Friday, January 17, 2014

வானவில் - ஜில்லா - தோல்வி நிலையென நினைத்தால்

பார்த்த படம் - ஜில்லா

வடிவேலு சொல்றது மாதிரி " நல்லா தான போய்கிட்டு இருக்கு " என்று தான் முதல் முக்கால் மணி நேரம் நினைத்தேன் . போகப்போக மோசமாகி, படம் முடியும் போது - நம்மை நாமே திட்டி கொள்வதா .. எப்பவும் இதே தரத்தில் தொடர்ந்து நடிக்கும் விஜய்யை திட்டுவதா என்று மண்டை காய்கிறது.



இத்தனைக்கும் விஜய்க்கு எவ்வளவு பெரிய ரசிகர்கள் கூட்டம்.. பெரியவர்களை விடுங்கள்.. பள்ளியில் படிக்கும் சிறுவர், சிறுமிகளில் மிக பாப்புலர் ஹீரோ விஜய் .............(சொந்தக் கார மற்றும் அக்கம் பக்க சிறுவர்களை வைத்து சொல்கிறேன்). கொஞ்சமேனும் இந்த நிலையை ஜஸ்டிபை செய்யும்படி மனிதர் நடிக்கலாம் !  காஜல் பின்பக்கத்தை இவர் ஒரு நிமிடத்துக்கு அழுத்தி பிடிப்பதெல்லாம் உச்ச பட்ச அசிங்கம். இது போன்ற காட்சிகளை ரசிக்கும் ஆட்களும் இருப்பார்களா? இயக்குனர் மீது இருக்கும் கொஞ்ச நஞ்ச மரியாதையும் காற்றில் பறக்கும் காட்சி அது.

மோகன்லால் முக மற்றும் உடல் தோரணையில் "கம்ப்லீட் ஆக்டர் " .....!. தமிழ் தான் தடுமாறுகிறது

பூர்ணிமா வழக்கமான காரிகேச்சர் அம்மா.

நிவேதா தாமசை அதற்குள் தங்கையாக்கி இருக்க வேண்டாம் :((

பாடல்கள் தனியே கேட்க நன்றாய் இருந்தாலும் நேரங்கெட்ட நேரத்தில் வந்து இம்சை செய்கிறது

எத்தனை சண்டைகள் என்று எண்ண முடியவில்லை.... 10 -12 இருக்குமா ? போலவே லாஜிக் ஓட்டைகள் .. தோன்றி கொண்டே இருக்கிறது...

"ஓரளவு நல்ல கதை தான். விஜய்யின் கோமாளித்தனம் மற்றும் மோசமான திரைக்கதையால் சின்னா பின்னமாகி விட்டது படம் " என்ற ரீதியில் இணையத்தில் ஒரு நண்பர் எழுதியிருந்தார். ஒரே வரியில் ஜில்லா படத்தை இதை விட சரியாய் விமர்சித்து விட முடியாது !


ATM குறித்த ஒரு தகவல்.....

ATM நிலையங்களில் சமீப காலமாக நடந்து வரும் திருட்டுகளையடுத்து - அதிக பாது காப்பு ஏற்பாடுகள் செய்ய அரசு முடிவெடுத்துள்ளது. இந்த செலவுகள் - ATM ஐ பயன்படுத்தும் நம் தலையில் தான் விடிய போகிறது !

இப்போதைய நிலை

எந்த வங்கி ATM வைத்துள்ளீர்களோ - அந்த வங்கி ATM -ல் நீங்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் எடுக்கலாம். பிற வங்கி ATM -ல் மாதத்திற்கு 5 முறை வரை இலவசமாக பணம் எடுக்கலாம்

இனி

எந்த வங்கி ATM வைத்துள்ளீர்களோ - அந்த வங்கி ATM -ல் - 5 முறை மட்டுமே இலவசமாக பணம் எடுக்க முடியும் ! அதன் பின் பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும் குறிப்பிட்ட அளவு பணம் பிடிக்கப்படும் !

பிற வங்கி ATM -ல் நீங்கள் பணம் எடுக்கும் ஒவ்வொரு முறையும் பணம் செலுத்த தான் வேண்டும் !

சுருக்கமாய் சொல்லணும் என்றால் - இனி உங்கள் வங்கி ATM -ல் மட்டுமே பணம் எடுக்கும் வழக்கம் ஏற்படுத்தி கொள்ளுங்கள். அதுவும் உங்கள் வங்கி ATM உபயோகிப்பதை மாதம் 5 முறைக்குள் முடித்து கொள்ளுங்கள் !

இன்னும் இது நடைமுறைக்கு வரவில்லை. அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளியாகும்.

தங்க மீன்கள் மேக்கிங் 

இயக்குனர் ராம் தங்க மீன்கள் மேக்கிங் பற்றிய சிறு வீடியோ Facebook -ல் பகிர்ந்திருந்தார். பாடலில் ஒரு இடத்தின் அழகை நாம் சாதாரணமாக பார்த்து ரசிக்கிறோம். ஆனால் அப்பாடலை எடுக்கும்போது எவ்வளவு குளிரிலும் - சிரமங்களிற்கு இடையேயும் எடுத்துள்ளனர்  என்பது இத்தகைய வீடியோக்கள் காணும் போது தான் தெரிய வருகிறது



அழகு கார்னர்



பதிவர் பக்கம் - இதயம் பேத்துகிறது ஜவஹர் 

இதயம் பேத்துகிறது என்ற வித்தியாச பெயரில் பதிவெழுதுகிறார் திரு ஜவஹர். சினிமா, நகைச்சுவை துணுக்குகள் , சுய முன்னேற்றம், பயண கட்டுரை என பல வித பதிவுகளும் எழுதுவது இவரின் ஸ்பெஷாலிட்டி. வோர்ட் பிரஸ்ஸில் இயங்குவதால் நம்மால் ப்ளாகர் மூலம் வாசிக்க முடியாதது ஒரு குறை. இதனை தாண்டி இவர் ப்ளாகை தொடர்ந்து வாசிப்போர் ஏராளம் பேர் இருக்கிறார்கள்

இதயம் பேத்துகிறது வலைத்தளம் : http://kgjawarlal.wordpress.com

என்னா பாட்டுடே

"தோல்வி நிலையென நினைத்தால் " - ஊமை விழிகள் படப்பாடலை இப்போது வீடியோ வடிவில் பார்க்கும்போது சில இடங்கள் காமெடியாக இருக்கிறது. ஆயினும் சில வரிகளும், இறுதி பகுதியும் மனதை நெகிழவைத்து விடுகிறது

இலங்கையில் விடுதலை புலிகள் இயக்கத்தினர் இப்பாடலை மிக விரும்பி கேட்டதாக சொல்லப்படுவதுண்டு.



பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள் 

மிக கொஞ்சமாய் டிவியில் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள் கண்டேன்.

சிவகார்த்திகேயன் விஜய் டிவியில் கலந்து கொண்ட - நம்ம வீட்டு பிள்ளை - சிவா பேசுவது வரைக்கும் நன்றாயிருந்தது. ஆனால் அங்குள்ள பெண்களை வைத்து சிவா வுக்கு ஊட்டி விட வைப்பதும் " நீங்க எனக்கு ஊட்டுங்க " என்று பெண்கள் சொல்வதும், " என்னை தூக்கி கொண்டு நடங்க " என்பதும் - சகிக்க முடியவில்லை...

நீயா நானா - தமிழர் அடையாளம் குறித்த விவாதத்தில் சாரு- வை நான்கு கெஸ்ட்டில் ஒருவராய் அமர வைக்க, சாரு எது பேசினாலும் - மூன்று கெஸ்ட்டில் ஒருத்தர் அவரது கருத்தை எதிர்த்த படி இருந்தனர். சாரு "ஏன் தான் வந்தோமோ ?" என நிச்சயம் நினைத்திருப்பார்.

இது மட்டுமன்றி நாலு பேருக்குள்ளும் தனித்தனியே சண்டை... கடைசியில் ஆங்கிலத்தில் ஒருவரை ஒருவர் திட்டி கொள்ளும் அளவு சென்று விட்டது.. !

இணையத்தில் இந்த நிகழ்ச்சி கிடைத்தால் கடைசி அரை மணி நேரம் கண்டு களியுங்கள்.

12 comments:

  1. அடப்பாவிகளா - ATM தகவல்களையும் சொன்னேன்...

    /// நம்மால் ப்ளாகர் மூலம் வாசிக்க முடியாதது ஒரு குறை /// ஏன்...? புரியவில்லை...

    சிறப்பான பாடல் - என்றும்...!

    ReplyDelete
  2. விஜய் அரசியல், சினிமா எதாவது ஒன்றில் கவனம் செலுத்தினா நல்லது. அது சரி, விஜய் மேல அவ்வளவு நம்பிக்கையா!? அவர் படத்துக்குலாம் போய் இருக்கீங்க.

    ReplyDelete
  3. மோகன் குமார் உங்களுக்கு பொறுமை மிக அதிகம், முழு படத்தையும் பார்த்திருக்கிறீர்களே.

    ReplyDelete
  4. ATM தகவல்கள் எரிச்சலைத் தான் தருகிறது...

    பரவாயில்லையே பொறுமையா முழுப்படமும் பார்த்திருக்கீங்க...

    ReplyDelete
  5. ஜில்லா வீரம் இரண்டுமே பார்க்கவில்லை! ஏடிஎம் தகவல்கள் அதிர்ச்சி தரவில்லை! நான் ரொம்ப யூஸ் பண்றது இல்லை! தோல்வி நிலையென நினைத்தால் பாடல்வரிகள் அருமை! காட்சிகள் சில இப்போது காமெடியாகத்தான் தோன்றும்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  6. Sir,
    பரவாயில்லையே பொறுமையா முழுப்படமும் பார்த்திருக்கீங்க. உங்களுக்கு பொறுமை மிக அதிகம்

    But I can't able to sit after 1st half.

    ReplyDelete
  7. wordpress தளத்தில் உள்ள பதிவுகளை தமிழில் வசிப்பது எப்படி என்று தெரியவில்லை உங்களின் ஒவ்வெரு பதிவிலும் சிறந்த தளங்களின் சுட்டியை தருமாறு கேட்டுக்கொள்கிறேன்

    ReplyDelete
  8. செய்திகள் கதம்பச் சுவையாய் இருக்கின்றன.

    ReplyDelete
  9. //இது மட்டுமன்றி நாலு பேருக்குள்ளும் தனித்தனியே சண்டை... கடைசியில் ஆங்கிலத்தில் ஒருவரை ஒருவர் திட்டி கொள்ளும் அளவு சென்று விட்டது.. !

    இணையத்தில் இந்த நிகழ்ச்சி கிடைத்தால் கடைசி அரை மணி நேரம் கண்டு களியுங்கள்.//

    http://www.youtube.com/watch?v=BYmvpiD8Zcw

    ReplyDelete
  10. பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி !

    தனபாலன் : வோர்ட்ப்ரஸ் பதிவுகளை தொடரும் வசதி (Follower widget) இல்லை; மேலும் Dashboard- லும் அந்த பதிவுகள் தெரிவது இல்லை; அதை தான் அப்படி குறிப்பிட்டிருந்தேன்

    ReplyDelete
  11. வானவில் - ரசித்தேன்.

    ATM - ஏதோ ஒரு விதத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் - எதையும் செய்யத் தயங்குவதில்லை இந்த வங்கிகள்....

    ReplyDelete
  12. தங்கமீன்கள் படம் உருவான விதம் பார்த்தேன்.... எளிதாகச் சொல்லிவிடுகிறோம் இந்தக் காட்சியை இப்படி எடுத்திருக்கலாம் என்று... அவர்களின் பிரயத்தனம் நமக்கு ஏனோ புரிவதில்லை...

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...