Wednesday, January 15, 2014

'வெற்றிக்கோடு' - இருவேறு விமர்சனங்கள்

வெற்றிக்கோடு குறித்து வந்த இரு விமர்சனங்கள் இங்கு பகிர்கிறேன்

பதிவர் கோபி, சார்டர்ட் அக்கவுண்டண்ட்Mohan Kumar இன் 'வெற்றிகோடு' படித்துவிட்டேன்.

சுயமுன்னேற்றப் புத்தகங்களுக்கான தேவைகள் எப்போதும் இருந்துகொண்டே இருக்கின்றன.

சென்ற டிசம்பர் மாதம் இந்தியா சென்றிருந்த சமயத்தில் முன்னாள் தலைமையாசிரியர் 'The Secret' புத்தகத்தை எடுத்துக் கையில் கொடுத்து 'படிச்சிட்டு எனக்கு எப்படி இருக்குன்னு ஃபோன் பண்ணி சொல்லு' என்றார். இன்னும் படித்து முடித்த பாடில்லை!

அதே புத்தகத்தை எங்கள் வகுப்பு மாணவர் ஒருவர் தினமும் படிப்பதாகத் தொலைபேசியில் கூறினார். வாழ்வின் எல்லாக் கதவுகளும் சாற்றப்பட்டுவிட்ட பின்னர் அந்தப் புத்தகம் ஒன்றே அவருக்கு இருக்கக்கூடிய ஒரே ஜன்னல். நம்புவதற்குக் கஷ்டமாக இருந்தாலும் இதுதான் நிதர்சனம்.

புனைவல்லாத எழுத்துகள் மேல் எனக்கு எப்போதும் பெரிதாக ஆர்வம் இருந்ததில்லை. அதிலும் சுயமுன்னேற்றக் கட்டுரைகள் என்றால் காததூரம் ஓடிவிடுவேன். இந்த genre இல் நான் படித்த ஒரே புத்தகம் '7 habits of highly effective people.'

கடந்த செப்டம்பர் மாதம் அகநாழிகையில் புத்தகங்களை வாங்கியபோது வெற்றிக்கோடு கண்ணில் பட்டது. மோகன்குமார் நினைவிற்கு வந்தார். வாங்கிவிட்டேன்.

மோகன்குமாரின் எழுத்தில் நல்ல ஃப்ளோ இருக்கும். புத்தகம் வாங்க அதுவே காரணம்.

புத்தகம் படித்து முடித்தபிறகு எனக்கு ஒரு விஷயம் ஆச்சரியமாக இருந்தது. அவர் புத்தகத்தில் சொல்லும் பல விஷயங்களை நான் ஏற்கனவே செய்து கொண்டிருக்கிறேன்! அப்படிஎன்றால் நான் ஏற்கனவே முன்னேறிவிட்டேன் என்று அர்த்தமா?!!! இதை ஒரு validation ஆகப் பார்க்கிறேன். சரியான பாதையில் போய்க்கொண்டிருக்கிறோம் என்கிற திருப்தி. நான் அடிக்கடி வலியுறுத்தும் சில விஷயங்கள் (ஆயுள் காப்பீடு, மருத்துவப் பரிசோதனை, உணவுக் கட்டுப்பாடு) குறித்தும் எழுதியிருக்கிறார்.

மற்ற சுய முன்னேற்றப் புத்தகங்களுக்கும் இதற்கும் என்ன வித்தியாசம்? எல்லாம் ஒன்றுதானே என்று நாம் நினைக்கலாம். அது ஓரளவிற்கு உண்மை என்றே நினைக்கிறேன். ஆனாலும் ஒரு வித்தியாசம் இருக்கிறது. உயரமான ஓரிடத்தில் நின்றுகொண்டு 'இதைச் செய் அதைச் செய்' என்று சொல்லாமல் 'நான் இப்படியெல்லாம் செய்தேன், செய்கிறேன்' என்று நம்மோடு நின்று பேசுகிறார். சொந்த அனுபவம் குறித்த எழுத்துகள் எப்போதுமே அசலானவை.
*************
திரு ராஜசேகர்
Founder - President
உரத்த சிந்தனை

வெற்றிக்கோடு - உங்கள் நூல் படிக்க எளிமையாகவும் சுவையாகவும் இருந்தது. பாராட்டுகள்.

வெற்றிக்கோடு - உங்கள் பாதையின் அடிச்சுவடு. மிகவும் கடினமாக (Hard ) இருந்த ஒரு நபர் எப்படி பண்பட்டு தெளிந்திருக்கிறார் என்பதன் சுருக்கமே இந்த நூல்.

ஒவ்வொரு தலைப்பும் ஒன்றுக்குப் பல முறை படிப்போரை வாசிக்க வைக்கிறது.

கோபம் கட்டுரையில் உங்கள் தாய் அன்போடும், பாசத்தோடும் கொடுத்த டம்பளருக்கு உங்கள் கோபத்தால் ஆன கதியை படித்த போது மனம் வலித்தது. நீங்கள் உணர்ந்துள்ளதை தெரிவித்தது மற்றவர்களது சினத்தை தவிர்க்க உதவும். நீங்கள் சொல்லியிருப்பது போல் - தெரிந்தவர்களிடமும், அன்பானவர்களிடமும் தான் நமது கோபம் வெளிப்படுகிறது - இது தவறு.

உங்கள் நூலின் தலைப்புகள் ஒவ்வொன்றும் எல்லோரது வாழ்விலும் நடக்க கூடிய ஒன்று.

பலரும் படிக்க வேண்டிய சிறப்பான நூல். இருந்தாலும் என் கண்களில் பட்ட சில தவறுகள் - இரண்டு கட்டுரைகளின் தலைப்புகள் பயம் என்று அச்சாகி உள்ளது. பெரியோர் ரோல் மாடல் தலைப்பு எண் 11 க்கு பதில் 1 என இருக்கிறது

நம்முடன் கை பிடித்து வரும் நண்பர் - நம்மை பாதுகாத்து - கவனமுடன் மறுபக்கம் கொண்டு விடுவது போல உங்கள் நூல் அமைந்திருப்பதே அதன் சிறப்பு.

அன்புடன்

SVR

********************
பின்குறிப்பு :

வெற்றிக்கோடு புத்தகம் அகநாழிகை பதிப்பக வெளியீடு. புத்தக சந்தையில் ஸ்டால் எண் - 666 மற்றும் 667 -ல் (புதுப்புனல் ) கிடைக்கும்.

எண்பது ரூபாய் விலை கொண்ட இப்புத்தகம் புத்தக சந்தையில் பதிவர் நண்பர்களுக்கு - ரூ. 50 க்கு  அகநாழிகை ஸ்டால் எண் 666 மற்றும் 667 -ல் (புதுப்புனல் ) கிடைக்கும்.

10 comments:

 1. சுருக்கமான அருமையான விமர்சனங்கள்
  தங்கள் புத்தகம் குறித்த என கருத்தும் இவையே
  என்பதால் ரசித்துப் படித்தேன்
  இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. நானும் வாங்கி விட்டேன்!

  ReplyDelete
 3. 2 விமர்சனங்களும் அருமை... முக்கியமாக பதிவர் கோபி அவர்களின் ஆழ்ந்த விமர்சனம்... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 4. நான் படிக்க வேண்டும் என்று எண்ணியுள்ள நூல்களில் இதுவும் உண்டு. இரு விமர்சனங்களும் அந்த ஆர்வத்தை விரைவுபடுத்திவிட்டன.

  ReplyDelete
 5. இந்த கோபி என்பவர் எப்போதோ ஒரு சமயம் கூகுள் பிளஸ்ஸில் கோபிநாத்தின் தன்னம்பிக்கை புத்தகங்கள் படிப்பவர்களை நக்கலடித்ததாக நியாபகம்... ஹூம்... தன் வினை தன்னைச் சுடும்'ன்னு சும்மாவா சொன்னாரு ஐசக் நியூட்டன்...

  இடையே சிவகுமார் கூட உங்கள் புத்தகத்திற்கு விமர்சனம் எழுதியிருந்தார்... நீங்கள் ஏன் அதையும் வெளியிடக்கூடாது ?

  ReplyDelete
 6. இதெல்லாமா ஞாபகத்துல வெச்சிருப்பாங்க...? இப்படியா போட்டு உடைப்பாங்க? வெரிவெரி பேடுமேன் பிரபா!

  ReplyDelete
 7. Dear Anna,
  Is there any option to buy the book from online ...

  ReplyDelete
 8. இரண்டு விமர்சனங்கள்.......

  வெளியிட்டதற்கு நன்றி.

  ReplyDelete
 9. 'வெற்றிக்கோடு' இன்னும் பலரை சென்றடைய இந்த விமர்சனம் உதவும் என்பதில் சந்தேகமில்லை!

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...