Sunday, April 14, 2013

P.B. ஸ்ரீனிவாஸ் : அஞ்சலி - மறக்க முடியாத சில பாடல்கள்

மிழ், தெலுகு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் - மறக்க முடியாத பல அற்புத பாடல்களை பாடிய P. B. ஸ்ரீனிவாஸ் அவர்கள் இன்று தனது 82 வது வயதில் - தமிழ் புத்தாண்டு தினத்தில் காலமானார்.

சில விழாக்களில் அவரை சந்தித்துள்ளேன். சட்டை பை முழுதும் பல வித கலர் பேனாக்களை சொருகியபடி, கையில் ஏகப்பட்ட காகிதங்களை எடுத்த படி வருவார். அவருடன் எடுத்து கொண்ட ஒரு போட்டோவும் உண்டு. எங்கு என்று தான் தெரியலை :(



P. B. ஸ்ரீனிவாஸ் அவர்களுக்கு நினைவு அஞ்சலியாக அவரது சிறந்த பாடல்கள் சிலவற்றை பகிர்கிறேன் :

மயக்கமா கலக்கமா

தத்துவ மற்றும் மெலோடியஸ் பாடல்கள் ஸ்ரீனிவாஸ் அவர்களின் கோட்டை. கண்ணதாசனின் இந்த பாடல் காலத்தால் அழிக்க முடியாத ஒன்று. மனம் வேதனையுறும் எத்தனையோ மனிதர்களுக்கு இப்பாடல் ஆறுதலாக இருந்துள்ளது:


காலங்களில் அவள் வசந்தம்

சில நடிகர்களுக்கு சிலரின் குரல் எளிதில் பொருந்தி போகும். ஜெமினிக்கு மிக பொருந்துவது ஸ்ரீனிவாஸ் அவர்களின் குரலே

இந்த காதல் பாடல் இன்றும் கூட - காதலி நோக்கி பாடும் விதத்தில் இளமையாய் இருக்கிறது கேளுங்கள் :




நிலவுக்கு என் மேல்

காதல் பாடல் -தான் . ஸ்ரீனிவாஸ் குரலில் குறும்பு கொப்பளிக்கும். என்ன அற்புத காம்போசிஷன் !


நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்

ஸ்ரீனிவாஸ் அவர்களின் மிக சிறந்த முதல் சில பாடல்களில் இடம் பிடிக்க கூடிய அற்புத பாட்டு. மயக்கமா கலக்கமா போல, அதற்கு இணையான இன்னொரு பாட்டு


பூஜைக்கு வந்த மலரே வா

எளிமையான அழகான டூயட் கூட பாடும் ஜானகி அம்மாவின் குரல் அப்போது எப்படி இருந்துள்ளது கேளுங்கள்:


மௌனமே பார்வையால்

மிக மெதுவாக செல்லும் ஒரு அற்புதமான பாட்டு. எனக்கு விபரம் புரியாத சிறு வயதில் இருந்தே இந்த பாடலை மிக பிடிக்கும்.


தோல்வி நிலையென நினைத்தால்

பகிர்ந்துள்ள பாடல்களில் கலர் படம் இது ஒன்று தான்.

படம் வந்த புதிதில் இருந்தே இந்த பாடலை கேட்கும்போதெல்லாம் - இலங்கை பிரச்சனை தான் நினைவுக்கு வரும்.

தோல்வி நிலையென நினைத்தால்.. மனிதன் வாழ்வை நினைக்கலாமா... வாழ்வை சுமையென நினைத்து தாயின் கனவை மிதிக்கலாமா 
உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம். உணர்வை இழக்கலாமா உணர்வை கொடுத்து உயிராய் வளர்த்த கனவை மறக்கலாமா 



எந்த ஊர் என்றவனே

என்ன ஒரு அற்புதமான தத்துவ பாட்டு இது ! நிச்சயம் இது போன்ற பாடல்கள் இப்போது வருவதே இல்லை :(


ரோஜா மலரே

பல தந்தைகள் - தங்கள் மகளை - ரோஜா மலரே ராஜகுமாரி என்று அழைத்தது இந்த பாடலுக்கு பிறகு தான்.


நேற்று வரை நீ யாரோ

ஜாலியான மெலடி + டூயட்.

உண்மையில் Arranged marriage ஒவ்வொன்றுக்கும் இந்த பாடல் வரிகள்

" நேற்று வரை நீ யாரோ? நான் யாரோ?
இன்று முதல் நீ வேறோ? நான் வேறோ?

பொருந்தும் !


காற்று வெளியிடை கண்ணம்மா

பாரதியார் பாடலுக்கு மிக அற்புத மெட்டுடன் கூடிய இசை அமைத்து - என்றென்றும் மறக்க முடியாத பாடலாக மாற்றிய முழு குழுவிற்கும் நன்றி சொல்ல வேண்டும் !


மனிதன் என்பவன் தெய்வமாகலாம்

எப்போது கேட்டாலும் ஏனோ கண்ணில் நீர் வர வைக்கும் பாடல். இன்று ஸ்ரீனிவாஸ் அவர்களுக்கும் பொருந்தும் இந்த பாடல் இறுதி பாடலாக ...


**********
ஸ்ரீனிவாஸ் அவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும் !
*********
அண்மை பதிவு :

CSK நேற்று ஜெயித்த லகான் மேட்ச் ஹை லைட்ஸ் உடன்

22 comments:

  1. நிலவுக்கு என்மேல் இரண்டுதடவை மட்டும்தான் ரசிக்கோனுமா?

    ReplyDelete
    Replies
    1. நன்றி கலாகுமரன்

      Delete
  2. // கலர் பெண்களை //

    கலர் பென்களை எனத் திருத்தவும். அர்த்தம் மாறுகிறது.

    ReplyDelete
    Replies
    1. ஆஹா; அண்ணே மாத்திட்டேன்

      Delete
  3. Anonymous7:17:00 PM

    அவரும் ஒரு மெல்லிசை மன்னரே..அவரது ஆன்மா சாந்தியடையட்டும்...

    ReplyDelete
  4. இதயங்களில் நீங்கா இடம் பிடித்தவர், இன்று நம் மனதோடு..நினைவோடு... :- ( இழப்பு மிகுந்த மன வருத்ததை தருகிறது.

    ReplyDelete
  5. "உனக்கும் கீழே உள்ளவர் கோடி....நினைத்து பார்த்து நிம்மதி நாடு"

    இந்த வரியை பி.பீ.எஸ். குரலில் கேட்கும்போதெல்லாம், மனது லேசாகிப்போகும்.

    அவர் ஆத்மா சாந்தியடையட்டும்.

    ReplyDelete
  6. எத்தனை எத்தனை இனிமையான பாடல்களை கொடுத்த மறக்க முடியாத பாடகர்... அவரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்...

    ReplyDelete
  7. https://www.youtube.com/watch?v=VQm0CTJIU1I


    https://www.youtube.com/watch?feature=player_embedded&v=Tn-c-KIQARY

    ஆன்மா சாந்தி அடையட்டும்

    ReplyDelete
  8. மென்குரலால் எல்லோரையும் கவர்ந்தவர்.
    அவர் ஆத்மா சாந்தியுறட்டும்.

    ReplyDelete
  9. மாபெரும் கலைஞர். சில மாதங்களுக்கு முன் கலைஞர் டிவியில் B H அப்துல் ஹமீதோடு சில நாட்களாக தொடர்ந்து உரையாடியதை பார்த்தேன். பல மொழிகளில் பாடியவர் என்பதை விட ஆச்சரியமான விஷயம் பல மொழிகளில் கவிதை, பாடல் எழுதும் அளவிற்கு ஆற்றல் படைத்தவர் என்பது. அவர் பாடல்களின் உங்கள் தொகுப்பு அற்புதம்.

    ஒன்று கவனித்தீர்களா? நீங்கள் குறிப்பிட்டிருக்கும் 'தோல்வி நிலையென...' பாடலின் வரிகள் அது எழுத பட்ட காலத்தை விட இன்றைய காலகட்டத்தில் தான் மிகவும் பொருத்தமானதாக அமைந்திருக்கிறது. P. B. ஸ்ரீனிவாஸ் அவர்களை போலவே சாகா வரம் பெற்ற வரிகள்!

    ReplyDelete
  10. MAY HIS SOUL REST IN P E A C E

    ReplyDelete
  11. நிலவே என்னிடம் நெருங்காதே..... அவர் பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்தது! எத்தனை எத்தனை இனிமையான பாடல்கள் பாடியிருக்கிறார்.

    அவரது ஆன்மா சாந்தி அடைய எனது பிரார்த்தனைகளும்.

    ReplyDelete
  12. இவர் பல மொழிகளில் கவிதை எழுதும் ஆற்றல பெற்றவர் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். இவர் குரல் மென்மையானதாக இருந்தாலும் தோற்றம் கம்பீரமாக இருக்கும்.
    காலத்தால் அழிக்க முடியாத பாடல்களை தந்தவருக்கு நல்ல நினைவாஞ்சலி

    ReplyDelete
  13. மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்த பாடல்கள் அவரின் குரலும் அருமையான பகிர்வு நன்றி

    ReplyDelete
  14. அய்யாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன்

    ReplyDelete
  15. நீங்கள் குறிப்பிட்டது சில பாடல்கள்தான்.இன்னும் நிறைய பாடல்கள் உள்ளன.....,
    பால் வண்ணம் பருவம் கண்டு.,
    என்னருகே நீ இருந்தால்.,தோள் கண்டேன் தோளே கண்டேன்,.இது போல இன்னும் பல.............

    ReplyDelete
  16. இன்னும் சில அழகான பாடல்கள்:
    போக போக தெரியும்...
    என் அருகே நீ இருந்தால்...
    சித்டிரம்மே...

    ReplyDelete
  17. உண்மையில் அவருடைய ,மரண செய்தி கேட்டு,கண்ணதாசனின் கவிதைதான் நினைவுக்கு வந்தது............சாவே உனக்கு ஒரு சாவு வராதா என்று...
    அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்..உண்மையில் இவர் நமக்கு ஒரு பொக்கிஷம்.இவர் இறக்கவில்லை.இவர் பாடிய பாடல்களின் வழியே நம்மோடு இன்னும் பல்லாண்டு காலம் வாழ்ந்து கொண்டே இருக்கிறார்,இருப்பார்.

    ReplyDelete
  18. இன்றும் அழகான அவரது பாடல்கள்
    என் பிளேலிஸ்ட் உள்ளன...

    ReplyDelete
  19. கனக்கும் மனம், அவர் பாடல்களை நினைக்கும் தினம்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...