Sunday, March 31, 2013

உணவகம் அறிமுகம்: திருநெல்வேலி ஆர்யாஸ்.

திருநெல்வேலியில் உள்ள நல்ல ஹோட்டல்களில் ஒன்று ஆர்யாஸ்.குற்றாலம் சென்று விட்டு அங்கு சாப்பிடாமல் திருநெல்வேலி வந்து விட்டோம். மாலை நான்கரை மணிக்கு சாப்பிடுற மாதிரி ஆனது.




திருநெல்வேலியில் மட்டுமே இவர்களுக்கு 9 ஹோட்டல்கள் இருக்கிறது. ஏதேனும் ஒரு இடத்தில் கூட்டம் அதிகமாகி விட்டால், இன்னொரு இடத்திலிருந்து உணவு வகைகள் சில நிமிடங்களில் தருவித்து விடுகிறார்கள்.

"ஹோட்டல் பிசினஸில் ஒரு ஹோட்டலாக நடத்துவது தான் கஷ்டம். நான்கைந்து ஹோட்டல் இருந்தால் உணவு வகைகள் மட்டுமல்ல, சமைக்கிற ஆட்களும் கூட குறையும் நேரங்களில் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு அனுப்பி சமாளிக்கலாம் " என்றார் நம் நண்பர் வேங்கடப்பன்.

சரி ஆரியாஸ் ஹோட்டலுக்கு வருவோம். சப்பாத்தி, பரோட்டா, பொங்கல் போன்ற ஐட்டங்கள் எல்லாம் 40 ரூபாய். இந்த ஊருக்கு விலை சற்று அதிகம் என தோன்றினாலும் சுவை நிச்சயம் சான்சே இல்லை. சென்னையின் பல ஹோட்டல்களை விட நன்றாகவே இருந்தது.

வழக்கமான மீல்ஸ் 65 ரூபாய். ஸ்பெஷல் மீல்ஸ் 165 ரூபாய்.

தோசையில் மட்டும் 20 வகை இருக்கிறது. அதிலும் ரவா தோசையில் மட்டுமே 10 வகை ! (நம்ம ப்ளாக் ஸ்ரீராம் சார்: ஹாப்பி??)

டாக்டர் வேங்கடப்பன் 

நெல்லை வரும் பல வி. ஐ. பி களும் இந்த ஹோட்டலில் வந்து சாப்பிட தவறுவதில்லையாம். குறிப்பாக பின்னணி பாடகி தனக்கு பிடித்த உணவு என " நெல்லை ஆர்யாஸ் ஹோட்டல் ரவா தோசை" என ஒரு பத்திர்க்கை பேட்டியில் சொன்னதை கட் செய்து பிரேம் செய்து வைத்துள்ளனர்.

நாங்கள் இங்கு என்ன ஸ்பெஷல் என்று கேட்க, பட்டர் நான் மற்றும் பன்னீர் பட்டர் மசாலா & ப்ரைட் ரைஸ் தான் என்று கூறினார். அவற்றை ஆர்டர் செய்து சாப்பிட்டோம். பசி நேரத்தில் தேவாமிர்தமாக இருந்தது. பரோட்டா, ரவா தோசை ஆகியவையும் கொஞ்சம் டேஸ்ட் செய்தோம்.

கடைசியாய் பில்டர் காபி - அற்புதம் ! ஒவ்வொரு ஊருக்கும் காபிக்கு தனி சுவை இருக்கிறது !

இது போர்டிங் & லாட்ஜிங் ஹோட்டல். தங்கும் அறைகளும் ரீசனபில் ரேட்டில் தான் இருக்கிறது
நெல்லை சென்றால் அவசியம் சென்று சாப்பிட்டு வாருங்கள் ஆர்யாஸ் ஹோட்டலுக்கு !
************
மேலதிக குறிப்புகள்:

ஆரியாஸ் ரெசிடென்ஸ்

க்ரூப் இணைய தளம் : http://aryaasgroup.com/about.html

நாங்கள் சாப்பிட்ட ஹோட்டல் http://aryaasgroup.com/resi_aryaas.html
************
அண்மை பதிவுகள் :

4 comments:

  1. நாங்க ஆர்யாஸில்தான் தங்கினோம்.

    நல்ல சேவை கூட!

    ReplyDelete
  2. திருனெல்வேலி போனா சாப்பாட்டுக்கும் தங்குவதற்கும் சிரமமில்லே போல இருக்கே. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  3. ஏங்க, ஒண்ணு தெரிஞ்சுக்கோங்க: திருநெல்வேலியிலயும் கோயம்புத்தூருலயும் பஸ் ஸ்டாண்டுக்கு உள்ளார இருக்குற ஓட்டல்ல கூடச் சாப்புடலாம். நல்லாத்தான் இருக்கும். இப்படி, 'வசந்தபவன்', 'ஆர்யாஸ்' என்று தனித்தனியாப் போடவேண்டாம்.

    ReplyDelete
  4. நல்லது! நெல்லை சென்றால் தங்க ஓர் அருமையான ஆலோசனை கிடைத்தது! நன்றி!

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...