Tuesday, January 14, 2014

வீரம் - சினிமா விமர்சனம்

கதை

கல்யாணமே வேண்டாம் என தம்பிகளுடன் வாழும் அஜீத், காதலில் விழுந்த பின் - காதலி குடும்பத்தை அழிக்க நினைக்கும் எதிரிகளை பந்தாடுவது தான் " வீரம் "

பிளஸ்

அஜீத் - அஜீத் - அஜீத்
சந்தானம்
ஜாலியான முன்பகுதி
குடும்பத்துடன் பார்க்க கூடிய கதை
வசனம் (பஞ்ச் டயலாக்ஸ்)

மைனஸ்

தேவி ஸ்ரீ பிரசாத் (இசை)
தம்பி ராமையா
பிற்பாதியில் வரும் தெலுகு பட வாடைதமிழேண்டா !

வேஷ்டி - சட்டையில் அஜீத் அமர்க்களமாய் இருக்கிறார். சாப்பாடு போட்டு அடிப்பதென்ன - காட்சிக்கு காட்சி அவர் பேசும் தத்துவ பஞ்ச் டயலாக்ஸ் என்ன - ரயில் சண்டை என்ன - ஒரு மாஸ் ஹீரோ என்ன செய்யணுமோ அத்தனையும் அசால்ட்டாய் செய்கிறார்.

இடைவேளைக்கு பின் தாடியை எடுத்ததும் அவ்வளவு நன்றாக இல்லை - குறிப்பாக நாசரும் அவரும் அமர்ந்து பேசும் முதல் காட்சியில் மாமனும், மாப்பிள்ளையும் போல இல்லை - சம்பந்திகள் இருவர் பேசிக்கொள்கிற மாதிரி இருந்தது. அஜீத் அவசியம் அடுத்தடுத்த படங்களில் கெட் அப் மாற்ற வேண்டும் (குறிப்பாக சால்ட் அண்ட் பெப்பர் லுக் ) ஆனால் மங்காத்தா, ஆரம்பம், வீரம் என 3 படங்கள் இதே கெட் அப்பில் ஹிட் என்பதால் தயாரிப்பாளர் தரப்பு ஒத்துக் கொள்ளுமா என தெரியலை !

அஜீத்துக்கு அடுத்து கவர்வது சந்தேகமே இன்றி சந்தானம் தான் ! ஜாலியான முதல் பாதி சந்தானம் உபயம். சந்தானம் இருந்தும் கூட இரண்டாம் பகுதி காமெடி ஏனோ அதிகம் எடுபடலை.

தம்பி ராமையா சாட்டை பட கெட் அப்பில் அநியாயத்துக்கு மொக்கை போடுறார். அவர் சிரிக்க வைப்பது ஓரிரு காட்சிகளில் மட்டுமே !

சிவா - சிறுத்தை சிவா !

முதல் படம் ரீ மேக் செய்த சிவா - இம்முறை கதை, திரைக்கதை - வசனம் இயக்கம் !

அஜீத் ரசிகர்கள் மற்றும் பேமிலி ஆடியன்ஸ் இருவரையும் கவரும் படி கதை - திரைக்கதை இரண்டும் அமைத்தது பெரிய ப்ளஸ் - படத்தின் வெற்றிக்கு அதுவே காரணம்.

சின்ன சின்ன டயலாக்ஸ் சிரிப்பை அள்ளுகிறது. வில்லன் " நீங்க நார்த் பக்கம் வருவீங்களா ?" என கேட்பது ஒரு உதாரணம்.

ஆனால் ஹீரோ வொர்ஷிப் மட்டுமே கவனத்தில் கொண்ட அவர் - மற்ற எந்த பாத்திரத்துக்கும் அதிகம் மெனக்கெடலை. பாலச்சந்தர் படங்களில் ஒரே காட்சியில் வரும் பாத்திரத்துக்கு கூட ஒரு identity இருக்கும். இயக்குனர் சிவா இந்த விஷயத்தை அடுத்த படத்தில் நினைவு கொள்வது நல்லது

சிறுத்தை சிவா - தமன்னா ரசிகரோ? இது வரை எடுத்த 2 படங்களிலும் அம்மணி தான் ஹீரோயின். தமன்னா குடும்ப பாங்காய் வருகிறார். கிளாமர் குறைவு தான்படத்தில் எத்தனையோ வில்லன் இருந்தாலும் நிஜ வில்லன் இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்  !

இவருக்கு மொத்தம் நான்கைந்து டியூன் மட்டுமே தெரியும் போலும். அஜீத் அறிமுகமாகும் முதல் பாட்டு சிங்கம் படத்து காப்பி என்றால் - அவர் பாடும் டூயட்கள் சில அப்படியே தெலுகு பட மூடுக்கு கொண்டு செல்கிறது (அஜீத் போடும் மஞ்சள் கலர், சிகப்பு கலர் பேன்ட்கள் வேறு சிரிப்பை உண்டு பண்ணுகிறது )

ரஜினி நடித்த எஜமான் போன்ற 80- 90 கள் காலத்து கதை தான். அஜீத்தின் ஸ்க்ரீன் பிரசன்ஸ் மற்றும் காமெடி தான் படத்தை காப்பாற்றுகிறது

வீரம்  - குடும்பத்துடன் ஜாலியாக ஒரு முறை காணலாம் !

***************
நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் !

5 comments:

 1. தங்களுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தித்திக்கும் இனிய தைப் பொங்கல், உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. எனதினிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள் சகோ.

  ReplyDelete
 3. நச் விமர்சனம்.

  இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. story not met with ajit char.

  ReplyDelete
 5. நல்ல விமர்சனம்.

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த பொங்கல் நல்வாழ்த்துகள்.....

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...