Wednesday, January 22, 2014

வானவில்- மதயானை கூட்டம்- ஹன்ஷிகா- ஒரே ஒரு ஊருக்குள்ளே

பார்த்த படம் - மத யானைக்கூட்டம்

மதுரை மற்றும் சாதிய பின்னணியில் ஒரு படம். கதை சொல்லும் பாணியில் இயக்குனர் விக்ரம் சுகுமார் திறமை உள்ள இயக்குனர் என நம்பிக்கை தருகிறார். அவரை விடவும் அதிகம் கவரும் இன்னொருவர் இசை அமைப்பாளர் ரகுநந்தன். 2 பாடல்கள் ரொம்ப அட்டகாசமாய் செய்துள்ளார்.

முன்னும் பின்னும் மாறி மாறி பயணிக்கும் கதை வித்யாச அனுபவம். நடிக்கும் பலரும் புதுமுகங்கள் என்பதால் - நிஜ சம்பவங்களை பார்க்கும் உணர்வை தருகிறது.

இன்னொன்றையும் சொல்லியாக வேண்டும். மேலே உள்ள இரு பாராக்களும் படம் பார்த்த உடன் எழுதியது ஓரிரு வாரம் கழித்து இப்போது யோசித்தால் கதை என்ன என்று குழப்பமாக உள்ளது. பார்க்கும்போது ஓரளவு ரசித்தாலும் அதன் பின் மனதில் பதியாமல் கடந்து போகும் இன்னொரு படம் ... அவ்வளவே !

அழகு கார்னர் 

ஹன்ஷிகா வந்த புதிதில் சற்று பூசிய வண்ணம் இருந்ததால் அதிக ஈர்ப்பில்லை. இப்போது நன்கு இளைத்து சிவ கார்த்திகேயனுடன் நடிக்கும் மான் கராத்தேயில்   கியூட் ஆக இருக்கிறார். உடம்பு இப்படியே மெயின்டெயின் செய்தால் நன்றாயிருக்கும் !

Maan Karate Movie Press Meet Stills – Hansika Motwani Beautiful Stills

பதிவர் பக்கம் - பொன்மலர்

தமிழில் பதிவர்களுக்கு தேவையான தொழில் நுட்பம் சார்ந்து பதிவு எழுதுவோரில் குறிப்பிடத்தக்க ஒருவர் பொன்மலர். கடந்த 5 வருடங்களாக பல பயனுள்ள பதிவுகளை எழுதியுள்ளார்.

இந்த பதிவுகளை வாசித்து பாருங்கள் :

எந்த மொழி படமாய் இருந்தாலும் சப் டைடிலுடன் பார்ப்பது எப்படி ?

http://ponmalars.blogspot.com/2013/06/get-subtitles-for-downloaded-movies.html

கூகிளின் ஆட் சென்ஸ் செக் உங்களுக்கு வர உள்ளதா? எப்படி செக் செய்யலாம் ?

http://ponmalars.blogspot.com/2012/09/how-to-track-adsense-cheque-in-india.html

என்னா பாட்டுடே

எனக்கு பிடித்த தமிழ் படங்களில் ஒன்று தவமாய் தவமிருந்து... என்றேனும் ஒரு நாள் இப்படம் மற்றும் அது என்னுள் நிகழ்த்திய சில மாற்றங்கள் பற்றி எழுத வேண்டும்...

சரி பாட்டுக்கு வருவோம்... பாடலில் காட்டப்படும் எத்தனையோ விஷயங்கள் கிராமத்தில் வளர்ந்த என்னை போன்றோர் வாழ்விலும் நிகழ்ந்திருக்கும்.

அம்மா - அப்பா - இரு குழந்தைகளிடையே உள்ள அன்னியோனியம் பாடல் முழுதும் அழகாய் விரியும். பாடல் துவங்கும் போது குட்டி பையனுக்கு வருகிற கோபம்... குளத்தில் பசங்க குளிக்கும் போது டிராயரை கழட்டி விட்டு அம்மணமாய் குளிக்க செல்வது .. 3 ஆண்கள் இருக்கும் போது ஒரு காட்சியில் சைக்கிளை சரண்யா தள்ளி கொண்டு வருவது... தலைக்கு மேல் பையனை தூக்கி வைத்து கொண்டு நடக்கும்  தந்தை இப்படி பாடலில் ரசிக்க ஏராளமான விஷயங்கள்.

பாடலை கேட்கும் சில நேரங்களில் விழியின் ஓரம் கண்ணீர் கசிந்து விடும்....



உயில் - சில விளக்கங்கள் 

நண்பர் ஸ்கூல் பையன் சென்ற பதிவில் உயில் குறித்து சில சந்தேகங்கள் எழுப்பியிருந்தார். அவற்றுக்கான விளக்கம் பின்னூட்டமாய் சொல்லாமல் - இங்கு சொன்னால் நலம் என நினைக்கிறேன்

கேள்வி - 1: உயிலை முத்திரைத் தாளில் தான் எழுதவேண்டுமா அல்லது வெள்ளைத் தாளில் எழுதலாமா? முத்திரைத்தாள் எனும் பட்சத்தில் எத்தனை ரூபாய் முத்திரைத்தாளில் எழுதவேண்டும்?

பதில் : சாதா தாளில் கூட எழுதலாம். நம் மக்களுக்கு ஸ்டாம்ப் பேப்பர் என்றால் - தான் ஒரு நம்பிக்கை வரும் இல்லையா  ? அதற்காக ஸ்டாம்ப் பேப்பர் பயன்படுத்துவர். 50 அல்லது 100 ரூபாய் ஸ்டாம்ப் பேப்பர் பயன்படுத்தலாம் (மீண்டும் சொல்கிறேன் : ஸ்டாம்ப் பேப்பரே கூட இல்லாமலும் எழுதலாம் )

கேள்வி - 2: உயிலை முழுவதும் படிக்காமல் எப்படி கையெழுத்திடலாம் என நம்பகத்தன்மையை சந்தேகிக்கும் சிலர் சாட்சிக் கையெழுத்து இட்டவர்களையும் சந்தேகிக்கும் வாய்ப்புள்ளதே!! இதுபற்றி அரசு விதிகள் என்ன சொல்கின்றன?

பதில் : உயில் என்பது ரகசியமான ஒன்றாக இருக்க வேண்டும். சாட்சி கையொப்பம் இடுபவர் அதன் content - ஐ சொந்த காரர்களிடம் சொன்னால் - அதனால் பிரச்சனைகள் வர வாய்ப்புண்டு.

சாட்சி கையெழுதிடுவோர் இரண்டே காரணங்களுக்காக தான் இடுகிறார்கள். ஒன்று உயில் எழுதியவர் நல்ல மன நிலையில் தான் இருந்தார் என்பதற்காக. அடுத்தது அவர் தான் கையெழுத்திட்டார் என்பதற்காக

கேள்வி - 3: ரிஜஸ்தர் செய்வதற்கு என்னென்ன நடைமுறைகள்? கட்டணம் எந்த அடிப்படையில் (slab முறையா) வசூலிக்கப்படுகிறது?

பதில் : பதிவு செய்வது பற்றி சுருக்கமாக கூறி விட்டேன். சாதாரண சொத்து விற்கும் முறையில் என்ன செய்வோமோ அதே போல், சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். அதிக பட்சம் 500 ரூபாய் மட்டுமே பதிவு கட்டணம் இருக்கும்

கேள்வி - 4: எனக்கு ஊரில் இருக்கும் சில லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிலங்களை இங்கு சென்னையில் ரிஜஸ்தர் செய்வதால் புரொபேட் பெறுவது எனது வாரிசுதாரர்களுக்கு - அவர்கள் அவர்களுக்குள் பரஸ்பர நம்பிக்கை மற்றும் புரிதல்கள் இருக்கும் பட்சத்தில் - அவசியமா?

அவர்களுக்குள் நல்ல புரிதல் இருந்தால் பிரித்து கொள்ள ப்ரோபெட் தேவையில்லை; ஆனால் பிற்காலத்தில் சொத்து விற்கும்போது வாங்குபவர் அதை பற்றி கேட்கலாம். எனவே இப்போதே ப்ரோபெட் பெறுதல் நல்லது

கேள்வி - 5: சொந்த தாய் தந்தைக்கு சொத்துக்களை எழுதிவைக்கும் பட்சத்தில் - உயில் எழுதியவரின் வாரிசுதாரர்கள் தங்களது தாத்தா பாட்டி காலத்துக்குப்பின் அதில் சொந்தம் கொண்டாட முடியுமா?

பதில் : இது போல நடக்க வாய்ப்புகள் மிக குறைவு. 99 % உயில் எழுதுவோர் தன்னை விட வயதில் குறைந்தோருக்கு தான் (மனைவி, மகன், தம்பி  etc )எழுதுவார்கள்

உங்கள் கேள்விக்கு வருவோம். உயில் எழுதியோரின் வாரிசு தாரர்கள் - அதன் அடிப்படையில் சொத்தில் பங்கு - கேட்க முடியாது. யாருக்கு சொத்து செல்கிறதோ - அவர் அதனை யாருக்கும் எழுதி வைக்கலாம். இல்லையேல் அவரது மற்ற சொத்துக்களுடன் இதுவும் சேர்ந்து - அவர் காலத்துக்கு பின் அவரது வாரிசு தாரர்கள் பிரித்து கொள்ள வேண்டும்.

போஸ்டர் கார்னர்



11 comments:

  1. சகோதரி பொன்மலர் பதிவுகளில் வலைத்தள நுட்பங்களை சோதனை செய்து சரி பார்த்த பின், பகிர்ந்து கொள்வது தான் சிறப்பு...

    தவமாய் தவமிருந்து - பாடல் எப்போது கேட்டாலும் மனதில் ஒரு பாரம் அழுத்தும்...

    நண்பர் சரவணன் அவர்களுக்கு நன்றி...

    ReplyDelete
  2. எனக்கும் பிடிக்கும் அந்த பாடல்

    ReplyDelete
  3. அருமையான பாடல் பகிர்வு! உயில் குறித்த விளக்கங்கள் சிறப்பு! பொன்மலர் பக்கங்களை பகிர்ந்தது உதவியாக இருந்தது! நன்றி!

    ReplyDelete
  4. விளக்கத்துக்கு நன்றி சார்....

    ReplyDelete
  5. சுவையான சங்கதிகள் சார்!

    ReplyDelete
  6. எனது வலைப்பக்கத்தை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி சார். நானும் உங்கள் வலைப்பதிவை தவறாமல் படித்து வருகிறேன். தற்போது எழுத நேரமின்மையால் அவ்வப்போது மட்டுமே எழுதி வருகிறேன்.

    ReplyDelete
  7. தவமாய் தவமிருந்து - பாடல் எப்போது கேட்டாலும் மனதில் ஒரு பாரம் அழுத்தும்...

    ReplyDelete
  8. வானவில் - எப்போதும் போல் அருமை.

    த.ம. +1

    ReplyDelete
  9. உயில் பற்றி விளக்கம் சாமானியனுக்கும் புரியும் படி உள்ளது. நன்றி

    ReplyDelete
  10. வானவில் ஜோரு, தவமாய் தவமிருந்து படப் பாடல் கனஜோரு!

    ReplyDelete
  11. உயில் கே பதில் உதவிகரமானது. நன்றி.

    பாடலை விட அந்தப் படத்தின் பாதிப்பைப் பற்றி நீங்கள் கோடி காட்டி விட்டிருப்பது சுற்றி சுற்றி வருகிறது.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...