Monday, January 6, 2014

2013 - ஒரு டயரி குறிப்பு

லைப்பில் சொன்னது போல - இது ஒரு டயரி குறிப்பு தான். விருப்பமிருந்தால் வாசியுங்கள் நண்பர்களே !

2013 - 8 விஷயங்களுக்காக எனக்கு  மறக்க முடியாத ஒரு வருடம்

1. வெற்றிக்கோடு புத்தகம் வெளியானது - 

வாங்க முன்னேறி பார்க்கலாம் என ப்ளாகில் எழுதியதன் நீட்சியே வெற்றிக்கோடு.

பதிவர் விழா - நாள் குறித்த பின் பேசி - இந்த புத்தகம் கொண்டு வர முடிவெடுத்து நண்பர் பால கணேஷ் உதவியுடன் - அகநாழிகை பதிப்பக வெளியீடாக வந்தது.

கொஞ்சம் நேரமெடுத்து ப்ரின்ட்டிங்கில் நிகழ்ந்த சிற்சில தவறுகளை தவிர்த்திருக்கலாம் என்றாலும் உள்ளடக்கத்தில் மிகுந்த திருப்தியை தந்த புத்தகம்.

புத்தகம் தந்த/ தந்து கொண்டிருக்கும் அனுபவம் பற்றி பின்னர் விரிவாக எழுதுகிறேன்

2. கம்பனி சட்டம் 2013

கிட்டத்தட்ட 20 வருடத்துக்கும் மேலாக எதிர்பார்த்த கம்பனி சட்டம் இவ்வருடம் நாடாளுமன்ற இரு அவைகளிலும் ஒப்புதல் பெற்றதும், பின் அரசு கெசட்டில் வெளியானதும் - என்னை போன்ற கம்பனி செக்ரட்டரிகள் அனைவருக்குமே மிக முக்கிய நிகழ்வு.

இதன் பின் CA, ICWA, ACS இன்ஸ்டிடியூட் கள் நடத்தும் பல மீட்டிங்-களில்   கம்பனி சட்டம் குறித்து பேசி வருகிறேன். செப்டம்பர் முதல் வாரம் முதல் வருட இறுதி வரை - வாரம் ஒரு மீட்டிங் - காவது கம்பனி சட்டம் குறித்து பேசியிருக்கிறேன்

முதல்முறையாக சில கல்லூரிகளிலும் கம்பனி சட்டம் உள்ளிட்ட சில தலைப்புகளில் பேச அழைத்ததும் இவ்வருடம் தான் துவங்கியது.

சென்னையில் மட்டுமன்றி வெளியூரிலும் சென்று பேச எந்த தடையும் சொல்லாமல் ஆதரிக்கும் எனது நிறுவனத்தையும், ஹவுஸ் பாசையும்  இந்த நிமிடம் நன்றியோடு நினைவு கூர்கிறேன்

3.  ஆனந்த தீபாவளி 

ரொம்ப வருடங்களுக்கு பிறகு பெற்றோர்- அண்ணன்கள்- அக்கா அவர்களது குழந்தைகளுடன் இவ்வருடம் தீபாவளி கொண்டாடினோம். சின்ன சண்டையோ, மனஸ்தாபமோ இன்றி குடும்பத்தினர் அனைவரும் செம ஜாலியாக கொண்டாடிய இவ்வருட தீபாவளி மறக்க முடியாத ஒன்று.

4. பயணம் 

மே மாதம் நண்பர்களுடன் - கேரளா சென்று படகு இல்லத்தில் தங்கியது அற்புதமான அனுபவம். குறிப்பாக அந்த 2 நாட்களும் சாப்பிட்ட மீன்களின் ருசி வாவ் !!அந்த பயணத்தில் நாங்கள் சென்ற கொச்சின் மற்றும் அதிரப்பள்ளி அதிகம் ஈர்க்க வில்லை (அதிரப்பள்ளி நல்ல இடம் என்றாலும், நாங்கள் சென்ற போது அருவியில் தண்ணீர் அதிகம் இல்லை )

அம்மாவிற்கு உடல் நலமில்லை என்பதால் தனியாக அடிக்கடி தஞ்சை சென்று வந்தேன். தஞ்சையின் மிக புகழ் பெற்ற பம்பாய் சுவீட்ஸ் ஓனரை சந்தித்து விரிவான பேட்டி எடுத்து, மற்ற வேலைகளின் நடுவே  அதனை பதிவாக்காமல் விட்டு விட்டேன் :((

வருட இறுதியில் அண்ணன் வீட்டுக்கு சென்ற பெங்களூரு விசிட் - நிறைவான ஒன்றாக இருந்தது.

5.  சில நற்காரியங்கள் 

தஞ்சை சேவை இல்லத்துக்கு மேஜை, நாற்காலிகள் நண்பர்கள் பாலகுமார் (AIMS India, USA) மற்றும் ஆதி மனிதன்  மூலம் பெற்று தந்ததுபுழுதிவாக்கம் பள்ளியில் முதல் 3 இடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் அளித்த விழா 

அதே புழுதிவாக்கம் பள்ளி மாணவர்களுக்கு செய்த காரியர் அவேர்நேஸ் நிகழ்ச்சி 

நேரம் கிடைத்த போது சில ஆதரவற்ற குழந்தைகள் படிக்கும் இல்லங்களுக்கு வார இறுதியில் சென்று டியூஷன் எடுத்தது

போன்றவை இவ்வருடம் செய்த சில நற்காரியங்கள்.

6. எங்களது ஸ்டடி சர்க்கிள் 

ACS இன்ஸ்டிடியூட்டின் ஒரு கிளையாக சென்னை வெஸ்ட் ஸ்டடி சர்க்கிள் என்ற அமைப்பில் நாங்கள் மாதம் ஒரு மீட்டிங் நடத்தி வருகிறோம். இந்த அமைப்பின் தலைவராக நண்பர் ரெங்கராஜனும், துணை தலைவராக நானும் சென்ற ஜனவரியில் தேர்வானோம்.

ஸ்டடி சர்க்கிள் துவங்கி 2 வருடம் ஆனாலும், இந்த வருடம் இதன் வளர்ச்சி பிரமிக்கத்தக்க அளவில் இருந்தது. ஒவ்வொரு மீட்டிங்கிற்கும் வந்த கூட்டம் நாங்களே எதிர்பாராதது. வித்யாசமான புதுப்புது தலைப்புகளில் மீட்டிங் நடத்தியதும், குழு இளைஞர்களின் உழைப்பும் தான் வெற்றிக்கு காரணங்கள் !

7. பதிவுலகம் 

பதிவர் திருவிழா இந்த ஆண்டு அதிக சச்சரவின்றி (அல்லது குறைவான சர்ச்சைகளோடு)  நடந்து முடிந்தது. பதிவர்கள் பலரும் - ப்ளாகை விட முகநூலில் அதிக ஆக்டிவ் ஆகி கொண்டிருக்கிறார்கள் என தோன்றுகிறது.

வீடுதிரும்பல் - ஒரு வருடம் தமிழ் மணத்தில் முதல் இடம் பிடித்திருந்தது மற்றொரு சந்தோஷமான விஷயம்.

ப்ளாகோமேனியா-வை விட்டு ஒரு வழியாக நான் வெளிவந்ததும் இந்த ஆண்டு தான் !

8. கார் ! கார் !!

2013 இறுதியில் கார் வாங்கினேன். அது பெரிய விஷயமல்ல - 42 வயதில் கார் ஓட்ட கற்று கொண்டு ஓட்ட ஆரம்பித்து விட்டேன். அது நிஜமாவே பெரிய விஷயம் தான் (அட்லீஸ்ட் எனக்கு !) இன்னும் கொஞ்ச காலம் தாமதித்திருந்தால் கடைசி வரை கார் டிரைவிங் தெரியாமலே போயிருக்கும் ! 

***********
யோசித்து பார்க்கையில் மேலே சொன்னவற்றில் பெரும்பாலான விஷயம் - இவ்வருடத்தில் நிகழும் என வருட துவக்கத்தில் நினைக்க வில்லை. 

வாழ்க்கை இப்படித்தான் பல்வேறு சுவாரஸ்யங்களை தன்னுள் புதைத்து வைத்து கொண்டிருக்கிறது .....

2014 - என்னென்ன சர்ப்ரைஸ் தரப்போகிறது? பார்க்கலாம் !

18 comments:

 1. விரும்பிப்படித்தேன்
  ஒரு வருடத்து சாதனைகள் மனம் கவர்ந்தது
  வாரம் ஒரு பதிவு என்கிற வகையிலேனும்
  தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்தால்
  பதிவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்

  ஓட்டமும் சாதனைகளும் தொடர
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. 1, 3 - சந்தோசம்...

  5 - மனதிற்கு திருப்தி...

  7 - அப்பாடா...!

  8 - நம்பிக்கை... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 3. congratulation Mr Mohan kumar
  This is from muthu kumar

  ReplyDelete
  Replies
  1. மிக்க மகிழ்ச்சி நன்றி முத்து குமார சாமி சார்; புழுதி வாக்கம் பள்ளி மாணவர்களுக்கு வரும் வருடங்களிலும் நாம் இருவரும் இணைந்து உதவுவோம்

   Delete
 4. பயனுள்ள ஆண்டாக 2013 அமைந்தது மகிழ்ச்சி! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 5. 2014-ல் மேலும் பல வெற்றிகளைத் தொட வாழ்த்துகள்.

  ReplyDelete
 6. தங்களின் சிறப்பான பயணம் இவ்வாண்டும் தொடரட்டும்...

  ReplyDelete
 7. இந்த வருடமும் இதைவிடச் சிறப்பான நிகழ்வுகள் உங்களுக்கு அமைய வாழ்த்துகள் மோகன்.

  ReplyDelete
 8. தங்களின் சிறப்பான பயணம் இவ்வாண்டும் தொடரட்டும்...இந்த வருடமும் இதைவிடச் சிறப்பான நிகழ்வுகள் உங்களுக்கு அமைய வாழ்த்துகள்

  ReplyDelete
 9. இந்த வருசம் ராஜி தங்கச்சியை கூட்டிக்கிட்டு புதுசா வாங்குன கார்ல டூர் போகப் போறோமாம்!

  ReplyDelete
 10. இந்த வருடமும் நல்லபடியாக அமைய வாழ்த்துகள்.

  ReplyDelete
 11. 2012 is the best year for ur blog.....am waiting fr that kind of writing......

  ReplyDelete
 12. பின்னூட்டம் இட்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றி

  ராஜி - பெட்ரோல் செலவு உங்க வீட்டு காரர் தானே ? அப்ப ரைட்டு :)

  ReplyDelete
 13. திருப்தி!

  ReplyDelete
 14. CA, ICWA, ACS படிப்பு பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன். என் மகள் தொடர்ந்து 3 முறை CPT தேர்வில் முயன்றும் வெற்றபெற முடியவில்லை.

  ReplyDelete
 15. அறிமுகப்படுத்தியவர்-கும்மாச்சி  பார்வையிடஇதோ முகவரி-வலைச்சரம்


  -நன்றி-


  -அன்புடன்-


  -ரூபன்-

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...