப்பது போல கற்பனை செய்து விட்டேன்.. நல்ல ஒரு அமைப்பு. அது இப்போதும் முறை தவறாமல் கடைபிடிக்கபடுவது தான் சிறப்பான விஷயம்.
  பகிர்விற்கு நன்றி சார்

  ReplyDelete
 10. அமையான பதிவு ...

  //இங்கு தேர்வு என்று எதுவும் யாருக்கும் கிடையாது ! பத்தாவது ப்ளஸ் டூ, கல்லூரியிலும் இதே நிலை தான் ! .// இந்தியா முழுக்க இத ஒரு சட்டமாகவே கொண்டுவரணும் ....

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஜீவன்சுப்பு; நன்றி

   Delete
 11. சென்றதில்லை இதுவரை. செல்லவேண்டும் ஒருமுறை.

  ReplyDelete
  Replies
  1. அவசியம் சென்று வாருங்க ஸ்ரீராம்

   Delete
 12. இனிய புத்தாண்டு வாழ்த்துகள் மோகன்ஜி

  ReplyDelete
  Replies
  1. ஐயா வணக்கம் நன்றி. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

   Delete
 13. மிக அருமையான பகிர்வு! நானும் ஒருமுறை அரவிந்த ஆசிரமம் சென்று வந்துள்ளேன்! மீண்டும் நினைவு கூற வைத்தது தங்கள் பதிவு! இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. நன்றி சுரேஷ் புத்தாண்டு வாழ்த்துகள்

   Delete
 14. அரபிந்தோ ஆசிரமம் பற்றிய தெளிவான பகிர்வு. இனிய புத்தாண்டு தின நல் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி பூந்தளிர்

   Delete
 15. சென்னை செல்லும் போது அங்கு போகும் வழக்கம் இருக்கிறது.ஒருவிதமான மன அமைதி கிடைத்து விடுகிறது அங்கு!

  ReplyDelete
  Replies
  1. ஆம் உண்மை தான் அருணா மேடம் !

   Delete
 16. நல்ல தகவல்கள். நன்றி. தங்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  பல வருடங்களுக்கு முன் ஆரோவில் சென்றுள்ளேன். அங்குள்ள அமைதியான இயற்கை சூழ்நிலை மனதுக்கு மிகவும் அமைதியை தரும். நீங்கள் கூறியது போல் பல கை தொழில்களோடு சேர்ந்து பப்ளிஷிங் (அதாவது வெளி நாட்டு புத்தகங்கள் பிரிண்ட் செய்யும் முன் இங்கு டேட்டா என்ட்ரி மற்றும் பார்மட்டிங் செய்கிறார்கள்) தொழிலும் அங்கு சிறப்பாக நடைபெறுவதாக அறிந்துள்ளேன்.

  ReplyDelete
  Replies
  1. அடிஷனல் தகவல்களுக்கு நன்றி ஆதிமனிதன்

   Delete
 17. முக்கியமான ஒன்றை குறிப்பிட மறந்து விட்டீர்கள்.பள்ளி,கல்லூரி மாணவர்கள் கண்ணாடி அணியாமல் கண் குறைபாட்டை நிவர்த்தி செய்யும் பயிற்சி முறைகள் அர்விந்த் ஆசிரமத்தில் உள்ளதாக முன்பு ஒரு பதிவர் குறிப்பிட்டிருந்தார்.பரிட்சித்து பார்க்கலாம் பார்வையாளர்கள்.

  ReplyDelete
  Replies
  1. கரக்ட் ! நினைவு படுத்தியதற்கு மிக நன்றி !முடிந்தால் பதிவிலும் ஓரிரு வரிகள் சேர்க்கிறேன்

   Delete

 18. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

  2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்


  அன்புடன்
  மதுரைத்தமிழன்

  ReplyDelete
  Replies
  1. நன்றி உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்

   Delete
 19. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ! இந்த ஆண்டு தங்களுக்கு மகிழ்ச்சியையும், ஆரோக்கியத்தையும், செல்வத்தையும் குறைவில்லாமல் தரட்டும் !

  ReplyDelete
  Replies
  1. நன்றி சுரேஷ் புத்தாண்டு வாழ்த்துகள்

   Delete
 20. ஆரோவில்லைப் பற்றிய அருமையான பகிர்வு.
  புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 21. இந்த ஆஷிரமத்தின் மீது பல புகார்கள் இருக்கு, ஆனால் இவர்களுக்கு மத்திய அரசில் வலுவான ஆதரவு இருப்பதால் இயங்கி கொண்டு இருக்கிறது, இதற்க்கு முன்பு இருந்த ஒரு ஆளுநர் இந்த ஆஷிரமத்தை சோதனை இடும் வரை சென்று விட்டார், அதற்குள் மத்திய அரசு ஆளுனரை வேறு மாநிலத்திற்கு மாற்றி விட்டது , ஆஷிரமத்தின் உள்ளே பல தவறுகள் நடக்கிறது

  ReplyDelete
 22. புதிய தகவல்கள்.

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

  ReplyDelete
 23. பாண்டிச்சேரி ஆரோவில் & அரபிந்தோ ஆசிரமம் - அறியாத தகவல்கள் = திரு மோகன் குமாரின் அருமையான பதிவு.
  எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன். வாழ்த்துகள்.

  எங்கள் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

  ReplyDelete
 24. அருமையான பகிர்வு . நன்றி

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...