Wednesday, May 1, 2013

வானவில்- அஜீத்- யாமி கெளதம்- மே தின ஸ்பெஷல் பாட்டு

பள்ளிகளில் ஒன் பாத் ரூம் பிரச்சனை

நண்பன் குடும்பத்துடன் வெளியில் சென்றபோது அவனது 5 வயது மகன் தண்ணீர் குடிக்க மிக தயங்கினான். குடித்தாலும் ஒரு மிடக்கு குடித்து விட்டு "போதும்" என்றான். என்னவென்று விசாரித்தால் "பள்ளியில் நிறைய தண்ணீர் குடித்தால் ஒன் பாத் ரூம் வந்துடும். மிஸ் வகுப்பின் பாதியில் அனுப்ப மாட்டாங்க. ஒரு தடவை மிஸ்சிடம் கேட்டும்,  அவங்க விடாமல் டிராயரிலேயே போயிட்டான். அதிலிருந்து தண்ணி குடிப்பதையே குறைச்சுக்குறான் " என்றார்.

குழந்தைகளுக்கு யூரினரி இன்பக்ஷன் துவங்கி பல பிரச்சனைகளும் தண்ணீர் குறைவாய் குடிப்பதால் வரும் என்பதை பள்ளிகள் உணர்ந்தால் நல்லது ! 2 வகுப்புகளுக்கு ஒரு முறை இடைவேளை விடுவதும், அந்த நேரம் அவசியம் குட்டி பசங்களை பாத் ரூம் அனுப்புவதும் பிரச்னையை ஓரளவு சரி செய்யலாம் !

தல பிறந்த நாள்

மே 1- அஜீத் பிறந்த நாள். ஏராள ரசிகர்கள் அவருக்குண்டு என்பதால் - பல டிவிக்களும் அவரை பற்றி ஒரு நிகழ்ச்சி அல்லது படமாவது ஒளி பரப்புகின்றன.

அஜீத் - நடிப்பையெல்லாம் தாண்டி மிக நல்ல மனிதர் என - அவரது ரசிகர் அல்லாத பலர் மூலம் கேள்வி பட்டு கொண்டே இருக்கிறேன்.

சமீபத்தில் நண்பன் ஒருவன் சொன்ன நிகழ்வு. " ஏர்போர்ட்டில் கியூவில் நிற்கிறேன். எங்கள் கியூவில் அஜீத்தும் இருந்தார்! ஏர்லைன் ஆட்கள் அவரை பார்த்துட்டு வந்து கூப்பிட்டும் அவர் கியூவை விட்டு போகலை. வெரி சிம்பிள் மேன் !"

இதை அவன் சொன்னது - அதே மாதிரி எங்களை ஒரு கியூவில் நிற்க வைத்த போது ! (நாங்கள் அந்த கியூவை புறக்கணித்து - நேரே செல்ல முடியும் என்றாலும் - அந்த நிகழ்வை சொல்லியே எங்களை நிறுத்தி விட்டான் நண்பன் ! அவன் அஜீத் ரசிகனெல்லாம் இல்லை !)

சொந்த முயற்சியில் முன்னுக்கு வந்த அஜீத்திற்கு - மனம் நிறைந்த வாழ்த்துகள் !

அஜீத் ரசிகர்களுக்காக அவர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடித்து வெளி வர இருக்கும் படத்தின் டீசர் இதோஅழகு கார்னர்

                                

யாமி கெளதம்.. விக்கி டோனாரில் அசத்தியவர். சமீபத்தில் தமிழில் இவரது கௌரவம்- அவ்ளோ நல்லா ரிசீவ் ஆகாதது சற்று வருத்தம் தான். அம்மணி வெரிவெரி கியூட் ! இன்னும் சில சான்ஸ் கிடைச்சு தமிழில் தொடர்ந்து நடித்தால் மகிழ்ச்சி.. !

நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி !

வீடுதிரும்பல் - வாரத்தின் 7 நாளும் பதிவு வெளியிட்டு வந்ததை தாங்கள் அறிவீர்கள். ஆனால் கடந்த 2 வாரமாக சனி, ஞாயிறு எந்த பதிவும் வெளியாகலை என்பதை எத்தனை பேர் கவனித்தீர்கள் என்று அறியோம் ! பயண கட்டுரைகள் அநேகமாய் காலியானதால் தினம் பதிவு போடுவது சிரமமாகி போய் விட்டது. இனி வாரத்திற்கு 5 பதிவுகள் போல் தான் வரும். போக போக இது இன்னும் குறைய கூகிள் ஆண்டவரை வேண்டுவோம் !

போஸ்டர் கார்னர் மே தின சிறப்பு பாடல்

எரிமலை எப்படி பொறுக்கும் - கம்மியூனிச மீட்டிங் அனைத்திலும் தவறாமல் ஒலிக்கிற பாடல்.

எங்கள் ஊர் நீடாமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கணிசமான கம்மியூனிஸ்ட்கள் உண்டு. இப்படம் எங்கள் சின்ன ஊரில் 25 நாளுக்கும் மேல் அரங்கு நிறைந்து ஓடியது !

கம்மியூனிச கொடி பாடல் முழுதும் வருவதை காண சற்று ஆச்சரியமாய் இருக்கிறது

இப்பாடலை பகிர முக்கிய காரணம் சில அற்புத வரிகள் ...

"எழுதிய படி தான் நடக்கும் எல்லாம் விதி வசம் என்பதை விட்டு விடு

இளமை உன் தோள்களில் இருக்கும் போதே எது நிஜம் என்பதை எட்டி விடு"

வைரமுத்து !


அய்யாசாமி கார்னர்

ஒரு பொருள் வாங்குமுன் அது பற்றி விசாரித்து வர அய்யாசாமி கடைக்கு சென்றால், கடைக்காரன் டென்ஷன் ஆகுமளவு ஏகப்பட்ட கேள்விகள் கேட்டு விட்டு தான் வருவார். ஆனால் வீட்டில் வந்து அது பற்றி தகவல்கள் சொல்லும்போது " இதை ஏன் கேட்கலை? அதை ஏன் கேட்கலை? " என எதிர் கேள்வி கேட்பார் அவரது ஹவுஸ் பாஸ். டென்ஷன் ஆகிடுவார் அய்யாசாமி. " என் மூளையில் என்ன தோணுதோ அதை தான் கேட்க முடியும். உன் மனுசுல தோனுறதையெல்லாம் நான் கேட்க முடியாது. அதுக்கு நீ கடைக்கு வந்திருக்கணும் "

" என்னாது ! அய்யாசாமி வீட்டமாவை எதிர்த்து பேச கூட செய்வாரா?" என்று கேட்கிறீர்களா? கோழியை வெட்டு முன் அது சற்று துள்ளும் இல்லையா? அந்த மாதிரி தான் இந்த துள்ளலும் ! மேற்படி துள்ளலுக்கு பின் அய்யாவின் கதி அதோ கதி தான் !

6 comments:

 1. //இனி வாரத்திற்கு 5 பதிவுகள் போல் தான் வரும். // மே தின தகவல் :-)

  பிறந்த நாள் வாழ்த்துக்கள் தல

  ReplyDelete
 2. மேமாத வானவில் அசத்தலான அழகு!

  ReplyDelete
 3. பல வண்ணங்களில். இறுதி கோழி அசத்தல் ஹா...ஹா.........

  ReplyDelete
 4. //டென்ஷன் ஆகிடுவார் அய்யாசாமி. " என் மூளையில் என்ன தோணுதோ அதை தான் கேட்க முடியும். உன் மனுசுல தோனுறதையெல்லாம் நான் கேட்க முடியாது. அதுக்கு நீ கடைக்கு வந்திருக்கணும் "//

  வீட்டுக்கு வீடு அய்யாசாமி!! :-)

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...